Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by துளசி

  1. மார்க்சிஸ்ட் கட்சி அறிக்கை ஏமாற்றம் தருகிறது ! மீண்டும் மாணவர்கள் அறிக்கையை ஞாபகபடுத்துகிறோம் இது போர் குற்றம் அல்ல இது இன படுகொலை ! இதை தெளிவு படுத்த வேண்டும். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மார்க்சிஸ்ட் அறிக்கையை முழுமையாக புறக்கணிக்கிறோம் ! தமிழருக்கு தேவை தனி நாடு தானே அன்றி கூடுதல் அதிகாரம் அல்ல. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- சென்னையில் தமிழ் இயக்கங்கள் ரயில் மறியல் போராட்டம் ! ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- பழனியில் தபால் நிலையத்திற்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம் ! சுப்ரமணிய சுவாமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்று போராட்டம் ! ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பாளர் : நித்தியானந்தம் 9600651091 மதுரை மன்னர் கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பாளர்: வெங்கடேசு, 9095667745 அரியலூர் அரசுக் கலைக்கல்லூரி தொடர்புக்கு: ராபர்ட் 8883170213 தூத்துக்குடி காமராசுக் கல்லூரி தொடர்புக்கு: 9677886465. - முகநூல் -
  2. உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் தனி ஈழம் அமைக்கக்கோரியும் கோவை காந்திபுரத்தில் மாணவர்கள் சாலை மறியல். ஈழம் கேட்பது எங்கள் பிறப்புரிமை, எம்மை அடக்க முடியாது அரசின் அடக்குமுறை ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கன்னியாகுமரி மாவட்டம்,ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரியில் போராட்டம் நடத்தும் மாணவர்களை வாழ்த்த குறளரசனை தொடர்பு கொள்ளுங்கள் மக்களே 8489769794 ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களும் முற்றுகை இடப்படும் ! விரைவில் இடம் நேரம் நாள் அறிவிக்கப்படும்! கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளதாக தகவல். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கிண்டி சென்னை பல்கலை கழக மாணவர்களும் உண்ணா நிலைப் போராட்டத்தில் பங்கேற்பு ! பல்கலைகழகங்கள் பங்கெடுப்பது போராட்டத்தை வலிமை பெறச் செய்யும் ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- செங்கல்பட்டு முகாமை சேர்ந்த நேரு அவர்களின் உண்ணாநிலை போராட்டம் மூன்றாம் நாளாக தொடர்கிறது ! - முகநூல் -
  3. நெல்லை பாளையம்கோட்டை திலீபன் அரங்கத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கூடி வருகிறார்கள் பல்வேறு எழுத்தாளர்கள் பேராசிரியர்கள் உரையாற்றி வருகிறார்கள்,அதில் தமிழர் இன அழிப்பு தொடர்பான காணொளி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றது - முகநூல் -
  4. ஆறாம் நாள் பட்டினிப் போராட்டம் ... அண்ணாமலை பல்கலை மாணவர்கள் கவலைக்கிடம் ! தனித் தமிழ் ஈழத்துக்கான பொது கருத்து வாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கான தற்சார்பு பன்னாட்டு புலன் விசாரணை மன்றம் ஆகியக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பலகலைக்கழக மாணவர்கள் 39 பேர் வகுப்புகளை புறக்கணித்து 11-03-2013 திங்கள் முதல் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் போராட்டம் 16 – 03- 2013 சனி இன்றுடன் ஆறாம் நாளை எட்டியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 39 மாணவர்களில் 24 மாணவர்கள் இதுவரை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆ. குபேரன் உட்பட, 13 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை முடிந்த மாணவர்கள் மீண்டும் போராட்டப் பந்தலுக்கு வந்து தங்களைப் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடுத்தியபடி உள்ளனர்.இதனால் மாணவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சிகிச்சை பெற்று போராட்டத்தில் தங்களை மீண்டும் இணைத்துக்கொண்ட மாணவர்களில் தோழர் வே.சுப்பிரமணிய சிவா, வசந்தராஜ் உள்ளிட்டோர் மீண்டும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் மருத்துவமனையிலும் தங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்கின்றனர். மருத்துவமனைக்குள் சென்று செய்தி சேகரிக்க ஊடகத்துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து பல்வேறு மக்கள்திரள் அமைப்புகளும், புலம்பெயர் வாழ் தமிழர்களும், உணர்வாளர்களும் தங்கள் ஆதரவை நேரிலும், தொலைபேசி வழியிலும் தெரிவித்து வருகிறனர். அரசியல் கட்சிகள் இதுவரை அனுமதிக்கப்படாத நிலையில் போராட்டத்தை சீர்குலைக்க சில தேர்தல் அரசியல் கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. போராட்டம் தொடர்கிறது.. தொடர்புக்கு : ஆ.குபேரன் +91 9042223563 - முகநூல் -
