Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? ஜோதிட ரீதியாக ஒரு சூத்திரம்

Featured Replies

உங்கள் வாழ்க்கையில் , நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? ஜோதிட ரீதியாக ஒரு எளிதான சூத்திரம் இருக்கிறது...

ஒவ்வொருவருக்கும் பிறந்த லக்கினம் , ராசி ஒன்று இருக்கிறது... அந்த வீட்டிற்கு நவ கிரகங்களில் ஒருவர் அதிபதி யாக இருப்பார். அது போக நடப்பு தசா , புத்தி என்று ஒன்று இருக்கிறது...

அந்த அந்த கிரகங்களையும், அவற்றின் தேவதைகளையும் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அதன் பிறகு பாருங்கள்.. உங்கள் வாழ்க்கை எவ்வளவு அருமையாக இருக்கிறது என்று..

உதாரணத்திற்கு, உங்களுக்கு விருச்சிக லக்கினம் , மகம் நட்சத்திரம் , என்று வைத்துக் கொள்வோம்.. சுமார் 40 வயது வரும்போது ராகு தசை உங்களுக்கு நடக்கும்.

விருச்சிக லக்கினத்திற்கு அதிபதி செவ்வாய் - அவருக்கு உரிய தேவதை முருக கடவுள்.....

மகம் நட்சத்திரம் - அதிபதி - கேது - தேவதை : விநாயக பெருமான். ராசி : சிம்மம். ராசி நாதன் - சூரிய பகவான்.

நடக்கும் தசை - ராகு - அதி தேவதை - துர்க்கை அம்மன்.

( அதி தேவதைகள் பற்றிய - நமது முந்தைய கட்டுரைகளை refer செய்ய இங்கே கிளிக்கவும் )

நட்சத்திர திருத்தலங்கள் - கட்டுரையை வாசிக்க கிளிக் செய்யவும்

உங்களுக்கு எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் .... உடனடி தீர்வு கிடைக்க , வாழ் நாள் முழுவதும் , செவ்வாய் கிழமைகளில் நீங்கள் முருக கடவுளுக்கு பாலாபிசேகம் , பாத யாத்திரை சென்று வர மலை போல் வரும் பிரச்னை கூட தூள் தூளாகும்.....

தினமும் காலை - சூரிய உதயத்திற்கு முன் எழுங்கள். சூரிய பகவானை நீங்கள் வரவேற்க வேண்டும். அவர் உங்களை வரவேற்க கூடாது..

அன்றாடம் நீங்கள் விநாயகரை வணங்கி வேலையை தொடங்குவது நல்லது..

உங்களால் விநாயகர் கருணையை மனதார உணர முடியும்...

(அஸ்வினி, மகம். மூலம் நட்சத்திரம் இவற்றில் பிறந்தவர்கள் உங்களை அறியாமல் நீங்கள் , விநாயகரை வணங்கினாலும் உங்களுக்கு விரைவில் பலன்கள் கிடைப்பதை உணர்ந்து இருப்பீர்கள்.. )

இப்போது நடக்கும் தசை ராகு தசை. .. ராகு என்ன செய்யும்?ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை . கெடுப்பாரும் இல்லை என்பார்கள்.

ராகு அப்படி என்னதான் செய்யும்..? புலன் ஆய்வுக்கு , கம்ப்யூட்டர் , ஆராய்ச்சி, வெகு ஜன தொடர்பு ( ஹோட்டல் reception , LIC Agent ) என்று அனைத்துக்கும் அதிபதி. ... உங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் பணவரவு இருக்கும்.. நோகாமே நோன்பு எடுக்கலாம். . நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு.. பணம் கொழிக்கும்..( நல்லது தானே..!)

