Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரின் பின்னான சிறிலங்காவில் உயிரச்சத்தை தொடரச் செய்யும் வெள்ளை வான் கடத்தல்கள்

Featured Replies

சிறிலங்காவில் தொடரப்பட்ட இனப் போர் கால கட்டத்தில் சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து செயற்பட்டவர்களை கடத்துவதற்கான ஆயுதமாகவே பாதுகாப்புப் படையினர் ‘வெள்ளை வானை’ பயன்படுத்துகின்றனர். சிறிலங்காவில் ‘வெள்ளை வான்’ என்பது ஆட்கடத்தலின் குறியீடாகக் காணப்படுகின்றது.

அந்த செய்திக்கட்டுரையின் விபரமாவது,

தன்னை வெள்ளை வான் ஒன்றில் வந்த கும்பல் கடத்திச் சென்றதாக, அண்மையில் சிறிலங்காவில் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் அரசியல் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்ட அரசியற் செயற்பாட்டாளரான பிறேமகுமார் குணரத்னம் இவ்வாறு தனது பயங்கர அனுபவத்தைக் கூறுகின்றார்.

ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில் கொழும்பில் தான் தனது வீட்டுக்கு வெளியில் நின்ற போது ஆறு தொடக்கம் எட்டு வரையான ஆயுததாரிகள் தன்னைக் கடத்திச் சென்றதாகவும், அதன் பின்னர் தான் நான்கு நாட்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, கடத்திச் சென்றவர்கள் ‘பாலியல் ரீதியாக’ தன்னை சித்திரவதைப்படுத்தியதாகவும் சிறிலங்காவில் பிறந்த, அவுஸ்திரேலியக் குடிமகனான பிறேமகுமார் குணரத்னம் விபரிக்கின்றார்.

இவரது கூட்டாளியும், இடதுசாரி மாக்சியவாதியுமான டிமுது அற்றியாகலவும் இவ்வாறு கடத்தப்பட்டு மிக மோசமான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குணரத்னம் தெரிவிக்கின்றார். குணரத்னம் சிறிலங்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர், அற்றியாகல விடுவிக்கப்பட்டார்.

சிறிலங்காவில் தமிழ்ப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தம் மே 2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், காணாமற் போன, கடத்தப்பட்ட பலரைப் போலல்லாது இவ்விருவரும் அவுஸ்திரேலிய அராங்கத்தால் சிறிலங்கா மீது மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர ரீதியான அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டதால்; தற்போது தமக்கு நடந்த சம்பவத்தைக் கூறமுடிகின்றது.

சிறிலங்காவில் தொடரப்பட்ட இனப் போர் கால கட்டத்தில் சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து செயற்பட்டவர்களை கடத்துவதற்கான ஆயுதமாகவே பாதுகாப்புப் படையினர் ‘வெள்ளை வானை’ பயன்படுத்துகின்றனர். சிறிலங்காவில் ‘வெள்ளை வான்’ என்பது ஆட்கடத்தலின் குறியீடாகக் காணப்படுகின்றது.

சிறிலங்காவில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 50 இற்கு மேற்பட்ட மக்கள் கடத்தப்பட்டதாக ஆசிய மனித உரிமைகள் சபை போன்ற பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாகவும் மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

“துப்பாக்கி முனையில் நான் கடத்திச் செல்லப்பட்ட பின்னர் என்னைக் கொலை செய்யப் போகின்றார்கள் என்று நான் நினைத்தேன். அவர்கள் எனது கண்கள் இரண்டையும் இறுகக் கட்டிக் கொண்டார்கள். அத்துடன் எனது மணிக்கட்டுக்கள், கால்கள் ஆகியவற்றை சேர்த்துக் கட்டினர். அதன் பின்னர் என்னை பாலியல் ரீதியாக சித்திரவதைப்படுத்தினர்” என 47 வயதான குணரத்னம், சிறிலங்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்த பின்னர் இவ்வாறு தெரிவித்தார்.

“சிறிலங்கா பாதுகாப்பு படையினரால் கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மிகச் சொற்பமானவர்களே தற்போது உயிர்வாழ்கின்றனர். இந்த வகையில் நான் நல்வாய்ப்பாளனாக உள்ளேன். இது என் தொடர்பான விடயம் மட்டுமல்ல. சிறிலங்காவின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் எவ்வாறு சீரழிந்து உள்ளன என்பதையே இவ்வாறான ஆட்கடத்தல்கள் சுட்டிநிற்கின்றன” என குணரத்னம் மேலும் தெரிவித்தார்.

குணரத்னம் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட அதே இடத்திலேயே தன்னையும் கடத்திச் சென்று சித்திரவதைப்படுத்தியதாக 43 வயதான சிறிலங்கா குடிமகளான அற்றியகெல தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவில் அரசியற் செயற்பாடுகள் எதிலும் ஈடுபடாது வெளிநாடு சென்று வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என என்னைக் கடத்தியவர்கள் என்னிடம் கூறினர். அவர்கள் என்னைக் கொலை செய்யப் போகின்றார்கள் என நான் நினைத்தேன். ஆனால் நீங்கள் கூறியபடி என்னால் நடக்க முடியாது என்றும் நான் சாவதற்கு பயப்படவில்லை என்றும் கூறினேன்” என அற்றியகல தெரிவித்தார்.