  5. ஒரு கிராமத்தின் போராட்டம். செங்கல்பட்டு அருகில் ஆனூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் காட்சி. - முகநூல் -
  6. லயோலாவின் கையெழுத்து இயக்க பிரதிகள் இன்று மாலை ஐ நா மனித உரிமை கவுன்சிலுக்கு அனுப்பப்படும் என அறிவிப்பு ! இது வரை லயோலா கல்லூரியை சார்ந்த 5000 மாணவர்கள் கையொப்பம் இட்டனர் ... - முகநூல் -
  7. கோவையில் பாரதியார் பல்கலைக் கழக மாணவர்கள் இன்றும் போராட்டம். கோவை சட்டக்கல்லூரி மற்றும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ம.தி.மு.க அலுவலகத்தில் போராட்டம். --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கோவை பார்க் பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர் ! மருத்துவத்தை தொடர்ந்து பொறியியல் மாணவர்களும் சேர்ந்தனர் --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கல்லூரி மூடிய பின்னும் 3வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் உண்ணா நிலை அறப்போராட்டத்தில் , அப்பகுதியை சேர்ந்த பல கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் ஒருங்கிணைய தொடங்கி உள்ளனர் , தற்பொழுது 50 கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளனர், மேலும் பல மாணவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள் மேலும், 5மாணவிகளும் , 2 பெற்றோர்களும் , பெற்றோர் நலசங்க பிரதிநிதிகளும் , மனித உரிமை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த தோழர்களும், வழக்கறிஞர்களும் , மாணவர்களுக்கு ஆதரவாக களத்தில் உள்ளனர் , அப்பகுதியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் வந்து தங்களது ஆதரவை தெரிவித்து செல்கிறார்கள் , மேலும் அவர்கள் கொண்டு வரும் எதையும் வாங்க மறுக்கிறார்கள் மாணவர்கள் அதற்கு பதிலாக நீங்களும் உங்கள் கட்சி சார்பாகவோ பொதுவாகவோ இப்பிரச்சினைக்கு போராடுங்கள் , என்ற கோரிக்கைகளை மட்டும் முன்வைக்கிறார்கள் . "தமிழர்களின் தாகம், தமிழீழ தாயகம் " போராட்ட ஒருங்கிணைப்பாளர் :- பிரவின் தமிழீழத்திற்கான மாணவர் கூட்டமைப்பு, கடலூர் மாவட்டம் - முகநூல் -
  8. விருதாசலம்.. மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம்.. ராமதாஸ் கல்லூரி மாணவர்கள் ஆதரவு.. மாணவர்கள் அருகில் இருப்பவர்கள் தங்கள் ஆதரவை வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.. தொடர்பு எண் 9600651091. மற்ற கல்லூரி மாணவர்களை ஒருங்கினைக்கும் பணியில் உதவ முடிந்தவர்கள் முன் வரவும். அனைத்து கல்லூரிகளையும் ஒருங்கினைக்கும் பணி வேகம் பெற வேண்டும். 20.3.13 ஒரு கோடி மாணவ பேரணி இலக்கு வேகமாய் பரப்புங்கள்... ஆர்வலர்கள் முன் வரவும். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- நான் சஜித். பிறப்பால் மலையாளி ஆனால் தமிழ் மொழியை பாடமாக பயின்றவன். தமிழை மூச்சாக சுவாசிப்பவன். இப்போராட்டத்தில் என்னையும் நான் இணைத்து கொள்கிறேன். நாளை பெங்களூர் இல் நடக்கும் போராட்டத்தில் நானும் இணைகிறேன். தமிழ் ஈழம் மலரும் வரை ஓயமாட்டேன். தமிழ் ஈழ போராளி ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தற்போது நெல்லையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 800 பேர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- நண்பர்களே நாளை காலை 10 மணிமுதல் பெங்களூர் மடிவாலா பகுதியில் இலங்கை தமிழர்களுக்கான போராட்டம் நடைபெறுகிறது. தமிழர்களை நேசிக்கும் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்கலாம்.. ஓசூர், கிருஷ்ணகிரி பெங்களூர் நண்பர்களை அடையும் வரை தகவல் பகிரவும்..பெங்களுரு தொடர்பு : தோழர் ஜகன்மணி. : - +91-9035216094 / பாலாஜி முருகன்: + 91-9986840809 / அருண் நாராயணன் +91-9620225885. - முகநூல் -
  9. நானும் கதைக்கவுள்ளேன் பையன் அண்ணா. நான் இரு நம்பர் வைத்திருக்கிறேன். ஒன்றை தான் பாதுகாப்பற்ற செயல்களுக்கு பயன்படுத்துவது. அதில் காசு முடிந்து விட்டது. இன்று போட்டு விட்டு கதைக்கிறேன்.