அதே நேரத்தில் பெண்களால் சர்வ சாதாரணமாக பிரச்சினைகள் வரும்... நீங்களே ஒதுங்கி இருந்தாலும் .. உங்களையே தேடி வருவார்கள்... உங்களால் 'பலான' விசயங்களில் இருந்து ஒதுங்க முடியாது.. பெண்களிடம் செல்ல வேண்டி வரும்.. அல்லது குறைந்த பட்சம் .. வீடியோ , கம்ப்யூட்டர் என்று படம் பார்ப்பதிலேயே பொழுதைக் கழிக்க வேண்டி வரும்... இப்படி நீங்கள் இருக்கும் போது ... வரும் பெண்களும் உங்களுக்கு பேரழகியாக தெரிய வரும்.. விட முடியுமா...?? வரை முறை தெரியாத அளவுக்கு விளையாட்டு தொடரும்.. பிறகு என்ன... வீட்டில் தெரிய வர.. அதனால் தொல்லைகள் வர... கொஞ்சம் கொஞ்சமாக பிரச்னை பூதாகரமாகி வழக்கு, கோர்ட், விவாக ரத்து.. ... ஈஸ்வரா...!!

கேட்ட நேரம் இருக்கும் வரை ... அந்த ஒண்ட வந்த பிடாரி தான் உங்களுக்கு அவ்வளவு உசத்தியாக தெரியும்... அவளுக்காக நீங்கள் சகலத்தையும் துறக்க தயார் ஆகி விடுவீர்கள்.. உங்களுக்கு அது ஒரு சொகுசான வாழ்வு என்று தோன்றும்.. ஆனால் மகா கேவலமான வாழ்வு என்று தோன்றாது..

இதில் கோட்சார ரீதியாக ராகு ஜென்மத்தில் வந்தாலோ ... இன்னும் நிலைமை அசிங்கமாகும்.. நீங்கள் இருக்கும் ஊரில், அல்லது தெருவில் அல்லது , உங்கள் குடும்ப வட்டாரத்தில் ... நீங்கள் ஏதாவது ஒரு பெண் விஷயத்தில் அசிங்கப்பட்டு , தலை குனிய வேண்டி வரும்...

இல்லையா... கோடிகளில் புரள வைத்து விட்டு , திடீர் என்று அதல பாதாளத்தில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கும்..

இது பொதுவான பலன். ஆனால் 10 க்கு 9 பேருக்கு இது பொருந்தும்.

இதைப் போல் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு காரகத் துவம் இருக்கிறது.. அவர்கள் அமர்ந்த வீடு, (நட்பு , பகை) நட்சத்திர சாரம், இணைந்து இருக்கும் கிரகங்கள், பார்வை பெறும் கிரகங்கள் , என பல வகைகளில் பலன்கள் கிடைக்கும்......

எந்த ஒரு மனிதனுக்கும், ராகு, கேது தசை நடக்கும் போது , அவரவர் பூர்வ ஜென்ம புண்ணிய பலன்கள் ... அட்சர சுத்தமாக கிடைக்கும்..

சில குழந்தைகளுக்கு ராகு தசை நடந்தால், அதன் பலன் மொத்தமும் பெற்றோர்களுக்கு நடக்கும்...

நல்லதும் உண்டு.. கெட்டதும் உண்டு... ஐயா.. போன ஜென்மத்திலே எப்படி இருந்தேன் னு தெரியலை.. இந்த ஜென்மத்திலே என்ன பண்றது...? நான் தப்பு பண்ணக் கூடாது.. என்ன வழி..?

இந்த கேள்வி உங்களுக்கு தோணுவதற்கே நீங்க பண்ணின ஒரு புண்ணியம் தான் காரணமாக இருக்கும்..

ராகுவுக்கு அதி தேவதை துர்க்கை. ராகுவுக்கு தனியாக கிழமை கிடையாது.. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்கிறது.. ராகு காலம் என்று காலண்டரில் போட்டு இருப்பார்கள்... இந்த ஒன்றரை மணி நேரத்தில் , நீங்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் துர்க்கை அம்மன் ஆலயம் சென்று விடுங்கள். காளியம்மன், மாரியம்மன் என்றும் இருக்கலாம். தினமும் நாள் தவறாமல் செல்ல வேண்டும். அதனால் தான் அருகில் இருக்கும் ஆலயம் என்று சொன்னேன். ஒரு நூறு வருடமாவது பழைய ஆலயமாக இருந்தால் நல்லது. குறைந்த பட்சம் ராகுகாலம் முடியும் கடைசி அரை மணி நேரத்தில் இருங்கள்.

