Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிரந்தர அசியல் தீர்வை பெறுவரை தமிழ் மக்கள் பொறுமை காக்க வேண்டும்: சீ.யோகேஸ்வரன்

Featured Replies

எமது நாட்டை பொறுத்தவரை நாங்கள் சிறுபான்மை இனம் ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் சிறுபான்மை இனத்துக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள் இந்நாட்டில் எமக்கு வழங்கப்படவில்லை. நாம் கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக எங்களது உரிமைக்காக எமது மக்கள் பல உயிர் தியாகங்களை புரிந்துள்ளார்கள் கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்தக்கு மேல் உயிர்களை இழந்துள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வாகரை பிரதேசத்தில் உள்ள கதிரவெளி கிராமத்தில் நடாத்திய மக்கள் சந்திப்பு ஒன்று கூடலில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

கதிரவெளி மக்கள் சந்திப்பு ஒன்று கூடலில் அவர் தொடர்ந்து கூறியதாவது!

அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் பலர் அங்கவீனர்களாகவும், விதவைகளாகவும், தபுதாரர்களாகவும், அநாதைகளாகவும் மாறியுள்ளனர். இருப்பிடங்கள், சொத்துக்கள், பொருளாதாரம், கல்வி, கலாசாரம் உட்பட பலவற்றை இந்நாட்டில் இழந்துள்ளோம். இவ் இழப்புக்களை அனுபவித்த எமது இனம் தான் எதிர்பார்த்த இலக்கை அடைந்தே ஆக வேண்டும்.

இதற்காகவே எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் எதிர்பார்த்த இலக்கை நோக்கி ஒன்றிணைந்த இலங்கையை வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் ஒரு சிறந்த அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையில் எமக்கு வழங்க வேண்டிய சகல அதிகாரங்களையும் கொண்ட நிரந்தர அரசியல் தீர்வை பெறும் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. எங்களது செயற்பாட்டுக்கு ஆதரவு தரவேண்டிய கடமை எம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு உண்டு. ஆகவே பொறுமையை பாதுகாத்து எங்களது நோக்கத்தை நிறைவேற்ற எங்களுடன் என்றும் துணையாக எமது தமிழ் மக்கள் அனைவரும் நிற்க வேண்டும்.

இன்று சில அரசியல் வாதிகள் கிழக்கு மட்டும் தனியாக இருக்க வேண்டும். எங்களுக்கு வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என பிரதேசவாதம் பேசி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நோக்காது தமது சுயநல அரசியல் தேவையை நிறைவேற்ற முனைகின்றனர். இவ்விடயத்தில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

இவர்கள் தாங்கள் தான் அபிவிருத்தி செய்யவர்கள் என காட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்ச்சிக்கின்றனர். சுனாமியில் எம்மக்கள் பாதிக்கப்பட்ட பின் உதவியது, பல கட்டடங்கள் உருவானது. அவ்வேளை இவ் அரசியல் வாதிகள் எவரும் இருக்கவில்லை. அப்போது பல பிரமாண்டமான கட்டடங்கள், பாடசாலைகள், வீடுகள் கட்டப்படவில்லையா? வீதிகள் பாலங்கள் போடப்படவில்லையா?

இன்று அவ்வாறே வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை புனரமைக்கவும், பாலங்களை தாபிக்கவும் வெளிநாட்டு அரசாங்கங்கள் கூடிய நிதிகளை வழங்கியுள்ளது. சில மானியத்திலும், சில கடன் அடிப்படையிலும் வெளிநாட்டு அரசாங்க நிதிகளின் கட்டடங்களுக்கு, பாலங்களுக்கு, வீதிகளுக்கு, பாடசாலைகளுக்கு கல் வைப்பதும், திறப்பதுமே அரசாங்கத்தினதும் அவர்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் அரசியல் வாதிகளினதும் செயற்பாடு அதை பார்த்து நீங்கள் ஏமாறாதீர்கள்.

என்னை இதே கதிரவெளியில் வைத்து வேட்டி உடுப்பவர், கோயில்களில் மணி ஆட்டுபவன் என விமர்சித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தமது அரசியல் இலாபம் கருதி வேட்டி உடுத்து, தான் செல்லும் சில கோயில்களில் பூசர்களின் மணியை தான் வாங்கி அடிக்கின்றார். பார்ப்பதற்கும், கேட்பதற்கும் நகைச்சுவையாக உள்ளது.

எனவே எம்மக்களே நீங்கள் என்றும் உணர்வு மிக்க தமிழர்களாக இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்

http://www.seithy.com/breifNews.php?newsID=59380&category=TamilNews&language=tamil#.T54efv3l03o.facebook

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.