Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்கானிஸ்தான்: 10 இடங்களில் குண்டு வெடிப்பு !

Featured Replies

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று 10 இடங்களில் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். பிரிட்டன் மற்றும் அமெரிக்க தூதரகங்கள் அருகில் உயர் அதிகாரிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தபட்டதாக அஙகிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தூதரகத்தின் மீது எவ்வித தாக்குதலும் நடக்கவில்லை என இந்திய தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ஒரே நேரத்தில் 10 இடங்களில் புகுந்த பயங்கரவாதிகள் தொடர்ந்து சில நிமிடங்களில் குண்டுகளை வெடிக்க செய்தனர். துப்பாக்கியால் சுட்டனர். ஆப்கன் பார்லி., மீதும் ராக்கெட்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் வீசப்பட்டன.

நேட்டோ படைகள் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலை அடுத்து ஆப்கனில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது. இந்த சம்பவத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. இன்றைய தாக்குதலுக்கு தலிபான் இயக்கத்தினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இதற்கிடையில் ஜலால்பாத்தில் தற்கொலை படையை சேர்ந்த ஒருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

http://tamil.yahoo.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2%E0%AF%8D-105400311.html

  • தொடங்கியவர்

ஆப்கான் தலைநகர் காபூலில் திடீரென நுழைந்த தலபான்கள் தற்கொலைத் தாக்குதல்களை நடாத்தியுள்ளார்கள். முதலாவதாக தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தலைநகரில் உள்ள கோட்டல் ஒன்றிற்குள் நுழைந்து, அங்கிருந்தபடியே சரமாரியான தாக்குதல்களை நடாத்தினார். இந்த கோட்டல் ஈரானிய தூதராலயத்திற்கும், அதிபர் மாளிகைக்கும் அருகில் உள்ளது. இவர் அங்கு சென்றதும் பெரும் புகை மூட்டம் கோட்டலில் இருந்து கிளம்பியது. அடுத்து ரஸ்ய தூதரலயம் கிரனைட் தாக்குதலுக்கு இலக்கானது. மறுபுறம் ஜலலாபாத்தில் இருந்த விமான நிலையம் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது. இவருடைய தாக்குதல்களில் ராக்கட் தாக்குதல்கள் முக்கியம் பெற்றது.

காபூலில் உள்ள வெளிநாட்டு தூதராலயங்கள், பாராளுமன்றம் என்பன பல்வேறு தாக்குதல்களுக்குள் சிக்குண்டுள்ளன. முதலாவதாக ஜேர்மனிய, பிரிட்டன் தூதராலயங்கள் மீது பெருமளவு மோட்டார் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. ஜேர்மனிய தூதராலயம் சேதமடைந்துள்ளதாக சற்றுமுன் ஜேர்மனி தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதராலயத்தை நோக்கி தாக்குதல்கள் தொடர்ந்தவண்ணமுள்ளன. அதுபோல பாராளுமன்றத்திற்குள் பல குழுக்களின் தாக்கதல் நடாத்தியுள்ளன. அனைத்தையும் தாமே நடாத்திக் கொண்டிருப்பதாக தலபான்கள் தெரிவித்தார்கள்.

மொத்தத்தில் காபூல் நகரமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வரும் 2014ல் நேட்டோ படைகள் ஆப்கானை விட்டு வெளியேறும் என்ற பேச்சுக்கள் நடைபெறும்வேளையில் தலபான்கள் இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளமை பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.

http://www.alaikal.com/news/?p=102819

Edited by akootha

  • தொடங்கியவர்

தாக்குதல் நடாத்திய தலபான்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்

நேற்று ஆப்கான் காபுல் நகரின் கண்களுக்குள் சுமார் 18 மணி நேரம் விரலை விட்டு குடைந்தெடுத்த தலபான் பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக ஆப்கான் போலீசாரும், அரசும் இன்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

ஆப்கான் தலைநகருக்குள் நுழைந்த தலபான் தற்கொலைப் படையினர், அந் நாட்டின் பாராளுமன்றம், வெளிநாட்டு தூதராலயங்கள் உட்பட மேலை நாடுகளின் அத்தனை இலக்குகளையும் தாக்கி அழிக்கும் பணிகளை முன்னெடுத்தன. தாக்குதல் ஆரம்பித்தபோதே சுமார் 16 பேர்வரை மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவித்தன. ஆனால் மேலை நாடுகளில் வெளியான செய்திகள் தாக்குதல்களைத் தெரிவித்தாலும் சேத விபரங்களை வெளியிடாது அடக்கி வாசித்துக் கொண்டிருந்தன. இன்று காலையில் அனைத்து தலபான்களும் கொல்லப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தகவல் வெளியிட்டன.

