Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவின் நாடுகடத்தும் கொள்கையால் சித்திரவதைக்கு உள்ளாகும் தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Hari-a-Tamil-asylum-seeker.jpg

பிரித்தானியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஹரி என்கின்ற இத்தமிழ் இளைஞன் 17 நாட்கள் வரை சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தப்பிப்பிழைத்த பின் மன அழுத்தத்துக்கு உள்ளாகியமைக்கு பிரித்தானிய அரசாங்கமே காரணமாகும்.

இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக் கொண்ட guardian.co.uk இணையத் தளத்தில் Donna Covey எழுதி யுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

பிரித்தானியாவிலிருந்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழரான ஹரி என்பவர் சிறிலங்கா அதிகாரிகளால் சித்திரவதைப்படுத்தப்பட்டதானது மிகப் பயங்கரமான சாட்சியமாக இருப்பதுடன், புகலிடம் கோரி வரும் மக்கள் இந்நாட்டில் எவ்வாறு நடாத்தப்படுகின்றார்கள் என்பதைக் காண்பிக்கின்ற, தலைகுனிய வைக்கின்ற, வெட்கப்பட வேண்டிய எடுத்துக்காட்டாக ஹரி என்கின்ற இத்தமிழ் இளைஞனின் வாக்குமூலம் உள்ளது.

பிரித்தானியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஹரி என்கின்ற இத்தமிழ் இளைஞன் 17 நாட்கள் வரை சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தப்பிப்பிழைத்த பின் மன அழுத்தத்துக்கு உள்ளாகியமைக்கு பிரித்தானிய அரசாங்கமே காரணமாகும். இவர் தாங்கும் வடுக்களை பிரித்தானியா பொறுப்பேற்று சீர்செய்யுமா?

சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் அங்கே பாதுகாப்பற்ற ஆபத்தான சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளமையானது தற்போது அதிகரி த்துள்ளதை சாட்சியங்கள் மூலம் அறியமுடிகின்றது. சிறிலங்காவில் மனித உரிமை மீறப்படுவதால் பிரித்தானியாவிலிருந்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த 40 பேரை மீள அனுப்ப வேண்டாம் என பிரித்தானிய உயர் நீதிமன்றம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இவ்வாண்டில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டமையை சான்றுபடுத்தும் 13 சம்பவங்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் பதிவுசெய்துள்ளதுடன், பிரித்தானியாவிலிருந்து சிறிலங்காவுக்கு ஆட்களைத் திருப்பி அனுப்புவதை நிறுத்துமாறும் இக்கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்திருந்தது. பிரித்தானியாவிலிருந்து பலவந்தமாக சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் பலர் மீண்டும் தமது சொந்த நாட்டு அதிகாரிகளால் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டமையை 'சித்திரவதைகளிலிருந்து விடுவித்தலுக்கான' அமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.

இவ்வாறு சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படும் மக்கள் துன்புறுத்தப்படுவதானது நீண்டகாலம் தொடரப்படக் கூடாது. இதனால் பிரித்தானியா உடனடியாக இதனை நிறுத்த வேண்டும். "எமது பாதுகாப்பு உண்மையில் தேவைப்படாத மக்கள் மீண்டும் அவர்களது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்" என பிரித்தானிய உள்துறைச் செயலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவானது சிறிலங்காவுக்கு மட்டுமல்ல, மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக மேற்கொள்ளப்படுகின்ற ஆப்கானிஸ்தான் மற்றும் கொங்கோ போன்ற நாடுகளுக்கும் ஆட்களைத் திருப்பி அனுப்புவதை தொடரும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட, இந்நாடுகளைச் சேர்ந்த மக்கள் தமது நாடுகளுக்கு திரும்பிச் சென்று பாதுகாப்பான வாழ்வை வாழக்கூடிய சூழல் ஏற்படும் வரை தனது நாட்டிலிருந்து மக்களைத் திருப்பி அனுப்புவதை நிறுத்தி பிரித்தானியா அரசாங்கமானது அது தொடர்பாக மீளவும் ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

ஹரி என்கின்ற தமிழ் இளைஞன் மீண்டும் அவரது சொந்த நாடான சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதை ஆதாரத்துடன் நிரூபிக்கின்றார். இவரைப் போல சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் பலர் தமது சாட்சியங்களை வழங்கியுள்ளனர். புகலிடம் கோரி பிரித்தானியா வந்த பெண்களில் பெரும்பாலானவர்கள் தமது நாடுகளில் பாலியல் ரீதியான வன்புணர்வுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருந்தனர். 2010-11 வரை எம்மால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தப் பெண்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறிலங்காவைச் சேர்ந்த பெண்களாகக் காணப்பட்டனர். இவர்களில் அரைவாசிப் பேருக்கு பிரித்தானியா புகலிடக் கோரிக்கை வழங்க மறுத்துள்ளது.

பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ள அனைவரதும் புகலிடக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதென்பது மிகக் கடினமானதாகும் எனவும், 2011ல் புகலிடக் கோரிக்கை கோரி விண்ணப்பித்த 17,496 பேரில் 68 சதவீதமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக பிரித்தானிய உள்துறைச் செயலக புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக 2006 தொடக்கம் 2010 காலப்பகுதியில் பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை மேற்கொண்ட சிறிலங்காப் பெண்களில் 80 தொடக்கம் 89 சதவீதமானவை ஆண்டுதோறும் நிராகரி க்கப்பட்டன. மிகத் தவறான முறையில் இவர்களது கோரிக்கைகள் மறுக்கப்படுகின்றன.

அண்மைய ஆண்டுகளில் இவ்வாறு தஞ்சம் கோரும் மக்களின் கோரிக்கை தொடர்பில் சரியான தீர்வை எட்டுவதை உறுதிப்படுத்துவதற்கான சில நகர்வுகளை பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்டுள்ளது. எனினும் சமூகத்தில் நலிவடைந்த பெண்கள் போன்றவர்களின் புகலிடக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்கான, அவர்களின் விண்ணப்பங்களை உறுதிப்படுத்துகின்ற நகர்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. அதாவது பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பானது சிறப்புத் தேவைக்கு உட்பட்டவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவர்கள் தமது விண்ணப்பங்களை இலகுவான முறையில் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முறைமை ஒன்று உருவாக்கப்படவில்லை.

எடுத்துக்காட்டாக, தமது நாடுகளில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து, அவற்றின் வடுக்களைச் சுமந்து நிற்கும் பெண்கள் தமது பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறுவதற்கான பெண் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் நேர்காணல் மேற்கொள்பவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகக் கடினமான காரியமாகும். இப் பெண்கள் அவர்களது நாடுகளில் எவ்வாறான துன்பங்களை அனுபவித்தனர் என்பதை வெளிக் கொண்டு வருகின்ற விழிப்புணர்வு பற்றாக்குறையாக உள்ளது. அத்துடன் இப்பெண்களின் கலாசார நம்பிக்கைகள் என்பன மேலும் இந்தப் பெண்கள் தமது பிரச்சினையை வெளிப்படுத்தி, புகலிடக் கோரிக்கையைப் பெற்றுக் கொள்வதில் தடையாக காணப்படுகின்றன.

இவ்வாறான காரணங்களினால், உண்மையில் துன்புறுத்தப்பட்டவர்கள், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டவர்கள் போன்றோரை அடையாளங்கண்டு சரியான தீர்வை எட்டிக் கொள்வதில் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு தவறியுள்ளது.

பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்து அனைத்து நாட்டு மக்களினதும் சொந்த நாடுகளில் நிலவும் உண்மையான பிரச்சினைகளைக் கண்டறிவதற்கான கொள்கைப்பாடுகளையும், நடைமுறைகளையும் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கிக் கொள்ள வேண்டும் என நாம் அழுத்தங் கொடுக்கிறோம். இவ்வாறான நாடுகள் சில உண்மையில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடுகளாகக் காணப்படுகின்றன.

கடந்த 60 ஆண்டுகளாக பிரித்தானியாவில் தஞ்சம் வழங்கப்பட்டு வாழும் நூறுக்கும் மேற்பட்ட மக்கள், கடந்த வெள்ளியன்று பிறிக்ஸ்ரனில் ஒன்றுகூடியமையானது, பிரித்தானியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. இருந்தும் தற்போதும் பிரித்தானியாவானது தான் பெற்றுக் கொண்ட இந்தப் பெருமையை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால், ஹரி போன்றவர்கள் பெற்றுக் கொண்டுள்ள கசப்பான அனுபவங்களைக் கவனத்திற்கொண்டு செயற்படவேண்டும். இதனை அடைவதற்கு பிரித்தானியா நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது.

http://www.puthinapp...?20120609106360

இங்கிருத்து இலங்கைக்குத் திருப்பி அனுப்புவோரின் பாதுகாப்பை இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகம் கண்கானிக்குமாம் என்று அண்மையில் ஒரு செய்தி வாசிச்ச ஞாபகம்... ஆனால் இது எந்த விதத்தில் நடைமுறைக்கு சாத்தியம் என்று புரியவில்லை.. அதே நேரம் இந்தாண்டு ஜூலை மாதத்திற்கு முன்பு, அதாவது லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பிக்கும் முன்பு பிடித்து வைத்திருக்கும் விசா இல்லாத/ அனுமதி மறுக்கப்பட்ட அகதிகளை (எல்லா நாட்டு அகதிகளையும்) நாடு கடத்த வேண்டும் என்று பிரித்தானியாவில் ஆளும் கட்சியினர் கூறியதாகவும் அதன் முதல் கட்டமே 40 பேரை இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

சர்வதேச மனிதஉரிமை அமைப்புக்கள் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஆதாரங்களோடு எடுத்துச் சொல்லியும், மேல்நாட்டு அரசாங்கங்கள் அதனை கண்டும் காணாதது போல் இருப்பது மிகவும் வேதனைக்குரியது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.