மனதார வழிபடுங்கள்.

நீங்கள் அன்றாடம் வேலைக்கு போக வேண்டி இருந்தால், செல்ல முடியாதே.. என்ன செய்வது?

திருமணம் ஆகி இருந்தால் உங்கள் மனைவியோ, மணம் ஆகா விட்டால் உங்கள் சார்பாக உங்கள் தாயோ செல்லலாம். நீங்கள் வேலைக்கு செல்லாத நாட்களில் கண்டிப்பாக நீங்களே சென்று வர வேண்டும். ஞாயிற்று கிழமை சாயங்காலம் 4 .30 இலிருந்து 6 மணி வரை வரும். Miss பண்ணாதீங்க !!

உங்களால் முடிந்த வரை அபிசேகத்திற்கோ, தினமும் தீபத்திற்கோ , மாலையோ,... இல்லை ... ஒன்றும் முடியவில்லை என்றாலும் .. வெறுமனே சென்றாவது வாருங்கள்.. அம்மன் பார்வை உங்கள் மேல் தெளிவாகப் படும்படி அமருங்கள்.. அதன் பிறகு உங்களுக்கு அந்த அம்மனே எப்படி வழி காட்டுகிறாள் என்று பாருங்கள்... சமயத்தில் ராகு தசை நடப்பவர்களிடம் அம்மன் பேசுவதைக் கூட அவர்களால் உணர முடியும்.. இது எப்பேர்ப்பட்ட அனுபவம்!!.. உங்கள் அத்தனை கோரிக்கைகளும் அற்புதமாக ஈடேறும்.

இதெல்லாம் பண்ணினா என்ன ஆகும்? இப்போ, நம்ம சத்யம் க்ரூப் சேர்மன் - ராமலிங்க ராஜு இருந்தாரே... அவர் இந்த fraud லெ மாட்டாமே இருந்தா எப்படி இருந்து இருப்பார்? எத்தனையோ பேருக்கு வழிகாட்டி... ஆதர்ஷ நாயகன்... லட்சக் கணக்கான ஷேர் ஹோல்டர் க்கு கடவுள்.. இப்படி ஆகிடலாம்.. நீங்களும்.. ஆனா நல்லா விதமா...

வித்தை தெரிஞ்சவருக்கு ராகு தசை ... சந்தனம் ... தெரியாதவங்களுக்கு சாக்கடை தான்.

என்னுடைய அனுபவத்தில் - அம்மனின் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படும் ஆலயங்களை, இடங்களைப் பற்றி இன்னொரு சமயம் (விரைவில்) எழுதுகிறேன்.

samayapuram.gif

இதைப் போல் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு காரகத் துவம் இருக்கிறது.. அவர்கள் அமர்ந்த வீடு, நட்சத்திர சாரம், இணைந்து இருக்கும் கிரகங்கள், பார்வை பெறும் கிரகங்கள் , என பல வகைகளில் பலன்கள் கிடைக்கும்......

இன்னைக்கு நம்ம நாட்டுலே இருக்கிற அத்தனை அரசியல் வாதிக்கும், இந்த வித்தை தெரிஞ்ச ஆஸ்தான ஜோதிடர்கள் உண்டு.. அவங்க சொல்ற படி தெளிவா , எல்லா வேலையும் செஞ்சு கிட்டு .. வெளிலே வேஷம் போட்டுக்கிட்டு போய் கிட்டே இருப்பாங்க .... நம்மள மாதிரி ஆளுங்க ... நாத்திகம் பேசிக்கிட்டு , நமக்கு தோணுற மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்ந்துக் கிட்டு... நமக்கு முன்னே வாழ்ந்த அத்தனை பேரும், முனிவர்களும் , முட்டாள்னு நெனைச்சுக் கிட்டே ... இருந்திட வேண்டியது தான்..

