Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by துளசி

  1. கோவை தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படிக்கும் என் மகனை அவன் கல்லூரிக்கு விடுமுறை போட்டுவிட்டு போராட்டம் நடத்தும் மற்ற கல்லூரி மாணவர்களுடன் கலந்து போராடச்சொல்லியுள்ளேன்.... இன்று மாணவியாக போராட்டதில் என்னால் கலந்து கொள்ள முடியாத ஆதங்கத்தை என் மகன் மூலம் செய்வேன்.... - Kani Oviya - முகநூல் - பி.கு: இது தனியே மாணவர்களுக்காக போராட்டம் இல்லை. நீங்கள் மாணவியாக இல்லாவிட்டாலும் ஒரு பெற்றோராக கலந்து கொள்ளலாம். அதே போல் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொள்ளலாம். மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாற வேண்டும்.
  2. மே 17 இயக்கமும் மெரீனாவில் ஒரு போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. இது அது தானோ தெரியவில்லை. அவர்கள் வழமையாக மக்களை ஒன்று சேர்த்து போராட்டம் நடத்துபவர்கள். எப்படியாயினும் மாணவர்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்கள் வரவேற்கத்தக்கது.
  3. நாளை விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளகுறிச்சி இல் போராட்டத்தில் கலந்துகொள்வதாக முகநூலில் ஒரு தமிழக உறவு குறிப்பிட்டிருந்தார்.
  4. தலைப்பில் இந்த வரிகளையும் சேர்த்து கொண்டமைக்கு நன்றி தமிழரசு அண்ணா. ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ தமிழர்களிற்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு அதற்க்கு ஒரே வழி பொது வாக்கு எடுப்புதான் அதை மட்டுமே உலகம் செய்ய வேண்டும் அதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும் என்பதை வலியுறுத்த இன்று மெரினாவில் போராட்டம் நடந்து வருகிறது. - முகநூல்: Loyolahungerstrike -
  5. செவ்வாய் காலை !!!!!! மத்திய அரசின் தொழிற்கூடங்கள் இருக்கும் நகரமான நெய்வேலியில் அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்த்து, இந்தியாவே தீர்மானம் கொண்டு வரவும், ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டியும் அமைதி வழியில் காந்திய முறையில் உண்ணா விரதப்போரட்டம். நெய்வேலி வாழ் மக்களே, முன்னாள் மாணவர்களே ஆதரவு தாருங்கள். இது நமக்கான போராட்டம் நமது போராட்டம். தொடர்புக்கு மாறன் சுசீந்திரம் அடங்கா தமிழன் 9952224112, பிரவீன் 9500078349 - முகநூல்: Loyolahungerstrike -
  6. Loyolahungerstrike இன் பக்கத்தை ஐ லைக் செய்தவர்கள் எண்ணிக்கை 10000 ஐ தாண்டி விட்டது. http://www.facebook.com/tamilnaduhungerstrike நீங்கள் இன்னும் இணையாவிட்டால் இதில் இணைந்து கொள்ளுங்கள். உடனுக்குடன் தமிழக போராட்ட செய்திகளை அறிந்துகொள்ள முடியும்.
