Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரும்போடு மோதும் துரும்பர்கள்..!வாகை பத்திரிகை

Featured Replies

உறுதி என்ற பதத்திற்கு இரும்பை ஒப்பிடுவார்கள். ஆனால் அதன் புரிதலில் நம்மவரில் பலருக்குச் சரியான விளக்கம் இன்றிய நிலையிருக்கும் என்றால் அதில் மிகையில்லை.

ஏனெனில் எவ்வகை இரும்பானாலும் சில காலம் அது ஒரே இடத்தில் இருப்புக்கொள்ளுமாயின் அது துருப்பிடித்து மண்ணோடு மண்ணாகி விடும் என்பதே காலம் சொல்லும் கதை. அவ்வாறிருக்கையில் எவ்வாறு உறுதியை இரும்புக்கு ஒப்பிடுவது என்ற கேள்வி நம்மனத்தைக் குடையாமல் இல்லை.உண்மை என்னவெனில்; இரும்பு; ஒருபோதும் அதன் கனத்திற்காக உறுதியோடு ஒப்பிடப்படுவதில்லை. இரும்பானது, துருப்பிடித்து மக்கிப் போகும் இறுதிக்கணம் வரையிலும் அது இரும்பாகவே இருந்து அழிந்துபோகும், வேறு எந்தப்பொருளும் இறுதிவரை இரும்பைப்போல வாழ்வதில்லை என்பதாலேயே, இரும்பை ஒத்த மனவுறுதி வேண்டும் என்பார்கள் பெரியவர்கள். அத்தோடு இரும்பின் உருவத்தை மாற்றி எந்த உபகரணம் செய்யப்பட்டாலும், இரும்பு அதன் தன்மையிலிருந்து எப்போதும் மாறுவதில்லை என்பதும் ஒரு காரணமாகும். ஆகவே, எமது மனம், நாம் கொண்ட இலட்சியத்திலிருந்து எவ்வேளையிலும், ஏன் சாகும் தறுவாயில் கூட தடம் புரளக்கூடாது என்பதற்காகவும், எமது உடை நடை மாறினும், ஏன் உருவமே மாறினும் இலட்சியப்பற்றில் இருந்து மாறிவிடக்கூடாது என்பதற்காகவுமே ´´ இரும்பை ஒத்த மனவுறுதி வேண்டும்´´ என இரும்பை மனவுறுதிக்கு ஒப்பிடுவார்களே தவிர, இரும்பின் கனதிக்கும் , எமது மன உறுதிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதே உண்மை.

சரி இனி விடயத்திற்கு வரலாம்..., உலகத் தமிழர்களின்ஏகோபித்த ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்போராட்டம், இன்று ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில், அரசியல் வழியில் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. வெற்றிகளின் உச்சங்களில் நின்றபோது சாதித்திருக்க வேண்டிய அரசியல் வேலைப்பளுவை, இப்போது காலம் தமிழினத்தின் தலையில் தூக்கிவைத்திருக்கிறது. இது எவராலும் புறந்தள்ள முடியாத சுமை. ஆனால் தாயகத்தின் உறவுகளின் வாழ்வை மீட்க வேண்டிய நிலை ஒருபுறமும், தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட புலம்பெயர்க் கட்டமைப்புக்களை உடையாது பாதுகாக்க வேண்டிய அவசியச் செயற்பாடுகள் ஒரு புறமுமாக உந்தித் தள்ள, புலம்பெயர்த் தமிழினம் பாரிய அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து நிற்கிறது. இவையிரண்டிற்குமான செயற்பாடுகளே மிகவும் கடினமானவை. அதனோடு இணைந்து, தமிழின விடிவிற்கான அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் இன்றைய இளைய சமுதாயம் ஈடுபட்டிருக்கொண்டிருக்கும் நிலையிருப்பினும், வழிகாட்டல் அல்லது அதற்கான உந்துசக்தி என்பவை மிகப்பாரிய அழுத்தங்களுக்கு மத்தியிலேயே நிகழ்த்தப்படுகிறது. காரணம் புலம்பெயர்த் தமிழர்கள் மீது, ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் உளவியல் போர் தற்போது தமிழர்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுவதான் காரணமாக, எது சரி எது தவறு என்பதை அடையாளம் காண ஒருநீண்ட ஆராய்ச்சியே மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு இவ்வுந்து சக்திகள் தள்ளப்பட்டிருக்கின்றன.

