Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்வாழும் தேசங்களில் மதவழிபாட்டுடன் கூடிய விழிப்புணர்வு போராட்டங்கள் ஏற்பாடு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Featured Replies

தமிழீழத் தாயகத்திலும், சிறீலங்காவிலும் இந்து, இஸ்லாமிய, கிறீஸ்தவ மக்களின் மதச்சுதந்திரத்திற்கும், வழிபாட்டு உரிமைக்கும் எதிராக, சிங்களபௌத்த இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் வன்முறைகளையும், அத்தமீறல்களையும் கவனத்தில் கொண்டு, தமிழர்கள் வாழும் நாடுகளில், மதவழிபாட்டுடன் கூடிய விழிப்புணர்வு போராட்டங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துவருகின்றது.

எதிர்வரும் (யூன்) 15 - 16 - 17ம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பல்வேறு நாடுகளிலும், சர்வமத வழிபாட்டுத் தலங்களில் , இதற்கான ஒழுங்குகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருவதோடு ,அனைத்து தமிழ் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழீழத் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு சமாந்திரமாக, தமிழர்கள் வாழும் நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்தவாரம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் மீதான, இனவாதிகளின் அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும் கண்டித்து, சாத்விகவழியிலான பிரார்த்தனை வடிவிலான போராட்டமொன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மன்னாரில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அடக்குமுறைகளுக்கும், இராணுவ அழுத்தங்களுக்கும் மத்தியிலும், தமிழீழத் தாயக மக்கள் மேற்கொள்ளும் இத்தகைய போராட்டங்களுக்கு வலுச் சேர்க்க வேண்டிய கடமை, புலத்தில் வாழும் மக்களுக்கு இருக்கிறதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் , தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த இனவாத ஆட்சியாளர்களினால் , மதரீதியாக கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் இச்செயற்பாடுகளை இனவொழிப்பின் தொடர்சியாக கருதவேண்டியுள்ளதென தெரிவித்துள்ளார்.

தமிழர் வாழும் தேசம் யாவும், நமது புதிய போர்களம் என்ற அடிப்படையில், உலகந்தழுவியரீதியில், தாயக மக்களுக்கு எமது தோழமையுணர்வினைத் தெரிவிக்க, தமிழர் வாழும் பல்வேறு நாடுகளிலுமுள்ள கிறீஸ்தவ, இஸ்லாமிய இந்து கோவில்களிலும் வழிபாட்டிடங்களிலும் மதவழிபாட்டுடன்கூடிய விழிப்புணர்வு போராட்டங்களாக இதுஅமையுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் + (41)76-541-63-26 / secretariat@tgte.org எனும் தொடர்பூடகங்கள் ஊடாக மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளமுடியுமென நா.த.அரசாங்கத்தின் செயலகம் தெரிவித்துள்ளது.

நாதம் ஊடகசேவை

Tamil News Circle

post-2864-0-68562900-1339509440_thumb.jp

நல்ல முயற்சி. இதன் மூலம் சிங்கள பயங்கரவாதத்தை சரியான இடங்களுக்கு எடுத்து சென்று விளக்கவேண்டும். அவை ஊடாக ஐ.நா. மனித உரிமை தொடர்களில் எமது பக்க நியாயங்களுக்கு பலம் சேர்க்கப்பட்டு தாயக மக்களுக்கு நீதி கிட்டவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.