  7. பல்வேறு இக்கட்டுகளையும் , பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் வற்புறுத்தல்களையும் சந்தித்து தொடர்ந்து 4 வது நாளாக உண்ணா நிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் , தங்களது உண்ணாவிரதத்தை நிறுத்தி விட்டு போராட்டதின் வடிவத்தை இப்பொழுது மாற்றி அமைத்துள்ளனர் , மத்திய அரசு அலுவலகங்களை இழுத்து மூடியும் , மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயிலை மறித்து போராடுவதன் மூலம் தான் மத்திய காங்கிரஸ் அரசு தன மௌனத்தை கலைக்கும் என்றால் அதை செய்வதை தவிர வேற வழியில்லை , தமிழக மீனவன் கேட்பதற்கும் பதில் இல்லை, தமிழக மாணவன் கேட்பதற்கும் பதில் இல்லை., மாநில அரசோ மத்திய அரசோ எவரும் எங்கள் தீலிபனிய போராட்டத்திற்கு மதிப்பளிக்க வில்லை, நாங்கள் பிரபாகரனிய போராட்டத்தை முன்னெடுக்க போவதை எவனும் தடுக்க முடியாது ( எவனாவது நீ ஆயுதம் எடுப்பியா என்று கேட்பவன் என் எதிரில் உன்னை கொன்று ஆயுதத்தை உயர்த்தி பிடிப்பேன் இது சத்தியம் ) ஐந்தாம் கட்ட ஈழப்போர்....!!! எங்கு தொடங்கும் என்றா கேட்டாய்? தமிழ்நாட்டின் தற்போதைய எழுச்சி தான் அது. ஒன்றல்ல, இரண்டல்ல.... ஏழரைக் கோடிக்குமேல்.. இங்குள்ள மாணவர்களை விட சிங்களவனின் மக்கட்தொகை குறைவு , அழிக்க நினைத்தால் அழிந்தே போவாய்......!!! - முகநூல் : loyolahungerstrike -
  8. மாணவர்களின் போராட்டத்தை அனைத்து ஊடகங்கள் மற்றும் தளங்களிற்கு கொண்டு செல்லவேண்டிய அவசிய நேரம் வந்து விட்டது . நமது இந்த செய்திகளை அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் , செய்திகளை விரைவாக பரப்புங்கள் , நமது இந்த பக்கத்தை அரசாங்கம் எப்போது வேண்டும் என்றாலும் தடை செய்யலாம் என்றே செய்தி அனுப்பும் சக மாணவர்கள் தங்கள் கருத்துகளை கவலையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். வெள்ளமென பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்து விட்டால் அதற்க்கு பின்னர் எந்த தடையும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது . எனவே செய்திகளை அனைவரும் , தங்களது நிலைதகவல் களிலோ , அல்லது வலை களிலோ , அல்லது தங்களது பக்கங்களிலோ அல்லது தங்களது தளங்களிலோ நமது செய்தியை பதியுங்கள் பரப்புங்கள். செய்தி மட்டுமே நமக்கு இப்போதைக்கு முக்கியம் . மூலம் அல்ல. - முகநூல் : loyolahungerstrike -
  9. தமிழகத்தில் நடைபெறும் போராட்ட விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள Loyolahungerstrike இன் இந்த இணைப்பில் சென்று like செய்யுங்கள். ஏனையோருக்கும் அறிவியுங்கள். http://www.facebook.com/tamilnaduhungerstrike
  10. 19ம் தேதி மாணவர்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் நடத்துகிறோம். முன்னதாக 18ம் தேதி (நாளை) மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும். இலங்கையுடன் இந்தியா தொழில், வியாபார மற்றும் தூதரக உறவை முறித்து கொள்ள வேண்டும். அந்நாட்டை சேர்ந்த அரசியல் பிரமுகர்களோ, விளையாட்டு வீரர்களோ, சுற்றுலா பயணிகளோ இந்தியா வருவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். தமிழீழ மக்களுக்காக போராடும் மாணவர்கள் மீது எந்தவிதமான அடக்குமுறைகளையும் மேற்கொள்ள கூடாது. -------------------------------------------------------------------------------------------------------------------------------- இலங்கையை எந்த சந்தர்பத்திலும் கைவிட முடியாது. அது நமது நட்பு நாடு - இந்தியா ஜெனிவாவில். எட்டு கோடி தமிழன் அமைதியாக போராடி என்ன பலன் ..? அதனால்தான், பொறுத்து பொறுத்து பார்த்த தலைவன் ஆயுதத்தை கையில் ஏந்தி இருக்கிறார்...! - முகநூல்: Loyolahungerstrike -
  11. மாணவர்களின் ஈழத்தில் என்ன நடந்தது. என்ன நடந்திருக்கும் நம் இனம் விழித்திருந்தால் என்பது குறித்தான பிரசார விளக்க நாடகம் உண்ணாவிரத அறப் போராட்டப் பந்தலுக்கு முன்பு அரங்கேற்றப் பட்டது. அனைவரையும் மிகுந்த உணர்ச்சி வயப் படுத்தியது. - முகநூல் -
