Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by துளசி

  1. இதன் மூலம் இரண்டு நன்மைகள் நடந்துள்ளன. 1. நேற்றுவரை எதிர்த்தவர்கள் முணுமுணுத்தவர்கள் எல்லாம் இன்று முற்றத்துக்காக குரல் கொடுக்கும் நிலை வந்துவிட்டது. 2. முற்றம் பற்றி அறியாதவர்களும் அறிந்து கொள்ளும்படி செய்திகளும் கருத்தாடல்களும் பரவி உள்ளன (facebook)
  2. நான் சீமான் அண்ணாவுக்கு தான் ஆதரவு.. ஆனால் வைகோ ஐயா ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பவர் என்ற ரீதியில் அவர் போராட்டங்களை மதிக்கிறேன்.
  3. தமிழர்களின் வழிபாட்டு தலத்திற்கு ஒப்பான முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்த ஜெயாவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையை தான் இனி நாம் பார்க்க வேண்டும். தேர்தல் மூலமாக ஆட்சியை பிடித்த ஜெயாவை அதே தேர்தல் மூலமாக தோற்கடிப்போம் . தமிழினத்தின் மற்றுமொரு எதிரியாக பகிரங்கமாக அறிவிப்போம் ! Rajkumar Palaniswamy (facebook)
  4. காலை செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இடிக்கப்படவேண்டிய கூடங்குளம் அணு உலை அப்படியே இருக்க , பாதுக்காக்கப்பட வேண்டிய தமிழர்களின் அடையாள சின்னமான முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழக காவல்துறையின் உதவியுடன் இடிக்கப்படுகிறதாம். நெஞ்சமே பதபதைக்கிறது. இத்தோடு முடிவுக்கும் வரப்போகிறது ஜெயாவின் பாசிச ஆட்சி. Rajkumar Palaniswamy (facebook)
  5. முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வைகோ ஐயாவுடன் சீமான் அண்ணா. படம்: பாக்கியராசன் சே (facebook)
  6. சட்டத்தின் அனுமதியின் பின்னர் தான் நெடுமாறன் ஐயா அதை கட்டினார் என அவரே கூறியுள்ளார். அவ்வாறிருக்க ஜெயலலிதா அதை இடிப்பதற்கு காரணம் என்ன? இங்கு கட்ட முடியாது என்றால் முதலே சொல்ல வேண்டியது தானே. கட்டி முற்றத்தை திறந்ததன் பின் இடிப்பது எதற்கு? ஜெயலலிதாவை நான் இதுவரை நம்பவில்லை. எனவே எது என்றாலும் நடக்கலாம் என்பது தெரிந்திருந்தாலும் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்ட பின்னர் சுவர் இடிக்கப்பட்டதை நான் எதிர்பார்க்கவில்லை.
  7. மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்தது தேர்தலுக்காக. தமிழக மக்களுக்காக இல்லை என்பது தெரியும். ஆனால் முயற்சி செய்தால் மத்திய ஆட்சியை காலப்போக்கில் விழுத்த முடியும். வேறு மாநிலங்களுடன் நல்லுறவை பேணி அதை நடத்திக்காட்ட முடியும். கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் நாங்கள் நம்பவில்லை. அவர்கள் போல் ஈழ அக்கறையில்லாதவர்கள் முதல்வர் பதவியை இனியும் வகிக்காதவாறு படுதோல்வியடைய செய்ய வேண்டும். ஈழ ஆதரவு நிலைப்பாடுடைய ஒருவர் முதல்வராக வர வேண்டும். அதன் பின் அவர் என்ன செய்கிறார் என்பது பற்றி இப்போதைக்கு அவசியமில்லை. பின்னர் பார்க்கலாம். நன்மை கிடைக்காவிட்டாலும் இப்பொழுது உள்ள நிலையை விட நிச்சயம் தீமை கிடைக்காது. ஈழம் எங்கள் பிரச்சினை. ஆனால் நாங்கள் மட்டும் முடிவெடுப்பதாக இருந்தால் எப்பொழுதோ எமக்கு ஈழம் கிடைத்திருக்கும். விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச ஆதிக்கம் ஈழ விடையத்தில் செல்வாக்கு செலுத்துகிறது. ஈழ, புலம்பெயர் மக்கள் சர்வதேச ரீதியாக விடுதலைக்காக போராடும் போது தமிழகத்திலும் ஈழ ஆதரவு நிலைப்பாடு தேவை. அதை பலர் இன்று செய்து வருகிறார்கள். சும்மா சீமான் அண்ணாவுக்கு, வைகோ ஐயாவுக்கு எதிராக எழுதும் நோக்கில் பலர் ஈழ எதிர்ப்பாளர்களை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்த விளைகிறார்கள். அதற்கு உங்கள் போன்றோர் துணைபோகின்றீர்கள். புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கும் இன்னொரு பக்கத்தால் முயல்கிறார்கள் தான்.
