Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழு: புதிய நாடுகளை வளைத்துப் போட சிறிலங்கா முயற்சி! - களத்தில் மகிந்த!

Featured Replies

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழு: புதிய நாடுகளை வளைத்துப் போட சிறிலங்கா முயற்சி! - களத்தில் மகிந்த!!

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத் தொடரில் புதிதாக அங்கத்துவம் பெறும் நாடுகளை தமது பக்கம் வளைத்துப் போடும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இதற்கான முதற்கட்டமாக தற்போதிலிருந்தே இராஜதந்திர மட்டத்தில் காய்நகர்த்தல்களை முன்னெடுக்க சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன் ஓர் அங்கமாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே நேரடியாகக் களத்தில் இறங்கிப் புதிதாக அங்கத்துவம் பெறும் நாடுகளுக்கு விஜயம் செய்து, அந்நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக அறியமுடிகின்றது.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத் தொடரின் போது தமக்கு எதிராக மீண்டும் பாதகமான நிலைமைகள் ஏதும் ஏற்படுமாயின் அதனைச் சமாளிப்பதற்கு சிறிலங்காவுக்கு அங்கத்துவ நாடுகளின் உதவி தேவைப்படுகின்றது.

ஆனால், 19வது கூட்டத் தொடரில் சிறிலங்கா மீதான தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த சீனா, ரஷ்யா, கியூபா, பங்களாதேஷ், சவூதி அரேபியா மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகளுக்கு 2012ஆம் ஆண்டுடன் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துவக் காலம் நிறைவடைகின்றது.

எனவே, ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கான செல்வாக்கு பலவீனமடைந்து ஆதரவு வீதம் வீழ்ச்சியடையும் நிலை ஏற்படலாம். இத்தகையதொரு நிலை ஏற்படுமாயின் சிறிலங்கா சர்வதேச பிடியில் இருந்து மீண்டெழ முடியாதவாறு சிக்கிவிடும்.

இந்த அபாயகரமான நிலையை உள்ளூர அறிந்து வைத்துள்ளமையாலேயே சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் புதிதாக அங்கத்துவம் பெறும் நாடுகளை வளைத்துப் போடுவதற்கு முயற்சிக்கின்றது.

இதற்கான நடவடிக்கைகளைக் சிறிலங்கா அரசாங்கம் தற்போதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது என்றும், இந்தப் புதிய வியூகத்திற்கிணங்க சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்வார் என்றும் இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அடுத்த ஜெனிவாக் கூட்டத் தொடரின் போது (2013) விசேட அறிக்கை ஒன்றை விடுக்கவுள்ளார். இவ்வறிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் தனது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள், மனித உரிமைகள் விவகாரங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், ஜெனிவாத் தீர்மானத்துக்கிணங்க கொழும்பு செயற்பட்டுள்ளதா என்பது உட்பட முக்கிய பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் எனத் தெரியவருகின்றது.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இந்த மீளாய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே சர்வதேச சமூகம் சிறிலங்கா விவகாரம் குறித்தான தமது அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கும் என்றும் கூறப்படுகின்றது.

எனவே, மனித உரிமைகளை மதிக்காது சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் ஜனநாயக விரோதப் போக்கில் செயற்பட்டு சர்வதேசத்தின் கோரிக்கைகளை நிராகரிக்குமானால், மேலும் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என மேற்குலக இராஜதந்திரிகள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் தற்போது அங்கம் வகிக்கும் 47 நாடுகளுள் 18 நாடுகளுக்கு இந்த வருடத்துடன் (2012) அங்கத்துவக்காலம் நிறைவடைகின்றது.

எனவே, அந்த வெற்றிடத்துக்கு புதிய நாடுகளுக்கு அங்கத்துவம் வழங்கப்படும். பங்களாதேஷ், பெல்ஜியம், கெமரூன், சீனா, கியூபா, ஜிபுட்டி, ஹங்கேரி, ஜோர்தான், கிரிகிஸ்தான், மெக்ஸிகோ, நைஜீரியா, நோர்வே, ரஷ்யா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு இவ்வாறு அங்கத்துவ காலம் நிறைவடைகின்றது.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை அங்கத்துவ நாடுகள் மாற்றப்படுவது வழமையாகும்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=b6ac3430-d659-47f9-b63e-ea0c4164aeb5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.