  10. இதுவரை கல்லூரி நிர்வாகம் போராட எமை தடுத்தது........இந்த விடுமுறை மூலம் எங்களுக்கு போராட இன்னும் வசதி ஏற்பட்டிருக்கிறது.......நாங்கள் விடுமுறையை சரியாக பயன்படுத்திக்கொள்வோம்.......இனிமேல் பொதுமக்களையும் இணைத்து போராட முடிவு செய்துள்ளோம். மாணவர் நவீன் (நெல்லை களத்திலிருந்து) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ஹைதராபாத், பெங்களூரில் ஞாயிறன்று ஒருநாள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.. மற்ற மாநிலங்களில் இருக்கும் நண்பர்களும் இதை முன்னெடுத்து போராட்டத்தை விரிவுபடுத்துங்கள்.. இந்தியா முழுதும் தீயாய்ப் பரவட்டும்... ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- எமது போராட்டம் பற்றிய செய்திகள் ஆங்கில வடிவிலும் பதிவுடுமாறு ஏனைய மாநில மாணவர்கள் தனிப்பட்ட செய்தியில் கேட்டு உள்ளனர். ஆங்கில மொழி பெயர்பளர்கள் யாரும் இருந்தால் தொடர்பை ஏற்படுத்துங்கள். http://www.facebook.com/tamilnaduhungerstrike ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கோவை அருகே சாலை மறியல் செய்ய முயன்ற கல்லூரி மாணவர்கள் கைது ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மாணவர் எழுச்சியை ஒடுக்க காவல்துறை முயற்சி! கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் அரசுக்கலைக்கல்லூரியில் 23 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர். அவர்களை டி.எஸ்.பி. சுந்தரவடிவேலு பல தொல்லைகளை ,மிரட்டல்களை கொடுத்து உண்ணாநிலை போராட்டத்தினை முடிக்க அச்சுறுத்துவதாக கடலூர் மாவட்ட அக்கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அம்மாவட்டத்திலுள்ள பொதுமக்கள்,தமிழ் உணர்வாளர்கள் மாணவர்களுக்கு தோள்கொடுக்க "தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு " வேண்டுகோள் விடுக்கிறது. - முகநூல் -
  11. இசையமைப்பாளர் இமான் உண்ணாவிரதம் இருக்கும் சட்ட பல்கலைகழக மாணவர்கள், இசைக்கல்லூரி மாணவர்கள், புதுக்கல்லூரி மாணவர்களை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார். - முகநூல் -
  12. கடந்த 11 ஆம் திகதி (மார்ச் 11) தமிழக இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் (தனுஷ் நடித்த 3 படத்திற்கு இசையமைத்தவர் ) இங்கிலீஷ் பேசினாலும் தமிழன்டா என்ற வசனத்துடன் I support loyola hunger strike என்ற வாசகத்தை கொண்ட படத்தை முகநூலில் பகிர்ந்திருந்தார். அதை பார்க்க விரும்புபவர்கள் இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம் http://www.facebook.com/photo.php?fbid=456552057749395&set=a.219829478088322.55607.219819918089278&type=1&relevant_count=1
  13. நீங்கள் கூறிய செய்தியை இப்பொழுது தான் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூலில் பார்த்தேன். யாழை பார்க்கும் தமிழக தமிழர்களுக்கு உதவக்கூடும் என்பதால் இங்கு இணைக்கிறேன். தொடர்ச்சியான போராட்ட நிகழ்வுகளின் காரணமாக பெரும் நிதி சிக்கலில் இருக்கிறோம். மாபெரும் திரட்டலை நிகழ்த்த பெரும் நிதி உதவி தேவைப்படுகிறது. விருப்பமுடைய தோழர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு கோருகிறோம். ஓரிரு நாட்களில் இதை நாங்கள் செய்து முடிக்க வேண்டும். (தமிழகத் தமிழர்களிடம் மட்டும் கோருகிறோம். புலம்பெயர் நண்பர்கள் மன்னிக்க) Payee: P. A. PRAVEEN KUMAR Payee Account Number: 129601000017929 Bank Name: INDIAN OVERSEAS BANK , Branch : velachery, chennai IFSC code : IOBA 0001296 திருமுருகன் காந்தி - முகநூல் -
