Everything posted by துளசி
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தினர். வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தினர். இலங்கை அதிபரை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரியும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதற்காக இப்போராட்டம் நடத்தபடுவதாகவும் இப்போராட்டத்தின் ஒருங்கினைப்பாளர் வெற்றிவேல் கூறினார். இது தொடர்பாக மத்திய,மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் நாங்கள் போராட்டம் நடத்துகின்றோம் அரசின் அலச்சியபோக்கு நீடித்தால் எங்கள் போராட்டம் தொடர் உண்ணாவிரதம் போராட்டமாக மாறிவிடும் நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள் அங்கே சித்தரவதை செய்யப்பட்டு தினமும் கொல்லபடுகின்றனர். அவர்களை மீட்க நாங்கள் உயிர் உள்ளவரை போராடுவோம் இப்போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு கொடுக்கவேண்டும் இவ்வாறு வெற்றிசெல்வன் கூறினார். இப்போராட்டத்தில் சுமார் 500 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இதனால் போக்குவரத்துக்கு ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது காவல் துறையினர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட கோரி கேட்டனர். ஆனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து இந்தியாவை தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி எண்ணூர் அசோக்லேலண்டு வாயிலில் நாளை-(மார்ச்-17) தொழிலாளர் உண்ணாவிரதம். இலங்கை அரசு செய்த தமிழினப் படுகொலையைக் கண்டித்தும், இனப்படுகொலையைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஐ.நா.மாநாட்டில் இந்தியாவே கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியும், சர்வதேச சுதந்திர விசாரணைக்கு வழிவகுக்கக் கோரியும், தனித் தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் - அசோக் லேலண்டு தொழிற்சாலை வாயிலில் தொழிலாளர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் 17.03.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அசோக் லேலண்டு தமிழின உணர்வாளர்கள் இயக்கம் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஒருங்கிணைக்கிறது. எண்ணூர் அசோக்லேலண்டு பிரதான வாயிலில் நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தை மார்ச் 17 ஞாயிற்றுக்கிழமை காலையில் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் தொடங்கிவைக்கிறார். முற்பகல் 11.30 மணிக்கு நடக்கும் சிறப்பு வாயில் கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். மாலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைக்கிறார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இரா.வந்தியத்தேவன் தலைமை வகிக்கிறார். தொழில் நகரமான வடசென்னையில் அசோக் லேலண்டு தொழிலாளர்கள் ஒருங்கிணைக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், மற்ற தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்கின்றனர் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி... வணக்கம்! ஒருங்கிணைப்புக் குழுவுக்காக, இரா.பழனி (எ) வந்தியத்தேவன். அலைபேசி: 98400 53710, 98408 35458. - முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
நாமக்கலில் இருக்கும் மாணவர்கள் போராட்டத்தில் இணைய தொடர்பு கொள்ளுங்கள் 9688818828 ------------------------------------------------------------------------------------------------------------------------------------- வருகிற 21-ந்தேதி 40 எம்.பி.க்கள் அலுவலகங்களிலும் மாணவர்கள் முற்றுகை போராட்டம்: மாணவர் கூட்டமைப்பினர் அறிவிப்பு. - முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
பழனி சுப்ரமணியா பொறியியல் கல்லூரி மாணவர்கள் தனித்தமிழீழம் வேண்டியும், இலங்கை மீது பொருளாதார தடை கோரியும், தமிழர் பகுதியிலிருந்து சிங்கள படைகளை விலக்க கோரியும், பூந்தமல்லி செங்கல்பட்டு அகதிமுகாமை மூட கோரியும் பழனியில் பேரணியும் ஆர்ப்பாட்டமும் அதன் பின் தபால் தந்தி நிலையத்தை முற்றுகையிட்டும் உள்நுழைந்து பூட்டியும் ராஜபக்ஸ, சோனியா காந்தியின் உருவ பொம்மைகளை எரித்தும் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். தொடர்ந்து தங்கள் போராட்டத்தை பல்வேறு தளங்களுக்கு கொண்டு செல்லும் அவர்களுக்கு நம் பாராட்டுகளை தெரிவிப்போம். தொடர்புகளுக்கு: தமிழ்ச்செல்வன்- 8940254065 - முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
