Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் அடைவதற்கு தடையாக தமிழர்களிடம் உள்ள குறைகள் என்ன ?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவா தீர்மானத்திற்கு பிறகு , தமிழர்களுக்கு சாதகமா பாதகமா என்பதயும் தாண்டி தமிழர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை தொடங்கியிருக்கிறது. இந்தப்புள்ளியில் ஆரம்பித்து பார்த்தால் தமிழ் ஈழம் சாத்தியமா ? தமிழ் ஈழம் அடைவதற்கு என்னென்ன தடைகள் இருக்கின்றன என்பதை விவாதிக்கவே இந்த திரி. அமெரிக்கா என்ன செய்யும் இந்தியா என்ன செய்யும் யார் தடையாக இருக்கிறார்கள் என்பதை விவாதிப்பதைவிட , தமிழர்களாகிய நம்மிடம் என்னென்ன தடைகள் இருக்கின்றன என்பதை மட்டும் விவாதம் செய்யலாம். நம்மிடம் உள்ளகுறைகளை அலசி ஆராய்வது ஒற்றுமையை ஏற்படுத்துவது முக்கியம். அதற்காகவே இந்த திரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் தமிழ் கடைகளில் சிறி லங்காவுடன் தமிழ் ஈழத்தையும் சேர்க்கவேண்டும்.

ஈழ தமிழ் உணவுகளுக்கு சிறி லங்கா சாயம் பூசுவதை தடுக்கவேண்டும். 

ஒன்றாய் இருப்போம் என்று சமத்துவம் பேசுவோருக்கு சிறி லங்கா ஜெனோசைட் ரத்னா பட்டம் கொடுக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்துக்கான எதிரான முக்கிய தடை, எம்மில் உள்ள சில புத்திஜீவிகள் எனத் தம்மை நினைத்துக் கொள்பவர்கள் தான்!

இவர்களை அடையாளம் கண்டு, தூர வைப்போமாயின், தமிழீழம் தானே மலரும்!

Beetle_eating_a_leaf.jpg

(1) எமக்கு என்ன வேண்டும் (ஒரு இனத்துக்கு சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுயாட்சி உரிமையும், ஏனைய சகல அடிப்படை உரிமைகளும்) வேண்டும், எமது பிரச்சினைகள் என்ன, சிங்களப் பயங்கரவாதிகளின் அடாவடித்தனக்கள் (குறைந்தது 20 ஐ ஆதாரங்களுடன்) என்பவற்றை சகலரிடமும் தெளிவாக எடுத்துக் கூறும் தெளிவு, வலியுறுத்திக் கூறும் தைரியம், முயற்சி வேண்டும். (எமக்கு சாந்தி, சமாதானம் வேண்டும் என்று ஒப்பாரி வைக்கக் கூடாது).

(2) தாயகத்தில் தமிழ் மக்களின் எண்ணிக்கையை, பொருளாதார பலத்தை, நிலங்களை விற்காமல் தக்க வைத்தலை, மேலதிக நிலங்களை கையகப்படுத்தலை பல மடங்கு பெருக்க வேண்டும்.

(3) நாட்டை விட்டு நிரந்தரமாக ஓடும் மனப்பான்மை பெருகுவது நிறுத்தப்படவேண்டும்.

(4) பொருளாதார வளம் உடையவர்கள் 1, 2 பிள்ளைகளுடன் திருப்திப்படாமல் குறைந்தது 4 - 6 பிள்ளைகளையாவது பெறும் வழக்கத்தை அடுத்த 50 வருடங்களுக்காவது மேற்கொள்ள வேண்டும்.

(5) சிங்களப் பயங்கரவாதிகளின் தமிழின அழிப்புக்கு தொடர்ந்து உதவும், உதவ முனையும் ஈனச் சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை பலமிழக்கச் செய்யும் வழிமுறைகளை முழு மூச்சுடன் செயற்படுத்த வேண்டும்.

(6) வேறொருவர் எல்லாம் செய்வார் என்ற மனநிலை இல்லாமல் எமது விடுதலைக்கு நாமே தான் முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவரிடம் வர வேண்டும்.

இப்போதைக்கு இது போதும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.