  14. மாணவர்களின் போராட்டம் தீவரம் அடைந்து உள்ள நிலையில் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது நமது கடமை. நடிகர் நடிகைகள் புகைப்படம் மற்றும் பொழுதுபோக்கு புகைப்படங்களை share செய்வதோடு மட்டும் நில்லாமல் அனைத்து pageகளும் மாணவர்கள் போராட்டத்தையும் share செய்ய வேண்டி கேட்டுக்கொள்கிறேன். சில pageகளில் மட்டுமே இப்பொழுது 24 மணி நேரமும் மாணவர்களின் போராட்டத்தை உலகிற்கு உரக்க சொல்கிறார்கள் அதை போல் அனைத்து pageகளிலும் போராட்டத்தை பற்றிய செய்திகள் மட்டும் செய்து மாணவர்களுக்கு ஆதரவு தாருங்கள். சமுக வலைத்தளங்கள் மூலம் போராட்டத்தை தீவிர படுத்த அனைத்து PAGE ADMINகளும் இணைந்து ஆதரவு தர வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய சொந்த கருத்து. குறைந்தபட்சம் தினமும் சில பதிவுகளாவது இடுங்கள். நம்மால் களத்தில் தான் போராட முடியவில்லை, ஆனால் FB மூலமாக மாணவர்களின் போராட்டத்தை சிறிதேனும் மக்களுக்கு கொண்டு செல்லலாம். நன்றி! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழக கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அரசு வழங்கியிருப்பது நன்மையே மாணவர்களே ...... உங்கள் பலத்தை மேலும் நிரூபிக்க ஒரு நல்ல தருணம் ... அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டத்தை வலிமைப்படுத்துங்கள் ... நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் மாணவர்களே மாணவிகளே...... "அடக்குமுறைக்கு அடங்காமல் அத்துமீறி அலைகடலாகுங்கள்" -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- சற்று முன் ஜெனிவாவில் இருந்து ஒரு ஈழத்தமிழ் நண்பர் என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்துகொண்ட கொடும் செய்தி இது: தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்தில், உணவோடு பயன்படுத்தப்பட்டும் தயிரில் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை (குழந்தையின்மை) உண்டு பண்ணும் மருந்தை அரசு கலந்து கொண்டு வருவதாக கூறியுள்ளார். மனம் பதறிப்போனது. ஆண்களை மலட்டுத்தன்மை படுத்துவதின் மூலம் அடுத்த தமிழ் தலைமுறையை அழிக்கும் இலங்கை அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையே இது. இதற்கு ஒரே தீர்வு தனித்தமிழ் ஈழம் மட்டுமே.. நண்பர்கள் போராட்டத்தை ஓயவிடாதீர்கள். பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு என்று அறிந்தேன். நல்லது தீவிரமாக இறங்க இது ஒரு வாய்ப்பாக அமையட்டும். - முகநூல் -
  15. தமிழன் என்பதில் பெருமை படுகிறேன், எங்களால் முடிந்த எதிர்ப்பை நாங்கள் காட்ட தயாராகிவிட்டோம் இனி எந்த ஒரு ஸ்ரீ லங்கா விமான பயண சிட்டு எங்கள் அலுவலகத்தில் கிடைக்காது, விற்கவும் மாட்டோம் மாற்று வழியை எங்கள் பயணிகளை அனுப்ப முயற்சிப்போம். எங்களால் அவர்களுக்கு மாதத்திற்கு 10 டிக்கெட் குறையும் இது தொடர்வது உங்கள் கையில் இருக்கு இப்படிக்கு நிர்வாகம் FLYAIR TRAVEL SERVICE CHENNAI இனி உங்களால் இது போன்று என்ன செய்ய முடியும் என்பதை யோசியுங்கள் நிச்சியம் நமக்கு வெற்றி விரைவில் கிடைக்கும் HERE AFTER WE DON'T SELL SRILANKAN AIRLINES TICKETS, TILL FURTHER ANY GOOD NEWS COME FROM UNITED NATION - முகநூல் - - முகநூல் -
