Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by துளசி

  1. பொது நண்பர்களே நீங்கள் எந்த கட்சி விருப்பம் கொண்டும் இருந்து கொள்ளுங்கள் அல்லது எந்த இயக்கத்திலும் இருந்து கொள்ளுங்கள். மாணவர்களின் ஈழ விடுதலை போராட்டத்திற்கு, அவர்களோடு உடன் வரும் பொழுது ஈழம் விரும்பும் நபராக மட்டுமே வாருங்கள் . கட்சி அடையாளங்களை அப்படியே உங்களிற்குள் வைத்து கொள்ளுங்கள். உங்கள் கட்சி விருப்பத்தை மாணவர்களிடம், புதியவர்களிடம் காட்டி அதன் செல்வாக்கை அரசியல் அறியா புதியவர்களிடம் காட்ட நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு கிடைப்பது ஏமாற்றமே . மாணவர் போராட்டம் மாணவர் போராட்டமாகவே இருக்கட்டும். அது "அந்த கட்சி "மாணவர் போராட்டம் , "இந்த இயக்க " மாணவர் போராட்டம் என்று நமக்குள் நம்மை பிரித்து , அடையாள படுத்த நினைக்கும் யாரையும் முதலில் தூர விலக்கி வையுங்கள். போராட வேண்டிய காலமும் , சந்திக்க வேண்டிய களமும் அதிகம் உள்ளது . ஈழம் வெல்லும் , ஈழம் தமிழர்களின் பூமி. அதை இப்போதைக்கு உலகத்தின் அனைத்து உதவியோடு ஆக்கிரமித்து இருக்கும் இலங்கை அந்த மண்ணை விட்டு வெளியேறி அங்கே தமிழர்கள் சுய நிர்ணய உரிமை பெறும் நாள் , நாளைக்கு மறுநாள் நடந்து விட கூடியது அல்ல. இங்கே நாம் அடிக்கும் ஒவ்வொரு அடியும் போராட்ட விடைகளும் , இந்தியாவை இலங்கையில் இருந்து பிரிக்கும். இந்தியா பிரிந்தால் மொத்த உலகம் இலங்கையை விட்டு பிரியும். பிரிந்தால் பொது வாக்கெடுப்பு என்ற முழக்கத்தை நாம் அழுத்தலாம் . அழுத்த வேண்டும். அப்போது ஈழம் வரும் . வந்தே தீரும் . எனவே பொதுவான நண்பர்களே எங்களிற்கு உதவுங்கள் ஆனால் உங்கள் கட்சி சாயத்தை எங்கள் மீது பூச நினைக்காதீர்கள் உங்கள் காலை பிடித்து கேட்டுகொள்கிறோம் , உங்கள் கைகளில் எங்கள் கண்ணீரை விட்டு அழுது மன்றாடுகிறோம் எங்களை பிரித்து அரசியல் கூட்டத்திற்குள் எங்களை அமிழ்த்து விடாதீர்கள் அண்ணன்களே ! நாம் அனைவரும் சேர்ந்து தமிழரின் மானத்தை காப்போம் . வீழ்ந்தான் செத்தான் என்ற நிலையில் உள்ள தமிழனின் வாழ்வை , உரிமையை போராடி பெற்றான் என்று மாற்றுவோம் . வாருங்கள் உன்னத நோக்கத்தோடு கை கொடுங்கள். ஆங்காங்கே உள்ள மாணவர்கள் வீறு கொண்டு எழுங்கள் . உங்களிற்கு அடையாளம் முக்கியம் அல்ல போராட்டமே முக்கியம் . (முகநூல்)
  2. வியாசர்பாடி,சத்தியமூர்த்தி நகரில் உள்ள புதுத்தெருவில் வசித்துவந்த மாணவி கௌதமி என்கிற ராசாத்தி ஈழ விடுதலை வேண்டி நேற்று மாலை 5.30 மணிக்கு தற்கொலை செய்து கொண்டார். அதனை அறிந்த காவல்துறை அந்த பெண்ணின் உடலை உடனடியாக அடக்கம் செய்ய வற்புறுத்தியதால் இன்று மாலை 5.00மணியளவில் அவரது உடலை வியாசர்பாடி இடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்த மாணவி சென்னை எத்திராஜ் கல்லூரியில் முதலாம் ஆண்டு (B.sc Maths) கணிதத்துறையில் பயின்றுவந்தவர். தோழர்களே,தோழிகளே!!! ஈழத்தில் இலட்சக்கணக்கான மக்கள் போராடி தங்கள் உயிர் நீத்தனர் ஆனால் யாரும் தீக்குளித்து இறக்கவில்லை. உங்களை வழி நடத்த ஆயிரம் ஆயிரம் அண்ணன்கள்,அக்காள்கள் உயிரோடு இருக்கிறோம். எங்களுடன் சேர்ந்து களமாடுங்கள் . எதிரிக்கு பாடம் புகட்டுவோம் . இனி ஒரு தமிழ் உயிரும் வீண் போகக் கூடாது .... (முகநூல்)
