Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கழலை மாணவர் ஒன்றிய செயலாளராக தர்சானந் தெரிவு.

Featured Replies

யாழ் பல்கழலை மாணவர் ஒன்றிய செயலாளராக தர்சானந் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்களின் அடையாளமாக திகழும் கல்வியை போதிக்கும் தமிழர் தாயகத்தின் உயர் கல்விக் கூடமான யாழ் பல்கலைக் கழக்கத்தில் இயக்க சக்தியில் பெரும் செல்வாக்கு செலுத்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தெரிவு (11-07-2-12) அன்று நடைபெற்றது.

இன்றைய நிலையில் பல ஊடுருவல்களுக்கு மத்தியில் தமிழ் கலை பண்பாடு கல்வி மற்றும் இருப்புக்காக பாடுபடக்கூடிய ஒரே நிலையமாகவும் விடுதலை உணர்வும் உரிமைக்கான வேட்கையும் கொண்ட இளம் சமுதாயத்தை போதிக்கும் கல்விச் சாலையாகவும் பார்க்கப்படும் இவ் கல்விச்சாலையின் ஒவ்வொரு நிகழ்வும் மாணவர்களின் ஒவ்வொரு அசைவும் தமிழ் புலைமையாளர்களால் உற்றுநோக்கப்பட்டு வரும் நிலையில் யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் மிக முக்கியமான ஒரு இயங்கு தளமாக பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று யாழ் பல்கலைக் கழக கலைத்துறை பட்டதாரி மாணவனும் அரசறிவியல் சிறப்புக்கலை மாணவன் தர்சானந் கடும் போட்டிக்கு மத்தியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைகாசி 2009 இன் பின்னர் உலகத் தமிழ் மக்கள் நினைவு கூரும் இனப்படுகொலை வாரத்தை நினைவு கூர்ந்து கொண்டிருந்தவேளை சிறீலங்கா படைப்புலனாய்வாளர்களின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தர்சானந் இழையில் உயிர் தப்பியதை நினைவு கூர்ந்த மாணவர்கள் தங்களுக்கு சிறந்த ஒரு செயற்பாட்டாளர் ஒன்றிய செயலாளராக கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், தங்களது ஒத்துழைப்பை மாணவர்

ஒன்றியத்துக்கு வழங்க தாம் உறுதி எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இவ் ஒன்றிய உறுப்பினர் தெரிவில் விலைபோன சிலரும் குழப்பங்களை விளைவித்து மாணவர் ஒன்றியத்தை விற்க முயன்றதாகவும், அவர்களின் முயற்சி கைக்கூடாத நிலையில் மாணவர்கள் ஒன்று திரண்டு எதிரியின் திட்டத்தை முறியடித்து விலைபோனவர்களை விரட்டி செற்பாட்டாளர் ஒருவரை தெரிந்தெடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நிலையில் முழு நேர அரசியல் வாதிகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் கல்வி கலாச்சார இருப்புக்கள் மற்றும் இன்னோரன்ன விடயங்கள் பற்றிய சிந்தித்து கொண்டிருப்பது பல்கலைக்கழ மாணவர்கள் என்னும் நிலையில் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் பிரித்தாளும் தந்திரங்களுக்கு மத்தியில் சிறந்த தமிழனச் செயற்பாட்டாளரான மாணவர் ஒன்றியச் செயலாளரான தெரிவு செய்யப்பட்டுள்ள தர்சானந்துக்கு தாய்த்தமிழ் இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் தமிழ் மக்களின் உயிர்காப்பு பணியில் இருந்து உரிமை காப்பு பணிவரை தொடர யாழ் பல்கலை மாணவர்கள் உறுதியெடுத்து செயற்பட வேண்டிநிற்கின்றது.

http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/

எங்கள் வாத்துக்களை தெரிவிக்கிறோம். அவரது செயல்பாடுகள் எம் தாயாக மக்களுக்கு வலுசெர்க்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]வாழ்த்துக்கள் [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.