  8. Thirumurugan Gandhi: முள்ளிவாய்க்கால் முற்றத்தில் குழந்தைகளும், பெண்களும், ஆண்களும் கண்ணீரோடும், அதிர்ச்சியோடும், கோபத்தோடும் சிற்பங்களைப் பார்த்து , “ இப்படியெல்லாம் செஞ்சாங்களா?. ஏன் இது எதுவுமே நமக்கு தெரியல.. “ என்று பொறுமிச் சென்ற பொதுமக்களைப் பார்த்து முழுதாய் மூன்று நாட்கள் கூட ஆகவில்லை. “இத இடிக்கப் போறாங்களாங்க”ன்னு தனது கண்வரிடம் பேசியவரிடம்,” இடிச்சா விட்டுருவோமா, அருவாளோட வந்துரவேண்டியதுதா” என்ற பேச்சுக்களை ஞாயிறு கேட்டு அடைந்த ஆச்சிரியங்கள் அகலுமுன்னர் அய்யோக்கியர்கள் கைவைத்ததை கேள்விப்பட்டு அதிர்ச்சியாயிருக்கிறது. ( நாளை நடக்கவிருக்கும் இனப்படுகொலைக்கான கருத்தரங்கிற்காக தில்லி வ்ரும்பொழுது கேட்டதால் உடன் பதியமுடியவில்லை) முள்ளிவாய்க்கால் முற்றம் நெடுஞ்சாலைக்கு இடைஞ்சல் என்றால், திருப்பெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலையில் இடையூறு செய்யும் ராஜீவ் நினைவிடத்தினை முதலில் இடி. ஜெயலலிதாவின் வீட்டில் இர்ந்து முக்கால் கி.மீ தொலைவில் நகரின் மையப்படுகுதியில் ஜெமினி பாலத்தருகே மாநகராட்சி நிலத்தினை ஆக்கிரமித்து கட்டிய தி-பார்க் ஹோட்டலின் கட்டிடத்தினை இடித்து காட்டு. அயோக்கியர்களே, பண்ணுவதோ மூன்றாம்தர அயோக்கிய ஆட்சி. சுயமரியாதையை இழந்த மானங்கெட்ட மந்திரிகள் கூட்டம். (இதில் மீசைக்கொன்னும் குறைச்சல் இருக்காது). எத்தனைக்காலம் அயோக்கியத்தனமும், பொறுக்கித்தனமும் செய்வீங்க. உங்களது அக்கிரமிக செயல்பாடுகளை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பொதுமக்களே தட்டிக்கேட்க தயாராகி விட்டார்கள். நாங்கள் வலிமை பெறுகிறோம். முளையிலேயே கிள்ளியெறிய கருணாநிதி கும்பல் நினைக்கும். கட்டிமுடிச்ச பிறகு ஜெயலலிதா கும்பல் அடக்குமுறையை காட்டும். இரண்டும் ஒன்னுதான் எங்களுக்கு. உங்கள் இருவரையும் தூக்கி எறிவதுதான் எமது முக்கியப்பணி என்று அடிக்கடி எமக்கு சொல்கிறீர்கள். அன்பான தமிழர்களே, இயக்கங்களே, கட்சிகளே ஒன்றுபட்டு இந்த இரண்டு கொள்ளைக் கூட்ட கும்பல்களை விரட்டுவது வரலாற்றுக்கடமை. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் மீதான பாசத்தினை விட்டு வெளியே வாருங்கள். இவர்களுடனான கூட்டணியை விட்டு வெளியேறுங்கள். மக்களை நம்புங்கள். ஒன்றாய் தேர்தல் களம் காணுங்கள். இதற்கு மேலும் பொறுப்பதற்கில்லை... மேலுள்ள இந்தக் கட்சிகளை ஒழிக்க முன்வாருங்கள். இது முதல்பணி. இந்தியாவின் செறுக்கை நம் செருப்பால் அடித்து அம்பலப்படுத்துவோம். இது நமது முக்கியப்பணி. கட்சி, சாதி, மதம் மீறி ஒன்று திரள்க. மனித குல விரோதிகளை விரட்டுவோம். (facebook:- Thirumurugan Gandhi சார்பாக அவர் கருத்தை பதிவு செய்தவர் Kondal Samy) இடிக்கப்படும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வைகோ... (facebook) தமிழர்களே இதுவரை நம் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சுற்றுபுறத்தை தான் இடித்து தள்ளியிருக்கிறது இந்த ஏவல்துறை அடுத்து மொத்தமும் இடிக்க துடிக்கிறது ஜெயா ஏவல்துறை. அதற்குள்ளாக நாம் விரைந்து களத்தில் இறங்காவிட்டால் மொத்தமும் காலியாகும். முற்றுத்திலிருக்கும் அய்யா.வைகோ இந்த சமயத்தில் கைதாகாமல் அடுத்த என்ன செய்யவேண்டும் என்று வழிநடத்த வேண்டும். Kondal Samy (facebook)
  9. ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்தியை கொண்டு வந்து இங்கு இணையுங்கள். எல்லாம் மற்றவர்கள் செய்ய வேணும். நீங்கள் கேள்வி மட்டும் கேட்பீர்கள். முள்ளிவாய்க்கால் முற்றம் அழிக்கப்படுவதை விட சீமான் அண்ணாக்கு எதிராக கருத்து எழுதுவது தான் முக்கியம்.