  3. கனடாவில்... (முகநூல்: loyolahungerstrike) ------------------------------------------------------------------------------------------------------------------------ Dear Friends, Tomorrow (Sunday) evening around 6 clock people from Anna Univ, IIT-Madras, University of Madras, NIIT are conducting Human rally with Candle light to support for Tamil Eelam Liberation and all are come and join with Us to save tamil people and Tamil Fisherman. Plz share this message with our friends. (முகநூல்)
  4. தமிழக அரசின் வன்மம். மாணவர்களின் மீது 145 மற்றும் 188 கீழின் மீது வழக்கு பதிவு! மாணவர்களின் மன உறுதியை குலைக்க மாணவர்கள் மற்றும் மாணவியர் மீது வழக்கு பதிவு!!! தமிழறிஞர்கள், அனைத்து கட்சி நண்பர்கள், ஆர்வலர்கள் கண்டனத்தை பதிவு செய்யுங்கள்! சட்ட போராட்டத்தை முன்னெடுக்க மாணவர்களுக்கு உதவுங்கள்! அம்மா..போராட்டத்தை ஆதரிக்கவில்லை மெதுவாய் கொல்லுகிறார்! (முகநூல்)
  5. எங்கள் போராட்டங்களை நாங்கள் நடத்திக் கொள்கிறோம். தயவு செய்து அரசியல்வாதிகள் எதுவும் குழப்பாதீர்கள். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு செய்யாறு கிளை சார்பில் நாளை 24-03-2013 ஞாயிற்றுக்கழமை செய்யாறில் ஆர்ப்பாட்டம். தொடர்புக்கு: செந்தாமரை 9042687613 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- நாளை காலை 9 மணிக்கு நாமக்கல் மலைக்கோட்டையில் போராட்டத்தை தொடங்க உள்ளோம் சுரபி பாலிடெக்னிக் மற்றும் பிற கல்லூரி நண்பர்களும் இணைய உள்ளனர். உங்கள் தொடர்பில் உள்ள நாமக்கல் நண்பர்களையும் இணையச்செய்யுங்கள். (முகநூல்: loyolahungerstrike)
  6. வேலூரில் காங்கிரஸ் சார்பாக வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பேனர். அதில் இன அழிவுக்கு புலிகளே காரணம், தமிழின அழிவுக்கும் இலங்கைக்கும் சம்மந்தமில்லை, மாணவர்களின் போராட்டம் அவசியமற்றது கண்டிக்கத்தக்கது என இப்படி பல கடுமையான கருத்துகள் அதில் இடம்பெற்றிருக்க வேலூர் மாணவ கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த பேனரை கிழித்து கொளுத்தினர்! இதன் காரணமாக மாணவர்களில் 5 பேர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. (முகநூல்)
  7. தமிழக போராட்ட செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள loyolahungerstrike இன் இந்த இணைப்பில் அனைவரும் இணைந்து கொள்ளுங்கள். இப்பொழுது 26,007 likes http://www.facebook.com/tamilnaduhungerstrike
  8. கேடு கெட்ட அரசியல்வாதிகளே , எங்கள் தம்பியை வைத்தா அரசியல் பண்ணறிங்க பண்ணி பசங்களா, ஓட்டு கேட்டு வீட்டு பக்கம் வாங்கடா, பிஞ்ச செருப்பை சாணில முக்கி வச்சுருக்கோம் ... (முகநூல்) பி.கு: அரசியல் கட்சிகளின் குத்துப்பாடுகளை பாருங்களன்.
