Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச அழுத்தத்தை குறைக்க வட மாகாண சபை தேர்தலை நடத்துமாறு இந்தியா இலங்கைக்கு இரகசிய அறிவுரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

india-sri-lanka.jpg

இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை விரைந்து நடத்தி, அப்பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகம் நடைடெபறுவதற்கான வழியை ஏற்படுத்துவதன் மூலம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கை அரசு ஓரளவாவது விடுபட முடியும் என இந்தியா, இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கில் இராணுவ நெருக்குதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சி அடைவதற்கு முன்பு அங்கு தேர்தலை நடத்தி, மக்கள் பிரதிநிதிகளிடம் அப்பகுதி நிர்வாகத்தை ஒப்படைப்பதால், தற்காலிகமாக மக்கள் இராணுவ நெருக்குதல்களில் இருந்து மீண்டு நிம்மதியாக வாழ வழி ஏற்படும் என்று இலங்கைக்கு இந்தியா அறிவுரை கூறியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயத்தை மறைமுகமாகவும், சூசகமாகவும் இலங்கை அரசுக்கு சுட்டிக் காட்டியுள்ள இந்திய அரசு, விரைவில் இது குறித்து பகிரங்க கோரிக்கை ஒன்றை வைக்கப் போவதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

http://www.eeladhesa...lle-nachrichten

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தொடர்ந்தும் இந்தமாதிரியான நரித்தனம் செய்துவருமாயின் அதற்க்கான பிரதிபலன்களையும் ஏற்க்கவேண்டிவரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் இந்த முறை தமிழ் நாட்டு மீடியா எல்லாம் வடக்கில் நிற்கும். உலக கண்காணிப்பும் கூடும். 

எப்படி எங்கட துவக்கு கட்சிகள் "பிரச்சாரம்" செய்யுறது?

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அழுத்தத்தை குறைக்க வட மாகாண சபை தேர்தலை நடத்துமாறு இந்தியா இலங்கைக்கு இரகசிய அறிவுரை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100053

:lol: :lol:

522064_419693071381250_100000216824895_1957014_78517705_n.jpg

நிச்சயம் தமிழரின் பேரம்பேசும் சக்தி விடுதலைப்புலிகள் தான் என மேற்குலகம் முழுமைக்கும் தெரிந்திருந்தே,விடுதலைப்புலிகள் போரியல் வெற்றிகளை ஈட்டியவேளைகளில் எல்லாம் சமாதனம் பேச அழைத்த அந்நாடுகள்,புலிகளிடம் பேரம்பேசும் அளவுக்கு படைவலுச்சமநிலை இல்லை என்பதை அறிந்ததும் அவர்களோடு நட்பு ரீதியில் பேசக்கூடத்தயங்கின. இந்த தயக்கம் சி...றிலங்காவுக்கு ஊக்க மருந்தானது.அந்த ஊக்கம் பெண்கள்,சிறுவர்,சரணடைந்த போராளிகள் என மனிதாபிமானமற்று கொலைசெய்யதூண்டும் வெறியாக மாறிற்று.அதுவே இறுதிப்போர்க்களத்தில் தனது பிரச்சார வலிமையோடு,பன்னாடுகளையும் தமிழருக்கு எதிரான போரில் உள்ளிழுக்க முடிந்தது.இதில் அமெரிக்காவும்,இங்க்லாந்தும் ஊமைக்குசும்பர் வேலை பார்த்தனர்.ஒருபக்கம் புலிகளை சரணடைய பேசுவதும்,போரை நிறுத்த சொல்வதும்,மறுபக்கம் சிறிலங்காவுக்கு அழிவாயுதங்களை விற்பனை செய்வதில் போட்டி போட்டனர்.பிள்ளையையும் கிள்ளி,தொட்டிலையும் ஆட்டுவதில் கைதேர்ந்த இவர்கள்,புலிகளின் அழிவுக்கு பின்னான தமது ஆதாயத்தையும் கணக்குப்போடத்தவறவில்லை. இந்தக்கணக்கில் அமெரிக்கா முந்திக்கொண்டது.நெப்போலியன் சொன்னதை நாங்கள் மறந்துவிட்டோம்.அமெரிக்கா மறக்கவில்லை.திருகோணமலை இயற்க்கைத்துறைமுகம் எவர் கையில் இருக்கிறதோ ஆசியாவின்,அதுவும் தென்னாசியாவின் அதிகாரம் அவர்கள் கையில் இருக்கும் என்பதுதான் நெப்போலியன் சொன்னது.அந்த துறைமுகத்தை கையகப்படுத்த அமெரிக்கா புலிகளுடன் பலமுறை பேரம்பேசியும்,படிந்துகொடுக்காத விடுதலைப்புலிகளின் தலைமை இப்போது இல்லை என்கிற நிலையை உருவாக்கி,(திருமலையின் புல்மோட்டைக்கடற்பகுதி,இல்மனைட் என்கிற கனிய மணல் நிறைந்து கிடக்கும் தமிழீழப்பிரதேசம்.அதன் மணலை வாரி வாரி விற்று இலங்கை வருடாந்தம் லாபம் சம்பாதிக்கிறது.அனைத்தும் ரஷ்யா,ஜப்பான்,US ;UK க்கு ஏற்றுமதி மட்டுமே.இந்த மணலை ஏற்றிச்சென்ற கப்பல்களை ஈழத்தின் சொத்து பறிபோகக்கூடாது என்பதற்காய் பல கரும்புலிகள் மோதி வெடித்து மூழ்கடித்ததாய் என் சின்ன வயதில் அறிந்துள்ளேன்.)திருமலையை வளைத்துப்போட செய்த ப்ளாக்மெயிலின் ஒரு பகுதிதான் இலங்கை மீதான ஐ.நா தீர்மானம். இதில் ஈழத்தமிழர் மீதான போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணையோ,தமிழர் பிரச்சினைக்கான தீர்வுகளோ முன்வைக்கப்பாடாத இந்த பொம்மை தீர்மானத்தின் இயல்வலி அறிந்துதான்,அமெரிக்காவின் நன்மைக்காக முன்மொழியப்படுகிற இந்த தீர்மானத்தை அமெரிக்க விரோத நாடுகள் ஆதரிக்கவில்லை.இதில் கியூபா போன்ற நாடுகள் ஆதரிக்கவில்லையே என்று நாங்கள் கொதிப்பதில் அர்த்தமே இல்லை.இதை ஆதரிப்பதன் மூலம் அமெரிக்கா ஆதாயம்ù அடையும் போது,அதன் எதிர்நாடுகள் எப்படி ஆதரிக்கும்? எது எப்படியோ,கெஞ்சியோ,மிரட்டியோ இலங்கையை பணிய வைத்து திருகோணமலையின் அதிகாரத்தை அமெரிக்கா கைப்பற்றப்போவதின் முதல்படிகள் தான் இவை.அடுத்தடித்து நடக்கிற அமெரிக்க முன்னகர்வுகளை உற்றுக்கவனித்தால் இதை விளங்கிக்கொள்வதில் பெரிய சிரமம் இருக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.