  16. உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு மாணவர்களில் மூவர் இயல்பு நிலைக்கு திரும்பினர்.மாணவர் சண்முகம் மட்டும் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவிலேயே இருக்கிறார். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்துகொடுக்கப்பட்டது. இந்நிலையில், துவாக்குடி அரசு கலை கல்லூரி மாணவர்கள் தர்மராஜ்(bca 3ஆம் ஆண்டு) யுவராஜ்(bba 2ஆம் ஆண்டு) முகமது யாசர் அராபத்(bca முதல் ஆண்டு) ஆகியோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------- தோழர்களே!கோவை தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களை மோசமாக பேசியதை கண்டிக்க சொன்ன நமது கோரிக்கையை ஏற்று உலகம் முழுவதும் இருந்து உணர்வாளர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து உள்ளனர்,இப்போது ஆசிரியர்கள் அவர்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து உள்ளனர்,உங்களின் உணர்வுக்கு நன்றி! - முகநூல் -
  17. மத்திய அரசின் வருவாய்த்துறை பணியகம் தாக்கப்பட்டது. திருச்சி உயர்நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள மத்திய அரசின் வருவாய்த்துறை பணியகம் தமிழ் உணர்வாளர்களினால் சற்றுமுன்னர் தாக்கப்பட்டுள்ளது. தொடரும் தமிழகத்தின் மாணவர் போராட்டங்கள் இன்று நான்காவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மாணவர்களே உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!! ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வரும் 20ம் தேதி தொடர் முழக்க போராட்டம் நடைபெறும் . . இந்த தொடர் முழக்க போராட்டத்தில் பங்கேற்க ஒரு கோடி மாணவர்களுக்கு அழைப்புவிடுக்கப்படும் . சென்னையில் செய்தியாளர்களை சந்திபில் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் . ஈழத்தமிழர் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு. ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ஈழத்தமிழருக்கு நீதி வேண்டி தமிழக மாணவர்கள் "ஓயாத அலை" களாக பேரெழுச்சி கொண்டு நடத்திவரும் போராட்டங்களை மனமார வரவேற்கிறோம். இந்த போராட்டங்களுக்கு முழமையான ஆதரவையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம் : யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மாபெரும் மாணவர் எழுச்சி பேரணி அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து எம் இனத்தைக் கொன்று குவித்த கொலைகாரன் இராசபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்கக்கோரி கோவையில் வரும் செவ்வாய்க்கிழமை 19-03-2013 அன்று காலை பத்துமணிக்கு சிவனந்தகாலனியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாபெரும் மாணவர் எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது. தொடைபுக்கு தோழர் சிவா:9943799941 - முகநூல் -
  18. நெல்லையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாகதிங்கட்கிழமை முதல் களம் இறங்குகின்றனர். பாளை.சாரா டக்கர் மகளிர் கல்லூரி! பாளை.இராணி அண்ணா மகளிர் கல்லூரி! பாளை.ரோஸ் மேரி மகளிர் கல்லூரி ! தூத்துக்குடி.கா ­மராஜ் கல்லூரி ! தூத்துக்குடி.வ உ சி கல்லூரி ! நாகர்கோயில்.இந் ­து கல்லூரி ! நாகர்கோயில்.விவ ­ேகானந்தர் கல்லூரி ! அரசே ! அடக்க எதிர்க்கட்சி அல்ல ! மாணவர் சக்தி ! ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- சகோதர சகோதரிகளே நாளை காலை 7.30 மணியளவில் நாமக்கலில் உள்ள அரசு மருத்துவமனை எதிரில் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவுதெரிவித்து ­ பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக‌ ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.., ஆதரவு தெரிவிக்கும் அனைத்து உடன்பிறப்புகளையும் அன்புடன் அழைகின்றோம் தொடர்புக்கு; ஸ்ரீதர்-7200667 ­217 அஸ்வின்-9566796 ­472 அன்புசெல்வன்-72 ­00385292 ரமேஸ்-904271174 ­1 அசோக்-997644502 ­2 பாலா-8148589079 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி காமராசு கல்லூரி" மாணவர்கள் சற்றுமுன்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.. மாணவர்களை தொடர்பு கொள்ள (9677886465) -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- திருச்சி ஈ.