Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by துளசி

  1. நந்தனம் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம் இலங்கைப் பிரச்னை விவகாரத்தில், கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், அமெரிக்க தீர்மானத்தைக் கண்டித்தும் சென்னை நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள், கல்லூரி வளாகத்துக்குள்ளேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். - முகநூல் - தர்ணா போராட்டம் என்றால் என்ன? யாரும் தெரிந்தவர்கள் கூறுங்கள். வரும் ஞாயிற்றுக்கிழமை (17/03/2013) ஹைதராபாத் நகரில் கண்டனப் போராட்டம் தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை(17/03/2013) தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் (ஹைடெக் சிட்டி பகுதியில்) கண்டனப்போராட்டமும், ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். ஹைதராபாத் நகரில் வசிக்கும் தமிழ் நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நமது கோரிக்கைகளை பிற மாநில நண்பர்களுக்குஎடுத்துச் செல்வோம். பிற மாநில நண்பர்களையும் அழைத்து வாருங்கள். தொடர்புக்கு: வடிவேல் - 9052624014 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- சென்னை மெரீனாவில் இருந்து உயர்நீதிமன்றம் வரை ,17-3-2013 அன்று மாணவர்கள் அமைதி ஊர்வலம் நடக்கவுள்ளது சென்னை மெரீனாவில் இருந்து உயர்நீதிமன்றம் வரை ,17-3-2013 அன்று மாணவர்கள் அமைதி ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அனைத்து சட்ட, மருத்துவ, பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும், ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால், 50,000 மாணவர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கிறோம். அனைத்து மாணவர்கள் போராட்ட ஒருங்கினைபாளருடனும் தொடர்பு கொண்டு வருகிறோம். "கடல் தாண்டிய நம் சொந்தங்களுக்காக, கடற்கரையில் இணைத்திடுவோம்" தொடர்புக்கு:8056158515 - முகநூல் -
  2. ஒட்டுமொத்தமாக தமிழகம் எங்கும் அகிம்சை போர் நடத்தும் மாணவர்களின் போராட்டங்களை கொச்சை படுத்தி ,திசைதிருப்ப முயலும் ஊடகங்களுக்கு , எமது கோரிக்கைகளில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கமட்டோம் . ஊடகங்களுக்கு எமது வேண்டுகோள் ! எமது கோரிக்கை இதுவே . இந்த கோரிக்கையை முன் நிறுத்தியே அனைத்து மாணவர்களும் போராடுகிறார்கள். அமெரிக்காவின் தீர்மானத்தை எந்த ஒரு மாணவர்களும் ஆதரித்து போராடவில்லை . 1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே 2. இலங்கையில் நடைபெற்றது வெறும் போர்குற்றமோ மனித உரிமை மீறலோ மட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை. 3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேச விசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும் 4. சிங்கள இனவெறி அரசின் துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும். 5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் 6. உலகத்தமிழா்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும். 7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது. 8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 9. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம். - முகநூல் -
  3. கோவை சட்டக் கல்லுரி மற்றும் அரசு கலைக்கல்லுரி மாணவர்கள் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து உண்ணாநிலை அறப்போரை மதிமுக கட்சி அலுவலகத்தில் நடத்தி வருகிறார்கள்.... நேற்று மாலை கல்லுரி முதல்வர் பேசிப் பார்த்தும் அவர்கள் உண்ணா நிலை அறப்போரை வாபஸ் பெற மறுத்து விட்டார்கள்..,... -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- போராட்டத்தில் திருச்சி தனலட்சுமி கல்லூரி மாணவ, மாணவிகள் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவிகளின் போராட்டம். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழ் ஈழ போராட்டத்தில் மதுரை மாணவர்கள் ! - முகநூல் -
  4. 4வது நாள் போராட்டம் 3 மாணவர்கள் மயக்கம், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- உண்ணாவிரதம் இருந்து வரும் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மாணவர்களின் பெற்றோரும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் மாணவர்கள் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் 2-ம் நாளான நேற்று புகைபடத்தில் இருக்கும் தோழர் ஜகதிஷ் (22 years) அவர்கள் காலை முதல் மாலை6.30 வரை தண்ணீர் கூட அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். இவரால் நடக்கவோ, உட்காரவோ முடியாது. தோழர்களே, மாணவர்களே வாருங்கள் போராட்டத்திற்கு... - முகநூல் -