ஒரே தலைமை, ஒரே குடை, ஒரே தேசியம் என்ற பெயரில் , இன்று புதிதுபுதிதாக பல மேடை நாடகங்கள், பல தெருக்கூத்துக்கள், ஏன் பல பிரமாண்டத் திரைப்படங்களே காட்சியிடப்படும் நிலையை புலம்பெயர் நாடுகளில் இலகுவாகக் காணக்கூடியதாகவிருக்கிறது. அதற்குக் காரணம். தமிழ்க்குடிமக்களின் புரியாத போக்கும், ஆராய்ந்து முடிவுபெறாத அவரசரத் தன்மையுமே ஆகும். இவ்வைகையான அதிரடி மாற்றங்களால், நாம் நன்மை பெறுகிறோமா இல்லையா என்பதை விட, ஸ்ரீலங்கா அரசாங்கமும் அதுசார்ந்த ஒட்டுண்ணிகளும் நான்றாகவே பயன்பெறுகிறார்கள் என்பது சாதாரண குழந்தைக்கும் புரியும் விடயம். உதாரணமாக ஒரு சிறிய கேள்வி..,எங்கே போகிறோம், எதற்காகப் போகிறோம் என்று தெரியாது , ஊர் ஊராய் அலையும் சாமியார்களை, வரவேற்று உபசரித்து உணவளிப்பது தமிழர்களின் பண்பாடு. ஆனால்,உணவருந்தி முடித்த கையோடு, அப்படியே எங்களது வீட்டினை நிர்வகிக்கும் பொறுப்பை அவர்கள் நம்மிடம் கேட்பார்களாயின், நம்மில் எத்தனை பேர் துணிந்து நமது வீட்டினைக் கையளிப்போம்...?........ புரிகிறது... இதற்கே நீங்கள் ஒத்துழைக்க மாட்டீர்கள் என்கிறபோது,, காலம் காலமாய்க் கட்டிவளர்க்கப்பட்ட ஒரு கட்டமைப்பினை, திடீரென்று வீட்டினுள் புகுந்த ஒரு திடீர்ச் சாமியாரிடம் எப்படிக் கையளிப்பது...? அவர் மந்திரங்கள் சொல்லலாம், மாயஜால வித்தைகள் புரியலாம், எங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்போவதாகக் கூறலாம்,,, எல்லாமே இருக்கட்டும், இல்லை நடக்கட்டும்,, முதலில் நம்மில் எத்தனை பேர்; நாம் நாமாக இருந்து, அவரின் போக்கை, அல்லது ஆதார அடையாளங்களை, அன்றி அவர் புரியும் மந்திர தந்திரங்களை உற்றுநோக்கித் தெளிவு பெற்றிருக்கிறோம்..? பதில் : ´´நிச்சயமாக யாரும் இல்லை´´ என்பதேயாகும். சாமியாரின் ஒரு நாள் பிரசங்கத்திலேயே மதி மயங்கி, காலம் காலமாய் வாழ்ந்திருந்த வீட்டினையும், அதுசார்ந்த தோட்டம், கிணறு முதலானவற்றினையும், எமது கையிருக்கும் சிறிய உண்டியலையும் அவரிடம் அவசரமாகக் கொடுத்துவிட்டு உடனடியாக உங்களை யாராகிலும் வெளியேறச் சொல்லின், தங்கள் உணர்ச்சிப் பிரவாகம் எப்படி இருக்கும்.....?

ஏற்றுக்கொள்ளப்பட முடியாத வாதங்களின் திணிப்பு, ஒரு போதும் நியாயமாக மாறுவதற்குச் சாத்தியமே கிடையாது.

இதே பாணியிலான திணிப்புகள் எமது போராட்டத்தின் மீது பலமுறை நிகழ்த்தப்பட்டுவிட்டது. ஆனால் அவ்வேளையில் எல்லாம் அவை, தேசியத்தலைவரின் செயற்பாடுகளின் மூலம் முறியடிக்கப்பட்டன. தேசியத்தலைவரின் கட்டளைகளை மதித்து, எமது இலட்சியப்பாதையை மதித்து அன்றைய நாட்களில் செயற்பட்ட போராளிகளின் மூலமே எமது விடுதலைப்போராட்டம் மிகவேகமாக வளர்ந்தது. அவை போன்ற சில உதாரணங்களை நாம் இங்கே பார்க்கலாம்.

