Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூ 20 - 15 க்கு ஐஸ்க்ரீம், தண்ணீர் பாட்டில் - ரூ 1 க்கு அரிசி விலை உயர்த்தினால் காட்டுக் கத்தலா..? ப.சிதம்பரம்..! உள்துறை ப.சி., சரியாகத் தானே சொல்கிறார் - ஈழதேசம்..!

Featured Replies

ரூ 20 - 15 க்கு ஐஸ்க்ரீம், தண்ணீர் பாட்டில் - ரூ 1 க்கு அரிசி விலை உயர்த்தினால் காட்டுக் கத்தலா..? ப.சிதம்பரம்..! உள்துறை ப.சி., சரியாகத் தானே சொல்கிறார் - ஈழதேசம்..!

[size=3]

eeladhesam%20seythi%20aaivu.jpgரூ ௨௦ க்கு ஐஸ் கிரீம் - ரூ. 15 க்கு தண்ணீர் பாட்டில் - ரூ ஒண்ணு அரிசி விலை ஏற்றினால் தப்பா..? என்று நேற்று பெங்களுருவில் காட்டமாக கேள்வி கேட்டார். நடுத்தர மக்களை நோக்கி பத்திரிக்கை க்ரூப்புகளிடம். நாடு முழுதும் சுமார்

500 பள்ளிகள் புதிதாக கட்டியுள்ளோம்.ஒவ்வொரு நாளும் சுமார் 11 கோடி குழந்தைகள் இலவச மத்திய உணவு. இலவச கட்டாய கல்வி, தேசிய தொழில்நுட்ப நிறுவனம், மின்துறையில் 22 ஆயிரம் மெஹா வாட் உற்பத்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது போன்றவைகள் எல்லாம் மன்மோகன் சிங் அரசின் சாதனைகள் என்று கூறினார். அப்படியே விட்டுவிட்டால் நன்றாக இருக்காது என்று கருதி, ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியை பற்றி பெங்களூரு காங்கிரஸ்காரர்களிடம் இவ்வாறு கூறினார்.

2008 ம் ஆண்டு நிதி நெருக்கடியில் தப்பித்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சி இருந்தது ஆனால் கடந்த ஆண்டு குறிப்பிட்ட வளர்ச்சி இல்லை. சீனா மற்றும் சில நாடுகளைப் போல் வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. ஆனால் விரைவில் மிக உயர்வான வளர்ச்சிப் பாதையை நோக்கி நம் நாடு செல்லும் என்று வேறு கூறினார். மேற்கண்ட விசயங்கள் பற்றியெல்லாம் விட்டுவிட்டு மீடியா க்ருப்களும், பா.ஜ.க.க்ரூப்களும் மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் செய்பவர்களும் மிடில் கிளாஸ் பற்றி பேசியதை பெரிதுபடுத்தி இருக்கிறார்கள் என்கிறது தமிழக காங் - ஐ க்ரூப்கள். காங்கிரஸ் கட்சியால் தான் நாடு இன்று இந்த வளர்ச்சி அடைந்திருக்கிறது. நாடு வளர்ச்சி அடையும் பொழுது சிறு சிறு இழப்புகள் நடக்கலாம். சிறு சிறு இழப்புகளை பெரிதுபடுத்தி அரசியல் செய்வதே இந்த காங்கிரஸ் எதிர்ப்பு கூட்டத்திற்கு முழுநேர வேலை என்கிறது மற்ற மாநில காங் -ஐ க்ருப்கள். மற்றபடி காங் - ஐ ன் காலுகளை கெட்டியாகப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கோ, யாருக்கோ எவருக்கோ சொன்ன விசயங்கள் இவையெல்லாம் என்று முகங்களை வேறுபக்கம் திருப்பிக் கொண்டுள்ளார்கள்.

