Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பிடமிருந்து தமிழரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!

Featured Replies

பனங்காட்டான்

பௌத்த சின்னமான அரசமர இலைகளையும், சிங்களச் சின்னமான வாளேந்தும் சிங்கத்தையும் கொண்ட சிறிலங்கா தேசியக்கொடியை தமிழரின் கலாசாரத் தலைநகரில் நின்று ஏந்துவதந்கு சம்பந்தருக்கு எவ்வாறுதான் மனம் இடமளித்ததோ தெரியாது.

ஆண்டாண்டு வந்துபோகும் மே தினம், வழமைபோல இவ்வாண்டும் வந்துபோனது. மே தினம் என்பது, தொழிலாளர் தினம். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக, தங்கள் வேலைப் பாதுகாப்புக்காக, தங்கள் வேதன அதிகரிப்புக்காக ஒன்றுகூடிக் குரல்கொடுக்கும் நாள். அதற்காகவே அன்று விடுமுறை வழங்கப்படுகின்றது. ஆனால், இலங்கையைப் பொறுத்தளவில் மே தினம் அரசியலாளர்கள் நாளாகி, அவர்களின் கேளிக்கைகளுக்கான விடுமுறையாக மாற்றப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன.

இப்போதைய மே தினக் கூட்டங்களில் தொழிலாளர் பற்றி எதுவுமே பேசப்படுவதில்லை; அவர்களுக்கும் அதைப்பற்றி அக்கறை இல்லை. ஆக, மே தினம் என்பது சகல கட்சிகளும் தங்கள் பலத்தைக் காட்டவும், தங்கள் பரப்புரையை வெளிப்படுத்தவும் தெரிந்தெடுத்த ஒரு நாளாகிவிட்டது. பார்சல் சாப்பாடு, குளிர்பானமும் குடிபானமும், இலவச போக்குவரத்து, கட்சியின் வர்ணத்தில் மேலாடைகள், சிலருக்கு கையூட்டலும் வழங்கப்பட்டு அவர்கள் இறக்கப்படுகிறார்கள்.

இவை தொழிலாளர்களுக்கு அன்று (மட்டும்) கிடைக்கும் சில விசேட உரிமைகள். பேரணிகள் முடிய, பேருந்துகளில் ஏற்றி இறக்கப்பட்டவர்கள் தம்மிஷ்டப்படி கலைந்து செல்ல வேண்டியதுதான். கவனிப்பார் எவரும் இருக்க மாட்டார்கள். இப்படியான (மாமூல்) மே தின விழாக்களிலிருந்து மேலும் அரசியல் கலந்த மே தின நிகழ்வுகள் இவ்வருடம் இலங்கையில் இடம்பெற்றன.

கொழும்பு நகர மண்டப வளவில் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியின் மே தினம் நிகழ்வில், தம்புள்ள பள்ளிவாசலில் மூக்குடைபட்டு நிற்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவூப் ஹக்கீம் உட்பட, மகிந்தவின் பக்க வாத்தியக் கட்சிகள் அனைத்தும் மேடையில் காணப்பட்டன.

“பயங்கரவாதத்தை மூன்றாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் ஒழித்ததால்தான் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அச்சமின்றி மே தினத்தை யாழ்ப்பாணத்தில் தடல்புடலாகக் கொண்டாடுகிறார்கள்” என்று கூறித் தமது கழுத்தில் தாமே மாலையை போட்டு மகிழ்ந்த மகிந்த, “சில வெளிநாடுகள் எங்கள் மீது பொறாமை கொண்டு எமக்கு எதிராகச் செயல்படுகின்றன. அவைகளை நாம் முறியடிப்போம்” என்று உரத்துக் குரல் எழுப்ப, அப்பாவித் தொழிலாளர் தங்கள் பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்தாக எண்ணி, (ஜெயவேவா, ஜெயவேவா) என்று கோசமிட்டு உற்சாகமடைந்தனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் மே தினக் கூட்டம் மலையகத்தில், அடிக்கடி மந்திரி பதவி துறப்பு நாடகம் நடத்தும் ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது. இங்கு பிரதம பேச்சாளர் மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ச.

“யாழ்ப்பாண «லகத்தை எரித்து, 1983 கலவரத்துக்குக் காரணமாக இருந்தவர்களுடன் இணைந்து கூட்டமைப்பினர் யாழ்ப்பாணத்தில் மே தின விழா நடத்துகின்றனர்.