சென்னை-புதுகோட்டை-திருச்சி -திருநெல்வேலி-செங்கல்பட்டு-மதுரை-கோவை-திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாணவர் பிரதிநிதிகள் இன்று சென்னை வந்தனர். அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வர இயலாத மற்ற மாவட்ட தோழர்களுக்கும் அது தெரிவிக்கப்பட்டது.. கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாலும் போராட்டம் முனை மழுங்காது நடக்கும்!! - முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
நல்லவேளை நான் ஏற்கனவே like போட்டிருக்கிறேன். எனவே நீங்கள் என்னை கேட்கவில்லை தானே? ஆனால் சிலவேளை நண்பர்கள் மூலம் பகிரப்பட்டு வந்தால் அதையும் இங்கு இணைப்பதுண்டு. அதற்குரியவர்கள் யார் என்று பார்ப்பதில்லை. ஆனால் முகநூலில் இருந்து பெறப்பட்டது என்று போடுவேன். பையன் அண்ணாவும், மூலம்: முகநூல் என்று போட்டால் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
அன்று வெறும் 8 கைகள் தானே அடக்கி விடுவோம் என்று நினைத்தாய். இன்று 8 ஆயிரம் கைகள். நாளை பல லட்சம் கைகள். மாணவர்கள் மனது வைத்தால் பல கோடி கைகள் துணை நிற்கும். உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா !!!!! - முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
அகிம்சை வழி அரசுக்கு பிடிக்கவில்லை போலும். ஒடுக்க நினைக்கிறார்கள். நாளை மட்டுமே அவகாசம். போராட்ட உத்தி மாறப்போகிறது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------- இன்றைய தினம் கோவை மாணவர்கள் செய்த மாற்றத்தை தான் தமிழகம் எதிர்பாக்கிறது ! வெறும் உண்ணா நிலை போராட்டம் நமக்கு வலிமை சேர்க்காது ! கூடுவோம் ஒன்றாய் ! காட்டுவோம் நம் வலிமையை. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------- காரைக்குடியில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர் நால்வர் சற்று முன்பு கைது - போராட்டம் தொடரும் என அறிவிப்பு. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கவனத்திற்கு!!! பெங்களூரில் போராட்டம். "தமிழீழம்" ஆதரவு வேண்டி நாளை (17-03-2013) Town Hall அருகே "அடையாள உண்ணாநிலை" கண்டனப் போரட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். அனைத்து நண்பர்களும் தவறாமல் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுகொள்கிறோம். Place: Bangalore Town Hall Time: 9 AM தொடர்புக்கு, பாலாஜி முருகன்: + 91-9986840809 தோழர் ஜகன்மணி : - +91-9035216094 தோழர் அருண் : +91-9620225885 - முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஜெனிவாவில்.. இலங்கையில் தனி ஈழத்திற்க்கான கோரிக்கையை இந்தியா வைக்கவில்லை எனில் இனி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பணியில் தொடர கூடாது. மாணவர் மத்தியில் குறுஞ்செய்தியில் தகவல் பரிமாற்றம். இதை தவிர அவர்கள் எதையும் செய்து புடுங்க வேண்டாம். தனி ஈழ கோரிக்கை கேட்டு போராடுங்கள் இல்லையேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிமை படுத்தப்படுவீர்கள். -முகநூல் - இன்றைய தினம் குறிப்பிடும் படியாக வலிமை பெற்ற களங்கள் : பாளை போராட்டம். கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி போராட்டம். கோவை மற்றும் ராமநாதபுரம் பள்ளி மாணவர்கள் போராட்டம். நெய்வேலி முன்னாள் மாணவர்கள் போராட்டம். சென்னை சட்ட கல்லூரி மற்றும் கலை கல்லூரிகள் போராட்டம். விருத்தாசலம் போராட்டம். மதுரை போராட்டம். ரயில் மறியல். தஞ்சை பெரியகோவில் போராட்டம். ப சிதம்பரத்துக்கு கருப்பு கொடி போராட்டம். பெப்சி ஆதரவு. பொறியியல் கல்லூரிகள் போராட்டத்தில் குதிப்பு. வழக்கறிஞர்கள் களத்தில் குதிப்பு. கோயம்பேடு சந்தை ஊழியர்கள் ஆதரவு. பெங்களூரு போராட்டம் முயற்சி. -முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழ்நாட்டின் அனைத்துக் கல்லூரி மாணவர்கள், மாணவிகள், மனித உரிமை ஆர்வலர்கள், தங்களின் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைத்து தமிழர்களையும் கையெழுத்திட வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். http://www.change.org/petitions/president-of-the-eu-un-uk-us-france-foreign-ministers-tamils-need-justice Loyolahungerstrike -முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