  12. உண்மை தான் அண்ணா. இவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை விடுத்து தமது உடலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் வேறு வகையில் போராட்டம் நடத்தினால் நல்லது என்பது என் கருத்து. திங்கட்கிழமையிலிருந்து போராட்டம் புதிய பரிமாணம் பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். என்ன அர்த்தத்திலோ தெரியவில்லை. பார்ப்போம். தமிழரசு அண்ணா, இந்த திரியின் தலைப்பில் அடைப்புக்குறிக்குள் ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும் என்று போட்டு விடுவீர்களா? இல்லாவிட்டால் தஞ்சாவூர் போராட்டம் பற்றிய செய்தி மட்டும் என்று வாசகர்கள் நினைத்து விடுவார்கள். http://www.facebook.com/tamilnaduhungerstrike
  13. நண்பர் முகமது கான் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் யுனிவர்சிட்டி மாணவர் அவர் ஒவ்வொரு யுனிவர்சிட்டியின் வாயிலாகவும் மாணவர்களை இணைக்க விரும்புகிறார். அதற்கான தொடர்புகளை விரும்புகிறார். மற்ற யுனிவர்சிட்டி மாணவர் அமைப்புகள் அவருடன் தொடர்பு கொள்ளவும். 8675712486 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழகம் முழுவதும் ஈழ தமிழர்களுக்கான ஆதரவும், மத்திய அரசுக்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது. பல கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. சில அரசியல் கட்சிகள் இதிலும் தங்கள் உக்தியை கையாண்டுள்ளனர். விடுதியை விட்டு செல்ல மறுக்கும் மாணவர்களுக்கு 500 ரூபாய் கொடுத்து வழியனுப்பி வைக்கிறதாம் அந்த கும்பல். பணம் கொடுத்து நம் ஒற்றுமையை கலைக்க நினைப்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கவேண்டும் மாணவர்களே... - முகநூல் -
  14. செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் இருபது பேரை கைது செய்தது காவல்துறை! அடக்குமுறையால் போராட்டத்தை நீர்த்து போக செய்யலாம் என்று கனவில் கூட நினைக்காதீர்கள் ஆட்சியாளர்களே! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மும்பையில் ஒரு நாள் போராட்டம் ! திரளும் கூட்டம் பெருகும் ஆதரவு ! கண்முன்னே தெரியும் விடியல். எட்டு திக்கும் போராட்டத்தை எடுத்து செல்வீர் மக்களே ! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- டெல்லி தமிழ் சங்கத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் தமிழக மாணவர்களுக்கு ஆதரவான டெல்லி மாணவர்களின் போராட்டம். - முகநூல் - மயிலாப்பூர் சமூக நலக் கூடத்தில் தொடரும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! துணை நிற்போம் ஆதரவாய் !!! - முகநூல் -
  15. சென்னை ஐஐடி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் உள்ள ஐஐடி வளாகங்களுக்கும் போராட்டத்தை எடுத்து செல்வோம்- சென்னை ஐஐடி மாணவர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் (முகநூல்) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ விருதை மாணவர்கள் ஆறு பேர் கவலைக்கிடம். விருதை கொளஞ்சியப்பர் அரசு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவரால் இன்று ஐந்தாவது நாளாக உண்ணா நிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் நான்கு பேரின் நிலை கவலை அடைந்ததை தொடர்ந்து நீற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.இன்று காலை மேலும் இருவரின் நிலை மூசமானத்தை தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு இருந்த நால்வரும் அங்கிருந்து கிளம்பி வந்து மறுபடியும் உண்ணா நிலைப்போராடத்தில் பங்கு பெற்று வருகின்றனர்....... ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- டெல்லி தமிழ் சங்கத்தில் உண்ணா நிலை போராட்டம் தொடர தமிழ் சங்கம் எதிர்ப்பு !போலீசார் மூலம் கெடுபிடி ! போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் திரு முருகேசன் அவர்களை தொடர்பு கொள்ளவும் ! 9250050404 ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தோப்புக்கொல்லை முகாமில் தோழர்கள் 100 க்கும் மேற்பட்டோர் உண்ணா நிலை போராட்டம் ! ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- சட்ட கல்லூரி மாணவர்களின் உண்ணா நிலைப் போராட்டம் சமூக நலக் கூடத்திலும் தொடர்வதாக மாணவர்கள் தகவல் ! வீறு கொண்டு எழுவோம். