Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைத்துலக மக்களவைகளின் ஊடகச் செய்தி

Featured Replies

porrkutta-naal%20Poster%20page%201.jpg ஊடகச் செய்தி,

அனைத்துலக மக்களவைகள்.

மே 16ம் நாள் 2012.

இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப விரைந்து செயற்படுவோம்.

மே-18

எமது இனத்தின் விடுதலையை நசுக்கி, போர்த் தர்மங்களை மீறி எம்மக்களைக் கொடூரமாகக் கொன்று புதைத்தது மட்டுமல்ல தொடர்ந்து எமது தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்கு சிங்கள அரசும் அதனை அண்டிய நாடுகளும் கங்கணம் கட்டி நிற்கின்ற வேளையில், தமிழர்களாகிய நாம் விடுதலையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுவோம். முள்ளிவாய்க்காலில் எமக்கு நடந்த கொடுமை, பேரவலம் சொல்லில் எழுதப்பட முடியாததென்பதும் வார்த்தைகளால் வடிக்கப்பட முடியாததென்பதும் விடுதலை வேண்டிப் போராடிய ஒவ்வொரு தமிழனும் நன்கறிந்த விடயம். இவ்வளவு காலமும் எமது விடுதலைக்காக எம்மக்களும் அவர்களால் பெற்றெடுக்கப்பட்ட பிள்ளைகளும் என்று எத்தனை எத்தனை ஆயிரம் உயிர்களின் அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள். அவை வீண்போவதா? எமது இலட்சியம் தனித் தமிழீழம் என்பதே ஆகும்.

முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன?

அச்சம்பவம் எமக்கு ஒரு துக்க நாளல்ல என்பதையும் அது எமது நீதிக்கான அடித்தளம் என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். அங்கே நடந்த விடயம் எல்லோருக்கும் ஒரு துயரச் செய்திதான். அதை நாம் துக்கநாளாகக் கொள்ள அது எமக்குப் புதிய விடயமல்லவே. தொடர்ந்து அறுபது ஆண்டுகளாக அதையே இனவாத சிங்கள அரசுகள் மேற்கொண்டு வந்ததுடன் இன்றும் அதனையே தொடர்கின்றது. எனவே அத்துயரம் எதனால் எமக்கு ஏற்பட்டது. “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” எனக்கூறி எமது மக்களுக்கும், போராளிகளுக்கும் அறநெறி முறையற்ற மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தினார்கள். இவ் அவலம் இன்று போர்க்குற்றம் எனும் விடயத்தை அனைத்துலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. இதன் பிரகாரம் ஐ.நா சிறீலங்கா அரசைப் போர்க்குற்றவாளியாக குற்றம்சாட்டியுள்ளது. நாமும் அதனை இறுகப் பற்றி, இன்று எமது இனம் விடுதலையின் நகர்வை முன்னெடுத்துச் செல்வதற்கு வழிவகுப்போம்.

மே-18 ஒரு போர்க்குற்ற நாளல்ல என்பதை இன்று சிறீலங்கா அரசு வெளிப்படுத்த முயற்சிக்கின்றது. அதுமட்டுமன்றி அதை ஒரு துக்க நாளாக தமிழ்மக்கள் நெஞ்சங்களில் நிலைநிறுத்தவே முயன்றுவருகின்றது. எனவே தமிழர்களாகிய நாம் தீயசக்திகளின் பொறிக்குள் விழுவதிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். அந்தவகையில் மே-18 போர்க்குற்றம், இனவழிப்பு என்ற இரண்டு பதங்களை வெளிப்படுத்தும் நிகழ்வாக மட்டுமே நினைவுகூரப்பட வேண்டும். இதுவே எமது இலட்சியத்தை முழுவீச்சாக்கும் என்பதுடன் தமிழர்களின் இலக்கு எட்டப்படும் வாய்ப்பையும் எமக்கு வழங்குமென்பதில் சந்தேகமில்லை. தமிழீழத் தனியரசு அமைவதை விரும்பாத மாற்றுச் சக்திகள் நடந்த துயரங்களை மறந்து, வேறு நிகழ்வாகத் தீர்மானித்து மக்களைத் திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள். அனைத்துத் தமிழ் நெஞ்சங்களும் இதனை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதுடன் போர்க்குற்றம், இனவழிப்பு என்னும் சரியான பொருளைக் கூறும் நிகழ்வுகளில் பங்கெடுத்து, எம்மவர்களின் வீரத்தை வெளிக்காட்டுவதுடன் அவர்களின் தியாகங்கள், தேசிய அர்ப்பணிப்புக்கள் ஆகியவற்றிற்கு அர்த்தத்தைத் தேடி, எமது தாயகத்தை வென்றெடுப்போம்.