வே.ரா கல்லூரியில் இரண்டாம் நாளாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒரு மாணவி கடுமையாக உடல்நிலை பாதிக்கப் பட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் கடுமையாக மூச்சு விட தினறி கொண்டிருந்ததை கண்டோம். அவர் இருக்கும் அறைக்குள் நுழைய நமக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நமது தோழர்கள் அவரின் உடல்நிலை அறியவும்,அவருக்கு விரைந்து சிகிச்சை அளிக்கவும் போராடி வருகின்றனர். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கைது செய்தாலும் மீண்டும் உண்ணாவிரதம் தொடருவோம்! சென்னை நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள்! அடக்கு முறைகள் என்றும் வென்றது இல்லை நமது போராட்டம் வெல்லும் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தொடரும் மாணவர்களின் போராட்டம்! இடம்: சென்னை - புதுக் கல்லூரி - முகநூல் -
  19. நீங்கள் சொல்வதும் சரி தான். அவர்களாக தொடங்கிய போராட்டத்தையே புலம்பெயர் தமிழர்கள் அந்த மாணவர்களை உசுப்பி விட்டு தான் போராட்டம் நடக்குது என்று கதைக்கிறார்கள். நாளைக்கு பணம் கொடுத்தால் புலம்பெயர் தமிழர்களின் பணத்துக்காக தான் போராட்டம் நடத்துகிறார்கள் என்று சொல்வதற்கும் பலர் உள்ளார்கள். தர்ணா போராட்டத்திற்கான விளக்கத்திற்கு நன்றி.
  20. மாணவர் போராட்டத்துக்கு உதவி செய்யும் பொருட்டு ஒரு அவசர வேண்டுகோள். தமிழ­்நாட்டில் நடந்து வரும் மாணவர் எழுச்சி தாங்கள் அறிந்ததே,நாற்பத­ு ஆண்டுகள் கழித்து மாணவர்கள் தமிழின பிரச்சனைக்காக வெளியே வந்துள்ளார்கள் அவர்களை ஊக்குவித்து உதவ வேண்டியது நமது கடமை,மாணவர்களின­் போராட்டங்களுக்க­ு உங்கள் பங்களிப்பை நீங்களும் தரலாம்,மாணவர் எழுச்சி பெரும் அளவில் இருப்பதால் ஒருங்கிணைப்பதில­் களத்தில் இருக்கும் தோழர்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகிறார்கள்,அவ­ர்களுடன் நீங்களும் கைகோருங்கள். 1 . வெறும் நானூறு முதல் ஐநூறு ருபாய் மட்டு இருந்தால் போதும் உங்கள் அருகாமையில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்க­ு உங்கள் வீட்டிலேயே தேநீர் தயாரித்து கொடுக்கலாம்,பிஸ­்கட் போன்றவற்றை வாங்கி மாணவர்களுக்கு விநயோகிக்கலாம். 2.வெறும் நூறு ருபாய் இருந்தால் போதும் அவர்களுக்கு மோர்,அல்லது எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை உங்கள் வீட்டிலிருந்து தயார் செய்து கொண்டு போய் கொடுக்கலாம். 3. நகல் எடுக்க வெறும் இருபத்தி ஐந்து பைசா போதும் இருநூற்று ஐம்பது ருபாய் மட்டும் இருந்தால் ஆயிரம் துண்டறிக்கைகள் அடித்து கொடுத்து அவர்களுக்கு உதவலாம். 4.அதுவும் முடியவில்லை என்பவர்கள் அவர்களுக்கு குறைந்தது பானையில் குளிர்ந்த நீரை தர ஏற்பாடு செய்து தரலாம்,அவர்களுட­ன் ஒன்றிணைந்து துண்டறிக்கைகள் விநயோகிக்கலாம், 5.குறைந்தது நீங்கள் உங்கள் அருகில் நடக்கும்,போராட்­டங்களுக்கு உங்கள் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ சென்று மாணவர்களை வாழ்த்தி உற்சாக படுத்தலாம்,உங்க­ள் நண்பர்களுக்கும்­ இதை தெரிய படுத்தலாம். இந்த எளிய போராட்டங்களுக்க­ு நம்முடைய எளிய பங்களிப்பை தரலாமே? இதை இனப்பற்றுள்ள ஒவ்வொருவரும் அவசியம் பகிர வேண்டும்,உலக தமிழர்கள் மாணவர்கள் பின் நிற்பதை உறுதி செய்யுங்கள். - முகநூல் -

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.