  10. முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் ஜெ.வைப் பார்த்து தமிழர்கள் காரித் துப்புவார்கள்- வைகோ ஆவேசம் சென்னை: முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க உத்தரவிட்டுள்ள ஜெயலலிதாவின் செயலுக்கு பாவ மன்னிப்பே கிடையாது. அவரைப் பார்த்து உலகத் தமிழர்கள் காரித் துப்புவார்கள். முள்ளிவாய்க்கால் முற்றம் என்ன அவரது போயஸ் தோட்ட வீடு என்று நினைத்துக் கொண்டாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாகப் பேசியுள்ளார். இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா கடந்த 10-ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையினரால் பொக்லைன் இய்ந்திரம் மூலம் இடிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக்கண்டித்து தர்ணா போராட்டம் செய்த பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு வந்த வைகோவை போலீசார் தடுத்தனர். ஆனால் ஆவேசமாக தடையை மீறி முள்ளிவாய்க்கால் முற்றத்தின் உள்ளே சென்று அங்குள்ள மாவீரர் மண்டபத்தில் அமர்ந்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசினார் வைகோ. முதல்வர் ஜெயலலிதாவை அவர் கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பது தொடர்பாக பழ.நெடுமாறன், முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து தொடர்பு கொண்டார். ஆனால் பதிலேதுமில்லை. அடுத்த அவர் தா. பாண்டியன் மூலமாக பேசி வந்தார். அப்போதும் சரியான பதிலில்லை. இதையடுத்து கடந்த 8ம் தேதி நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இந்நிலையில் அந்த முற்றத்தை இடித்து தள்ள ஆணையிட்டுள்ளார் ஜெயலலிதா. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்த ஜெயலலிதாவின் இந்த செயல் பச்சை அயோக்கியத்தனமானது. கண் துடைப்பு தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு பிரபாகரன் படத்தை வைக்கக்கூடாது என்று வழக்குகள் போடுகிறார். ஆனால், லட்சோப லட்சம் மக்களின் நெஞ்சத்தில் இருக்கும் பிரபாகரனை நீக்க முடியாது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! இது போயஸ் கார்டன் சொத்தோ, ஜெயலலிதாவின் சொத்தோ கிடையாது. கேள்வி கேட்க ஆள் இல்லை என்று இப்படியெல்லாம் செய்துகொண்டிருக்கிறார். இதைப் பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள். ஈழ ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. எத்தனை தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தாலும் அவை எல்லாம் எங்கள் கால் தூசுக்குச் சமம். முள்ளிவாய்க்கால் முற்றம் எங்கள் சொத்து. நாங்கள் உள்ளே போவோம். அதை தடுக்க முடியாது. ஜெயலலிதாவின் இந்தச் செயல்களூக்கு பாவமன்னிப்பே கிடையாது என்றார் ஆவேசத்துடன். சமீபகாலத்தில் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து வைகோ பேசுவது இதுவே முதல் முறை. http://tamil.oneindia.in/news/tamilnadu/vaiko-slams-jaya-harsh-words-187297.html
  11. இடிக்கப்படுகிறது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் - சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பழ. நெடுமாறன் அறிவிப்பு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் பகுதியில் உரிய அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பூங்கா இன்று (13-11-2013) அதிகாலை 5.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினரால் சட்டவிரோதமாக இடித்துத் தகர்க்கப்பட்டது. முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரை சுற்றுச் சுவரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெயர்ப்பலகையும் தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டது. இப்படத்தில் காணப்படும் நீரூற்று வரை வந்து அதையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்ட காவல்துறையினர் அதற்குள் தோழர்கள் கூடியதால் தற்காலிகமாக இடிப்பதை நிறுத்தியுள்ளனர். ஆனால் முற்றத்திற்குள் செல்லும் பாதையை வேலி போட்டு அடைத்துள்ளனர். “சட்டவிரோதமான முறையில் முற்றத்தில் எதுவும் அமைக்கப்படவில்லை. சட்ட ரீதியாகவே எதிர்கொள்வோம். அனைத்துத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து முடிவெடுக்கப்படும்” என பழ. நெடுமாறன் அறிவிப்பு. http://tamil.thenseide.com/seide/index.php?option=com_content&view=article&id=614%3A2013-11-13-03-41-04&catid=28%3Aspecialnews&Itemid=2
