Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by துளசி

  1. இது நேற்றைய செய்தி. இன்னும் இங்கு இணைக்கப்படவில்லை என்பதால் இணைக்கிறேன். தமிழ்நாட்டு மாணவர் உலகெங்கும் உள்ள தமிழர்களை போராட்டக் களத்தில் இறக்கியுள்ளது. அந்த வரிசையில் நோர்வே இளையோர்கள் இன்று நோர்வே பாராளுமன்றத்தின் முன்பு கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர். ஈழத்தை நடந்த இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை வெண்டும். ஈழ மக்களிடம் ஈழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வெண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள போராளிகளையும் பொதுமக்களையும் உடனடியாக விடுவிக்க வெண்டும். ஈழத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போராளிகளின் மற்றும் பொதுமக்களின் தகவல்கள் உடனடியாக வெளியிடப்பட வெண்டும். (முகநூல்: loyolahungerstrike)
  2. எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும். (முகநூல்: loyolahungerstrike) இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்று எந்த ஒரு நாடும் கூறவில்லை. எனவே அமெரிக்கா கொண்டுவந்த இந்த தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு மறைமுக வெற்றியே கிடைத்துள்ளது. -சுப்பிரமணிய சாமி- வீட்டுக்குள் இருந்து அறிக்கை விடும் சூ . சாமி அவர்களே தமிழ்நாடு பக்கம் வரலாமே. (முகநூல்: loyolahungerstrike)
  3. தமிழக போராட்ட செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள அனைவரும் loyolahungerstrike இன் இந்த இணைப்பில் இணைந்திருங்கள். இப்பொழுது 24,078 likes http://www.facebook.com/tamilnaduhungerstrike
  4. மாணவர்களே, அடுத்தது என்ன, எப்படி? புரட்சியைத் தொடங்குவது எளிது, ஆனால் தொடர்வது கடினம். ஒரு பெரும் புயலுக்கு நடுவே, ஒரு சின்ன அகல் விளக்கை அணையாமல் எடுத்துச் செல்லும் வித்தை போன்றது அது. அசாத்தியமானதல்ல என்றாலும் அசாதாரணமான சுய ஒழுக்கம், கட்டுப்பாடு அதிகம் தேவைப்படுகிறது. களத்தில் நிற்கும் கல்லூரிகள், மாணவர்கள் அனைவரும் அவரவர் கல்லூரியில் அனைத்துத் தரப்பு மாணவ-மாணவியரை உள்ளடக்கிய 10 பேர் ஒருங்கிணைப்புக் குழுவை உடனடியாக ஏற்படுத்தியாக வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைவருமாக சேர்ந்து ஒரு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்துவதும் மிகவும் இன்றியமையாதது. பிற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுடனும் தொடர்பு ஏற்படுத்திப் பேசிக்கொண்டிருப்பது, தகவல் பரிமாறிக் கொள்வது மிக அவசியம். போராட்டத்தை ஃபேஸ் புக் புரட்சியாக மாற்றி விடாமல், சிறு துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள், ஒட்டுப்படம் (sticker) போன்றவற்றை அச்சடித்து, உங்கள் பகுதியில் வீடு வீடாக சென்று விநியோகித்து, மக்களை சந்தித்துப் பேசி, உங்களுக்கு தேவையான பொருளுதவியையும் கேட்டுப் பெறலாம். மக்கள் ஆதரவும், பொருளுதவியும் ஒருங்கேக் கிடைக்க இது ஒன்றே வழி. கல்லூரி நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள் போன்றோரிடம் உறுதியாக ஆனால் மரியாதையாகப் பேசுவது