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- செங்கோட்டை கீழப் புதூர் கிராம மக்கள் போராட்டம் ! இணையட்டும் தமிழ் இனம் ! வெல்லட்டும் தமிழ் ஈழம் ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- திண்டுக்கல் : விருப்பாச்சி முகாமில் தோழர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர் ! கரங்களை வலுப்படுத்துவோம் ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தேனி : கம்மவர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ! பரவட்டும் நம் எழுச்சி ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தேனியில் பரவுகிறது போராட்டம். திராட்சை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தேயிலை தொழிலாளர்கள் உண்ணா நிலைப் போராட்டத்தில் இறங்கினர் ! தமிழகம் மீண்டும் இணைகிறது. பணிந்து போக மாட்டோம் , எவனுக்கும் பயந்து போகமாட்டோம். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தற்போது கிராமங்களில் போராட்டம் ஆரம்பமாகி உள்ளது. இன்று காலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகி உள்ளது. அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவி மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டு இருக்கின்றனர். கிராம மக்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் --விடியல் நண்பர்கள். - முகநூல் -
  16. இன்று கோலார் தங்க வயல் பகுதியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம். இன்று கர்நாடாக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழீழத்திற்கான வாக்கெடுப்பை நடாத்த கோரியும், சர்வதேச விசாரணை கோரியும், தமிழகத்தில் தன்னெழுச்சியாக போராடும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. தொடர்பு : 9986259908 ----------------------------------------------------------------------------------------------------------------------------- அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் . உடல் நிலை பதிக்கப்பட்ட நிலையில் தொடர்கிறது. - முகநூல் -
  17. S.V.R. பாமினி அக்கா, மற்றும் பகி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்த்த லேட்டா போச்சு.
  18. சுண்டு அண்ணாவின் ஆலோசனைக்கு நன்றி. தமிழ்சூரியன் அண்ணா சம்மதித்து விட்டார். கேட்டவுடன் சம்மதிக்கும் அவருக்கு நன்றியும் பாராட்டுகளும். கவிதை யார் எழுதி தருவது? யாராவது எழுத சம்மதித்தால் கூறுங்கள். சுபேஸ் அண்ணா, மல்லை அண்ணா, சகாறா அக்கா, நெடுக்ஸ் அண்ணா அல்லது வேறு யாராவது????
  19. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் தமிழகம் தழுவிய சுவரொட்டிக்கான (30*40 சைஸ்) வடிவமைப்பு இங்கே பதியப்பட்டுள்ளது. மாவட்ட, நகர,கிராம அளவிலான மாணவர் ஒருங்கிணைப்பு குழுக்கள் தாங்கள் விரும்பும் இடத்தை மட்டும் குறிப்பிட்டு 20/03/2013 அன்றைய " ஒரு கோடி மாணவர்களின் தொடர்முழக்க போராட்டத்திற்கான" சுவரொட்டியை ஆங்காங்கு உள்ள மாணவர் குழுக்களே அச்சிட்டு பொதுமக்களும் பங்கேற்கும் போராட்டமாக விளம்பரப்படுத்த கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வடிவமைப்பின் ஒரிஜினல் பைலை பெற தொடர்பு கொள்க: 9791162911 அல்லது poster2015@gmail.com, password: maanavargal என்ற மின்னஞ்சலை திறந்து ஒரிஜினல் பைலை எடுத்து பயன்படுத்தவும். - முகநூல் -
  20. சென்னை கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகில் இரவு 12.30 மணியளவில் ,சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் தொடங்கியுள்ளனர். மற்ற மாணவர்களும் உணர்வாளர்களும் அவர்களுக்கு ஆதரவு தாருங்கள். - முகநூல் -
  21. உண்மையில் அவர்கள் கோருவது இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்று இலங்கை மீது சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் மற்றும் சுதந்திர தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து ஐநாவில் தீர்மானம் கொண்டுவரும்படி... அவர்கள் கோரிக்கைகளில் சில இந்த இணைப்பில் உள்ளன. http://www.yarl.com/forum3/index.php?showtopic=119014&p=875618 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- "போராட்ட வழி முறைகள் மாறலாம் இலட்சியம் மாறது" என்ற அடிப்படையில் மாணவர்களின் வலிமையை காட்டுவதற்கு அணியமாகின்றனர் தமிழக மாணவர்கள் படையணி. - முகநூல் -

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.