Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா தொடர்பான ஸ்டீபன் ராப்பின் அறிக்கை – மனிதஉரிமை அமைப்புகள் அதிருப்தி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Stephen-J.-Rapp-100x90.jpg

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ராப் சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

ஸ்டீபன் ராப் தலைமையிலான பூகோள குற்றவியல் நீதிப் பணியகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையில், நல்லிணக்க ஆணைக்குழு பதிலளிக்கத் தவறிய நம்பகமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் சுதந்திரமான விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இந்தப் பரிந்துரையை கடுமையாக விமர்சித்துள்ள அனைத்துலக மன்னிப்புச்சபை, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்கா தொடர்பான வல்லுனர் ஜிம் மக் டொனால்ட்,“போர்க்குற்றங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மனிதஉரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், சிறிலங்காவின் நீண்டகால வரலாற்றில் உண்மையான பொறுப்புக் கூறுதலுக்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா நீதியை வழங்கும் என்று இனிமேலும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, இருதரப்பும் மேற்கொண்ட மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு முதற்படியாக அனைத்துலக சுதந்திர விசாரணைக்குழுவை உருவாக்க வேண்டும்“ என்று கூறியுள்ளார்.

அதேவேளை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகமும் அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஐ.நா நிபுணர்குழுவின் பரிந்துரைகளின்படி, சுதந்திரமான அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்ள் நடத்தப்பட வேண்டும் என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

அத்துடன் அமெரிக்காவைத் தளமாக கொண்ட தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஸ்டீபன் ராப் சமர்ப்பித்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

http://www.saritham.com/?p=57386

ஆதரவு மற்றும் கண்டங்கள் எல்லாத்தையும் முடிச்சுப்போட்டு சொல்லுங்கோ பிளீஸ்....

முப்பது வருசப் போராட்டத்தில நாங்கள் காணாத கண்டன அறிக்கைகளா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.