நல்லது. அவர்கள் நம்மை வெறுக்கும்படியான மொழி, உடல்மொழி, கோஷம், அணுகுமுறை, அராஜகம் வேண்டாம். அதுபோல ஊடகங்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது முக்கியமானது. கல்லூரி நிர்வாகமோ, மத்திய, மாநில அரசுகளோ போராட்டங்களை விரும்புவதில்லை, சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாடுகளை மாற்றியமைக்கவும் எளிதில் முன்வருவதில்லை. பொறுமையிழக்காமல், உறுதி பிறழாமல், நம்பிக்கையிழக்காமல் தொடர்ந்து முன்னேறுவதுதான் ஒரே வழி. தொலைநோக்குப் பார்வை, அறிவுபூர்வமான அணுகுமுறை, தொடர்ந்த கருத்துப் பரிமாற்றம் அவசியம் வேண்டும். பெற்றோரின் கடின உழைப்பையும், காசையும் பெற்று வாழ்கிற மாணவர்கள் அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். கூடவே சமூகக் கடமையை ஏற்றுக் கொள்வதால் அதற்காகவும் உழைக்க வேண்டும். இரண்டுமே முக்கியமானதால், இரு மடங்கு உழைப்பைக் கொடுக்க வேண்டும். இது ஒன்றும் கடினமானதல்ல. நேர மேலாண்மை ரகசியம் தெரிந்தால் போதும். “படிப்பைப் பார், தேவையற்ற வேலை எதற்கு” என்றெல்லாம் இடித்துரைப்பார்கள் பலரும். இப்படி நல்லவர் எல்லோருமே ஒதுங்கிப் போனதால்தான் ஓர் அவல நிலைக்குள் சிக்கிக் கிடக்கிறோம். எங்கள் உலகை நாங்கள் உருவாக்குகிறோம், எந்த கல்லூரியும், பேராசிரியரும் கற்றுத்தராத பல அற்புதமான வாழ்க்கைப் பாடங்களை நாங்கள் பயில்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துங்கள். நாம் வளர நாடு வாழ்வது அவசியம். இருளுக்குள் உழன்று கொண்டிருந்த தமிழினம் உங்களால் நம்பிக்கைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து அறவழியில் போராடுங்கள். ஒற்றுமையாய்ப் போராடுங்கள். ஐம்பது வருடங்களாக தொடர்ந்து ஏமாற்றப்பட்டிருக்கிற நம் தமிழ் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு உங்களால் உருவாகட்டும்! சுப. உதயகுமாரன் இடிந்தகரை மார்ச் 21, 2013 (முகநூல்)
  5. நன்றி அண்ணா தகவலுக்கு. நீங்கள் சுட்டிக்காட்டிய இணைப்பிலுள்ள செய்தி இதுதான். ஆனால் பெயர் மற்றும் ஏனைய விபரங்கள் இன்னும் தெரியாது. http://www.facebook.com/photo.php?fbid=577168638968057&set=a.212371062114485.58409.211901605494764&type=1&permPage=1
  6. நாளை நடைபெற உள்ள ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர் முழக்கப் போராட்டம்" - தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு. தொடர்புக்கு:- ஒருணைப்பாளர்கள் சென்னை...இரா.திருமலை : 99442 24935 சென்னை. ,தினேஷ் : 97911 62911 சென்னை. ,கார்த்தி :97911 56568 தஞ்சை,,,,,கௌதமன்/ 9786603669 திருச்சி......சிவா/ 9940953705/, தினேஷ்/ 9080808068 கும்பகோணம்/ 9865370777, ஈரோடு ராஜ்குமர் 8870422092, பிரகாஷ் 9976916787 கோவை தினேஷ் 9944599425 சேலம் பாரதி 9894363191 இராமநாதபுரம் அப்துல்காதர் 9942915913 திண்டுக்கல் ரவி 8220132507 மதுரை வெங்கட்ராமன் 9894438555 சிவகங்கை சிவாஜிகாந்தி 9865619350 விழுப்புரம் ஏ.வி.சரணவன் 9443112017 திருவள்ளூர் திலீபன் 9840150597 காஞ்சிபுரம் அன்சாரி 9884715642, தாஸ் 8973061609 (முகநூல்)
  7. மாவீரர்களுக்கு வணக்கங்கள்...
