Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதயன் வெளியிட்ட செய்தி 1,000 கோடி நட்டஈடு கேட்டு டக்ளஸ் நீதிமன்றில் வழக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் வெளியிட்ட செய்தி 1,000 கோடி நட்டஈடு கேட்டு டக்ளஸ் நீதிமன்றில் வழக்கு

duklas2.jpg

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சட்டவிரோதக் கொலைகள், ஆள்கடத்தல்கள் போன்றவற்றில் ஈ.பி.டி.பியும் கருணா குழுவும் ஈடுபட்டன என்று தெரிவிக்கும் அமெரிக்கத் தூதராக இருந்த பிளேக்கின் ஆவணத்தை வெளியிட்டது விக்கிலீக்ஸ் என்று உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டமைக்காகத் தனக்கு 1,000 கோடி ரூபா நட்டஈடு தருமாறு கேட்டு இலங்கை அரசின் பாரம்பரிய, சிறுகைத் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை உதயன் பத்திரிகை சட்டப்படி எதிர்கொண்டுள்ளது. ஜனாதிபதி சட்டத் தரணி விஜயதாச ராஜ பக்ஷவின் வழிகாட்டலில் சட்டத்தரணி ரகுராஜ் நேற்று முன்தினம் பதில் மனுத் தாக்கல் செய்தார். இது தொடர்பான விளக்க அறிக்கையை வரும் ஜூலை மாதத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

உதயன் வெளியிட்ட செய்தியால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மனச்சஞ்சலமும் அவமானமும் ஏற்பட்டுள்ளதால் 1,000 கோடி ரூபா நட்டஈடு கேட்டு அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அமைச்சர் டக்ளஸைப் பற்றி உதயன் பத்திரிகை அவதூறாக எழுதியவை என்று குறிப்பிடப்பட்டுள்ளவை யாவன :-

வடக்கு, கிழக்கில் ஆள்கடத்தல்கள், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், கப்பம் பெறுதல் என்பவற்றில் ஈ.பி.டி.பியினரும் கருணா குழுவினரும் ஈடுபட்டிருந்தனர் என்று அப்போதைய அமெரிக்கத் தூதுவராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

துணைப்படைகளான கருணா குழுவும் ஈ.பி.டி.பியும் ஆள்களைக் கடத்திக் கப்பம் பெறுவதற்குப் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் அனுமதி அளித்திருந்தார் என்று அமெரிக்கத் தூதருக்கு நம்பிக்கையான ஒருவர் தெரிவித்திருந்தார் என்றும் அந்த ஆவணம் கூறுகிறது.

விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து இயங்குபவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை கடத்துவதற்கும் விடுதலைப் புலிகளுடன் சண்டையிடுவதற்கும் கருணா குழுவினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எனப்படும் ஈ.பி.டி.பியினரும் இலங்கை அரசுக்கு உதவிகளை வழங்கி வந்தனர்.

நிதிப் பற்றாக்குறையால் துணைப் படையினருக்கான நேரடியான கொடுப்பனவுகளை ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான இலங்கை அரசு நிறுத்திவிட்டது. பதிலாகக் கருணா மற்றும் ஈ.பி.டி.பியினர் பணத்துக்காக ஆள்களைக் கடத்தியதை அது கண்டும் காணாது இருந்தது.

இப்போதைய அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் துணைப் படைகளுடன் உடன்படிக்கை ஒன்றுக்கு வந்தது. அதனடிப்படையில் ஈ.பி.டி.பி. மற்றும் கருணா குழுவினர் தமிழ் வர்த்தகர்களிடம் இருந்து கப்பம் பெறுவதற்கு பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அனுமதி அளித்தார் என்று அந்த நபர் குறிப்பிட்டார்.

ஈ.பி.டி.பியும் கருணாவும் தமிழ் இனக் குழுமத்தின் மத்தியிலிருந்தே வந்தவர்களாக இருந்தபோதும் ஏனைய தமிழர்களுக்கு எதிராகவே அவர்களால் அனைத்துக் குற்றங்களும் அனைத்துச் சமயங்களிலும் நிகழ்த்தப்பட்டன.

ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் துணையுடன் கருணாவால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கிறிஸ்மஸ் தினத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தாம் நம்புகிறார் எனவும் அந்நபர் தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) விடுதலைப்புலிகளுக்கு எதிராக இயங்க ஆரம்பித்தது. அதிலிருந்து பிரிந்த ஒரு பகுதியினர், டக்ளஸ் தேவானந்தா 1994ல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானதைத் தொடர்ந்து அவரது தலைமையில் ஈ.பி.டி.பியாக இயங்க ஆரம்பித்தனர். அவர்கள் அரசுடன் இணைந்திருந்தனர்.

ஓர் அரசியல் கட்சியாக ஈ.பி.டி.பி. பதிவு செய்யப்பட்டிருந்தபோதும் இராணுவத்தின் அனுமதியுடன் ஈ.பி.டி.பி. இன்னமும் அச்சமூட்டும் ஒரு துணைப் படையாகவே உள்ளது. அதிகாரபூர்வமற்ற வகையில் யாழ். குடாநாட்டின் ஆதிக்கங்களைக் குறிப்பாக தீவுப் பகுதிகளின் அதிகாரங்களை அது தன்னகத்தே வைத்துள்ளது.

பல்வேறு தரப்புகளின் கருத்துப்படி, இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்குவதன் காரணத்தினால் கடத்தல்கள், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், கப்பம் அறவிடுதல் போன்றவற்றில் தண்டிக்கப்படுவோம் என்கிற எந்தவிதப் பயமும் இன்றி ஈ.பி.டி.பியினால் ஈடுபட முடிகிறது. யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியினர் நடத்திய சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் குறித்து அந்நபர் எம்மிடம் விவரித்தார்.

ஒருவரைக் கொலை செய்வதற்கு ஈ.பி.டி.பியினர் தீர்மானித்துவிட்டால் அது பற்றி முதலில் இராணுவத்தினருக்குத்தான் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். பொதுவாகச் சொன்னால் யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு சந்தியிலும் படையினரின் நிலைகள் இருக்கின்றன. அனுமதிக்கப்பட்ட ஒரு நேரத்தில் எல்லாப் படையினரும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்வது வழமை. அந்தச் சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வரும் முகமூடி அணிந்த நபர்கள் தாம் நினைத்த நபர்களைக் கொன்றுவிட்டுத் திரும்பிவிடுவார்கள்.

இவ்வாறு உதயனில் எழுத்தப்பட்டிருந்ததாலேயே தனக்கு அவதூறு ஏற்பட்டுள்ளதாக டக்ளஸ், நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியில் உண்மை இல்லை என்றும் உண்மையான காரணங்களைக் கண்டறியாத வகையிலும் உறுதிப்படுத்தாத வகையிலும் தீய நோக்கத்துடன் உதயன் தனக்கு எதிராகச் செயற்பட்டுள்ளதாகவும், இதனை விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்து டக்ளஸை அவதூறுக்கு உள்ளாக்கி உள்ளார்கள் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக 1,000 கோடி ரூபா நட்டஈடு மற்றும் வழக்குத் தொடுக்கப்பட்ட தினத்திலிருந்து தீர்ப்பு வழங்கப்படும் தினம் வரையில் அதற்கான வட்டி, வழக்குச் செலவு ஆகியன தனக்குத் தரப்பட வேண்டும் என்றும் டக்ளஸ் தனது மனுவில் கோரி இருக்கிறார்.

http://www.vidikural.com/2012/04/29/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-1000-%E0%AE%95/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.