இந்தியாவிற்குப் பேச்சுவார்த்தைக்கென அழைக்கப்பட்ட தேசியத்தலைவர், இராசீவ்காந்தியின் குள்ளநரித்தனத்தின் மூலம் சிறைவைக்கப்பட்டு அவர் மீது, சில அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. சம நேரத்தில், தேசியத்தலைவர் கூறியதாகக் கூறி, ஈழத்தில் நிலைகொண்டிருந்த போராளிகளின் ஆயுதங்களை மீளப்பெறுவதற்கு இந்தியா முயற்சித்தது. ஆனால், கிட்டண்ணா மற்றும் ஏனைய முன்னணித் தலைவர்கள் அதை சிறிதும் ஏற்றுக்கொள்ளவில்லை. தலைவர் நேரடியாகச் சொன்னால் மட்டுமேயன்றி, எவ்வித சூழ்நிலையிலும் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட மாட்டாது என்று உறுதிபட அறிவித்திருந்தார்கள். தேசியத்தலைவர் அவ்விடத்தில் இல்லாவிட்டாலும், தலைவரின் எண்ணம் எவ்வாறானதாக இருக்கும் என ஊகித்துச் செயற்படும் அருமையான வீரர்களினால் தான் எமது போராட்டம் நசுக்கப்படாது காக்கப்பட்டது. இதுவே உண்மையான புலிவீரர்களுக்குரிய அழகாகும். ´´அண்ணை இல்லையெண்டால் திண்ணை எனக்கு´´ என்று சொல்வழக்குப்போல அன்றைய நாட்களில் எவரும் போராட்டத்தை நகர்த்த முயற்சிக்கவில்லை.ஆனால் அதே தலைவர், ஈழமண்ணை வந்தடைந்து, இந்தியாவை நம்பி நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கலாம் என்று கூறிய மறுகணமே, அனைத்துவீரர்களும் அதற்கு அடிபணிந்து, எவ்வித மறுகேள்வியுமின்றி ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாரானார்கள். இங்கே ஒரு உண்மையான புலிவீரனுக்குரிய ´´கட்டளைக்குக் கீழ்ப்படிதல்´´ எனும் பாங்கு அழகாகக் காட்டப்படுகிறது. ஆங்கிலத்தில் இதனை இன்னும் அழுத்தமாக ´´ order carryout´´ என்று கூறுவார்கள். அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு கட்டளைக்குக் கீழ்ப்படிதல் பற்றி தனிவகுப்பே நடாத்தப்படுகிறது. ஏனெனில், ஒரு படைக்குரிய கட்டளை வழங்கல் எங்கே மீறப்படுகிறதோ, அங்கே தோல்விக்கான கதவு தட்டப்படுகிறது என்றே அர்த்தம் கொள்ளப்படுகிறது.

சார்ல்ஸ் அன்டனி என்ற லெப்.சீலன் பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள். தேசியத்தலைவரை விட வயதில் மூத்தவராக இருந்தபோதிலும், தேசியத்தலைவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அருமையாகச் செயற்பட்ட ஒரு வீரன் அவர். தன்னைச் சுட்டுவிட்டு, ஆயுதத்தை எடுத்துச் சென்று தம்பியிடம் கொடுக்கும்படி தன்னோடு நின்ற சகவீரனைப் பணித்த தளபதி. தனது இருப்பைக்காக்க அவர் அன்று முயன்றிருந்தால், எமது போராட்டமும் வீரர்களின் மறைவிடமும் எப்போதோ காட்டிகொடுக்கப்பட்டிருக்கும்.

தேசியத்தலைவர் உருவாக்கிய விடுதலைக்கட்டமைப்புக்கள் எவையும், இதுவரைக்கும் கலைக்கப்பட்டதாக வரலாறு இல்லை. ஏனெனில் அவர் தூரநோக்குடைய சிந்தனையுடனேயே ஒவ்வொரு கட்டமைப்பையும் உருவாக்கியிருந்தார். அதனால் தான் ஒவ்வொரு கட்டமைப்புக்களினுடைய செயற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.விதிவிலக்காக, ´´பிரதித்தலைவர்´´ என்ற பதவி வழங்கப்பட்ட மாத்தையா என்றழைக்கப்பட்ட மகேந்திரராஜா என்ற மனிதன் புரிந்த கீழ்த்தரமான செயற்பாடுகளின் பின், பிரதித்தலைவர் என்ற பதவி இல்லாதொழிக்கப்பட்டது. இது தவிர்ந்த வேறு எந்த நிலையும், கட்டமைப்பும் இதுவரை இல்லாது செய்யப்படவில்லை.