இவரது கண்கள் கட்டப்பட்ட பின்னர், இவரைக் கடத்தியவர்கள் கொழும்பின் புறநகர்ப் பகுதி ஒன்றில் இவரைத் தள்ளி விட்டுச் சென்றனர்.

“சிறிலங்காவில் தொடரப்பட்ட ஆயுதப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை மேற்கொண்ட பின்னரும் கூட அங்கே ஆட்கடத்தல்கள் முடிவுக்கு வரவில்லை” என கொங்கொங்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளது.

“சிறிலங்காவில் அண்மைக் காலங்களில் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கங்களும் தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மட்டுமல்ல, தமக்கு எதிராக எழும் அடக்குமுறைகளைக் கூட முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஆட்கடத்தலைப் பயன்படுத்துவது ஒரு மூலோபாயக் கோட்பாடாகக் காணப்படுகின்றது” என ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

ஆட்கடத்தல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ‘நம்பகமான நடவடிக்கையை’ சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே ‘வெள்ளை வான் கடத்தல்கள்’ தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க முடியும் எனவும் அவ் ஆணையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் மீது அண்மையில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரு வாரங்களின் பின்னர் குணரத்னம் மற்றும் அற்றியாகல ஆகிய இருவரும் கடத்தப்பட்டனர்.

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவில் தொடரப்படும் வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்ட போதும், சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் தனது நாட்டில் ஆட்கடத்தல்கள் இடம்பெறுவதைத் தடுக்காது உள்ளது” என தென்னாசிய ஆய்வாளர் குழுவைச் சேர்ந்த குமார் டேவிட் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்கடத்தல்களில் தாம் ஈடுபடவில்லை என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்து வருகின்றது. அத்துடன் இவ்வாறான ஆட்கடத்தல்களை மேற்கொள்ளும் குற்றவாளிகளை சிறிலங்கா காவற்துறையினரால் தடுக்க முடியும் எனவும் எதிர்பார்க்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

“கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகளாக யுத்தம் தொடரப்பட்ட தேசமாக சிறிலங்கா உள்ளது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்” என சிறிலங்காவின் பதில் ஊடக அமைச்சரும் பேச்சாளருமான லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன தெரிவித்துள்ளார்.

“தற்போதும் சில ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களைக் கொண்டுள்ளனர். இதனால் இவ்வாறான ஆயுததாரிகளின் செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதில் காவல்துறையினர் ஈடுபட வேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது” எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவதற்கு மூன்று மாதங்களின் முன்னர் அதாவது பெப்ரவரி 2009ல் கொழும்பில் தனது நண்பர் ஒருவரின் மரணச்சடங்கில் கலந்து கொண்டபோது, தமிழ்ப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரான 52 வயதான N.வித்தியாதரன் ஆயுத தாரிகளால் கடத்தப்பட்டார். இவருடன் ஒப்பிடுகையில் தற்போது கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட குணரத்னம் மற்றும் அற்றியகல ஆகிய இருவரும் நல்வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

வித்தியாதரன் வெள்ளை வான் ஒன்றில் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டு பின்னர், குணரத்னம் ஒப்படைக்கப்பட்ட அதே காவற்துறைப் பிரிவில் கடத்திச் சென்ற ஆயுததாரிகளால் ஒப்படைக்கப்பட்டார். குற்றங்கள் எதுவும் முன்வைக்கப்படாது, வித்தியாதரன் இரு மாத காலம் வரை அதே காவற்துறைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

“நான் கடத்தப்பட்ட சம்பவத்தை அறிந்த போது, பல உலக நாடுகள் சிறிலங்கா மீது அழுத்தம் கொடுத்தன. அவர்கள் என்னை விடுதலை செய்வார்கள் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், அவர்கள் என்னை தாக்கும் போது நான் விரைவில் சாக வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்வேன்” என வித்தியாதரன் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.

வித்தியாதரன் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் தனது ஊடகப் பணியைக் கைவிட்டுக் கொண்டார்.

இதேபோன்று யூன் 2009ல் பத்திரிகையாளரான பொடல ஜெயந்த என்பவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட பின்னர், வீதி ஒன்றில் இறக்கிவிடப்பட்டதுடன், ஊடக செயற்பாட்டிலிருந்து தூர விலகி இருக்குமாறும் எச்சரிக்கை செய்யப்பட்டார். ஜனவரி 2009ல் அடையாளந் தெரியாத ஆயுததாரிகளால் கொல்லப்பட்ட, சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சித்த பத்திரிகை ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் மரணச் சடங்கை முன்னின்று ஒழுங்குபடுத்தி நடாத்தியவர்களில் தானும் ஒருவர் என பொடல ஜெயந்த தெரிவித்திருந்தார்.

சிறிலங்கா காவற்துறையினர் இது வரையில் உயர் மட்டத்தில் செயற்பட்டு கடத்தப்பட்டவர்களுடன் தொடர்புபட்ட எவரையும் கைதுசெய்யவில்லை. அத்துடன் படுகொலை செய்யப்பட்ட, சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை விசாரணை தொடர்பிலும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை..

http://thaaitamil.com/?p=17290

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.