“வெட்கம் கெட்டவர்களின் கூட்டு” இது என்று சிங்களத்தில் பதில் சொல்ல, அதனை முழுமையாக காதிற்குள் போடாத ஏழைத் தொழிலாளிகள் தங்களுக்கு முற்கூட்டியே சொல்லிக் கொடுத்தவாறு “இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வாழ்க” என்று கோசமிட்டனர்.

தமிழ் புரியாத பசில் அதற்கு சிங்களத்தில் நன்றி கூற, ஆறுமுகம் தொண்டமான் உதட்டை நெளித்துச் சிரிக்க… அற்புதமான தொழிலாளர் நாள் விழா இங்கு அரங்கேறியது.

இலங்கை என்பது ஒரு தேசம், இரு நாடுகள் (என்பதைக் காட்டுவதுபோல தமிழரின் தாயக பூமியான வடக்கில் மற்றைய மே தின விழாக்கள் நடைபெற்றன.

முள்ளிவாய்க்கால் பின்னடைவுக்குப் பின்னர் வன்னியில் நடைபெற்ற முதலாவது மே தின விழாவாக கிளிநொச்சியில் நடத்தப்பட்டது. தமிழரசுக் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றிய பின்னர், பிரதம பேச்சாளராக பங்குபற்றிய மனோ கணேசன் சிறப்புரை ஆற்றினார்.

மகிந்த அரசின் ஓர் அங்கமான ஈ.பி.டி.பி. யாழ்ப்பாண மாநகர சபை வளவில் தனது விழாவை நடத்தியது. ஈ.பி.டி.பி.யின் ஏவலாளியான யாழ். மேயர் யோகேஸ்வரி பகிரங்கமாகவே செயல்பட்டு வருவதால், மிகப்பொருத்தமான இடத்தெரிவு. குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெருமளவு ஆட்களை ஏற்றி இறக்க ஏற்பாடாகியிருந்தது.

ஏனோ அது சாத்தியப்படவில்லை. சனத்தொகையைவிட மேடைக் கூடாரம் மிகப் பெரியது என்கிறார் யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவர். கஜேந்திரகுமார் – கஜேந்திரன் – பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரை முதன்மையாகக் கொண்டியங்கும் தமிழ் மக்கள் தேசிய முன்னணி, தமிழ் காங்கிரசுடன் இணைந்து கரவெட்டியிலுள்ள ஆலய முன்றல் ஒன்றில் ஊர்வலத்தோடு மே தினத்தை நடத்தியது.

இராணுவப் புலனாய்வாளர்கள் காலையிலிருந்தே அவ்விடத்தில் அச்சமூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். பலரைக் கேள்விக் கணைகளால் தொந்தரவு செய்தனர். கூட்ட உரைகளை ஒலிப்பதிவு செய்தனர். ஆனாலும் உணர்வோடு கலந்துகொண்ட மக்கள் குழப்பத்திற்கு இடமளியாமல் நிகழ்வை முடித்து வைத்தனர். இன்றைய அரசியலின் யதார்த்தத்தை இங்கு இடம்பெற்ற உரைகள் வெளிப்படுத்தின.

முடிவில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் “இரு தேசங்கள்; ஒரு நாடு” என்ற கோட்பாட்டை விளக்கும் தீர்மானம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இறுதியாக, இலங்கையின் முக்கிய மே தின வைபவமாக பலராலும் நோக்கப்படும் யாழ்ப்பாண கூட்டு மே தின நிகழ்வை பார்க்கலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து நடத்துவதாகவே பெரிதளவில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பி. சுமந்திரன் இதனை மறுத்து, சகல கட்சிகளுக்கும் கூட்டமைப்பு அழைப்பு விடுத்ததாகவும், ஐ.தே.க. மட்டுமே அதனை ஏற்று இதில் பங்குபற்றுவதாகவும், வழக்கம்போல சரடு விட்டிருந்தார். சுரேஷ் பிரேமச்சந்திரன் அதனை மறுத்து, இரண்டு கட்சிகளும் இணைந்த கூட்டு மே தின விழா என்றார்.

மட்டக்களப்பு எம்.பி. அரியநேந்திரனின் கதை வேறு. கூட்டமைப்பைப் பிளவுபடுத்த ஐ.தே.க. இப்படியாக இணைந்து செயற்பட முன்வந்தது என்றார். கூட்டு மே தினத்தை கண்டித்துள்ள ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம், தங்கள் கட்சியினர் எவருமே இதில் பங்குபற்றவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் காலையில் மே தினம் கொண்டாடிய சிறிதரன் எம்.பி. யாழ்ப்பாண கூட்டு மே தினம் இடம்பெற்ற முறையை கண்டித்துள்ளார். மனோ கணேசனை இங்கு பேசுவதற்கு ரணில் விக்கிரமசிங்க அனுமதிக்கவில்லை என்பது இவரது குற்றச்சாட்டு. அப்படியானால் மேடையில் இருந்த கூட்டத்தின் தலைவரான சம்பந்தன் கை கட்டி, வாய் பொத்தி நின்றாரா? என்ற கேள்விக்கு சிறிதரன் என்ன சொல்வாரோ?

