Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு தேசங்கள் ஒருநாடு- த.தே.ம.முன்னணியின் மே தினப் பிரகடனம்!

Featured Replies

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மேதினக் கூட்டம் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு ஆரம்பமாகி மாலை 7.00 மணிவரை கரவெட்டி சாமியன் அரசடி ஞானவைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

சாமியன் அரசடி சந்தியில் கூடிய மக்கள் அங்கிருந்து ஞானவைரவர் ஆலயத்திற்கு ஊர்வலமாகச் ஞானவைரவர் ஆலய முன்றலில் சென்றடைந்தது. அங்கு ஓய்வுபெற்ற காணிப்பதிவாளர் செல்வரட்ணம் தலைமையில் மேதினக்கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். அங்கு நெல்லியடி விவசாய அமைப்புக்களின் தலைவர் தம்பையா கனகரஜயா இளம் சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளார் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவார் இ.எ.ஆனந்தராஜா பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர் வின்சன்ற் டீ போல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவருமான திருமதி பத்மினி சிதம்பரநாதன் இளம் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வரஜா கஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வெளிநாட்டில் இருந்த காரணத்தினால் தொலைபேசியுடாக பெறப்பட்ட அவரது உரை ஒலிபரப்புச் செய்யப்பட்டது. நிகழ்வு ஆராம்பமாவதற்கு முன்னர் கூட்டம் நடைபெறவிருந்த இடத்திற்கு பெரும் எண்ணிக்கையில் சிவில் உடையில் சென்ற புலனாய்வுத்துறையினரது செயற்பாடுகளால் அங்கு பெரும் பதற்றமும் அச்சமான சூழலும் பரவிக்கொண்டது. அதனால் அங்கு ஏற்பாட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் பலர் அச்சம் காரணமாக விலகிச் சென்றுவிட்டனர். நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது புலனாய்வுப் பிரிவினரர் வீடியோ மூலம் அதனைப் பதிவு செய்துகொண்டிருந்தனர்.

அத்துடன் ஒலி அமைப்பாளரிடம் கூட்டத்தில் உரையாற்றுபவர்களது உரைகள் அனைத்தையும் பதிவு செய்து தரவேண்டுமென வற்யுறுத்தி பதிவு செய்திருந்தனர்.பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கான அரசியல்தீர்வானது இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற அடிப்படையில் அமைய வேண்டுமென்ற பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. http://thaaitamil.com/?p=17734

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.