Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கு இணைந்திருப்பதன் மூலமே கிழக்கு மக்களுக்கு பாதுகாப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

eelam.gif

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதன் மூலமே தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படும். அத்தோடு சிறந்த நிருவாக கட்டமைப்பையும் ஏற்படுத்த முடியும் - இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாண ஜீவோதய நலன்புரி நிறுவனத் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு ஜீவோதய நலன்புரி நிறுவனத்தின் பிரமுகர்கள் கௌரவிப்பு நிகழ்வு கல்முனை சனச மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இணைந்த வடக்கு, கிழக்கை பிரித்தன் மூலம் தமிழ் மக்கள் எந்தப் பயனையும் அடையாது துன்பங்களிலேயே அமிழ்ந்துள்ளனர்.

வடக்கு, கிழைக்கை பிரித்த பின்னர் பேரினவாதிகளினதும் இனவாதிகளினதும் அத்து மீறல்களும் அடாவடித்தனங்களும் எமது மண்ணை ஆக்கிரமிக்கும் செயல்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன.

வடக்கு, கிழக்கு பிரிப்பு மூலம் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு ஒன்றை வழங்கும் விடயம் நீடித்துச் செல்கிறதே தவிர உருப்படியான எந்த முன்னேற்றத்தையும் அரசு காட்டவில்லை.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான இன விடுதலைக்கான நீண்ட கால போராட்டத்திற்கு பெரும்பான்மை பலத்தைக் கொண்ட இன்றைய அரசு நிரந்தரத் தீர்வு ஒன்றை வழங்குவதில் பின்னடித்து வருகிறது.

இணைந்த வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும். அதுவே நிரந்தர சமாதானத்துக்கு வழிவகுக்கும்.

இணைந்த வடக்கு, கிழக்கை பிரித்ததன் மூலம் கிழக்கு மாகாண சபை உருவானபோதும் இந்த மாகாண சபையில் நிரந்தர நிருவாக கட்டடைப்பு இல்லாத நிலையே காணப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றங்களின் அட்டவணைப்படுத்தப்படாத சிற்றூழியர்களுக்கான பதவி உயர்வு திட்டமொன்றை தயாரித்து நடைமுறைப்படுத்த முடியாத நிலையில்தான் கிழக்கு மாகாண சபை நிருவாகமுள்ளது.

எனவே வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படும் போதுதான் சிறந்த நிருவாக கட்டமைப்பை ஏற்படுத்த முடியும்.

இதே வேளை, வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே உறவுப் பாலம் மேலும் பலம் மிக்கதாக கட்டியெழுப்பப் படுவதன் மூலமே எதிர்காலத்தில் எம்மை எதிர்நோக்கி நிற்கும் சவால்களை முறியடித்து எமது இருப்புக்களை உறுதிப்படுத்தலாம்.- என்றார்.

நன்றி: ஈழநாதம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கும் கிழக்கும் இணைவது தமிழகத்துக்கும் கேரளத்திற்கும் பாதுகாப்பு.  துணிந்து கடலுக்கு மீனவர்கள் செல்லலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.