- மன்னிக்கவும், ஏற்கனவே இணைக்கப்பட்டு விட்டது. -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஹைதராபத்தில் வேலை செய்யும் இளைஞர்கள் நாளை நடத்தவிருக்கும் போராட்டத்தின் சுவொரொட்டி - முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மீளவும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமானால் என்ன செய்யலாம் என்றும் தமிழக உறவுகள் ஆலோசனை கூறிக்கொண்டு செல்கிறார்கள். அதில் ஒன்று இது. 1) ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு பத்து மாணவர்களை தயார் செய்து அந்தந்த கல்லூரி நிர்வாகத்துக்கு கல்லூரியை திறக்க சொல்லி e-mail அனுப்புங்கள், Cc இல் அதன் பல்கலைகழகத்தை இணைத்துக்கொள்ளுங்கள். 2) குறைந்தது 10 தந்தி கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்புங்கள். 3) மேற்கூறிய இரண்டின் நகலையும் வைத்து கல்லூரியை திறக்க சொல்லி நீதிமன்றத்தில் செவ்வாய் கிழமை முறையிடுங்கள். 4) உங்களின் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் எங்கோ பதிவு செய்யப்படலாம் கவனம். உங்களுக்கு வரும் எந்த தொலைபேசி அழைப்பையும் பதிவு செய்து வைப்பது நலம். 4) நீங்கள் போராடும் ஒவ்வொரு இடத்திலும் ரகசிய camera இருக்கலாம். உங்கள் camera வை எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருங்கள், முடிந்தால் பதிவு செய்துகொண்டே இருங்கள். வழக்கறிஞர்களுடன் கலந்து ஆவன செய்யுங்கள். - முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மக்களே மிக அவசரம். நெய்வேலி மந்தாரக்குப்பம் பேருந்து நிலையத்தில் உண்ணா விரதம் இருக்கும் நமது உறவுகளை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்குவதாக தகவல் வந்துள்ளது. மாணவர்களின் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை முதல் உண்ணா விரதத்தில் சுமார் 15 முன்னாள் இந்நாள் மாணவர்கள் கலந்துக்கொண்டு உள்ளனர். உறவுகளே நமக்கான தனி தமிழ் ஈழத்தை பெற நடத்தம் படும் போரட்டங்கள் அனைத்தும் நசுக்கப்பட்டு விடாமல் இருக்க உடனே தொடர்பு கொண்டு பேசுங்கள் 04142-262258-rammamoorththy நெய்வேலி மந்தாரக்குப்பம் காவல் ஆய்வாளர் நாகரிகமாக பேசவும் - முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
பாளை : வட்டாச்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி ! மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது ! வெல்லட்டும் மாணவர் எழுச்சி ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ஓசூரில் போராட்டம் தொடங்கியாச்சு...!!! திரண்டு வாருங்கள் தோழர்களே. தோழர்களே, நம் அனைவரின் போராட்டங்களுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று சட்ட கல்லூரி மாணவர் ஒருவரும், வழக்கறிஞர் ஒருவரும் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஓசூர் தாலுக்க அலுவலகம் அருகில் இறங்கியுள்ளனர். இங்கு மாணவர்கள் அனைவரின் ஆதரவை நாடியும் அவர்களுக்கு ஊக்கம் குடுக்கும் வகையில் அவர்கள் போட்ட விதையை விதைத்துள்ளனர். அவர்களுக்கு உங்கள் அனைவரின் ஆதரவை தாருங்கள். அவர்களோடு நாங்களும் அமர்ந்து ஆதரவளித்து வருகிறோம். நீங்கள் அனைவரும் அவர்களுக்கு தொலைபேசி மூலமாவது வாழ்த்துக்கள் தெரிவியுங்கள். சிலம்பரசன் -7639757374 வழக்கறிஞர் சண்முகம் - 9791271949 - 9443913770 இப்படிக்கு, என்றும், தோழமையுடன், தன்மானம் சக்ரவர்த்தி. - முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
போராட்டம் நடத்தும் அன்பு தம்பிகளுக்கு தயவு செய்து உங்களது போரட்டத்தில் எந்த ஒரு கட்சிகளையும் அனுமதித்து விட வேண்டாம்.