நம்ம நண்பர் ஒருவர் அனுப்பி வைச்சு இருக்கிற மந்திரங்கள் இது. வேலை இன்றி கஷ்டப்படும் அனைவருக்கும் இது ரொம்ப உபயோகமாக இருக்கும்.

இன்னொரு மந்திரம், உங்கள் பண வரவுக்கு ...

வேலை கிடைக்க உதவும் மந்திரம் :

ஸ்ரீஇலட்சுமி கடாட்சம் பெற்று செல்வம் வளரவும்,வேலை கிடைக்கவும் கீழ்க்கண்ட சுலோகத்தை தினமும் காலை 10 முறை ஜபிக்கவும்.

வெள்ளிக்கிழமை மாலைவேளைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி ஸ்ரீஇலட்சுமி பூஜை செய்து 108 முறை ஜபித்துவர விரைவில் வேலைகிடைக்கும்.

ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா/

விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ/

ஹரிப்ரியா தேவதேவீ மஹாலக்ஷ்மீச சுந்தரீ//

Tirupathi%2Bbalaji%2Bvenkatachalapathy+cx.jpg

லட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதியே வரவரத ஸர்வ

ஜனம்மே வசமானய் ஸ்வாஹா!

ஹிருதயாதி ந்யாஸ! நிக்விமோக!

இந்த மந்திரத்தை சிரத்தையுடன் ஜெபித்து வந்தால் , நல்ல தன விருத்தி உண்டாகும்... கடன் தொல்லைகளில் இருந்து முழு விடுதலை கிடைக்கும்.

====================================

நமக்கு வரும் ஜோதிட ஆலோசனை கேள்விகளில், நிறைய அன்பர்களுக்கு ராகு தசை நடப்பதால் , அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் ராகு தசையை உதாரணமாகக் கொண்டு இந்த கட்டுரையை எழுதி இருக்கிறேன்...

அதைப் போல - ஜோதிட பாடங்களை , அரிச்சுவடியில் இருந்து ... அனைவருக்கும் பயன்படும் வகையில் தொடர் கட்டுரைகள் எழுதலாமா என்று எண்ணமும் இருக்கிறது. சில கலைகளை , குருவின் உபதேசம் இருந்தால் தான் கற்றுக் கொள்ள முடியும். ஜோதிடமும் அந்த வகையில் ஒன்று தான். நீங்கள் என்ன தான் புத்தகங்களைப் படித்தாலும், பெரிய ஆராச்சி செய்தாலும், பலன் சொல்ல வராது. தவறுதலாய் சொல்வதற்குப் பதில் சொல்லாமலே இருந்து விடுதல் நல்லது..

நான் ஒன்றும் மேதை இல்லை. ஆனால், அருணாசலமும், என் குருவின் அருளும் எனக்கு நலல வகையில் வழி காட்டும் என்று நம்புகிறேன்... கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கையைப் பிடித்து பயணிக்க இயலும்.. நமக்கு இருக்கும் வேலைப் பளுவினால் , பாடங்கள் கொஞ்சம் தாமதம் ஆகலாம்.... ஆனால் நிறைய அன்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்...

நடைமுறையில் நமக்கு வரும் ஆலோசனை கேள்விகளுக்கு , பதில் அளிக்க தாமதமாகி வருவதால் , உங்களுக்கே கற்று தருவதில் சௌகரியம் என்று தோன்றுகிறது. அதே நேரம், தனிப்பட்ட முறையில் E -மெயில் மூலமும் , சேவை தொடரும். மிக அதிக அளவில் கேள்விகள் வருவதால், சற்று தாமதமாகி வருகிறது. அவ்வளவே. வாசகர்கள் சற்று பொறுத்துக் கொள்ளவும்.