போர்க்குற்ற நாள் நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள்

கனடா:

காலம்: வெள்ளிக்கிழமைஇ மே-18

நேரம் மாலை 05.00 மணி

இடம்: Albert campbell square

Scarborough center

காலம்: வெள்ளிக்கிழமைஇ மே-18

நேரம் மாலை 05.00 மணி

-இடம்: மொன்றியல்-அமெரிக்கத் துணைத் தூதுவராலயம்

1155 rue St.Alexandre, (corner of boul. Rene Levesque)

பிரான்ஸ்:

காலம்: வெள்ளிக்கிழமைஇ மே-18

நேரம் மாலை:14 .00 மணி

ஆரம்பம்- ECOLE MILITAIRE-8, முடிவு- TROCADERO:6,9

ஜேர்மனி:

கண்டனப் பேரணி

காலம்: வெள்ளிக்கிழமைஇ மே-18 நேரம் மாலை 15 .00 மணி

DUSSELDORF மாநகர தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகி DUSSELDORF (Landtag) பாராளுமன்ற முன்றலில் முடிவடையும்

நினைவு நிகழ்வு

காலம்: வெள்ளிக்கிழமைஇ மே-18 நேரம் மாலை 16.30 மணி

-இடம்: Platz des Landtags, 40221 Dusseldorf

சுவிஸ்:

காலம்: வெள்ளிக்கிழமைஇ மே-18 நேரம் மாலை 14.30 மணி தொடக்கம் 17.30 வரை

UNO- GENEVA

ஈகைப் பேரொளி முருகதாசன் திடல்

நோர்வே:

-காலம்: வெள்ளிக்கிழமைஇ மே-18 நேரம்: மாலை 05.00 மணி

இடம்: நோர்வே பாராளுமன்றம்

-காலம்: வெள்ளிக்கிழமைஇ மே-18 நேரம்: மாலை 05.00 மணி

இடம்: Oslo, Til storting

டென்மார்க்:

-காலம்: 19.05.2012 நேரம்: 16.00 மணி

இடம்: Randers, Ostervangsskolen, Dronningborg Boulevard 33

-காலம்: -காலம்: 19.05.2012 நேரம் 17.00 மணி

இடம்: Holbaek, Kasernevej 43

நியூசிலாந்து::

-காலம்: 19.05.2012, நேரம்: மாலை 06.00 மணி

இடம்: Mt Roskill intermediate school hall

இத்தாலி:

-காலம்: வெள்ளிக்கிழமைஇ மே-18 நேரம்: மாலை 17.00 மணி தொடக்கம் 20.00 வரை

இடம்: “Piazza Vittoria” 42100 Reggio Emilia.

-காலம்: வெள்ளிக்கிழமைஇ மே-18 நேரம்: மாலை 17.00 மணி தொடக்கம் 20.00 வரை

இடம்: “Piazza Politeama” 90100 Palermo.

-காலம்: 20.05.2012 நேரம்: மாலை 15.00 மணி தொடக்கம் 18.00 வரை

இடம்: “area mercato coperto di ponzone”13835 ponzone,Biella.

நெதர்லாந்து :

-காலம்: வெள்ளிக்கிழமைஇ மே-18 நேரம்: 13.00 மணி

இடம்:international criminal court

Maanweg 174

2516 AB Den Haag

Nederland

www.irruppu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.