ஒரே நாளில் உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வர வைத்து போரட்டத்தை முடித்து விடுவார்கள் ! - முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாற்றுவோம் போராட்ட உத்தியை ! உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டும். நம்மை நாமே வருத்திக்கொள்வதைப் பார்த்து இந்த மானங்கெட்ட அரசுகள் திருந்தப்போவதில்லை என்பதற்கு சாட்சியாய் இருக்கிறார் மணிப்பூர் போராளி இரோம் சர்மிளா. இந்த உண்ணாவிரதம்.. மனு கொடுப்பது. உள்ளிட்ட அடையாளப்போராட்டமெல்லாம் வேலைக்காகாது. நம்மை துளியும் மதிக்க மாட்டார்கள். நாம் உண்ணாவிரதம் இருந்து செத்துப்போனால் அப்பாடா. ஒரு விக்கெட் காலி என்று தான் நினைப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தானின் குஜ்ஜார் இன மக்களின் இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் நடந்தது. ரயில் தண்டவாளங்களை தகர்த்தெறிந்தார்கள். ஆடியது மத்திய அரசு. எதிரிக்கு வலிக்க வேண்டும். அதுதான் போராட்டம். அடையாளப்போராட்டங்களுக்கு முடிவு கட்டுவோம். நீங்கள் இருக்கும் உண்ணாவிரதத்தை விட காஷ்மீரில் சிறுவன் ஒருவன் ராணுவத்தை நோக்கி எறியும் ஒரு கல்லுக்கு அதிக வீரியம் உண்டு.. தமிழகத்திலிருக்கும் இலங்கைத்துதரகக் கண்ணாடியில் தமிழனின் `ஒரு கற்கள் கூட இன்னும் ஓவியம் தீட்டாமல்’ இருப்பதே தமிழர்கள் எவ்வளவு அமைதியானவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு.. - முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
சென்னை 18 அன்று முற்றுகை ! அடையாறு சட்ட பல்கலைகழக போராட்ட குழு அறிவிப்பு ! மாறுகின்றது போராட்ட உத்தி. - முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
விடுதியில் இருந்தும் மாணவர்களை வெளியேற்ற அரசு கூறியதாக கல்லூரிகள் அறிவிப்பு. --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- வேலூர் : சட்ட கல்லூரி மாணவர் போராட்டம் தொடர்கிறது ! முடங்காது மாணவர் போராட்டம் ! --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தர்மபுரி : அரசு கலைகல்லூரி விடுதி மாணவர் போராட்டம் இன்றும் தொடர்கிறது. -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கும்பகோணத்தில் மாணவர்கள் போராட்டம் இன்றும் தொடர்கிறது ! கல்லூரிகளை மூடினாலும் போராட்டம் தொடரும் என அறிவிப்பு -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அரியலூரிலும் அரசு கலைக் கல்லூரியில் தொடர்கிறது போராட்டம் ! -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- நெய்வேலியில் முன்னாள் மாணவர்களின் உண்ணாவிரதம் காவல் துறை அனுமதியுடன் தொடங்கியது ! - முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு எமது போராட்டத்தை நசுக்கிவிட முடியாது! கல்லூரிகளுக்கு வெளியில் ..எமது போராட்டம் முன்பைவிட தீவிரமாகும்..இருந்து பாருங்கள்! மாணவர் தலைவர்கள் சூளுரை. "எமது போராட்டத்தில் நியாயம் உள்ளது , நீதி உள்ளது. நாம் எமது உறவுகளுக்காக உரத்து நீதி கேட்கிறோம். நாம் எம் இனத்தின் அழிவுக்காக உலகத்திடம் நீதி கேட்கிறோம். நாம் பாலச் சந்திரன் போன்ற ஆயிரக் கணக்கான குழந்தைகளை சுட்டு கொன்ற ராஜபக்சாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி உரத்து கேட்கிறோம். இது தவறு என்றால்அந்த தவறை நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். தமிழ் நாட்டு மக்கள் எம்மை புரிந்தகொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. நாம் சிறிலங்காவின் இனப்படுகொலைக்காக நீதி கேட்கிறோம். நாம் தமிழ் நாட்டில் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. அகிம்சை வழியில் போராடுகிறோம். அப்படி இருக்கும்போது எமது போராட்டத்தை யாராவது நசுக்க முயன்றால், அதை நிச்சயம் நாம் அனுமதிக்க மாட்டோம். மாணவர் சக்தி மகத்தான சக்தி என்பதை சம்பந்தப் பட்டவர்களுக்கு புரியவைப்போம். தற்போது சகல கல்லூரிகளிலும் நடந்து கொண்டிருக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். அதே வேளை எதிர்வரும் திங்கள் முதல் எமது போராட்டம் புதிய பரிமாணம் பெறும் என்பதையும் கூறிக் கொள்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள்" இப்படி உணர்வு பொங்க கூறினார்கள் பொறுப்பு வாய்ந்த சில மாணவர்களும் அவர்களின் தலைவர்களும். அவர்களின் பணி தொய்வின்றி தொடர நாமும் வாழ்த்துகிறோம்.! மாணவர்களின் போராட்டம் எரிமலையை விட உறுதியானது. அதன் வெக்கையில் அத்தனையும் பொசுங்கிவிடும் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது! - முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இலங்கைப் பிரச்னையை முன் வைத்து, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். ராமேஸ்வரம் வேர்க்கோடுப் பகுதியில் அமைந்துள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர். இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது, நடந்த இனப் படுகொலையைக் கண்டித்தும், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனும், இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் புகைப்படத்தை முகமூடியாக அணிந்திருந்தனர். - முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மு.