மொத்தத்தில் தமிழ் தேசிய தலைமையின் நிர்வாகத்திலில்லாத 2012 மே தின விழா தமிழ் தேசிய கூட்டமைப்பை கூத்தமைப்பாக்கிவிட்டுள்ளது.

கூட்ட உரைகளையும் ஊர்வலத்தையும் பார்க்கும்போது சுமார் பத்தாயிரம் பேர் கலந்துகொண்டதாகக் தெரிகிறது. இதில் தொண்ணூறு வீதத்துக்கும் அதிகமானோர் தெற்கிலிருந்து விசேட பேருந்துகளில் இறக்கப்பட்ட மகாவம்சத்தினர்.

தங்கள் கலர்காட்ட ரணிலும் அவரது கோஷ்டியும் மிகவும் பிரயத்தனம் மேற்கொண்ட முயற்சியே இந்த இறக்குமதி என்கின்றனர் சஜித் பிரேமதாச கோஷ்டியினர். ஊர்வலத்தில் பெரும்பாலானோர் பச்சைநிற சட்டை அணிந்திருந்தனர். அவர்களின் கைகளில் சிங்களத்தில் எழுதப்பட்ட சுலோக அட்டைகள் இருந்தன. இவர்களின் கொட்டொலி தனிச் சிங்களத்தில் இடம்பெற்றது. வீதியோரங்களில் நின்று வேடிக்கை பார்த்தவர்களே உள்ளூர் மக்கள். புளிச்சாதம் கொடுத்தும் மானம் உள்ளவர்களை உள்வாங்கமுடியாமல்போன பரிதாப சோகத்தை இங்கு காண முடிந்தது.

ஊர்வலத்தில் ஒருவர் புலிக்கொடி பிடித்திருந்ததை கொழும்பின் தொலைக்காட்சிச் சேவையொன்று அப்படியே காட்டி (புரட்சி) பண்ணிவிட்டது. அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தினர் தங்கள் வாகனத்தில் அழைத்து வந்தவரிடம் புலிக்கொடியைக் கொடுத்து ஒளிப்பதிவு செய்து விளையாடி விட்டனர் என்று ஐ.தே.க. குற்றஞ்சாட்டுகின்றது. புலிக்கொடிதான் தமிழரின் தேசியக்கொடி என்பதைத் தெரிந்துகொண்டும் ரணில் எதற்காக இப்படிப் பயப்பட வேண்டும்?

எங்கள் காலத்து ஈழமன்னன் ஆட்சி நடத்திய புலி மண்ணில் நின்று ஊர்வலம் நடத்த விரும்பியவர்கள், அந்த மண்ணின் கொடியைக் கண்டு வணங்க வேண்டுமே தவிர அஞ்சக்கூடாது. பனைமரத்தில் கித்துல்பாணி எடுக்கலாமென்று இவர்கள் நினைப்பார்களானால் அது அவர்களின் அறியாமை.

முள்ளிவாய்க்கால் காலம்வரை புலித்தோல் போர்த்து நடமாடுய பெரியவர்களும் இன்று அதிலிருந்து விலகிவருவதாக காட்டிக்கொள்ள விரும்புகின்றனர். குருநகரில் இடம்பெற்ற கூட்டு மே தினக் கூட்டத்தில் சம்பந்தருக்குப் பின்னர் உரையாற்றிய ரணில், முன்னர் பேசியவரின் பல விடயங்களையும் ஆமோதித்துத் தலையாட்டினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இங்கு ஆற்றிய உரை இன்று பலராலும் விமர்சிக்கப்படுகின்றது.

இவர் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக மட்டுமே உள்ளார். கூட்டமைப்பின் தலைவரல்லர் என்பதையும், கூட்டமைப்புக்குத் தலைவராக எவரும் இல்லை என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும். இந்தியக்குழு சுஸ்மா சுவராஜ் தலைமையில் இலங்கை சென்ற நாளிலிருந்து, சம்பந்தர் புதுச் சுருதி ஒன்றை உரத்து வாசித்து வருகிறார். “ஐக்கிய இலங்கைக்குள் தமிழருக்கு அரசியல் தீர்வு காண நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்பதுவே அது.

