Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் பிள்ளைகள் எங்கே? யாழ்ப்பாணத்தில் அமைச்சர் கஜதீரவைச் சுற்றி வளைத்து காணாமற்போனோரின் உறவினர்கள் கதறியழுகை

Featured Replies

யுத்தத்தின் போது காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து தருமாறும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும் கோரி காணாமல் போனவர்களின் உறவினர்கள் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவிடம் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் கலந்துகொண்டார்.

இந்தநிகழ்வில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் புகைப்படங்கள் சகிதம் அமைச்சரை சுற்றிவளைத்து காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து தருமாறு கோரி கண்ணீருடன்க தறியழுதனர்.

யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் எங்கு இருக்கின்றார்கள், அவர்கள் சிறைகளில் வைக்கப்பட்டு இருந்தால் எந்தச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், எங்கள் பிள்ளைகளை எங்கு தடுத்து வைத்திருக்கின்றீர்கள், அவர்களை விடுதலை செய்ய உதவுங்கள் என காணாமல்போனவர்களின்உறவினர்கள் கோரினர்.

இவர்களின் கோரிக்கையைச் செவிமடுத்த அமைச்சர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தால் அவர்களின் வழக்குகளை துரிதப்படுத்தி நீதிமன்றத்தின் ஊடாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.

இதேவேளை யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் சொத்துகளை இழந்தவர்கள் ஆகியோருக்கு சுமார் 11.2 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 91 பேருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 60 பேருக்குமே இந்த நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை அமைச்சரின் செயலாளர் திஸநாயக்கா, சிறைச்சாலை அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஸ்குமார், புனர்வாழ்வு அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் யாழ். மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை யுத்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக மேற்படி முன்னாள் போராளிகளை அமைச்சர் சந்திரசிறி கஜதீர சந்தித்து கலந்துரையாடினார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னாள் போராளிகளுக்கும் அமைச்சருக்குமிடையில் இந்த விசேட சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் முன்னாள் போராளிகள் சமூகரீதியில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அவர்களின் பொருளாதார வளங்கள் மற்றும் தொழில்ரீதியில் முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் கஜதீர கேட்டறிந்து கொண்டார்.

முன்னாள் போராளிகள் தங்களின் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு தேவையான உதவிகளைச் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் உதவித் திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்கள் ஆகியன எதிர்வரும் காலங்களில் வழங்கப்படவுள்ளது என அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.

http://tamilleader.com/mukiaya/4670-2012-06-11-01-52-36.html

Edited by ஊர்பூராயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.