Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by துளசி

  1. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
  2. சசூரி பொறியியல் மாணவர்களின் போராட்ட துளிகள் காலை மணி 7.30 மாணவர்கள் 5 பேர் கல்லூரி வாசலில் கூடினோம் 8.00 மணி எங்களோடு இணைந்தனர் இன்னும் 2 மாணவர்கள் 8.30 மணி 18 மாணவர்கள் ஆனோம் 8.35 மணி முதல் கல்லூரி பேருந்து வழி மறைக்கப்பட்டு மற்ற மாணவர் மாணவர்கள் ஆதரவு கோரப்பட்டது 9.00 மணி 9 கல்லூரி பேருந்துகள் மறிக்கப்பட்டு மாணவ மாணவிகள் அனைவரும் இறக்கப்பட்டனர் 9.30மணி கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து (கோவை-சக்தி)தேசிய நெடுஞ்சாலை நோக்கி புறப்பட்டோம் 9.50 மணி தேசிய நெடுஞ்சாலையின் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. அப்போது மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 2000. 10.30 மணி போராட்டத்தை முன்னெடுத்தால் என் மீது வழக்கு பதிவு செய்வதாக போலீசாரால் மிரட்டப்படுகிறேன். 11.00 மணி வரை தொடர்ந்தது சாலை மறியல். 11.15 அன்னூரை நோக்கி பேரணி புறப்பட்டோம் (சுமார் 10 கீலோமீட்டர் மத்திய மற்றும் காங்கிரஸ் எதிரான முழக்கங்கள் மற்றும் தனிஈழ முழக்கத்துடன். மேலும் முழக்கங்கள் மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு பேசும் மாணவர்களால் அவர்களின் மொழியில் ஒலித்தது.) 1.00 மணி அன்னூரில் மத்திய அரசின் அலுவலகமான தபால் நிலையம் முற்றுகையிடப்பட்டது, மேலும் ராஜபக்சே உருவப்படம் கொழுத்தப்பட்டது, மாணவர்கள் தபால் அலுவலகம் நுழைய முயன்ற போது போலீசாரால் தடுக்கப்பட்டனர் 1.20 மணி அளவில் B.S.N.L அலுவலகம் முற்றுகையிடப்பட்டு பூட்டு போடப்பட்டது. எழுச்சியோடு காணப்பட்ட இப்போராட்டத்தில் மாணவர்களோடு பொதுமக்களும் கலந்து கொண்டனர். இறுதியில் 2000 த்திற்கும் மேற்பட்டோர் காணப்பட்டனர். போராட்டத்தின் அடுத்தகட்டத்தில் இருக்கிறோம். நாளை கோவையில் நடக்கும் அனைத்து கல்லூரி பேரணிக்கு மற்ற கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைப்பதால் முகநூலில் முழுதாய் இயங்க முடியவில்லை. எனவே நாளை புகைப்படங்களை பதிவிடுகிறேன். வெல்க மாணவர் போராட்டம். விரைவில் பெறுவோம் தனி தமிழ் ஈழம். Shoban Kalish (முகநூல்)
  3. இன்று துணைவேந்தர் ஏற்று கொண்டார் நாளை உலகமே.. புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவர்களின் பட்டினி போராட்டம் 5ம் நாளான இன்று துணை வேந்தரின் வாக்குறுதியுடன் முடிவுக்கு வந்தது. இந்தியாவில் முதன் முறையாக மாணவர்களின் கோரிக்கையை ஏற்று புதுவை மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் மாணவர்களின் ஏழு அம்ச கோரிக்கையை துணைவேந்தரே ஐ.நா மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்ப சம்மதித்ததுடன், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை எனவும் பிரகடன படுத்தினார். மேலும் அதன் நகல்களை இந்திய பிரதமருக்கும் , உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகத்துக்கும் அனுப்ப தானே தயாராக உள்ளதாக அறிவித்தார். நாளை வகுப்பு புறகணிப்பு போராட்டமும் , புதுவை பிரஞ்சு துதரக முற்றுகை போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர் . அனைவரும் திரள்வோம் ! தமிழ் ஈழம் வெல்வோம் !! (முகநூல்)
  4. ஆறு நாள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு இன்று கரூரில் ஆரசு கலை கல்லுரி மாணவர்கள் 8 பேர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கி உள்ளார்கள் . 1. T .சக்திவேல் 2. D .சதீஷ் குமார் 3. P .ஸ்ரீனிவாசன் 4. T .யோகேஸ்வரன் 5. A .மணிகண்டன் 6. M .பிரபாகரன் 7. R .பாலமுருகன் 8. C . கார்த்திக் தொடர்பு எண் : 089406-00568. - தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு. ( கரூர் மாவட்டம் ). (முகநூல்)
  5. பலர் இதில் பங்களிப்பு செய்கிறார்கள். நாம் முகநூலில் வருவதை இங்கு இணைக்கிறோம். அவ்வளவு தான். எனவே எமக்கு நன்றி சொல்லாதீர்கள். தமிழகத்தில் போராடுபவர்களுக்கு தான் நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். பி.கு: நேற்று உங்கள் பெயரை பார்த்து பெண் என்று நினைத்து அக்கா என்று அழைத்து விட்டேன். இப்பொழுது தான் male என்று இருப்பதை கவனித்தேன். மன்னிக்கவும்.
