Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் இந்தியாவிற்கு அவசர பயணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kilari.jpg

அமெரிக்காவின் இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் மே மாதம் முதல் வாரமளவில் இந்தியாவுக்கு அவசரப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 5ம் நாள் முதல் 8ம் நாள் வரை பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கான பயணத்தை ஹிலாரி கிளின்ரன், மேற்கொள்ளவுள்ளதாக வொசிங்டனில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் அம்மையார் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது ஹிலாரி, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பில், பிராந்திய மற்றும் பலதரப்பு விவகாரங்கள் குறித்தே கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அதனடிப்படையில் சிறிலங்கா விவகாரம் குறித்தும் கலந்துரையாடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் இந்த எதிர்பார்ப்பு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்படவில்லை.

ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்த பின்னர், இருநாடுகளினதும் உயர்மட்ட தலைவர்களுக்கு இடையில் நடைபெறும் முதலாவது சந்திப்பாக இது அமைகின்றது.

மே மாதம் 18ம் நாள் ஹிலாரி கிளின்ரனை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்திக்கவுள்ள நிலையில், ஹிலாரியின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்நததாகக் கருதப்படுகிறது.

அத்துடன், இந்திய நாடாளுமன்றக் குழு சிறிலங்கா வந்து தமிழ் மக்கள் தொடர்பில் பல தரப்புக்களுடன் ஆராய்ந்து சென்றது. அது தொடர்பில் மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளது. தமிழ் மக்களுக்கான, அரசியல் தீர்வு விடயத்தில் சிறிலங்கா அரசின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியாவுடன் ஆராயும் நோக்கில் ஹிலாரியின் பயணம் அமைந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

http://www.saritham.com/?p=58273

ஹிந்தியக் காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகள் சிங்களப் பயங்கரவாதிகளின் தமிழின அழிப்புக்கு ஆதரவாக தொடர்ந்தும் செயற்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்படுவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.