Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலையில் கைதான குகதாஸை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவும் :நந்தகுமார் கடிதம் .

Featured Replies

கைது செய்யப்பட்டுள்ள திருகோணமலை புனித சவேரியார் பாடசாலை ஆசிரியர் ரி. குகதாஸை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை நகர சபை உறுப்பினர் சி. நந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஆசிரியர் குகதாஸ் (வயது 47) மேற்படி வித்தியாலயத்தில் ஆங்கிலப்பாடம் கற்பித்து வந்தார். கடந்த 23 ஆம் திகதி பொலிஸõரினால் அழைக்கப்பட்ட இவர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரணமில்லாத இவரது கைது காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள. இவரது மனைவியும் ஒரு ஆசிரியராவார். அவருக்கு சிறிய குழந்தையும் உள்ளது. இவரது கைது காரணமாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் விசனமடைந்துள்ளனர்.

இவர்களது நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இவரை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

மேற்படி ஆசிரியர் புனித சவேரியார் மகா வித்தியாலத்தில் க.பொ.த. (சா/த) தரம் 10, 8, 9 மாணவர்களுக்கு ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர் என சக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 23 ஆம் திகதி நண்பகல் 11.30 மணியளவில் பாடசாலைக்கு வந்த திருகோணமலைப் பொலிஸார் மாலை 3.30 மணியளவில் பிரதான பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பணித்துச் சென்றனர். இதனையடுத்து குறித்த ஆசிரியர் பொலிஸ் நிலையம் சென்றவேளை பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் அவரது மனைவி மாலை 7.30 மணியளவில் பொலிஸ் நிலையம் சென்றபோதும் விடுவிக்கப்படவில்லை.

மறுநாள் காலை 9.30 மணியளவில் மீண்டும் பொலிஸ் நிலையம் சென்றவேளை அவரை சேனகபுர புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன் அதற்கான சிங்களத்திலான கடிதமொன்றையும் வழங்கியதாக மனைவியும் உறவினர்களும் தெரிவித்தனர்.

இதேவேளை, இவரது விடுதலை வேண்டி மனைவி, சேனகபுர உள்ளிட்ட பல பாதுகாப்பு பணிமனைகளுக்கும் சென்று அவரது விடுதலைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றார்.

குறித்த ஆசிரியருடன் 300 இற்கும் அதிகமானவர்கள் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக நகர சபை உறுப்பினர் நந்தகுமார் தெரிவிக்கின்றார்.

http://thaaitamil.com/?p=17482

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.