  5. திருவண்ணாமலையி்ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலைகளில் முழங்கால் போட்டு மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். - முகநூல் - "திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் விமானநிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் 14.3.2013 " - முகநூல் - இலங்கைக்கு எதிராக வலுவான நடவடிக்கை…போராட்டக் களத்தில் மாணவர்கள் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் தொடங்கி வைத்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கல்லூரி மாணவர்கள், இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்களில் குதித்துள்ளனர். 9 பேருக்கு வலுக்கட்டாயமாக சிகிச்சை: ஐநா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்.போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும்.இனப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இலங்கையில் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளே கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டங்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்களில் 12 பேர் கடற்கரைச் சாலையில் அம்பேத்கர் மணிமண்டபம் அருகிலும், 9 பேர் புதிய பேருந்து நிலையம் முன்பும் கடந்த 11ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து நிலையத்தில் உண்ணாவிரதம் இருந்த 9 பேரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் புதுச்சேரி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி: புதுக்கோட்டையில் அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் 12ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பொன்னமராவதியில் கணேசர் கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவியர் 200 பேர் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர். பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் உருவப் படம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்: சென்னையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி சட்டக்கல்லூரி விடுதி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இலங்கை அரசைக்கண்டித்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரி விடுதியில் 30 மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தனர். இதில் பழனிக்குமார் என்ற மாணவரின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி மாணவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். மாநிலம் முழுவதும் பரவும் மாணவர்கள் உண்ணாவிரதம்: காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்படோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் 11 பேர், போராட்டத்தை தற்காலிமாக முடித்துக் கொண்டனர். இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக மாற்றுவழியில் போராடப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 50 பேர் 13ம் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட முத்துக்குமார் என்ற மாணவர், சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல், திருச்சி, கோவை, திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். - முகநூல் -
  6. ரதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  7. புங்க்ஸ் அண்ணா ரோமியோ என்பதற்கு கொடுத்த விளக்கத்திற்கும் நான் கருத்து எழுதியதற்கும் சம்பந்தமில்லை. எனினும் இதை அறியும் ஆவல் உங்களுக்கு ஏற்பட்டமைக்கு பாராட்டியே ஆக வேண்டும்.
  8. அடுத்தடுத்து பல கல்லூரிகளில் போராட்டங்கள் நடக்கிறது. அனைவருக்கும் பாராட்டுகள் மற்றும் நன்றி. மாணவர் எழுச்சி எழ காரணமான அனைவருக்கும் நன்றி.
  9. ரோமியோ என்று சகாறா அக்கா புங்க்ஸ் அண்ணாவை தான் செல்லமாக அழைத்திருக்கிறார். நல்ல வேளை அப்பெயரை வண்டு அண்ணாவுக்கு வைக்க நிர்வாகம் அனுமதி மறுத்தது. வைத்திருந்தால் சகாறா அக்கா கவலைப்பட்டிருக்க கூடும்.
  10. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
  11. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
  12. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
  13. அலை மச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  14. தமிழச்சி அக்காவுக்கும் விஜயகுமார் அண்ணாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்.
  15. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
  16. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
  17. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
  18. நன்றாக இருக்கிறது மெசோ அக்கா, தொடருங்கள். முகக்குறிகளையும் பயன்படுத்துங்கள்.
  19. இளங்கவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  20. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
  21. இந்தியாவில் விடிந்து விட்டது. ஐரோப்பாவில் இன்னும் விடியவில்லை. நாளை பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நெடுக்ஸ் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். :)
  22. :lol: நீங்களே உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி தொடக்கி வைத்து விட்டீர்களா? தமிழ்சிறி அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்... :)
  23. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.