Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூதூரில் கொல்லப்பட்ட தொண்டு நிறுவன ஊழியர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க பிரான்ஸ் மீண்டும் வலியுறுத்தல்.

Featured Replies

2006ஆம் ஆண்டு மூதூரில் கொலை செய்யப்பட்ட தொண்டர் நிறுவனப் ஊழியர்கள்; 17 பேரின் குடும்பங்களுக்கும் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை கொழும்பிலுள்ள பிரெஞ்சு தூதரகம் வலியுறுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரான்ஸின் ‘பட்டினிக்கு எதிரான அமைப்பு என்ற அரசசார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிவந்த இந்த 17 பேரும் மூதூரில் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான யுத்தத்தின்போது கொலை செய்யப்பட்டிருந்தனர். திருகோணமலையில் அதே வருடத்தில் மற்றுமொரு சம்பவத்தில் 5 மாணவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரின்போது, அரசாங்க தூதுக்குழுவினர், இவ்விரு சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கும் இணங்கினர்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரணை செய்யுமாறு பொலிஸாருக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. பொலிஸார் மீள் விசாரணையை ஏற்கெனவே மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்த கொழும்பிலுள்ள பிரெஞ்சு தூதரகம், இவ்வழக்குகளின் விசாரணையின் முன்னேற்றத்தை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் விசாரணை செய்தது. இதன்படி கொலை செய்யப்பட்ட தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 17 பேரின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின்போது பிரெஞ்சு தூதுவர் கிறிஸ்ரின் ரிபிச்சொன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் பரிந்துரைத்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதன் மூலம் இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தத்தை தவிர்த்துக்கொள்ள முடியுமென திணைக்கள அதிகாரியொருவர் கூறினார். இது தொடர்பாக பல சர்வதேச அமைப்புகளின் முன்னிலையில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச பொதுமன்னிப்புச்சபை இப்பிரச்சினையை எழுப்பியிருந்தன.

http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3/

[size=4]இந்தக்குடும்பங்களுக்கு நட்டஈடு கொடுப்பதுடன் மட்டுமல்லாது அவர்களுக்கு நீதியும் அத்துடன் கொடுக்கப்பட்ட பணத்தை [/size]

[size=4]மீண்டும் அரசே பயமுறுத்தி பெறாமலும் சர்வதேசம் பார்க்கவேண்டும். ஒரு பெயருக்கு நட்டஈடு கொடுத்ததாக அமைந்து விடக்கூடாது. இல்லாவிட்டால் உதவி செய்யப்போய் அவர்களின் குடும்பங்களுக்கு ஆபத்தை தேடி தந்தாக அமைந்துவிடும்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.