  8. "டெய்லி மிரர்" பத்திரிக்கையில் வந்த செய்தி: தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டம் தீவிரவாதம் என்று கூறுகின்றனர். (முகநூல்)
  9. அண்ணன் :- காலேஜே இல்ல எதுக்கு வெளில போற அப்பா:- வீட்ல இருமா போராட்டம் அது இதுன்னு வம்ப வெலைக்கு வாங்காத. அம்மா:-ஏண்டி பள்ளிக்கூடமே இல்ல ரோட்டுல திரியறேன்னு ஊரே பேசுது.. எதுக்குடி போற நீ போயிதான் நாட்ட காப்பாத்த போறியா..? அண்டை வீட்டு பெண்கள்:- போராட்டம் பண்ணுறாளாம்.. ரோட்டுல பசங்க கூட நின்னுட்டிருக்கா.. இன்னும் எத்தனையோ ஏச்சு பேச்சுக்களை தாங்கி கொண்டு தமிழுக்காக ஒன்றிணைந்து போராடி வரும் தமிழச்சியருக்கு 'கிரேட் சல்யூட்! (முகநூல்)
  10. திருச்சியில் இந்திய வரைபடத்தில் இருந்து தமிழகத்தை கிழித்தெடுத்து விட்டு மீதி படத்தை போட்டு எரித்த மாணவர்கள். (முகநூல்)
  11. மாணவர்கள் தொடர் முழக்கப்போராட்டம். இடம்: திருநெல்வேலி பாளை பேருந்து நிலையம் அருகில் ஜோதிபுரம் திலீபன் திடல் நாள்: 21 03 2013 தொடர்புக்கு: 9047723844 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- நாளை காலை 9 மணி அளவில் ஆற்காடு நகர பேருந்து நிலையத்தில் வேலூர் மாணவர் கூட்டமைபு சார்பாக நடத்தும் இலங்கைக்கு எதிரான ஆர்பாட்டம். தொடர்புக்கு : 9003509619 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Madras High court Advocates Association, and other Madras District court Association சார்பில் நாளை 20-03-2013 கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம். அனைரும் காலை 10.30 மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்படுகிறார்கள் . (முகநூல்) ஈழ விடுதலைப் போராட்டத்தில் திருநெல்வேலியில் ரயில் மறியல் செய்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சியினர்… (முகநூல்)
  12. இணையவன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  13. நியூவார்க் டைம்ஸ் இல் வந்த செய்தி.. Tamil Nadu Students Protest Alleged Human Rights Abuses in Sri Lanka http://india.blogs.nytimes.com/2013/03/18/tamil-nadu-students-protest-alleged-human-rights-abuses-in-sri-lankatamil-nadu-protests/ - முகநூல் -
  14. சென்னை சத்திய மூர்த்தி பவனை முற்றுகையிட்ட 100 கல்லூரி மாணவர்கள் கைது. தொடர்புக்கு : 8438350122 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று 6 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன. --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மானமுள்ள தமிழனாக நீ மாண்டு என்னை வேதனை பட வைத்து விட்டாயே தோழா . செந்தீயில் வேகிறது எம் தமிழினம் அதனை வேடிக்கை பார்க்கிறது ஓர் ஓநாய்கள் கூட்டம். இனியும் உயிரிழப்புகள் வேண்டாம் தோழா. (முகநூல்)
  15. ராசிபுரம் கல்லூரி மாணவர்கள் போராட தயாராகி வருகிறார்கள். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ராசிபுரம் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 25 பேர் நாமக்கல் செல்வம் கல்லூரி மாணவர்கள் உடன் இணைந்து போராட்டத்தில் ஈடு பட்டனர். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------- எஸ்.ஆர். எம் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் இருந்து மறைமலை நகர் வரை ஊர்வலம். நகராட்சி மன்றத்தின் முன்பு போராட்டம். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------- திருநெல்வேலி மாணவர்கள் ஒன்பதாவது நாளாக உண்ணாவிரத போராட்டம். (முகநூல்)