  9. உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த வைகோவின் தாயார்! தனித்தமிழ் ஈழத்தை வலியுறுத்தி வைகோவின் சொந்த ஊரான‌ கலிங்கப்பட்டியில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் வைகோவின் தாயார் மாரியம்மாளும் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்து வருகிறார். (முகநூல்)
  10. எழும்பூரில் உள்ள புத்தமடத்தை முற்றுகையிடச் சென்ற கல்லூரி மாணவர்கள் கைது! இன்றைய தினம் எழும்பூரில் உள்ள புத்த மடத்தை முற்றுகையிடச் சென்ற சட்டக் கல்லூரி மாணவர்களும், பள்ளிக்கரணையில் உள்ள ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களான வெங்கட் (மூன்றாவது ஆண்டு, காட்சித் தொடர்பியல்), சூர்யா, சரவணன், கோகுல் (Asan Evening College Students) மாணவர்களும் சேர்த்து மொத்தமாக 10 பேர் கைதாகி சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எழும்பூரில் உள்ள புத்த மடத்துக்கு தமிழக பொலிசார் பல அடுக்கு பாதுகாப்புக்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு - பிரதீப் : 9941586869 (முகநூல்)
  11. இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தமிழ் மாணவர்கள் போராட்டத்தை அகில இந்திய அளவில் எடுத்து செல்ல வேண்டும். நமக்காக அகில இந்திய மாணவர்கள் போராட வேண்டும். அவர்களிடம் இந்த பிரச்னையை எடுத்து செல்லுங்கள். அவர்களுக்கு புரிய வையுங்கள். அவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் போது இந்த போராட்டம் மேலும் வலுப்பெறும். ஆங்கிலத்திலும் இந்த பிரச்சனை குறித்து எழுதி பரப்புரை மேற்கொள்ளுங்கள் தயவுசெய்து share பட்டனை அழுத்துங்கள் .. முடிந்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் .. 1 share = 100 support student pls pls (முகநூல்)
  12. வெளிநாட்டிலும் அவ்வாறு எழுதலாமா? பிரச்சினை வராதா? நாணய தாள்களை எழுதி பாழாக்குகிறோம் என்று நினைத்து தமிழர்களுக்கெதிரான அபிப்பிராயம் எழாதா? இல்லை என்றால் நானும் இதை மேற்கொள்வேன்.
