Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.போதனா வைத்தியசாலை ஊழல் மோசடிகளை வெளிக்கொணர்ந்த வைத்திய சங்க உறுப்பினர் பழிவாங்கப்பட்டுள்ளார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna%20hospitol_CI.jpg

யாழ்.போதனா வைத்தியசாலை ஊழல் மோசடிகளை வெளிக்கொணர்ந்த வைத்திய சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் பழிவாங்கப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகளை வெளிக்கொணர அரச வைத்திய சங்கம் மேற்கொண்டிருந்த நிலையில் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை பணிப்பாளர் மேற்கொண்டுள்ளார் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுப் பொறுப்பதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டமை திட்டமிடப்பட்ட ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அரச வைத்திய சங்கத்தின் யாழ்.கிளையினர் இது தொடர்பில் பணிப்பாளர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது போனால் பணிப்புறக்கணிப்பு தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.

வெளிநோயாளர் பிரிவில் வைத்தியர்கள் அதிகமாக தேவையாகவுள்ள நிலையில் சிரேஸ்ட வைத்தியப் பொறுப்பதிகாரி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டால் அது யாழ்.பொது மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக பணியாற்றிய சிரேஸ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் கதிரமலை ராஜசேகரம் என்பவரே இடமாற்றம் செய்யப்பட்டவராவார்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இவர் பணியாற்றிவருகின்றார். குறிப்பாக போர் காலத்தில் தன்னலமற்ற சேவையினை இவர் மக்;களுக்கு வழங்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றபோதும் தற்போது யாழ்.போதனா வைத்தியாசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை காரணமாகமே தொடர்ந்தும் சேவையாற்றிவருகின்றார்.

இவர் இடமாற்றம் பெற்றுச் செல்லுமிடத்து இவரது இடத்திற்கு புதிதாக மீள்நிரப்புதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக ஏற்கனவே வைத்தியர்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில் இவரது இடத்திற்கு உடனடியாகவே ஒரு வைத்தியாரை நியமிக்க வேண்டும்.

இந்நிலையில் நேற்று மதியம் இவரை அழைத்த பணிப்பாளர் இவரது இடமாற்றம் தொடர்பான கடிதத்தை வழங்கியுள்ளார். இவரது இடமாற்றம் தொடர்பாக நாம் உடனடியாகவே பணிப்பாளரது கவனத்திற்கு கொண்டு சென்றதோடு வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சங்கத்தினராகிய நாம் கோரிக்கை விடுத்தோம்.

பணிப்பாளரது தான்தோன்றித்தனமாக இவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக இவ்வாறான செயற்பாடுகளை பணிப்பாளர் உடனடியாக நிறுத்தாது போனால் பணிப்புறக்கணிப்பு தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டியிருக்கும் என்றனர்.

தற்போது வெளிநோயாளர் பிரிவில் 16 வைத்தியர்கள் இருக்கின்றோம்

ஆனால் உண்மையாகவே இவ்வெண்ணிக்கையானது ஒதுக்கப்பட்டுள்ள தொகையான வைத்தியர்களின் எண்ணிக்கையை விட மிகக் குறைவானது.

கொழும்பில் ஏற்கனவே போதிய வைத்தியர்கள் கடமையாற்றி வருகின்றனர். இந்நிலையில் அங்கிருக்கும் இன்னொரு வைத்தியர் இடமாற்றம் பெற்றுச் செல்லும் போதே குறித்த இடமாற்றம் அத்தியாவசியமானதாக அமையும். அந்த வகையில் குறித்த இடமாற்றமானது ஏதோ ஒரு நோக்கத்திற்காக செய்யப்பட்டதாகவே பார்க்க வேண்டியுள்ளது என வைத்தியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பழைய இரும்பு பொருட்கள் மற்றும் மின்பிறப்பாக்கிகள் வெளியே கடத்தப்பட்டமை தொடர்பாக அரச வைத்திய சங்கத்தின் யாழ்.கிளையினர் அம்பலப்படுத்தியமை பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

http://www.globaltam...IN/article.aspx

பெரும்பாலான வைத்தியர்கள் கடமை நேரத்தில் வெளியில் காசு வாங்கி தனிப்பட்ட பிழைப்பு நடாத்தும் மாபெரும் மோசடி ஊழலை தடுத்து நிறுத்த முதலில் வைத்திய சங்கம் முன்வரவேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.