  6. பி.கு: தீக்குளித்து தற்கொலை செய்தது ‘நாம் தமிழர்’ கட்சியைச்சேர்ந்த மாணவர் என்று ஒருவர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிமாக இருக்கலாம் என்று இன்னொருவர் குறிப்பிட்டுள்ளார். தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். -------------------------------------------------------------------------------------------------------------------------------------- இடிந்தகரை இல்... ஈழத் தமிழர் மாணவர் போராட்டத்திற்க்கு ஆதரவாக பெண்கள் பங்கேற்ற முதல் நாள் போராட்டம் ! - முகநூல் -
  7. மாணவமணிகளின்..கவனத்திற்கு... 1. உணர்ச்சி வசப்படகூடியவர்களை முன்னணியில் நிறுத்த வேண்டாம். 2. அனைத்து கல்லூரி மாணவரையும் அரவணைத்து செல்லவும். 3. வீண் வாக்கு வாதங்கள் வேண்டாம். 4. நமது எண்ணத்தை ஏற்று கொள்ளும்படி யாரையும் நிர்பந்திக்க வேண்டாம். 5. பெற்றோரின் வற்புறத்தலால் விலக நேரும் தோழர்களை வருத்த வேண்டாம். 6 சில காலம் செல்ல வேண்டிய போராட்டம். இறுதி வருட மாணவர்களுக்கு "சுழற்சி" முறையில் பங்கு பெற செய்யுங்கள். 7. யார் தலைமை என எக்காலமும் போட்டி வர கூடாது. 8. மத, சாதீய உணர்வினால் பிரிக்க எண்ணுவார்கள் கவனம். 9. உடல் நிலை பேணல் மிக அவசியம் 10. வரலாற்றை பகிருங்கள் 11. "ஐரோம் சர்மிளா" "உதயகுமார் ஐயா" ஆகியோரின் கள வாழ்வு பற்றி அறிந்து கொள்ளுங்கள். 12. வன்முறை எண்ணம்..எள் முனையளவு கூட உள் நுழைய கூடாது. 13. மாணவர்களின்றி உங்களுடன் கலந்திருப்போரை கண்காணிப்பதும் மிக அவசியம். அவர்களின் எண்ணம் நாம் அறிய இயலாது 14. இதனை தங்களுக்குள் குழ பிரித்து கண்காணிப்பு, தகவல் தொடர்பு என பணிகளை சரியாக செயல் படுத்துங்கள் 15. தலைமைதுவம்..விட்டு கொடுத்தலில் தொடங்குகிறது. வெல்லும் உங்கள் படை.. உங்களின் பின்னால்..இந்த தமிழ் உலகு! - முகநூல் -
  8. மதுரை கோரிப்பாளையத்தில் ஈழத்தமிழருக்காக மாணவர் ஒருவர் தீக்குளித்து மரணம். அனலாய் கிளம்பிய உயிராயுதமே உன் கடைசி மூச்சுக்கு வீரவணக்கம்!!! எரியும் நெருப்பு உடலை பொசுக்குது எரிந்தப் பின்னும் எழுந்து வருவேன் இனப்பகைக்காக என்னைத் தருவேன்!!!!!!!!!! - முகநூல் - பி.கு: வேறு தகவல்கள் கிடைத்தால் இணைக்கிறேன்.
