Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரும்புலிகள் ஈழத்தின் தற்காப்பு கவசங்கள்!(படங்கள்)

Featured Replies

வீசிப்போகும் புன்னகை இளமையாய் கிடக்கும் நடுங்கும் காலம்.நான் என்பது நான் அல்ல அது நீ என்பதாய் அவர் தோழமை…கரும்புலிகள் நாள் நெல்லியடியில் மில்லர் தீமூட்டிய தீராத நாள்தான் எங்கள் கரும்புலிகள் நாள் விடுதலைப்போராட்ட வரலாற்றில் இன்றும் கரும்புலிகளின் பக்கங்களை யாராலும் புரட்டி பாத்துவிடமுடியாது.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் நேரிய வளிகாட்டலின் கீழ் நேரடி நெறிப்படுத்தலின் கீழ் வளர்தெடுக்கப்பட்ட எங்கள் கரும்புலி வீரர்களின் வீர வரலாற்றினை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

black_tigers_-1024x346.jpg

தமிழீழத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் யாழ்ப்பாணம் நெல்லியடி மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிங்களப்படையினர் மீது 1987 ஆண்டு யூலை 5 ஆம்நாள் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு சென்று தாக்குதல் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குத் தன்னைத் தயார் செய்த கரும்புலிதான் கப்டன் மில்லர். இவன் தான் தமிழீழத்தின் முதல் முதல் கரும்புலி தாக்குதலை நடத்தில வீடுதலைப்புலிகளின் வீரத்தினை உலகறிய செய்த வல்லவன்.

அதன் பின்னர் கரும்புலிகள் அணிவலுப்பெற்று தரைக்கரும்புலி கடற்கரும்புலி எனவும் பின்னர் வான்கரும்புலிகள் எனவும் தலைவர் அவர்களால் வகுக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற கரும்புலிகள் தயாரானாhர்கள்.

ஆழ்கடலைக்கூட அளக்க நேரிடலாம் எனினும்நீலக்கடலில் வீரப்புலிகளின் ஈகங்களையும் சோகங்களையும் யாராலும் அளக்கமுடியாது.

மேஜர் காந்தரூபன் மேஜர் வினோத் கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வெடிமருந்து நிரப்பிய படகொன்றினால் கட்டளைக் கப்பலொன்றின்மீது மோதி முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலைச் செய்தனர். விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் அணியின் வளர்ச்சியும் அதன் செயற்பாடுகளும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் என்றும் நிகழந்திராத அற்புதங்களையும் ஈகங்களையும் எடுத்துக்காட்டியுள்ளது.

leader-ot-tamileelam-498-copy-1024x759.jpg

நீரடி நீச்சல் பிரிவாக எதிரியின் கடற்படைகலங்கள் மீது நீந்தி சென்று வெடிமருந்தினை பொருத்தி தாக்குதல் நடத்திய கடற்கரும்புலிகளின் நினைவுகள் என்றும் எங்கள் மனங்களில் நிலைத்திருக்கும்.

தொழில் நுட்ப வளர்சியின் படியில் கடற்புலிகள் உயர்வினை எந்த வல்லாதிக்க நாடுகளும் எதிர்கொள்ளமுடியாத சக்திகளாகவே கடற்கரும்புலிகள் காணப்பட்டார்கள் எதிரியின்கண்களுக்கு மண்ணினை தூவிட்டும் கடற்கல கண்காணிப்பு கருவிகளான றேடர் கருவிகளுக்கு தண்ணி காட்டிவிட்டு இலக்கினை சென்று தாக்கிய எங்கள் கடற்கரும்புலிகளின் நினைவுகள் இன்றும் எங்கள் மனங்களுக்குள் இறுதியாக முள்ளிவாய்க்கால் போரின் போது மக்கள் கூடிநின்ற கடற்கரை மண்ணில் இருந்து படகேறிய கரும்புலிகள் கடலிலே தீயது மூட்டிய வீரத்தினை இன்றும் எங்கள் கண்முன்னே நிறுத்துகின்றோhம் இவ்வாறுதான் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் கடற்கரும்புலிகளின் வீர வரலாறுகள் என்றும் தமிழர்களின் மனங்களில் நிலைத்து நிக்கின்றது.

நிழற்கரும்புலிகள் இன்றும் எங்களுக்கு வழிகாட்டியாக நிக்கின்றார்கள்.

இவ்வாறு விடுதலைப்போராட்டத்தில் கரும்புலிகள் மறுபக்கத்தில் மறைமுக கரும்புலிகளாக சிங்களவன் குகைகளுக்குள் வெடித்து கொண்டார்கள் அவர்கள் தான் இன்றும் நிழற்கரும்புலிகளாக கரும்புலிகள் நினைவு சுமந்து வாழ்கின்றார்கள் இன்றும் நிழற்கரும்புலிகளின் ஈகம்கள் அவர்களின் அர்ப்பணிப்புக்களை எழுதிவிடமுடியாது என்றும் எங்கள் மனங்களுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

2012-copy-1024x662.jpg

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஒவ்வொரு கட்ட நகர்வுகளின் பின்னாலும் கரும்புலிகளின் வீரமும் அவர்களின் ஈகமும் நிலைபெற்றிருக்கின்றது தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் ஒவ்வொரு கட்ட தாக்குதல்களாக இருந்தாலும் ஒவ்வொரு கட்ட ஈழப்போர்களாக இருந்தாலும் கரும்புலிகளின் வடிவம் நாளுக்கு நாள் வளர்ச்சி கொண்ட எழுச்சி கொண்ட வடிவமாக கடலிலும் தரையிலும் எதிரிமீது தாக்குதல்களை நடத்தி விடுதலையின் வரலாற்றினை நிலைநாட்டினார்கள் இதனால்தான் தலைவர் அவர்கள் கரும்புலிகள் எமது தேசத்தின் தூண்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்படிப்பட்ட விடுதலைப்போராட்ட வரலாற்றில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு கரும்புலிகளின் வளர்சிகளும் உயர்ந்து சென்றது என்றால் அது மிகையல்ல.