==========================

மேலும் நமது நண்பர் ஒருவர் நமது இந்த இணைய தளத்தில் வரும் கட்டுரைகளைப் படித்து விட்டு, " இணைய தளம் மூலம் - பணம் சம்பாதிப்பது எப்படி ? ஓய்வு நேரங்களில் வருமானம் பார்க்க என்ன வழிகள் ? என்று எழுத சம்மதித்திருக்கிறார். " இது நமது இணைய தளத்தைப் பார்வையிடும் வாசக / வாசகிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

=====================

இன்னொரு நண்பர் - இங்கிலீஷ் ஈஸியா எப்படி பேசுறது? ஆங்கில இலக்கணம் எல்லாம் கத்துக் கொடுக்க ரெடி னு சொல்லி இருக்கிறார். அவருக்கும் மனமார வாழ்த்துக்கள்.... மக்களுக்கு பயனுள்ள வகையில் நமது தளம் இன்னும் பீடு நடை போடும் என்பதில் மகிழ்ச்சி...

======================

இது போக நமது வழக்கமான பல்சுவை தொடர்களும் அடிக்கடி இடம் பெறும்.

இதெல்லாம் பண்றதுனாலே எங்களுக்கு என்ன பிரயோஜனம் னு கேட்குறீங்களா..?

நமக்கு தெரிஞ்சதை நாலு பேருக்கு ஷேர் பண்ணிக்கலாம் தான்.... வேற ஒன்னும் உள்நோக்கம் இல்லை. எனக்கு ஜோதிடம் கத்துக் கொடுத்த குரு என்கிட்டே சொல்றப்போ, "பரிகாரம் னு எதிலேயும் காசு வாங்கிடாதே , அது உனக்கு மகா பாவம்" னு சொல்லி இருக்கிறார்.... இன்னும் கொஞ்சம் மேலே போய், ஜோதிடம் கத்துக் கொடுக்கிறதுக்கே வாங்க வேண்டாம் னு நெனைக்கிறேன்......

காசே இல்லாமே ஏன் இப்படி பண்றோம்..? (உங்க கிட்டே காசு வாங்கி நாங்க என்ன பண்றது.. கடவுள் புண்ணியத்துலே ஏதோ, காசு ... சாப்பாட்டுக்கு குறை இல்லை..) கொஞ்சம் புகழ் கிடைக்கும்.... ஒரு நாலு பேருக்கு புதுசா அறிமுகம் ஆகிக் கிடலாம்... எல்லா ஊர் லேயும் யாரவது ஒருத்தராவது நம்ம வாசகர் இருப்பாங்க..

. ஹா ஹா.. அப்படி எல்லாம் இல்லை. கொஞ்சம் பெரிய அளவிலே பின்னாலே உபயோகமா இருக்கும் னு நினைக்கிறோம், SITE நல்லா பிரபலம் ஆயிட்டா. எல்லா வழிகளும் பின்னாலே சொல்றோம்.... (ofcourse , ஆரம்பிச்ச குறுகிய காலத்தில் , இப்போவே நல்லா பிரபலம் ஆயிடுச்சு.. உலகம் முழுவதிலும் இருந்து மின்னஞ்சலில் வாழ்த்தி வரும் அத்துணை அன்பு உள்ளங்களுக்கும் ... நன்றி.. நன்றி... )

மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள்..

இதை நீங்கள் எப்படி வரவேற்கிறீர்கள் என்பதைப் பொறுத்து முடிவெடுக்கலாம். .... விருப்பம் இருந்தாலும், இல்லை எனிலும் , மறக்காமல் கீழே கமெண்ட்ஸ் பகுதியில் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்.

விரும்புபவர்கள் -- " E -மெயில் - subscribe பண்ணுங்க. " followers லிஸ்ட் லேயும், சேருங்க... இதிலே ரெண்டுலேயும் எவ்வளவுக் கெவ்வளவு response இருக்கோ, அதை வைச்சு முடிவு எடுக்கலாம்.

=====================

எதுக்கு னு கேட்குறீங்களா..? ஆளே இல்லாத கடையிலே யாருக்குங்க டீ ஆத்துறது...?

நேசமுடன் உங்கள் சகா,

ரிஷி.

(ஆசிரியர்)

E - மெயில் : editor @livingextra .com

Read more: http://www.livingext...l#ixzz1st7RKFNk

http://www.livingext.../blog-post.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.