Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க கனடாக் கிளையின் பெருவிழாவில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ulakathamil-news260612-150.jpg

[size=4]உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளை எதிர்வரும் யூலை 1ம் திகதியன்று கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடத்தவுள்ள சர்வதேச தமிழர் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீதரன் சிவஞானம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

அத்துடன் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜிம் கரிஜியானிஸ் ராதிகா சிற்சபைஈசன் மற்றும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு பாஸ் பால்கிசூன் மைக்கல் கொட்டியு ஆகியோரும் மார்க்கம் மாநகர சபையின் 7ம் வட்டார அங்கத்தவர் திரு லோகன் கணபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளாரகள்; என உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச ஊடகத்துறை பொறுப்பாளர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் தெரிவித்துள்ளார்.

[/size]

[size=4]

Ulakathamil-news260612-342-001.jpg[/size]

[size=4]

விழாவிற்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளையி;ன் தலைவர் திரு சிவா கணபதிப்பிள்ளை தலைமை தாங்கவுள்ளார். அத்துடன் இயக்கத்தின் சர்வதேசத் தலைவர் திரு வேல் வேலுப்பிள்ளை மற்றும் சர்வதேச தமிழ்க் கல்விப் பொறுப்பாளர் திரு வினாசித்தம்பி துரைராஜா ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

இவர்களில் நமது தாயக மண்ணிலிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் திரு ஸ்ரீதரன் சிவஞானம் மற்றும் திரு யோகேஸ்வரன் ஆகியோர் மேற்படி தமிழர் விழாவில் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற வகையிலும் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் முதன் முதலாக மேற்குலக நாடொன்றில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ப் பெண்மணி என்ற வகையிலும்; திரு ஜிம் கரிஜியானிஸ் கனடிய மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான சாசனத்தை தமிழாக்கம் செய்து அதை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கச் செய்தவர் என்ற வகையிலும் மாகாணப் பாரளுமன்ற உறுப்பினர் திரு மைக்கல் கொட்டியு அண்மையில் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்கச் செய்யும் மசோதாவை சமர்ப்பித்து உரையாற்றியவர் என்ற வகையிலும் மாநகர சபை உறுப்பினர் திரு லோகன் கணபதி கனடாவில் முதன் முதலாக தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரித்த பெருமைக்குரிய மார்க்கம் நகர சபையின் தமிழ் பேசும் அங்கத்தவர் என்ற வகையிலும் மதிப்பிற்குரியவர்களாக மேற்படி விழாவில் கலந்து கொள்வது கனடிய தமிழர் வரலாற்றில் அழிக்க முடியாத சாட்சியாக விளங்கும் விழாவாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்படி விழா 635 ஆனைனடநகநைடன சுழயனஇ ளுஉயசடிழசழரபா (குinஉh ரூ ஆனைனடநகநைடன) என்னும் விலாசத்தில் அமைந்துளள ஸ்காபுறோ ஸ்ரீ ஐயப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில் 01-07-2012 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10.00 மணிவரை நடைபெறும். கௌரவ விருந்தினராக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலச் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கம் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

அத்துடன் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளை நடத்திய திருக்குறள் மனனப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் மேற்படி தமிழர் விழாவில் ஒரு சிறப்பு அம்சமாக விளங்கும் என்றும் கூறப்படுகின்றது. அத்துடன் கனடா முழுவதும் கனடா தினம் கொண்டாடப்படுகின்றபடியால் கனடிய கொடியேற்றும் வைபவம் ஒரு சிறப்பம்சமாக நடைபெறும் என்று அறிவிக்கப்படுகின்றது.

பல கலை நிகழ்ச்சிகளும் பரிசளிப்பு அங்கு நடைபெறவுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு சிவா கணபதிப்பிள்ளை :416 899 6044

துரைராஜா: 647 829 4044

மற்றும் தவம்:647 500 3421

ஆகிய இலக்கங்களை அழைக்கவும்

http://www.seithy.co...&language=tamil[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.