யூ.மீரான் முகைதீன் முகவையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் இலங்கை அரசை போர்குற்ற நாடாக அறிவிக்க கோரி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் ஒன்றிற்கு 18.03.2013 திங்கள் கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இராமநாதபுரம் அரண்மனை முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சி, அமைப்பு பேதமின்றி உணர்வாளர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த அறநெறி போராட்டத்தில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இசுலாமிய அமைப்புகளில், பாப்புலர் ஃப்ரன்ட், கேம்பஸ் ஃபரன்ட்,எஸ்.டி.பி.ஐ , த.மு.மு.க , மனித நேய மக்கள் கட்சி, இன அழிப்பிற்கெதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் என பல்வேறு பட்ட ஒத்த கருத்துடைய அமைப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். இதை பார்க்கும் தோழர்கள் இதையே அழைப்பக ஏற்று இந்த உணர்வு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு உங்களை அழைக்கிறோம். இந்த போராட்டம் அனைத்து அமைப்பினராலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை முன்னின்று ம.தி.மு.க தோழர் சுப்பு (பஜாஜ்) ஒருங்கிணைத்து வருகிறார்.மேலதிக தகவல்களுக்கு தோழர் சுப்பு : 9786699060 அல்லது முகவைத்தமிழன் : 9047507665 இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் இராமநாதபுரம் மாவட்டம் - முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
திரு நல்லக்கண்ணு அவர்கள் அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார் ! மாணவர் போராட்டம் அதற்கு எதிரானது ! திசை திருப்ப வேண்டாம் தோழரே ! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ அரியலூர் அரசினர் கல்லூரியில் சுமார் 35 மாணவர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம். தொடர்புக்கு, ராபர்ட் - 8883170213, கருணாநிதி - 9176785058 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ ஜெயங்கொண்டம் , கமுதியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் ! சென்று ஆதரவு தாருங்கள் ! மாணவர் போராட்டம் விரிவடைகிறது ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ நெல்லை சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர் ! - முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
விரைவில் மாணவர்கள் ஒன்றிணைவோம் ! போராட்ட குழு அறிவிப்பு ! பாளையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் ! தவறாமல் பங்கு பெறவும் ! செல்க - திலீபன் அரங்கம். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மதுரை மாணவர்களின் ஈழப் பேரணி! ஞாயிறு 17.03.2013: காலை 9 மணிக்கு. இடம்:ரேஸ் கோர்ஸ்-ல் இருந்து மதுரை கோர்ட்-தமுக்கம்-இராஜாஜி பூங்கா வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை... அரசியல் கலப்பின்றி மாணவர்களின் சார்பில் "தமிழ் ஈழத்திற்க்கான பொது வாக்கெடுப்பு, சர்வதேச விசாரணை மற்றும் லயோலா கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி" மதுரையில் அமைதி ஊர்வலம் நடத்த உள்ளோம். எனவே மதுரையில் உள்ள அனைத்து - பொறியியற் கல்லூரி மற்றும் பிற கல்லூரி மாணவர்களும் உணர்வுடன் பங்கு பெற வேண்டுகிறோம்! நன்றி.. உங்கள் தமிழ் நண்பன் கணேஷ்~ தொடர்புக்கு: 8124853292 - முகநூல் -
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
msg from Sivakumar Ramalingam மாணவ நண்பர்களே, உங்கள் உண்ணா விரதத்தை நிறுத்த யாராவது (காவல் துறை, ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள்) தகாத வார்த்தைகளாலோ, துன்புறுத்தினாலோ அதை முடிந்தால் உங்கள் கை தொலைபேசியினால் பதிவு செய்து face book வாயிலாக எனக்கு அனுப்பினால், அந்த ஆவண பதிவை இலண்டனில் இருக்கும் பத்திரிகைகளுக்கு தெரியபடுத்துகிறேன். வெளி நாட்டு மக்களுக்கு உங்கள் போராட்டம் தெரியட்டும். - முகநூல் -