Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சப்பரகமுவ தமிழ் மக்களின் புதிய விடியலுக்காய் சேவல் சின்னத்தில் ஒன்றிணைந்த குரல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]

18821422arumugan-thondaman.jpg[/size]

சப்பரகமுவ தமிழ் மக்களின் புதிய விடியலுக்காய் சேவல் சின்னத்தில் ஒன்றிணைந்த குரல்!

[size=4]

இலங்கையில் நடக்கவுள்ள சபரகமுவ மாகாணசபைத் தேர்தலில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் முயற்சியில் மலையகத்தில் பிரதான அரசியல்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் நடந்துள்ள சந்திப்பின்போது இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும், மறைந்த சந்திரசேகரன் உருவாக்கிய மலையக மக்கள் முன்னணியும் இன்னும் சில மலையகத் தமிழ்க் கட்சிகளும் தமது கட்சியுடன் கூட்டுசேர்ந்து தமது கட்சியின் சேவல் சின்னத்திலேயே போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் கூறினார்.

சபரகமுவ மாகாணத்தில் உள்ள கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் உள்ள கணிசமான தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கவிடாமல் அங்கு நீண்டகாலத்துக்குப் பின்னர் தமிழ்ப் பிரதிநிதித்துவம் ஒன்றை உருவாக்குவது தான் தமது நோக்கம் என்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

ஆளுங்கட்சியில் பங்காளிக் கட்சியாக இருக்கின்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எதிரணியில் இருக்கின்ற மனோ கணேசன் தலைமையிலான கட்சியுடன் கூட்டுசேர்ந்து போட்டியிடுவது பற்றி அரசாங்கத்துக்கு தான் விளக்கமளித்துவிட்டதாகவும் அந்த விளக்கத்தால் அரசாங்கம் திருப்தியடைந்துள்ளதாகவும் அமைச்சர் தொண்டமான் மேலும் கூறினார்.

இதேவேளை, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்ற கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதில் தமது தரப்பிலிருந்து எவ்வித சிக்கலும் இல்லை என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

சபரகமுவ மாகாணத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் வாக்காளர்களும் பிரதான கட்சிகளுக்கு வாக்களிப்பதால் நீண்டகாலமாக இழக்கப்பட்டு வருகின்ற தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இந்த புதிய தேர்தல் கூட்டின் மூலம் மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சபரகமுவ மாகாணத்தில் தமிழர்களின் கல்வி மற்றும் சமூக உரிமைகளை உறுதி செய்வதற்கு அங்கு தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பது அவசியப்படுகின்றது என்றும் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.

(தமிழோசை)

[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.