Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழ் அகதிகள் என்றால் கிள்ளுக் கீரையா?

Featured Replies

பாவிகள் செல்லும் இடமெலாம் கல்லும், முள்ளும், படுகுழியும் என்று சொல்வார்கள். இது ஈழத் தமிழ் அகதிகளுக்கு மிகவும் பொருத்தம். ஈழத் தமிழர்களின் வேதனைகளையும் வலிகளையும் சர்வதேச சமூகம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இவர்கள் ஏன் நாடு விட்டு நாடு தாவி ஓடுகிறார்கள் என்ற கேள்விக்கு என்ன பதில்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் ஜரிக்கன் தமிழீழ மக்கள் பாதுகாப்பான சூழல் ஒன்றைத் தேடி இலங்கையில் இருந்து தொடர்ந்து வெளியேறுகிறார்கள் என்று 2010ம் ஆண்டு தெரிவித்தார்.

மேலும் அவர்களுடைய பாதுகாப்பான வெளியேற்றத்திற்கும் புகலிடக் கோரிக்கைக்கும் சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் அவர் சொன்னார். இது வரை இந்த நிலவரத்தில் மாற்றம் ஏற்படவில்லை.

வடகிழக்கில் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரசைகளாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுடைய வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. மண் அபகரிப்பு தொடர்கிறது. இராணுவமயப் படுத்தப்பட்ட தாயகத்தில் பாதுகாப்பான சூழல் மக்களுக்கு கிடைப்பதில்லை.

வாழ்ந்த மண்ணை விட்டு வெளியேறுவது எளிதான விடயமல்ல. வேர் பிடுங்கப்பட்டு, காற்றில் வீசப் பட்டுப் புகலிடம் தேடும் இனமாக தமிழீழ மக்கள் இடம்பெறுகிறார்கள். போரை ஊக்குவித்த நாடுகள் தமிழீழ மக்களின் துயர் துடைக்க மறுக்கின்றன.

மழை விட்டும் தூறல் விலகவில்லை என்பது போல் தமிழீழ அகதிகள் பிரச்சனை இன்னும் ஓய்ந்த பாடில்லை. சென்ற வாரம் 161 தமிழீழ அகதிகள் தமிழக அகதி முகாம்களில் இருந்து இரகசியமாக வெளியேறி கேரள மாநிலத்திற்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் கேரள மாநிலத்தில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு மீன்படி விசைப் படகு மூலம் செல்லத் திட்டமிட்டிருந்தனர். இதற்காகப் பெருந் தொகை பணத்தை இடைத் தரகர்களிடம் கொடுத்துள்ளனர். ஆனால் பயணம் நிறைவேறவில்லை.

கேரளப் பொலிசார் கடலில் படகுகளை இடைமறித்து அகதிகளைக் கைது செய்தனர். பேருந்துகளில் ஏற்றப்பட்டு அவர்கள் மீண்டும் தமிழக அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத கடற் பயணத்தை ஏன் மேற்கொண்டார்கள்;.?

தெரிந்து கொண்டே ஆபத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் இந்த அப்பாவிகளுக்கு எப்படி ஏற்பட்டது. ஏன் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டீர்கள் என்று கேட்கப்பட்ட போது பெண் அகதிகள் தமிழக முகாம்களில் எமக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்றனர்.

“கியூ பிறான்ச்” (Q Branch) எனப்படும் தமிழீழ அகதிகளைக் கண்காணிக்கும் விசேட காவல்துறைப் பிரிவினரின் தாக்குதல்கள் தம்மை அச்சுறுத்துவதாகத் தெரிவித்தனர். எனது கணவர் இவர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என்று ஒரு பெண் சொன்னார்.

இராமேஸ்வரம், மண்டபம் அகதி முகாம் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுகின்றனா.; கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் காவல் துறையின் ஒத்துழைப்போடு பெண்கள் விபசாரத் தேவைக்காகக் கடத்தப்படுவதாகப் புகார் எழுந்தது.