  13. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தனி ஈழம் கேட்டு போராடிய நமது மாணவர் தோழர்களை காவல் துறை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து உள்ளது. சற்றுமுன் இந்த தோழர்களை தொடர்பு கொண்ட உதயகுமார் அவர்கள் தொலைபேசி மூலம் தனது ஆதரவையும் வாழ்த்துகளையும் தோழர்களுக்கு தெரிவித்தார் .நாமும் நம் வாழ்த்துகளை தோழர்களுக்கு தெரிவிக்க, மதுசூதனன் : 9003025865 (முகநூல்: loyolahungerstrike) --------------------------------------------------------------------------------------------------------------------------------- பெங்களூரு நண்பர்கள் கவனத்திற்கு, பெங்களூருவில் நடக்க இருக்கும் கவன ஈர்ப்பு போராட்டம் குறித்த கலந்தாய்வு இன்று மாலை 6 மணியளவில் மடிவாளா ஐயப்பன் கோவில் எதிரில் உள்ள SAP அலுவலகம் அருகில் நடைபெறும். ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். தொடர்பு எண் .99452 35805 (முகநூல்)
  14. இந்த பதிவை கண்டும் காணாமல் செல்லும் சகோதர்களே கொஞ்சம் கவனியுங்கள் : மாணவர்கள் நடத்தும் பட்டினி போராட்டம் அரசியலுக்காகவோ , பணத்திற்காகவோ இல்லை...! அவர்களிடம் இருக்கும் தமிழின உணர்வில் கொஞ்சமாவது வேண்டாமா நமக்கு....! அவர்களுக்கு இணையத்தின் மூலமாவது உங்கள் ஆதரவை அளியுங்கள் .. எகிப்தில், துனுசியாவில் இணையத்தின் மூலமாக ஒரு மாற்றதை ஏற்படுத்தும் போது நம்மால் ஏற்படுத்த முடியாதா..? இன்னும் தூங்கினால் நம் மீனவர்கள் செத்துக்கொண்டும் , ஈழ தமிழர்கள் சித்ரவதைகளை அனுபவித்துக்கொண்டும் தான் இருப்பார்கள்......! தயவுசெய்து share பட்டனை அழுத்துங்கள்...! முடிந்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்....! மாணவர் சக்தி வெற்றி பெற்றே தீரும்.....! (முகநூல்)
  15. ஒரு யோசனை. நம் கையில் இருக்கும் அனைத்து ரூபாய் நோட்டிலும் இதை போல “தமிழீழம் வேண்டும்” என்ற வாசகத்தை எழுதி பரவசெய்யலாம்... அதுவே ஆங்கிலத்தில் “WE WANT TAMIL EELAM BY TAMILAN” என்று எழுதிவிட்டால் அது நாடு முழுவதும் பரவும். செய்வது செய்யாதது உங்கள் விருப்பம். நான் செய்ய தொடங்கிவிட்டேன். இந்த யோசனையை தந்த நண்பர்க்கு மிக்க நன்றி. (முகநூல்) பி.கு: ஹிந்தி தெரிந்தவர்கள் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் எழுதலாம். இந்தியாவில் இவ்வாறு செய்யலாம். வெளிநாடுகளில் இவ்வாறான செயல்கள் செய்தால் பிரச்சினை என்று நினைக்கிறேன். யாரும் வெளிநாட்டு நிலவரம் தெரிந்தவர்கள் இதுபற்றி கூறுங்கள்.
  16. ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழக உறவுகளே நீங்கள் யாரும் தீக்குளிக்கும் முடிவை எடுக்காதீர்கள். நீங்கள் தீக்குளிப்பதால் தமிழீழத்தை தந்துவிட மாட்டார்கள். உயிருடன் இருந்து உங்களால் முடிந்தவற்றை செய்யுங்கள். மனவிரக்தியடையாதீர்கள்.
  17. போராட்டம் என்றால் அது மாணவர்கள் போராட்டம் தான் என்பதை இப்போது மாணவர்கள் நிரூபித்து வருகின்றனர் . இன்று கல்லூரி சாலை டி பி ஐ அலுவலகம் முன் தொடங்கப்பட்ட மாணவர் பேரணி அமைதியாக நடக்க திட்டமிடப் பட்டது . ஆனால் காவல்துறை அனுமதி மறுத்து அனைவரையும் வண்டியில் ஏறுமாறு கூறியது . இதுவே அரசியல் கட்சியாக இருந்தால் கட்சித் தொண்டர்கள் ஒழுங்கு பிள்ளைகளாக வண்டியில் ஏறிப் போய் உட்கார்ந்து விடுவார்கள் . ஆனால் இவர்கள் மாணவர்கள் ஆயிற்றே . அடங்கி விடுவார்களா ? காவல் துறை கட்டுப் பாட்டை மீறி மாணவர்கள் காவல் அரண்களை உடைத்து கல்லூரி சாலையில் இருந்து ஆடோஸ் சாலைக்கு ஓடிச் சென்றனர் . இதை சற்றும் எதிர்பார்க்காத காவல் துறை அதிர்ச்சி அடைந்தது . மாணவர்கள் பின்னாலே அவர்களும் ஓடத் தொடங்கினர் . பின்பு மாணவர்கள் சாஸ்திரி பவன் அருகே