  9. கொழும்பில் சன் டிவி மாறன் சகோதரர்களின் அதி நவீன அலுவலகம்... ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், இலங்கை அரசுடன் ஒப்பந்தம்.. (முகநூல்) அப்போ சன் டிவி அலுவலகம் நாளை முற்றுகை .. சரி தானே ! என்று கேட்டு ஒருவர் comment பண்ணியுள்ளார். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------- M.A.R. Engineering College Students In National Highways National Highways (முகநூல்)
  10. இது பற்றி ஒருவர் இவ்வாறு எழுதியுள்ளார். மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இன்று இரவு 7 மணிக்கு, பைக்கில் வந்த ஒரு வாலிபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். ‘தனி ஈழம் மலரட்டும்... ராஜபக்ஷே ஒழிக!’ என்று கோஷமிட்டவாறு, கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில், பெட்ரோல் பங்கை நோக்கி ஓடினார். பணியில் இருந்த ஊழியர் ஒருவர், எரிந்துகொண்டே ஓடிவந்த இளைஞரை கீழே தள்ளி, ஏற்பட இருந்த பெரும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தினார். மற்ற ஊழியர்களும் சுதாரித்து, தீயை அணைத்தனர். தீ வைத்துக்கொண்ட இளைஞர் அந்த இடத்திலேயே கருகினார். (முகநூல்)
  11. ஈழ இனப்படுகொலைக்கு எதிராக வீதிக்கு வந்த ஆசிரியர்கள்... இன்று மாலை திருப்பூர் பெரியார் சிலை அருகில் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சார்பில் ஈழ இனப்படுகொலையாளர்கள் மீது சர்வதேச விசாரனை கோரியும், அமெரிக்காவின் அயோக்கிய தீர்மானத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட ஒருங்கினைப்பாளர் தோழர் மூர்த்தி தலைமை தாங்கினார், திரளான ஆசிரிய பெருமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பூரில் ஆசிரியர்கள் போர் குரல்... மற்ற மாவட்ட ஆசிரியர்களே, பேராசிரியர்களே நீங்கள் எப்போழுது போராட போகிறீர்கள்? இப்போழுது நீங்கள் அநீதிகளுக்கு எதிராக போராடவில்லை என்றால்....? (இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பாக கண்டன உரையின் போது...) - முகநூல் -
  12. பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி மாணவர்களின் போராட்டம் - முகநூல் - - முகநூல் - - முகநூல் - இலங்கையை எதிர்த்து குரல் கொடுத்த மாணவர்களை தடுத்த M.A.R கல்லூரியின் நுழைவாயில் உடைப்பு !! மாணவர்கள் விடாமல் போராடி ராஜபக்சேவின் உருவ படத்தை எரித்தனர் !! (முகநூல்)
  13. திருச்சி M.A.R பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் !! ராஜபக்சே உருவ படம் எரிப்பு !! --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- WE SUPPORT tamil ealam ! MCETIANS! pollachi - முகநூல் :loyolahungerstrike -
  14. கோவை சட்டக்கல்லூரி , மற்றும் அரசு கலை கல்லூரி மாணவர்கள் நடத்தும் அறப்போராட்டம் 8 வது நாட்களாக தொடர்ந்து வெற்றியுடன் நடைபெற்று வருகிறது. ஒரு சில தோழர்கள் உடல் நலம் பாதித்து உண்ணாவிரத பந்தலிலேயே மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளார்கள். - முகநூல் -
  15. நான் இதை loyolahungerstricke இன் முகபுத்தகத்தில் பதிந்துள்ளேன். தமிழக உறவுகளே இனியும் இந்த தீக்குளிப்பு முயற்சிகள் வேண்டாம். உயிருடன் இருந்து எமக்காக போராடுங்கள்.
  16. இன்று பண்டிச்சேரியில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களும் ஈழ விடுதலைக்காக பேரணி மற்றும் உண்ண விரத போராட்டம். (முகநூல்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.