  12. தஞ்சை-முள்ளிவாய்க்கால் முற்றம்,காவல்துறையால் இடித்து நொறுக்கப்பட்டு வருகிறது. இனத்துரோகி சோனியா,கருணாநிதி துரோக வரிசையில் பாசிச ஜெயலலிதாவையும் வரலாறு மன்னிக்காது.உங்கள் கோட்டையும் தூள்தூளாக்கப்படும்... எம்இனத்துரோகிகள் அனைவரையும் கருவருப்போம்,யாராகினும். இது எம் தலைவர் பிரபாகரன் மேல் சத்தியம். Joe Britto (facebook)
  13. தமிழகத்தின் உடனடித் தேவை: தமக்கெனப் போராடும் தமிழ் மக்கள் கூட்டமைப்பு நேற்றிரவு (நவம்பர் 12, 2013) “தமிழர் உணர்வுகளை மதிக்காத” மத்திய அரசுக்கு எதிராக சட்டமன்றத் தீர்மானம். இன்று காலை (நவம்பர் 13, 2013) தமிழர்கள் உணர்வுகளை காலில் போட்டு மிதித்தழித்து, முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச் சுவர்களை, பூங்காவை அத்துமீறி இடித்துத்தள்ளி காட்டு தர்பார். ஜெயலலிதா தமிழக முதல்வராகவும், இந்தியப் பிரதமராகவும் இரட்டை வேடத்தில் நடிக்கும் “அம்மான்னா சும்மாவா?” படத்தின் அடுத்தடுத்த பரபரப்புக் காட்சிகள் இவை. சினிமாப் படம் பார்த்தே சீரழிந்துபோன தமிழர்களே, இந்த பாசிஸ்டு படத்தையும் பாருங்கள். கைக்கொட்டிச் சிரியுங்கள், உங்கள் தலைவிதியை நினைத்து. ஈழத் தமிழரின் தாயகத்திலும் சரி, இங்குள்ள தமிழரின் தமிழகத்திலும் சரி, தமிழர் நாம் அடிமைகளாகவே இருக்கிறோம். பச்சைத் துரோகிகளும், பாசிஸ்டுகளும் நமது அரசியலை, எதிர்காலத்தை தீர்மானிக்கிறவரை நாம் அடிமைகளாகத்தான் இருப்போம். தமிழ் மக்கள் உயிருக்கும் மதிப்பில்லை. அவர்கள் உயிர் ஈந்ததை நினைவில் நிறுத்தும் நினைவுச் சின்னத்துக்கும் மதிப்பில்லை. தமிழின எதிர்ப்பு அரசியல் நம்மைச் சுற்றி சக்தியோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. சானல் 4 வெளியிட்ட குழந்தை பாலச்சந்திரன் படுகொலைக் காணொளி, தங்கை இசைப்பிரியா படுகொலைக் காணொளி போன்றவை நம்மையெல்லாம் குலைநடுங்கச் செய்திருக்கின்றன. நவம்பர் 4, 2013 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தொடர்பாக நடத்தப்பட்ட மாணவர் சுடர்ப் பயணங்கள் தமிழகமெங்கும் முறியடிக்கப்பட்டு, அந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர், அடித்து நொறுக்கப்பட்டனர். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது, இனப்படுகொலைக் குற்றவாளியான மகிந்த ராஜபக்சேவுக்கு அந்த மரியாதையை கொடுக்கக்கூடாது, இந்தியா அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்று ஒட்டு மொத்த தமிழகமே போராடிக்கொண்டிருக்கிறது. இதற்காகக் குரல் கொடுத்த தோழர் கொளத்தூர் மணி பொய் வழக்கு ஒன்றில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் போகமாட்டாராம்; ஆனால் அவரது வெளியுறவுத் துறை அமைச்சர் போவாராம்; தான் ஏன் கலந்துகொள்ளவில்லை என்ற விளக்கக் கடிதம் ஒன்றை கொழும்பு ஆட்சியாளர்களுக்கு அனுப்பிவிட்டாராம். இப்படியாக நாடகமாடி, நயவஞ்சகமாக செயல்பட்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழர்களை ஏமாற்றி விடலாம் என்று தமிழகத்தின் பெரிய கட்சிகளும், அவற்றின் கள்ள உறவுகளும் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கொள்கையும் உணர்வும் கொண்ட தமிழகக் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் தமக்குள் பிணங்கிக்கொண்டு, பிரிந்துகிடப்பது நமது வருங்காலமும் பிரகாசமாக இல்லை என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. ஒருவித கவலையும், பயமும் ஆட்கொள்ளுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தின் உடனடித் தேவை, தமக்கெனப் போராடும் தமிழ் மக்கள் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதுதான். தேர்தல் அரசியலில் பங்கேற்கும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் அய்யா வைகோ அவர்களும், பா.ம.க. நிறுவனர் அய்யா மரு. இராமதாசு அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர். திருமாவளவன் அவர்களும், மனிதநேய மக்கள் கட்சியின் முன்னணித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களும், நாம் தமிழர் கட்சியின் தலைவர் தோழர். சீமான் அவர்களும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் பண்ருட்டி வேல்முருகன் அவர்களும், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் தோழர். மரு. கிருஷ்ணசாமி அவர்களும், எஸ்‌டி‌பி‌ஐ கட்சியின் தமிழகத் தலைவர் தோழர் தெஹ்லான் பாகவி அவர்களும், கம்யூனிஸ்ட் கட்சி (ம. லெ) மக்கள் விடுதலை தோழர் மீ. த. பாண்டியன் அவர்களும், சி.