வந்ததும் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர் . சாலையில் வட்டமாக கைகளை கோர்த்த படியே படுத்துக் கொண்டனர் . தனி ஈழமே ஒரே தீர்வு என மாணவர்கள் முழக்கமிட்டது காதைப் பிளப்பதாக இருந்தது . அந்த இடமே கலவர பூமியை போல் காட்சி அளித்தது . காவல் துறை செய்வதறியாது திகைத்தனர் . பின்னர் மாணவர்களை வலுக் கட்டாயமாக தூக்கிச் சென்று காவல் ஊர்தியில் ஏற்றினர் . எனினும் மாணவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் . காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது . இதனால் போக்குவரத்து சுமார் அரை மணி நேரம் முடங்கியது . இருந்தியில் ஆயிரம் மாணவர்களை காவல் துறை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர் . (முகநூல்)
  18. ஜெனீவாவில் மகிந்தவுக்கு இறுதிக்கிரியை செய்வதற்காக எடுத்துச்செல்லப்படும் உருவ பொம்மை. 22.03.2013, வெள்ளி , 14:30- 17:30 மணி UNO Geneva- ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் அனைவரும் வாரீர்...!! (முகநூல்)
  19. சென்னையின் புற நகரான மாங்காட்டில் முத்துகுமரன் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம். --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கும்பகோண ரயில் நிலைய மறியலில் ஈடுபட்ட கும்பகோண மாணவர் அணியினர் ஐநூறு மேற்பட்டவர்கள் கைது. --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தொடர் பட்டினி போராட்டம் இருக்கும் இராசிபுரம் மாணவர்க்கு தயவுசெய்து நாமக்கல் மாவட்ட நண்பர்கள் மற்றும் தலைவர்கள் முடிந்தால் போராட்டத்தில் கலந்து ஆதரவு தாருங்கள் - வாழ்த்துக்கள் சொலுங்கள். vinoth - 9600394224, Prakash - 7667676587, Naveen - 9500730400 . --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அனைத்துக்கல்லூரி சார்பில் மாணவர்களின் உண்ணாநிலை போராட்டம் தொடங்கியது வாழ்த்துக்களை தெரிவிக்க, தம்பி சம்பத்-8344295686 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- IPLக்கு கூடும் கூட்டமே நம் இனம் அழிவதை தடுக்க கூடக்கூடாதா? -மெரினாவில்..- ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- திருப்பூர் மாவட்டம் அலங்கியம் மாணவர் சமூகம் மற்றும் பொது மக்கள் சார்பில் நாளை (22.3.13) அன்று தமிழீழ நாட்டிற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம் நடக்கவிருக்கிறது... அலங்கியம் சுற்றுவட்டார மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அழைக்கிறோம். இடம்: மாரியம்மன் கோவில் திடல், அலங்கியம் தொடர்புக்கு - மாதவன் -9698334410 ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடி நீதிமன்றம் முன் அனைத்துக் கல்லூரிகளும் சேர்ந்து நடத்தும் மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. கலந்து கொண்ட கல்லுரி : காமராஜ் கல்லூரி, V.O.C கல்லூரி, சட்டக்கல்லூரி மாணவர்கள் ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தூத்துக்குடியில் ,ராஜபக்சேவிற்கு பாடை கட்டி , ஒப்பாரி போராட்டம் --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழ் ஈழம் மலர போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நமது மாணவ செல்வங்களை ஆதரித்து நாவலூரில் HCL ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம். (முகநூல்: loyolahungerstrike)
  20. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு வள்ளுவர் கோட்டத்தில். சென்னை (முகநூல்: loyolahungerstrike) பி.கு: பையன் அண்ணா இதை யாழில் வேறொரு திரியில் இணைத்திருந்தார். அந்த இணைப்புக்கு செல்ல.. http://www.yarl.com/forum3/index.php?showtopic=119575

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.