  16. நாளை சரியாக காலை 10மணிக்கு, திருப்பூர் மாவட்டம் மூலனூரில் மாணவ கூட்டமைப்பு சார்பாக உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம். தொடர்புக்கு : கிங்ஸ் லி - 9952650743 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மதுரை அமெரிக்கன் கல்லூரி முன் நூற்றுகணக்கான மாணவர்கள் உண்ணாவிரதம் ,மதுரை மாணவர்களும் பொதுமக்களும் இணைந்து கொள்ளவும். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு சாண்டி பொறியியல் கல்லூரி மாணவர்கள் விடுமுறை அறிவித்தும் இலங்கை அரசை கண்டித்து போராட்டம் நடத்திவருகின்றனர். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் போராட்டம் தடுக்கப்படுகிறது. கல்லூரி நெருப்போடு விளையாட வேண்டாம் என மாணவர் கூட்டமைப்பு எச்சரிக்கிறது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கல்லூரியின் அராஜகம் நாகர்கோவில் சிந்தங்கரையில் உள்ள சென் பிட்டர் இஞ்சினிரிங் காலேஜ் மாணவர்கள் 4 பேர் உண்ணாவிரதம் இருந்தனர். கல்லூரி நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் உண்ண விரதத்தை தொடர்ந்த மாணவர்களை அங்கு உள்ள லோக்கல் ரவுடிகளை வைத்து உண்ணவிரதத்தினை கலைத்து . மாணவர்களை துக்கி சென்றுள்ளனர் . மாணவர்கள் இதுவரை எங்கு என்று தெரியவில்லை. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- நாமக்கல் பிஜிபி பொறியியல் கல்லூரியில் நேற்றிலிருந்து கல்லூரியின் கடும் எதிர்ப்பையும் மீறி 60 மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- குமரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்ட St. சேவியர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் குண்டர்கள் மற்றும் ஆசிரியர்களை வைத்து தாக்குதல். பதட்டமான சூழ்நிலை, மாணவர்களுக்கு ஆதரவாக குவிந்து வரும் உணர்வாளர்கள். களத்தில் இருந்து Suresh Kumar தகவல் (முகநூல்)
  17. சேலம் கோரிமேடு பகுதியில் அரசு ஐ.டி.ஐ மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர் !!! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அருள்மிகு மீனாக்ஷி அம்மன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 13 பேர் 2 ஆவது நாளாக தமது உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள். சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் அவர்களுடன் இணைந்து தமது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை விருதாச்சலத்தில் நூற்றைம்பது மாணவர்கள் மறித்து மறியல் செய்தார்கள். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயிலை மாணவர்கள் சிறை பிடித்து உள்ளார்கள். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- நாமக்கல் மாணவர்கள் போராட்டத்தை தொடங்கவுள்ளார்கள். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- சற்றுமுன்:காலை முதல் அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் தஞ்சையில் தொடர் உண்ணாவிரத போராட்டம்...கோர்ட் ரோடு அருகே நடைபெறுவதாக இருந்த போராட்டம் இட பற்றக்குறை காரணமாக புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கபட்டுவிட்டது. 100 மாணவர்களுக்கு மேல் உண்ணாவிரதம். புகைபடங்களை மதியம் பதிவேற்றம் செய்கிறேன். தஞ்சை பகுதி நண்பர்கள் நேரில் சென்று மாணவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கவும். நண்பர்களே மாணவர்களை வாழ்த்த தொடர்பு எண்கள் விஸ்ணு வரதன் 7598167241 அருண் உதயா 7373169407 சதிஷ்குமார் 8122616410 (முகநூல்)
  18. 7000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோயம்பத்தூரில் நடக்கும் போராட்டத்திற்கு ஒன்று சேர்ந்துள்ளார்கள். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ அப்போலோ பொறியியல் கல்லூரியை சேர்ந்த 100 மாணவர்கள் பூந்தமல்லி அருகே தங்கள் போராட்டத்தை தொடங்கினர். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ தேனீ பல்கலைக்கழக மாணவர்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ Students of Salem korimedu ITI, involved in protest on streets ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ சற்று முன்: தஞ்சை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தஞ்சை மணி மண்டபம் கல்லுரி அருகில் 250 பேர் தொடர் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர். மாணவர்களை வாழ்த்த தொடர்பு கொள்ளவும். ராம்குமார் 9787896700 பாலசந்தர் 9994282388 பாட்ஷா 9629923887 பாரதிராஜா 9042112706 "ஈழம் எங்கள் உயிர்டா இந்தியா எங்களுக்கு மயிரடா" இது தற்பொழுது இங்கு ஒங்கி ஒலிக்கும் மாணவர்களின் கோஷம் (முகநூல்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.