பி.ஐ (எம்.எல்.) விடுதலை தோழர் பாலசுந்தரம் அவர்களும், தமிழர் களம் தலைவர் தோழர் அரிமாவளவன் அவர்களும், தமிழக முன்னேற்றக் கழகம் தலைவர் தோழர் ஜாண் பாண்டியன் அவர்களும், தமிழக ஜனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் ஷரீஃப் அவர்களும், தமிழக அரசியல் களத்தில் அற்புதமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் முற்போக்குக் கொள்கைகள் கொண்ட ஏனைய அரசியல் கட்சிகளும் உடனடியாகக் கூடிப்பேசியாக வேண்டும். தேர்தல் அரசியலில் கலந்து கொள்ளாத தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் அய்யா பழ. நெடுமாறன் அவர்களும், தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் அய்யா பெ. மணியரசன் அவர்களும், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கு. இராமகிருஷ்ணன் அவர்களும், ஆதித் தமிழர் பேரவை தலைவர் அய்யா அதியமான் அவர்களும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் தோழர் இஸ்மாயில் அவர்களும், தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத் தோழர்கள் அப்துல் சமது போன்றோரும் இந்த ஒருங்கிணைப்புப் பணியில் உதவ முன்வர வேண்டும். பல்வேறு சமூக இயக்கங்களும், மகளிர், மாணவ அமைப்புக்களும், அவற்றில் மும்முரமாய் நின்று பணிபுரியும் இளைஞர்களும் இந்தக் கூட்டு முயற்சிக்கு அழைக்கப்பட வேண்டும். தோழர்கள் கிறிஸ்டி சாமி, ஷீலு, திருமுருகன், அருண் ஷோரி, செந்தில், பரிமளா, கயல், திவ்யா, அகராதி என்று ஆயிரம் பேரின் பெயர்களை இங்கே அடுக்க முடியும். வலது சாரிகளாக, பிற்போக்கு சக்திகளாக, சந்தர்ப்பவாதிகளாக, பிழைப்புவாதிகளாக இல்லாத பட்சத்தில், அனைவரும் விருப்பு வெறுப்பின்றி இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவுக்கு நாங்கள் அழைக்கப்படவில்லையே என்ற ஆதங்கம் சிலருக்கு இருக்கலாம். இங்கே விடப்படும் அழைப்பு தமிழ் மக்களின் அழைப்பு என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள். எங்களுக்கு எதிராக சாதி அரசியலை கையிலெடுப்பவர்களோடு நாங்கள் எப்படி அணிசேர முடியும் என்று சிலர் அங்கலாய்க்கலாம். இந்த சாதிப் பிரிவுகளைத் தாண்டி கைகோர்த்து நின்றவர்கள்தானே நீங்கள். மனமுண்டானால் மார்க்கமுண்டு; இன்னும் அப்படிச் செய்ய முடியும். எங்களிடமிருந்து பிரிந்து சென்றவர்களோடு எப்படிச் சேருவது என்று சிலர் விசனப்படலாம். பொது வாழ்க்கையில் பிரிவதும், கூடுவதும் இயல்புதானே? கணவனும்-மனைவியும், பெற்றோரும்-பிள்ளைகளும், சகோதர-சகோதரிகளுமே பிரியும்போது, பேசாதிருக்கும்போது, அரசியல் கொள்கைகளுக்காக நிற்கும் நாம் பிணங்குவது இயற்கைதானே? இந்தக் கூட்டமைப்புக்கு யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழலாம். இது குறித்து உங்களுக்குள் ஓர் இணக்கம் எழவில்லையென்றால், ஒரு தமிழ்ப் பாட்டியை தலைவராக்குவோம். கூட்டத்தில் யார் கடைசியாகப் பேசுவது என்றப் பிரச்சினை எழலாம்; இதுவும் ஒரு தலைபோகும் பிரச்சினை அல்ல. பிளவுகள், பிரிவினைகள் பற்றி பேதலிக்காமல், இணக்கங்கள், இணைக்கும் பாலங்கள் பற்றிப் பேசுவோமே? வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பதுபோல, மனம் விட்டுப் பேசினால், வழி பிறக்கும் என்பது உறுதி. இது தமிழ் மக்களின் வெற்று வேண்டுகோள் அல்ல, வெறும் விருப்பமும் அல்ல; கட்டளை, அன்புக் கட்டளை. காட்டாற்றுத் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் எங்களைக் காப்பாற்றுங்கள் எனும் அலறல், அழுகை, அபயக்குரல். தில்லி ஏகாதிபத்தியமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஒரு புறம் நெருக்க; சீன ஏகாதிபத்தியமும், சிங்களப் பேரினவாதமும் இன்னொரு புறம் அடிக்க; அண்டை மாநிலங்கள் தண்ணீர்கூட தரமாட்டோம் என மறுக்க; உலகின் ஆபத்தானத் திட்டங்கள் எல்லாம் தமிழ் மண்ணில் செழிக்க; தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. ரோமாபுரி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது நீரோ பொறுப்பின்றி செயல்பட்டது போல, தமிழர்களை காக்க வந்த இயக்கங்களும், தலைவர்களும் வாளாவிருக்கலாமா? அனைவரும் ஒன்றுகூடிப் பேசி, பொது அடிப்படை