Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்திரைப் புத்தாண்டில் தனிமைப்படுத்தப்பட்ட மகிந்த ராஜபக்‌ஷ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mahinda_Oil-100x100.jpg

இம்முறை சித்திரைப் புத்தாண்டு அனுஷ்டானங்களின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தனிமைப்படுத்தப்பட்டதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியில் அமர்ந்த பின்னர் வழமையாக தங்காலை கால்டன் இல்லத்தில் அல்லது மெதமுலன இல்லத்தில் நடைபெறும் புத்தாண்டு அனுஷ்டானங்களில் அரசாங்கத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் தரப்பின் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பெரும்பாலும் பங்கேற்பர்.

எனினும், இம்முறை புத்தாண்டு அனுஷ்டானங்களில் அரசாங்கத்திலுள்ள ஜனாதிபதிக்கு நெருக்கமான அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரே கலந்துகொண்டுள்ளனர்.

13ஆம் திகதி இரவு தங்காலை கால்டன் இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டு அனுஷ்டானங்களில் மகிந்தவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்‌ஷவைத் தவிர, அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட சிலரே பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், 15ஆம் திகதி காலை ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற எண்ணெய்த் தேய்க்கும் நிகழ்வில், ஐ.தே.கவிலிருந்து அரசாங்கத்தில் இணைந்துகொண்ட தெஹிவளை – கல்கிஸ்ஸ நகர சபைத் தலைவர் தனசிறி அமரதுங்க உள்ளிட்ட சிலரே பங்கேற்றிருந்தனர்.

அரசாங்கத்திலுள்ள முக்கிய, சிரேஷ்ட அமைச்சர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மீதுள்ள அதிருப்தி இந்தப் புத்தாண்டில் வெளிப்பட்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

http://www.saritham.com/?p=57394

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.