வானோடி எங்கள்கரும்புலி வீரர்கள் நடத்திய சாதனையினை இந்த உலகந்தான் மறந்திடுமா.

முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்ட நாட்களில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் வளர்ப்பின் கீழ் உருவான எங்கள் வான் கரும்புலிகளை உலகறிய செய்தவர் எங்கள் தேசியத்தலைவர் அவர்கள்.

எதிரியின் இலக்குகளை துல்லியமாக தாக்கிய எங்கள் வான்கரும்புலி கேணல ரூபன் லெப்ரினன் கேணல் சிரித்திரன் ஆகியோரை நாங்கள் என்றும் எங்கள் மனங்களில் இறுக பற்றுகின்றோம். அவர்கள் பன்னாட்டு தமிழர்களுக்காக இறுதியாக கூறிய வார்த்தைகளை நாங்கள் மறந்துவிடகூடாது.

vot.jpg

அவர்களின் நினைவுகளை சுமந்து என்றும் ஈழவிடுதலைக்காக நாங்கள் உழைக்க வேண்டும்.

போராட்ட வடிவங்கள் மாறாலாம் ஆனால் எமது இலட்சியம் மாறப்போவதில்லை என்ற தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக கரும்புலிகளின் வடிவங்களும் மாற்றம் பெற்றுக்கொண்டே போனது என்பதை முள்ளிவாய்க்கால் போர் உணர்தி நிக்கின்றது.

ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் வரிசையில் இணைக்கப்பட்ட கரும்புலிகளாவும் இன்றும் இணைக்கப்படாத நிழற்கரும்புலிகளாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் கரும்புலிகளின் இலட்சியங்கள் எல்லாம்,கனவுகள் எல்லாம் தமிழீழம் தான் என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தமிழீழத்திற்காக எத்தனை வடிவங்களில் கரும்புலிகள் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்தார்கள் என்பதை நினைத்துப்பார்க்க மெய்சிலிர்க்கின்றது.

முள்ளிவாய்க்கால் போரின் போது எத்தனை எத்தனை கரும்புலி மறவர்கள் எவ்வாறான வடிவங்களில் தங்கள் வீரங்களை காட்டினார்கள்,களத்தில் போராளிகளோடு போராளிகளாக நின்ற கரும்புலி மறவர்கள் எதிரிக்கு இழப்பினை ஏற்படுத்த வேண்டும் என்தற்காக தனது இலக்கினை நோக்கி நகர்ந்து வெடிக்கின்றான்,எத்தனை பெண்போராளிகள் தங்களை கரும்புலிகளாக மாற்றிக்கொண்டு அண்ணா,அக்கா போகின்றோம் என்று சொல்லிவிட்டு சென்றவர்கள் போரின்போது களத்தில் அங்கங்களை இழந்த எத்தனை போராளிகள் கரும்புலிகளாக மாறினார்கள் என்பது மெய்சிலிர்க்கவைக்கும் செயல்.

கரும்புலிகள் அணிக்கான இறுதி போர்பயிற்சியின் போது உந்துருளியில்,பிக்கப் வாகனங்களில் சென்றுகூட தங்கள் இலக்கினை அடைந்த வீரமறவர்கள்தான் எத்தனை இத்தனைக்கும் மேலாக பன்னாடு ஒன்றில் இருந்து ஈழத்திற்கு வந்து முள்ளிவாய்க்கால் மண்ணை முத்தமிட்ட அந்த கரும்புலி மறவன் இன்றும் நிழற்கரும்புலியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றான்.

Black-Tiger_Leader-04.jpg

தலைவர் அவர்களின் இறுதிகட்ட நகர்விற்காக காத்திருந்த கரும்புலிகள் தான் எத்தனை எத்தனை அவர்களின் இலக்குகள் இன்றும் காத்திருக்கின்றன. எங்கள் வாழ்விற்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த வீர மறவர்களாம் எங்கள் கரும்புலி மாவீரர்களின் நினைவுகள் என்றும் தமிழர்கள் மனங்களில் விதைக்கப்பட்ட ஈழ விடுதலையின் விதையா இன்றும் வளர்ந்துகொண்டிருக்கின்றது நாளைய விடிவிற்கா.

http://thaaitamil.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1/

[size=4]ஐ. நா. சாசனப்படி எந்த இனத்திற்கும் சுயநிர்ணய உரிமைக்காக போராடும் உரிமை உள்ளது. அதில் ஆயுதப்போரட்டமும் அடங்கும். அந்த வகையில் தமிழர் தரப்பும் முப்பது வருடங்களுக்கு மேலாக போராடியது. அந்த உன்னத போராட்டத்தில் பல தடைகளை எதிரிகள் போட்ட போழுது அவற்றை நீக்கும் ஒப்பற்ற உன்னத தற்கொடைகளை மேற்கொண்டவர்கள் இந்த கரும்புலிகள். [/size]

[size=1]

[size=4]இந்த அற்புத கொடையாளிகளை தமிழ் பேசும் நல்லுலகம் என்றும் நன்றியுடன் நினைவு கூறும். [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.