செயல்திட்டம் (Common Minimum Programme) ஒன்றை உடனடியாக உருவாக்கியாக வேண்டும். தமிழகத்தின் பெரிய கட்சிகளை தமிழ் மக்களாகிய நாங்கள் நம்பவில்லை. மாற்று இல்லாததாலும், எங்கள் கோபத்தை தெரிவிக்க வேறு வழியில்லாததாலும், பச்சைத் துரோகிகளையும், பாசிஸ்டுகளையும் மாற்றி மாற்றி தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம். விளப்பில்சால எனுமிடத்தில் திருவனந்தபுர நகரக் கழிவுகளை எல்லாம் கொட்டும் திட்டத்திற்கு எதிராக அந்தப் பஞ்சாயத்து மக்கள் தொடர்ந்து 1,000 நாட்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரமாவது நாள் போராட்டத்துக்கு இடிந்தகரைப் போராட்ட பெண் தலைவர்களை அழைத்தார்கள். “தயவு செய்து எந்தக் கட்சியையும் தாக்கிப் பேசிவிடாதீர்கள்; ஏனென்றால் அனைத்துக் கட்சிகளுமே எங்களூக்கு ஆதரவாக இருக்கிறார்கள்” என்று அறிவுரைத்துச் சென்றார்கள் விழாக் குழுவினர். இந்த அரசியல் ஒற்றுமையாலும், பலத்தாலும்தான் கேரளம் “கடவுளின் சொந்த தேசமாக “ (God's Own Country) விளங்கிக் கொண்டிருக்கிறது. கூடங்குளம், கல்பாக்கம், தேவாரம் நியூட்ரினோ, மதுரை அணுக்கழிவு ஆய்வு மையம் போன்ற குப்பைகளெல்லாம் தமிழகத்துக்கு வருகின்றன. கூடங்குளம் அணுக் கழிவுகளை கர்நாடக மாநிலம் கோலார் தங்கச் சுரங்கங்களில் கொண்டு புதைப்போம் என்று அணுசக்தித் துறை உச்சநீதிமன்றத்திடம் கடந்த வருடம் உறுதியளித்தது. எரிமலையே எதிர்பாராது வெடித்ததுபோல கர்நாடக மக்கள் உடனடியாக வெகுண்டெழுந்தனர். அப்போதைய கர்நாடக முதல்வர் பா.ஜ.க.வைச் சார்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் அந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். கோலாரில் மட்டுமல்ல, கர்நாடகத்தில் வேறு எங்குமே வைக்க முடியாது என்று கர்ஜித்தார். கர்நாடகத்தைச் சார்ந்த மத்திய அமைச்சர் காங்கிரசுக்காரரான வீரப்ப மொய்லி இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று சூளுரைத்தார். கர்நாடக அ.தி.மு.க. ரத்தத்தின் ரத்தங்கள்கூட தெருக்களிலே இறங்கிப் போராடினர். வெறும் மூன்றுநாட்களில் கோலார் திட்டம் குப்பையிலேப் போடப்பட்டது. காரணம் கர்நாடக அரசியல் கட்சிகள் எல்லாம் கர்நாடக மக்களுக்காகப் பாடுபடுகின்றனர். ஆனால் இங்கே தமிழகத்தில்? பா.ஜ.க., காங்கிரசுக்காரர்கள் தேசபக்தியில் திளைத்து தமிழரைக் காட்டிக் கொடுக்கின்றனர். கூடங்குளம் அணுஉலையை எதிர்க்கும் மக்களான மீனவர்களும், விவசாயிகளும், தலித் மக்களும் தேசத் துரோகிகளானோம். ஆனால் அணுக் கழிவை ஏற்றுக் கொள்ளாத ஷெட்டர்கள், மொய்லிகள், ர.ர.க்கள் எல்லாம் தேச பக்தர்கள் ஆனார்கள். தி.மு.க. உ.பி.க்களும், அ.தி.மு.க. ர.ர.க்களும் “தமிழ், தமிழன், தமிழினம்” என்று பசப்பு மொழிப் பேசியே பச்சைத் துரோகம் செய்கின்றனர். அமெரிக்க, பிரான்சு நாட்டு அணுஉலை இந்தியாவில் வேண்டாம் என்கிற சி.பி.ஐ., சி.பி.எம். காம்ரேடுகள் ரஷ்ய அணுஉலைமேல் காமம் கொண்டு நிற்கின்றனர். ஆனால் அதே ரஷ்ய அணுஉலைகூட கேரளாவில் வரக்கூடாது என்பதிலும் குறியாய் இருக்கின்றனர். கேரளத்து மீனவர் இருவர் இத்தாலி நாட்டு மாலுமிகளால் கொல்லப்பட்டபோது, ஒரு குடும்பத்துக்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை கிட்டத்தட்ட 600 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்னும் அதிகமானோர் முடமாக்கப்பட்டிருக்கிறார்கள். அதைவிட அதிகமானோர் சிறைச்சாலைகளிலே முடக்கப்பட்டிருக்கிறார்கள். இழவுக்காகப் பிறந்தவர்களுக்கு ஏது இழப்பீடு? இடிந்தகரைப் போராட்டத்திலே தமிழகப் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட மணப்பாடு அந்தோணி ஜான் உயிருக்கான விலை வெறும் ஐந்து லட்சம் ரூபாய். இடிந்தகரையில் கடலோரப் பாதுகாப்புப் படை விமானத்தால் தாக்கிக் கொல்லப்பட்ட சகாயம் பிரான்சிஸ் குடும்பத்துக்கு அந்த மரியாதைகூடக் கிடையாது. வருவாய் ஏதுமின்றி வறுமையில் தவிக்கும் நான்கு பச்சைக் குழந்தைகளுக்கும், கல்வியறிவில்லாத அவர்களின் தாய்க்கும், எந்த உதவியும் செய்யவில்லை அருமைமிகு சும்மாவின் அரசு. அரசை எதிர்ப்பவனுக்கு, கேள்வி கேட்பவனுக்கு, அவனது குடும்பத்துக்கு உதவியாவது, ஒன்றாவது எனும் மமதைதான் ஆட்டம் போடுகிறது. கேரள, கர்நாடக அரசியல் கட்சிகளும், தலைவர்களும் மக்களுக்காக வாதிட்டு சாதிக்கின்றனர். தமிழகத்திலோ, சக்திமிக்க அரசியல் கட்சிகளும், தலைவர்களும் கடிதம் எழுதிக் கொண்டும், கதை