Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒட்டுக்குழு ஈபிடிபியிடம் கையேந்தியது சுதந்திர ஊடகக்குரல் – யாழ். ஊடகவியலாளர்கள் கண்டனம்! (படங்கள்)

Featured Replies

சர்வதேச ஊடக தினத்தைக் கொண்டாடுவதற்காக இருபத்தைந்தாயிரம் ரூபாவிற்காக ஒட்டுக்குழு ஈபிடிபியிடம் சுதந்திர ஊடகக் குரல் அமைப்பு கையேந்தியதாகத் தெரிவித்து யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.இது தொடர்பில் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊடக அடக்குமுறைகளுக்கு உள்ளாகியிருக்கும், யாழ்.குடாநாட்டில் ஊடக சுதந்திர தினக்கொண்டாட்டங்கள் தேவையானவையே. ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக் சொல்லுவதற்கு இந்தக் கொண்டாட்டங்கள் தேவையானவை என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். ஆனாலும் ஊடக சுதந்திரத்தை யார் கொண்டாடுவது என்பது இப்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை தொடங்கி இறுதியாக யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட சக்தி தொலைக்காட்சிக் செய்தியாளர் தேவா எனப்படும் தேவகுமார் படுகொலை வரையிலும், அதேபோன்று கொழும்பினில் சிவராம் உள்ளிட்டோர்களது படுகொலைகளிலும் யார் உள்ளார்கள் என்பது அனைவருக்குமே தெரியும், இதில் மறைப்பதற்கு எந்த ரகசியமும் கிடையாது.

இதேவேளை உதயன் அலுவலகம் மீதான தாக்குதல் அப்போது இரு பணியாளர்களின் மரணம் கடந்து போன ஊடக சுதந்திர தினமொன்றை அண்மித்து அரங்கேற்றப்பட்டதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.அதனிலும் உயிரிழந்த அந்த இளம் பணியாளர்களது விதவை மனைவியரும் அவர்களது குழந்தைகளும் மறந்திருக்க கூடிய விடயமல்ல அது. இதன் தொடர்ச்சியாக குடாநாட்டுப் பத்திரிகைகள் தீயிடப்பட்டமை, அச்சுறுத்தல்கள் என தொடரும் பட்டியல்கள் நீண்டே செல்கின்றன.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பிலோ அவர்களது குடும்பங்கள் தொடர்பிலோ, ஏன் அவர்களது சொந்தப் பணியாளர்கள் தொடர்பிலோ, அக்கறை செலுத்தாது அநாதரவாக விட்ட சில தரப்புக்கள் இப்போது ஊடக சுதந்திர தின கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றன. யாருடைய பினாமியாக இவர்கள் செயற்படுகிறார்கள் என்பதும் பரகசியமானது அல்ல. ஊடகவியலாளர்களதோ, அல்லது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் தொடர்பிலோ, கிஞ்சிதம் ஏனும் அக்கறையற்ற இவர்கள், கடைசியாய் அநாதரவாக விட்டுள்ள குகநாதன் பற்றியும் எங்களால் கூற முடியும். ஆனாலும் இவற்றை பெரிது படுத்திக் காட்ட நாங்கள் விரும்பவில்லை.

எந்த ஊடகவியலாளர்களை, ஊடகப்பணியாளர்களை எவர்கள் கொன்றார்களோ, ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தினார்களோ, அச்சுறுத்தினார்களோ அவர்களிடமே கையேந்திச் சென்று பிச்சைகேட்டு பணம் வாங்கி ஊடக சுதந்திரம் கொண்டாடுவது உங்களுக்குத் தேவையா? கடந்த காலங்களில் நீங்கள் பூசிக் கொண்ட சாயங்களும், இப்போது தப்பித்துக் கொள்வதற்கு நீங்கள் கூறும் நடுவுநிலைமை, பக்கச்சார்பின்மை பற்றியும் எங்களால் கதைக்க முடியும். ஆனாலும் நாங்கள் கனவுகளுடனேயே இடை நடுவில் உயிர் பறிக்கப்பட்ட எங்களது ஊடக நண்பர்கள் மற்றும் பணியாளர்களது நினைவுகளையே தாங்கி நிற்கின்றோம். அவர்களது குடும்பங்களின் கண்ணீரில் நாங்கள் நிதம் நிதம் பங்கெடுக்கின்றோம். அந்தரித்துத் திரியும் அவர்களது ஆத்மாக்கள் இத்தகைய கேவலமான துரோகங்களை மன்னிக்கப்போவதேயில்லை. ஊடக சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு இவ்வாறு கையேந்துவது கீழ்த்தரமான வேறு வழிகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதித்துக் கொள்வதற்கு ஒப்பானது என்பதை இவர்கள் புரிந்து கொண்டாகவேண்டும்.

உண்மையான புரிதல்களுடன், ஊடக சுதந்திர தினத்திற்காக வருவீர்களானால் உங்களுக்கு கைகொடுக்க மக்கள் தயாராகவே இருப்பார்கள். உங்கள் வசமுள்ள கறுப்புப் பணத்திற்கு மேலாக மக்களது உதவிகள் சொல்லிக் கொள்ளத்தக்கதாக இருக்கப்போவதில்லை என்றாலும் அவர்கள் தரும் ஒவ்வொரு சதமும் உண்மையான ஊடக சுதந்திரத்தை உணர்வில் நிறுத்தி வழங்கப்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள்.

என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள் அறிக்கையுடன் இணைத்து அனுப்பிவைத்திருக்கின்ற படங்களையும் இணைக்கின்றோம்.

DSC_0228.jpgDSC_0223.jpgDSC_0222.jpgDSC_0221.jpg

http://thaaitamil.com/?p=17499

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.