சேத விபரங்களை வெளியிட்டால் மேலை நாடுகளில் பலத்த எதிர்ப்பு கிளம்பும், ஆப்கான் போர் பற்றிய விமர்சனங்கள் இரட்டிப்பாகும் என்பது தெரிந்ததே. அதே நேரம் இந்தத் தாக்குதலை முறியடிக்க நேட்டோவின் வான் படைகளும் துணைக்கு வரவழைக்கப்பட்டிருந்தமை மட்டும் பிரலாபித்து பேசப்படுகிறது.

மேலை நாடுகளின் முக்கிய வல்லரசுகள் அனைத்தினதும் தூதராலயங்கள் சேதமடைந்துள்ளன. அத்தோடு தலபான்களின் பழைய விரோதியான ரஸ்ய தூதராலயமும் தாக்குலுக்குள்ளானது. முன்னர் தற்கொலைப் படையினர் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குள் நுழைந்து நடாத்திய தாக்குதல் போல இதனுடைய வியூகம் இருந்தது கவனிக்கத்தக்கது.

ஆப்கானில் நுழைந்த மேலை நாடுகள் வரும் 2014ல் அங்கிருந்து வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளன. இது குறித்த பேச்சுக்கள் சென்ற வாரம் நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசனுக்கும், ஆப்கான் அதிபர் ஹர்மீட் கார்சாய்க்கும் இடையில் நடந்துள்ளன. வரும் 2014 ல் ஆப்கானுக்கு புதிய அதிபர் வரவிருக்கிறார், அவரால் பதவிக்கு வந்தவுடன் தலபான்களை எதிர் கொள்ள முடியாது ஆகவே நேட்டோ படைகள் மேலும் சில காலம் நிலை கொள்ள வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

நேற்று சிறிய ரக இயந்திரத் துப்பாக்கியை தூக்கி ஆப்கான் போலீசார் போர் நடாத்தும் இலட்சணத்தை மேலை நாட்டு ஊடகங்கள் காட்டின. அவர்களுடைய திறமை சிரிப்பார் சிரிக்கும்படியாக இருந்தது. பழைய தேவர்; பிலிம்ஸ் படங்களில் ; எம்.ஜி.ஆரை சுடப்போகும் நம்பியார் அவரைச் சுடாமல் மண் சட்டிக்கு சுடுவதுபோல ஆப்கான் போலீசாரின் உடல் மொழி இருந்தது.

இந்த நிலையை அவதானித்துத்தான் தலபான்கள் சரியான தருணத்தில் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள். இந்தத் தாக்குதலானது மேலை நாடுகளுக்கு பலத்த நெருக்கடியை ஏற்படுத்த வகுக்கப்பட்ட வியூகமாக இருக்கிறது. ஆப்கானில் இருந்து நேட்டோ வெளியேறினால் ஈரான், வடகொரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அது பலத்த சிக்கலாக மாறும். எனவே நேட்டோவை ஆப்கான் சகதிக்குள் சிக்கவைக்க வேண்டிய தேவை எதிரணிக்கு இருக்கிறது. மேலை நாடுகளை மேலும் பொருளாதார மந்தத்திற்குள் சிக்குப்பட வைக்க அது அவசியமாகவும் உள்ளது. இந்த விவகாரத்தின் சூத்திரதாரி பின்லேடனோ, ஓமர் முல்லாவோ அல்ல, அதற்கு அப்பால் மறைந்துள்ளது தெரிகிறது.

தலபான்களின் தாக்குதல் மிகப்பெரிய இராஜதந்திரப் பின்னணியில் நடந்துள்ளதாகவே மேலை நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேட்டோ அமைதிக்காக எடுத்த அத்தனை நடவடிக்கைகளையும் தகர்ப்பதற்கு தலபான்கள் எடுத்த முயற்சியே இந்தத் தாக்குதல் என்று டேனிஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லி சுவிண்டேல் கூறியுள்ளதை இங்கு அவதானிக்க வேண்டும்.

கேள்விகள்…

ரஸ்ய தூதராலயத்தை ஏன் அவர்கள் தாக்கினார்கள்… இது முதல் கேள்வி..

அதுபோல சீன தூதராயத்தை ஏன் தாக்கவில்லை.. இது இரண்டாவது கேள்வி.

நேற்றய 18 மணி நேர தலபான்களின் தாக்குதல்களின் மர்ம முடிச்சு இந்த இரண்டு கேள்விகளுக்குள்ளும் முயங்கி நிற்கிறது அம்ம.. என்க..

http://www.alaikal.com/news/?p=102897

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.