இப்போது, இன்றைய நாட்களில் எமது விடுதலைப்போராட்ட வழி பற்றிச் சிறிது நாம் சிந்திக்கலாம். முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களுக்குச் சிறிது முன்பதாக, சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட குமரன் பத்மநாதன் என்பவர், தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை, தவறான வழியில் பிரயோகித்தமையே இன்றைய அதி உச்ச குழப்பங்களிற்கான முதல்விதை என்பதை எவரும் மறுக்கமுடியாது. சர்வதேச விவகாரங்களைக் கவனிக்க நியமிக்கப்பட்ட நபர், தலைமைப் பதவிக்கான அவாவினைக் கொண்டிருந்தார் என்பது இன்றைய அவரது செயற்பாடுகள் மூலம் நன்றாகத் தெளிவுபடுத்தப்படுகிறது. இங்கே கட்டளை என்பதும், போராளிக்குரிய பண்பு என்பதும், அப்பட்டமான மீறப்படுகிறது என்பது தெளிவு. ஒரு வகையில் அவர் போராளி அல்ல என்று ஒருசிலர் முரண்பாடான கருத்தைக் கொண்டிருந்தாலும், விடுதலைக்குரிய பணியில், முன்னைய நாட்களில் முற்றுமுழுதாகத் தன்னை இணைத்துகொண்டவர் என்பதன் காரணமாக, நிச்சயமாக அவர் போராளிக்குரிய பண்புகளைக் கொண்டிருந்திருக்க வேண்டும். அவர் சுயலாபங்களுக்காகத் தன்னை மாற்றிக்கொண்டதன் விளைவுகளை நாம் இன்று நன்றாகவே அனுபவிக்கிறோம்.

அதன் பின்னதாக தாயகத்தில் இருந்து புறப்பட்ட ஒரு சிலகுழப்பவாதிகள் புலம்பெயர்நாடுகளில் வெளிப்படுத்திய தவறான கருத்துக்களும், புலம்பெயர் நாடுகளில் அமைக்கப்பட்டிருக்கின்ற தாயகக்கட்டமைப்புக்களின் மீது அவர்கள் நிகழ்த்திய தவறான வார்த்தைப்பிரயோகங்களும் நம்மை நாமே சிதைத்துக்கொள்ளும் நிலையை உருவாக்கிவிட்டன. இப்போது....; முன்னைய வீரர்களாகிய கிட்டண்ணா போன்ற முன்னணிப் போராளிகளுக்கும், இன்றையநாட்களில் தம்மைப் போராளிகள் என்று கூறிக்கொண்டு, புலம்பெயர் நாடுகளில் குழப்பங்களை உருவாக்கிவரும் ஒரு சில தமிழர்களிற்குமான வேறுபாடுகளை நாம் இங்கே நன்றாகவே புரிந்துகொள்ளமுடியும். தேசியத்தலைவரின் அறிவுறுத்தல் ஏதுமின்றி, தாம் நினைத்த போக்கில் ஆக்குதல் அல்லது அழித்தல் போன்ற திணிப்புகளைச் செய்வதற்கான தகுதியை இவர்களிற்குக் கொடுத்தது யார் என்ற கேள்வி உங்கள் எவரது மனங்களிலும் எழவில்லையா...?

நம் தாயகமண்ணின் வடுக்களோடு நாம் எழுந்து நிற்பதற்கு முன்பதாகவே, இரண்டாவது திணிப்பு புலம்பெயர் நாடுகளில் மேற்கண்டவாறு நிகழ்த்தப்பட்டுவிட்டது. சரி, தவறு, என்ற கோட்பாடுகளுக்கு அப்பால் இது சரி, இது தவறு என்று பிரித்துப்பார்க்குமளவிற்கு இக்குழப்பவாதிகளுக்கான தேவை என்ன என்பதைப் புலம்பெயர்த் தமிழர்களாகிய நாம் புரிந்துகொண்டோமா என்பது கேள்விக்குறி. நம்மை நாமே முதலில் சுயபரிசோதனை செய்துகொண்டு, அதற்குப் பின், எது சரி, எது தவறு என்ற கோடுகளுக்குள் நம்மைத் திணித்துக்கொள்ளலாம்.......................

-வசந்தன் -

நன்றி வாகை பத்திரிகை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.