அவுட் லுக் பத்திரிக்கை இவ்வாறு கூறுகிறது, கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற ஊழல்களின் ஒட்டு மொத்த மதிப்பு சுமார் 75 லட்சம் கோடிகள் என்று கூறுகிறது. இந்தப் பத்திரிக்கைக்கு தெரியாமல் இருக்கும் ஊழலில் இன்னும் எத்தனை லட்சம் கோடிகளை சேர்க்கலாம் இந்த பட்டியலில்..? என்பது வேறு விசயம். கோடிக்கணக்கில் தன் சொந்த நாட்டு மக்களை கொன்றொழித்தல் என்று இல்லாமல், சென்ற ஆண்டுகளில் பக்கத்தில் உள்ள இலங்கையில் லட்சக்கணக்கில் மக்களை விஷ வாயு குண்டுகளை போட்டு கொன்றொழித்தல் என்றெல்லாம் ஒரே அக்கிரமும் அநியாயமும் செய்து கொண்டிருக்கையில் எல்லாம் பேசாமல் இருந்த இந்த மிடில் கிளாஸ் கூட்டம், இப்பொழுது மட்டும் ஏன் கத்துவானேன்..? கதறுவானேன்..? என்ற ப.சி.யின் கோபத்தில் நியாயம் இல்லாமல் இல்லை என்கிறார்கள் ஒரு சிலர்.

அண்ணா ஹசாரேயின் பின்னால் திரண்ட நடுத்தர மற்றும் உயர் நடுத்தர கூட்டம் கண்ட, சாதாரண ஏழை எளிய மக்கள் இவ்வாறு நம்பினார்கள். ஆகா, நமக்கு ஒரு நல்ல எதிர்காலம் வரப்போகிறது என்று, என்ற அவர்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்த நடுத்தர கூட்டம்..! இப்பொழுது மட்டும் ஏன் கூச்சல் போடுவானேன்..? கூப்பாடு போடுவானேன்..? என்கிறார்கள் ஒரு சிலர்.

பிறகு, பொதுவில் ஏழை எளிய மக்களை என்றோ மூலையில் ஒதுக்கி தள்ளி, கொன்று அழித்துக் கொண்டிருக்கும், கொன்றொழிக்க துடித்துக் கொண்டிருக்கும் இந்தியாவில் உள்ள அணைத்து அரசியல் ஓட்டுக் கட்சிகள், அதன் தலைவர்கள் என்று இருக்க, அவர்கள் பிறகு யாரைப் பற்றிதான் பேசுவார்கள்..? கவலை அடைவார்கள்..? உயர் தர நடுத்தர மக்களைப் பற்றியா..? இந்த உயர் தர நடுத்தர மக்களின் வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்து கொண்டிருக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் பற்றியா..? என்றைக்கு ஏழை பாழை குரல் கொடுத்திருக்கிறான்..? ஏழை பாழை என்ன செய்வான்..? தற்கொலை தவிர, இல்லையென்றால் கடந்த ஐந்தாண்டு அல்லது பத்து ஆண்டு காலத்தில் ஐந்து லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பார்களா...? தற்கொலை செய்ய அஞ்சும் வேற்று மாநில விவசாயிகளை,தமிழக நகர தெருக்களில் குடும்பம் குடும்பமாக பிச்சை எடுப்பதை நீங்கள் காணலாம். தெருவில் போய் வரும் மக்களை கூர்ந்து பார்க்கும் எவரும் இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். என்கிறார்கள் ஒரு சிலர்.

அரசியல் கட்சி தலைவர்களோ ப.சி.யின் பக்கம் தான் நிற்கிறார்கள். எதிர்கட்சிக்காரன் காங் - ஐ கூட்டம் சொல்லுவதைப்போல அரசியல் செய்கிறார்கள். எனவே, நடுத்தர கூட்டம் தான் அரசியல் பேசுகிறது. நியாயம் பேசுகிறது. கருத்து சொல்கிறது, அதையும் மீறி போராட்டம் நடத்துகிறது. இவர்கள் வாங்கும் தண்ணீர் பாட்டில் இன்று இந்தியாவில் எவ்வளவு விற்பனையை எட்டி இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா..? ஐஸ் கிரீம் வருமானம் மொத்தம் எவ்வளவு இந்தியாவில் என்று தெரியுமா..? ஐஸ்க்ரீம் வாங்குபவன், தண்ணீர் பாட்டில் வாங்குபவன் எல்லாம்,ஒரு ரூபாய் அரசி விலையை உயர்த்தினால் ஏன் கூச்சல் போடுகிறாய்..? சத்தம் போடுகிறாய் என்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்.

ஒருவேளை, இந்த மாதிரி அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களை ஒடுக்குவதற்குத் தானோ என்னவோ, தேசிய பயங்கரவாத ஒடுக்குமுறை சட்டம் கொண்டுவர காங் - ஐ அரசு துடித்துக் கொண்டிருக்கிறதோ..? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சங்கிலிக்கருப்பு

[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.