இந்தியா திரும்பிய சுஸ்மா, சுதர்சனன் நாச்சியப்பன், ரங்கராஜன் என்னும் வௌ;வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் சம்பந்தன் கூறியதை அங்கு பகிரங்கமாகச் சொல்லி வருகின்றனர். அதே ஐக்கிய இலங்கைக் கோட்பாட்டை ரணில் இருந்த மேடையிலும் அவர் வலியுறுத்திக் கூற தவறவில்லை.

அத்துடன் நிற்கவில்லை. அதற்கும் மேலே (13 பிளஸ் போல) சென்று சில அரசியல்வாதிகளும், சில அரசியல் கட்சிகளும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த விரும்புவதை வன்மையாகக் கண்டித்துமுள்ளார். பிரிவினை என்பதைத் தீய சிந்தனை என்றும் வர்ணித்துள்ளார்.

(ஆதாரம்: யாழ்ப்பாண உதயன் பத்திரிகை)

தந்தை செல்வாவுக்கு விழா எழுக்கும் சம்பந்தன், தந்தை செல்வாவின் அரிய முயற்சியால் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும், அதன் அடிப்படையில் 1977 தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையையும், அதே முடிவின் அடிப்படையில் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையில் பிரசவமான தமிழ் தேசிய கட்டமைப்பையும், அதன் அடிப்படைக் கொள்கைகளையும் அப்படியே தூக்கிவீசிவிட்டார் என்பதையே அவரது உரையின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். இதே மேடையில் ரணிலுடன் கையொடு கைகோர்த்து, அதற்கிடையில் சிங்கள தேசியக் கொடியை ஏந்தியவாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அந்தக் காட்சி எதிர்பார்க்காத, ஏற்கமுடியாத, நம்பமுடியாத ஒன்று.

பேச்சுவார்த்தை, விட்டுக்கொடுப்பு, ராஜதந்திரம், ஒப்பந்தம் என்பவற்றுக்கு அப்பால் தமிழினத்தை முழுமையாக சரணாகதி அடையச் செய்வதற்கு சம்பந்தருக்கோ, கூட்மைப்புக்கோ தமிழ் மக்கள் ஒருபோதும் ஆணை வழங்கவில்லை. பௌத்த சின்னமான அரசமர இலைகளையும், சிங்களச் சின்னமான வாளேந்தும் சிங்கத்தையும் கொண்ட சிறிலங்கா தேசியக்கொடியை தமிழரின் கலாசாரத் தலைநகரில் நின்று ஏந்துவதந்கு சம்பந்தருக்கு எவ்வாறுதான் மனம் இடமளித்ததோ தெரியாது.

அரைநூற்றாண்டுக்கு முன், சிங்களக் கொடியைக் கீழிறக்குவதற்காக கம்பத்தில் ஏறியபோது சிங்களக் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழுணர்வாளர் கந்தசாமி உயிர் நீத்த அதே (திருமலை மண்ணிலிருந்து இப்படியொரு தமிழரா) என்று சிந்திக்க வைக்கிறது சம்பந்தரின் செயல்.

தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டுமென்றும், இலங்கை மீது சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டுமென்றும் கூட்டமைப்பினால் இங்கு நிறைவேற்றப்படவிருந்து தீர்மானங்கள் ரணில் விக்கிரமசிங்கவினால் தடுத்து நிறுத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவாதாக உள்ளது.

சரணாகதிதான் இவரது முடிவென்றால், சிங்களத்துக்கு அடிமையாகுவதுதான் கூட்டமைப்பின் விருப்பமென்றால், அவர்களுக்கான தெரிவுகள் இரண்டுள. உடனடியாக தங்கள் பதவிகளை விட்டு விலகலாம்; அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கௌரவமாக வெளியேறலாம்; விருப்பமானால், ஐ

க்கிய சிங்கள – தமிழ் கூட்மைப்பு என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை உருவாக்கி, தேர்தலில் நின்று தமிழ் மக்களின் ஆணையை அதற்குக் கேட்கலாம்.

இன்றிருக்கும் சூழ்நிலையில் சர்வதேசத் தமிழர்களின் விருப்பம் இதுதான் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை செய்யத் தவறி, தொடர்ந்தும் தமிழினத்தை அழித்தொழிக்க முனைந்தால்… கூட்டமைப்பிடமிருந்து தமிழரைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!

www.Tamilkathir.com

Edited by யாழ்அன்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.