சொல்லிக் கொண்டும் நம் காதுகளில் பூ சுற்றிக்கொண்டிருக்கின்றனர். ஏனையோர் ஒன்றுகூடாமலிருப்பதற்கு ஓராயிரம் வாதங்களை வைத்துக் கொண்டு, வழிகளைத் தேடிக்கொண்டு, முன்னவர்களுக்கு முடிந்த வகையிலெல்லாம் உதவிகள் செய்து கொண்டிருக்கிறோம். இன்றமிழ் மக்களுக்கு இயன்றதையெல்லாம் இங்கே, இப்போதே செய்ய விழையும் தலைவர்கள், இயக்கங்கள் உடனடியாகக் கூடிப் பேசுங்கள், உதவுங்கள். நாதியற்று நடுத்தெருவில் நிற்கும் தமிழினத்திற்கு கைகொடுக்க இந்த நேரத்திலும் நீங்கள் ஒன்றுபட்டு செயல்பட முடியவில்லை என்றால், முயலவில்லை என்றால், நீங்களும் ஒரு பச்சைத் துரோகி அல்லது பாசிஸ்டு என்று தமிழ் மக்களாகிய நாங்கள் முடிவு கட்டுவோம். அன்புத் தமிழர்களே, ஒருவேளை, நம் தலைவர்கள் இந்த இறுதிக்கட்டத்திலும் நம்மைக் கைவிட்டால், “அடிமையாக வாழ்வது எப்படி?” என்று ஒரு கையேட்டைத் தயாரித்து, வீரம், மானம் என்பதையெல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, கையேட்டின்படி நடந்து, கைகட்டி, தலைவணங்கி, குனிந்து, வளைந்து ஈன வாழ்க்கை வாழும் வழிகளைப் பாருங்கள். வணக்கம். சுப. உதயகுமாரன் இடிந்தகரை நவம்பர் 13, 2013 (facebook)
  14. மிகவும் கவலையாக உள்ளது. தமிழக மக்கள் ஜெயலலிதாவின் உண்மையான முகத்தை புரிந்துகொள்ள வேண்டும். 2016 இல் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் முதல்வர் பதவியை பெற்றுக்கொள்ள முடியாத வகையில் தூக்கி எறிய வேண்டும்.
  15. கோவையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பான மேலதிக படங்கள். இன்று 12-11-2013 கோவை நகரில் அதிகமான உணர்வுள்ளவர்கள் கடைகளை அடைத்திருந்தனர் ! தொடர் வண்டி மறியல் போராட்டம் கட்சிகள், அமைப்புகள் சார்பாக சிறப்பாக நடைபெற்றது ! ஜெயபால் ராமையா (facebook)
  16. CHOGM boycott: Over 6,000 held for rail roko Updated: November 13, 2013 00:51 IST Trains blocked at a few places, but essential services not affected Cadres owing allegiance to various Tamil nationalist outfits and political parties who resorted to rail roko agitations across the State were arrested on Tuesday. The protesters were demanding the Government of India to totally boycott the Commonwealth Heads of Government Meeting (CHOGM) in Sri Lanka. While essential services, public transport, educational institutions, banks, government and private establishments functioned normally, trains were delayed at several places with slogan-shouting agitators barging into railway stations to stop train services. Marumalarchi Dravida Munnetra Kazhagam general secretary Vaiko, Manithaneya Makkal Katchi convener M.H. Jawahirullah, Tamilaga Makkal Munnetra Kazhagam leader John Pandian were among those held. According to police sources, as many as 6,700 persons who resorted to rail roko agitations at 135 places were taken into custody. Most of the train blockades were reported in Chennai, Coimbatore, Tirupur and Madurai. Around 300 activists who staged demonstrations in almost all districts causing hindrance to road traffic were detained. All those arrested were released in the evening. Some shops remained closed. But for an instance of stone throwing on a bakery near Tirupur railway station, no violent incidents were reported from any part of the State, police sources said and added that enhanced security arrangements would continue till early on Wednesday. http://www.thehindu.com/news/national/tamil-nadu/chogm-boycott-mdmk-blocks-train-in-madurai/article5342654.ece?homepage=true&fb_source=message
  17. ஈரோட்டில் இரயில் மறியல் ஈரோடு மாவட்டம், ஈரோட்டில் இரயில் மறியலில் ஈடுபட்ட கழகத்தினரும், பல்வேறு அமைப்பினரும் (facebook) சங்கரன் கோவில் ரயில் மறியல். (facebook)
  18. திருப்பூரில் இரயில் மறியல் திருப்பூர் மாவட்டம், திருப்பூரில் இரயில் மறியலில் ஈடுபட்ட கழகத்தினரும், பல்வேறு அமைப்பினரும் (facebook) ஈரோடில் இரயில் மறியல்...... பாராளுமன்ற உறுப்பினர் திரு அ.கணேசமூரத்தி அவர்கள் . (facebook) நாமக்கல் இல் நடந்த இரயில் மறியல் அறப்போராட்டம் ... (facebook)
