Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் அரசியல் தீர்வுக்கு இந்திய அழுத்தம் அவசியமானது இந்திய நாடாளுமன்றில் சுஷ்மா சுவராஜ் இன்று விளக்க அறிக்கை

Featured Replies

இலங்கையில் அரசியல் தீர்வுக்கு இந்திய அழுத்தம் அவசியமானது

இந்திய நாடாளுமன்றில் சுஷ்மா சுவராஜ் இன்று விளக்க அறிக்கை

இலங்கையில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை மிக விரைவாக எட்டுவதற்கு இந்திய மத்திய அரசு இலங்கை அரசு மீது கடும் அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கை உட்படப் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை இந்திய எதிர்க்கட்சித் தலைவியும் இலங்கை வந்த இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவியுமான சுஷ்மா சுவராஜ் இன்று செவ்வாய்க்கிழமை இந்திய நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றுவார் எனத் தெரியவருகிறது.

அத்துடன் இந்த அறிக்கையை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் நேரில் சந்தித்துக் கையளிக்க உள்ளது என அந்தக் குழுவில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவியான சுஷ்மா சுவராஜ் இன்று காலை சபை ஆரம்பமாகும் வேளையில் இலங்கை பயணம் தொடர்பான விளக்க அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுவார் எனவும் சுதர்தன நாச்சியப்பன் கூறினார்.

இந்த அறிக்கையில் இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது எனவும் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வை விரைவாக எட்டுவதற்கு இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு கடும் அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் இலங்கை வந்த இந்திய நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.என்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் குறிப்பிட்டனர்.

அத்துடன் இந்த அறிக்கையில் இலங்கையில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் மீள்குடியமர்வு, வடக்கில் காணப்படும் இராணுவப் பிரச்சன்னம், இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தல் உட்பட இன்னோரன்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் நேரில் பேசப்படும் எனவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பிரதமரைச் சந்திப்பதற்கான திகதி இன்று முடிவு செய்யப்படும் எனவும் அவர்கள் கூறினர். "இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் அந்த மக்கள் அவர்களது பூர்வீக பூமியில் சுதந்திரமாக வாழக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். ஏனெனில் தற்போது அரசியல் தீர்வை எட்டுவதற்கான தடைகள் தமிழர் சார்பில் இலங்கையில் இல்லை.

எனவே இலங்லை அரசை ஆக்கபூர்வமாக நெறிப்படுத்த எமது அறிக்கை மத்திய அரசுக்கு உதவும்'' எனவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நாச்சியப்பன் குறிப்பிட்டார்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=515931002724218709

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.