Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்எல்ஆர்சி முன் சாட்சியமளித்த பெண் அச்சத்தில்

Featured Replies

எல்எல்ஆர்சி முன் சாட்சியமளித்த பெண் அச்சத்தில்

இலங்கை அரசாங்கம் அமைத்த நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த கல்முனையைச் சேர்ந்த இரத்தினம் பூங்கோதை என்ற கணவனை இழந்தப் பெண், எதிர்வரும் சனிக்கிழமையன்று விசாரணைக்கு வரவேண்டுமென்று கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பரிவு கல்முனை பொலிஸ் ஊடாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர், குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது அவர் கொழும்பு செல்ல மறுத்தார்.

அதனையடுத்து, கல்முனையில் வாக்குமூலம் அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று ஆணைக்குழு அறிவித்திருந்ததுடன் குற்றப் புலனாய்வு பிரிவினரும் கல்முனையில் வாக்குமூலம் பெறப்படும் என தெரிவித்திருந்தனர்.

இப்போது கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் அழைத்திருக்கின்றமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு தான் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்த பூங்கோதை, ஏற்கனவே தான் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்ததையும் நினைவுகூர்ந்தார்.

தற்போது கொழும்பிற்கு சென்று வரக் கூடிய பாதுகாப்பான சூழ்நிலை தனக்கு இல்லை என்பதால் தன்னால் அங்கு செல்ல முடியாதிருப்பதாகவும் அவர் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/04/120405_tidkalmunai.shtml

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அந்தப் பெண்.

கிழக்கு மாகாண அரசியல் செல்வாக்கு மிக்க கருணா, பிள்ளயான், ரவூப் ஹக்கீம் போன்ற... நல்லிணக்கவாதிகள் அவரின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும்.

  • தொடங்கியவர்

நல்லிணக்க ஆணைக்குழுவின் கைகளில் இருந்து எமது மக்களை பாதுகாக்க ....

Point # 1: ஜெனீவா பிரேரணை பலவீனமாக இருந்தாலும் அதன் நிறைவேற்றத்தினால் ஏற்பட்ட அரசியற் சூழல் தமிழ் மக்களுக்கு பல்வேறு வாய்ப்புகளைத் திறந்து விட்டிருக்கின்றது.

Point #2: கொழும்பின் மீது பீகிங்கின் செல்வாக்கு அதிகரிக்க புதுடெல்லியின் சென்னையைப் போஷித்தலும் அதிகரித்துக் கொண்டே செல்லும். இது தமிழ்த் தேசிய அரசியலுக்கு மிகவும் வாய்ப்பானது.

Point #3: அமெரிக்க- இந்தியக் கூட்டு ஒரு பக்கத்தில் பரப்புரையை மேற்கொள்ளப் போகின்றது. மறுபக்கத்தில் தமிழ்த் தரப்பு சொந்தமாகப் பரப்புரையைச் செய்ய வாய்ப்பு உருவாகப் போகின்றது. இதற்கப்பால் தமிழர் அரசியல் தளங்களும் வலிமையடையப் போகின்றன. தமிழர் அரசியல் தளங்கள் என்பவை மூன்று தான். தாயகம், புலம், தமிழகம் என்பவையே அவையாகும்.

Point #4 : இந்த இடத்தில்தான் அமெரிக்க- இந்தியக் கூட்டின் நலன்களையும், தமிழ்த் தேசிய நலன்களையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்து கூட்டாக பயணமாவதற்கு தமிழ்த் தேசிய சக்திகள் தயாராக வேண்டும்.

Point #5: இங்குதான் தமிழ்த் தலைமையின் ஆற்றல் முக்கியமாகின்றது. அமெரிக்க- இந்தியக் கூட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் இழுபட்டுச் செல்வதாக தமிழ்த் தலைமை இருக்கக் கூடாது. அதற்கு உண்மையில் ஒரு தலைமையே தேவையில்லை. தனது மக்கள் வலிமையினாலும் இராஜதந்திரச் செயற்பாட்டினாலும் சர்வதேச அரசியலுக்குள் மிக இலாவகமாக தமிழர் விவகாரத்தைப் புகுத்தக் கூடிய தலைமையே இன்று தேவை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100532&hl=&fromsearch=1

சரவதேச மன்னிப்புச்சபை போன்றவையால் இவருக்கு ஒரு அகதி நிலை பெற்றுக்கொடுக்க முடியாதா? நாமலுடன் சட்டம் படித்த் ஒரு மாணவன், நாமல் பேராசிரியர்களால் எழுதிக்கொடுக்க பட்ட விடைகளை பரீட்சையின் போது கொடுத்துத்தான் சட்டக்கலூரியில் பீலிக்ஸ்-அர்-டயஸ் 1960 களில் ஏற்படுத்தியிருந்த சாதனையை முறியடித்திருந்தார் என்ற உண்மையை வெளிவிட்டதால் உயிராபத்தை சந்தித்தார். இவரை வெளிநாட்டு நிறுவனங்கள் தாம் காப்பதாக அறிந்தேன்.

சிறிலங்காவில் செயற்படும் அனைத்து மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களுக்கும் இது தெரியப்படுத்தப்படல் வேண்டும்.

தமிழர் நலன்சார் அரசியற் கட்சிகளுக்கும் அறிவித்தல் முக்கியமானது.

வெளிநாட்டு நிறுவனங்கள், ஐ நா சார்ந்த நிறுவனங்கள் என்பவைகளுக்கும் பிரத்தியேகமாக அறிவித்தல் வேண்டும்.

வெளிநாடுகளில் வாழும் தமிழ் ஆர்வரலர்கள் இச் செய்தியினை உரிய இடங்களுக்கு அறிவித்து அப் பெண்ணுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க ஆவன செய்தல் வேண்டும்.

இது தவிர அப் பெண் தனது சொந்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.