சிங்களப் படையினரிடமிருந்து எனது இரு பெண் பிள்ளைகளையும் காப்பாற்றித் தமிழகம் கொண்டு வந்தேன். இப்போது இருவரையும் தமிழகக் காவல்துறையிடம் பறிகொடுத்து விட்டு நிற்கிறேன் என்று ஒரு திருகோணமலைத் தமிழனின் கதறல் காதில் கேட்கிறது.

ஈழத் தமிழ் அகதிகளின் நல்வாழ்வுக்காக உழைக்கும் தன்னார்வத் தொண்டூழியர்கள் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களையும் மீறிச் சம்பவங்கள் நடக்கின்றன. கருணாநிதி ஆட்சி காலத்தில் அகதி முகாம் பெண்கள் கடத்தப்படும் விவகாரம் பற்றி ஒரு அறிக்கையைத் தொண்டர்கள் தயாரித்தார்கள்.

அதை வெளிவர விடாமல் தி.மு.க அரசு தடுத்து விட்டது. அந்த அறிக்கை மறைக்கப் பட்டுவிட்டது. முகாம்களில் நடக்கும் படுகொலைகள் தாக்குதல்கள் பாலியல் கொடுமைகள் தொடர் கதையாக நீடிக்கின்றன.

சில வருடங்களுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ஒன்று வெளிவந்தது. அதில் அவர் ஒரு மருத்துவராக நடித்தார். இராமேஸ்வரம் அகதி முகாமில் மது போதையில் காவல்துறையினர் அகதிப் பெண்களை மானபங்கம் செய்வதைத் தட்டிக் கேட்கும் பாத்திரமாக விஜயகாந்த் தோன்றினார்.

சீன அரசை சீண்டிப் பார்ப்பதற்காக மத்திய அரசு திபெத்திய அகதிகளுக்கு கர்நாடகா மாநிலத்திலும் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலும் வாழ்வுரிமை அளித்துள்ளது. நாடுகடந்த அரசு, பாராளுமன்றம், நிர்வாக அலுவலகம் (Government in Exile Parliament and Administrative office in Dharmsala,Himachal Pradesh) என்பனவற்றைத் திபெத்திய அகதிகள் ஹிமாச்சல் பிரதேசத்தின் தர்ம்சாலாவில் நிறுவியுள்ளனர்.

ஈழத் தமிழர்கள் கேட்பதெல்லாம் பாதுகாப்பான வாழ்வுரிமை மாத்திரமே. இதை வழங்க இந்திய மத்திய அரசு தயாரில்லை. சிங்கள அரசுக்கு மாறான நடவடிக்கை எடுக்கத் தயங்கும் மத்திய அரசு ஈழத் தமிழ் அகதிகளை மாற்றந் தாய் மனதுடன் நடத்துகிறது.

கடற் பயணம் செய்து அவுஸ்திரேலியா சென்று அங்கு உரிமைகளோடு வாழலாம் என்று எண்ணும் தமிழீழ அகதிகளுக்கு ஒரு உண்மையை எடுத்துக் கூறுகிறோம். அவுஸ்திரேலிய அரசு அகதிகளைக் காலவரையின்றித் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கும் கொள்கையை நடைமுறைப் படுத்துகிறது. அகதிகளைக் கொடுமைப்படுத்தும் நாடுகளில் அது முதலிடம் வகிக்கிறது.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்வார்கள.; கொதிக்கும் எண்ணையில் இருந்து எரியும் நெருப்புக்குள் வீழ்வது போல் அவுஸ்திரேலியப் பயணம் மேற்கொண்டு உயிரையும் பொருளையும் வீணடிக்காதீர்கள்.

மக்கள் குரலுக்கு மதிப்பளிக்கும் அரசு தமிழ் நாட்டில் ஆட்சி செய்கிறது. குறை நிறைகளை அரசுக்கு எடுத்துச் சொல்லி உரிமைகளை வென்றெடுப்பது தான் சிறந்த வழி. ஓடத் தொடங்கினால் நிற்பதற்கு நேரமும் இடமும் இல்லாமல் போய்விடும்.

http://thaaitamil.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.