  19. மலேசிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம். http://www.yarl.com/forum3/index.php?showtopic=132030
  20. இன்று காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிராக நடந்த தமிழகம், புதுவை தழுவிய பொது வேலை நிறுத்தம், தொடர்வண்டி மறியல் போராட்டம் தமிழர் வரலாற்றில் பொறிக்கப் படவேண்டிய தமிழின எழுச்சி நிகழ்வாகும். தமிழகத்தில் பல பகுதிகளில் தமிழர் போராட்டம் குறித்து செய்தி அறிந்த வணிகர்கள் தங்கள் கடைகளை தாங்களாகவே அடைத்தனர். கடை அடைக்காத மற்றவர்களுக்கு ஊடங்கங்கள் சரிவர செய்தி கொண்டுபோய் சேர்க்கவில்லை என்பது தெரிகிறது. மதவாத பாஜக கடைஅடைப்பு போராட்டம் அறிவித்தால் அது தினத்தந்தியில் முதல்பக்க செய்தி . ஆனால் இன நலத்திற்கு தமிழர்கள் போராட்டம் அறிவித்தால் அதை உள்ளே சிறிய செய்தியாக வெளியிட்டுள்ளது தினத் தந்தி நாளிதழ். தமிழர்கள் போராட்டம் என்றால் மட்டும் இந்த ஊடகங்களுக்கு கசக்கிறது போலும். எனினும் மாணவர்கள், அரசியல் கட்சிகள் , இயக்கங்கள், அமைப்புகள் நடத்திய தொடர்வண்டி மறியல் போராட்டம் தமிழகத்தையே முடக்கியது என்றால் அது மிகையல்ல. அனைத்து மாவட்டங்களிலும் தொடர்வண்டி மறியல் போராட்டம் தன்னெழுச்சியாக நடைபெற்றது. காவல்துறை யாரை கைது செய்வது யாரை விடுவது என்று தெரியாமல் திக்குமுக்காடி உள்ளனர். தமிழகத்தில் பல ஆண்டுகள் கழித்து இப்படியான மிகப்பெரிய, ஒரே நாளில் நடத்தப்பட்ட தொடர்வண்டி மறியல் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து சட்ட மன்ற தீர்மானம் தமிழர்களின் கூட்டு உணர்வை பிரதிபலிப்பதாக இருந்தது (தீர்மானத்தால் பயனில்லை என்றாலும்). தமிழர்கள் இப்போது அனைத்தும் செய்தாகி விட்டது. இனி செய்ய வேண்டியது , இதே உணர்வை தக்க வைத்துக் கொண்டு துரோகிகள் , எதிரிகளை இனம் கண்டு அவர்களை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்துதல். அத்தோடு நில்லாமல் இன்று களமாடியது போல் ஒற்றுமையுடன் தமிழர்கள் ஓரணியில் தேர்தலில் களமாடி தமிழர் அரசை உருவாக்க வேண்டும். தமிழக ஆட்சி அதிகாரத்தை பிடித்தல், பின்பு இந்தியாவின் தமிழர் விரோதக் கொள்கைக்கு முடிவு கட்டுதல் இவை இரண்டும் தான் தமிழர்களின் அடுத்த கட்ட இலக்காக இருத்தல் வேண்டும். இன்று போராட்ட களம் கண்ட அத்துணை உறவுகளுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள், வாழ்த்துகள் ! Rajkumar Palaniswamy (facebook)
  21. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைக் கண்டித்து இடிந்தகரையில் கண்டன ஆர்ப்பாட்டம் 12th November 2013 ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, இன்னும் மிஞ்சி இருக்கிற ஈழத் தமிழர்களுக்கு கொடுமைகள் பல இழைத்து வரும் இலங்கை அதிபர் இராஜபக்சே நடத்தும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து, வணிகர் சங்கங்கள்,ஈழத்தமிழ் ஆதரவு அமைப்புகள், கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் நடைபெறுவதற்கு ஆதரவாக இன்று பிற்பகல் மூன்று மணிக்கு இடிந்தகரையில் முன்னூறு பேர் பங்கெடுத்த கண்டன ஆர்ப்பாட்டம்.நடைபெற்றது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கை நீக்கப்பட வேண்டும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டன. . லட்சக்கணக்கான தமிழ்மக்களின் உணர்வுகளை மதிக்காமல், இந்திய அரசு இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். போர்க்குற்றக்கரைபடிந்த இலங்கை அரசு காமன்வெல்த் மாநாட்டை நடத்த அறுகதை அற்றது. காமன்வெல்த் மாநாட்டை, இந்தியா புறக்கணித்தால் மட்டுமே சர்வதேச அரங்கில் இந்தியா இழந்த மரியாதையை மீட்டெடுக்க முடியும் . இனப்படுகொலை செய்த இராஜபக்சேவை உலக அரங்கில் தனிமைப்படுத்த முடியும். 600க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை கொன்ற, மீனவர்களை இன்றும் அடித்து விரட்டுகிற இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து, அவனுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. http://newsalai.com/details/tamil-nadu-news-11-12-2013-idinthakarai-perotest-for-commonwealth.html#sthash.vcsRmWBR.dpbs

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.