Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் காங்கிரஸ் முடிவு சரியா என்று கேள்விகள்

Featured Replies

[size=4]இலங்கையில் நடை பெற விருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் இனைந்து போட்டியிட எடுத்துள்ள தீர்மானம் அக்கட்சிக்குள் மாற்றுக் கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.[/size]

[size=3][size=4]கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனைந்து போட்டியிட்டது.[/size][/size]

[size=3][size=4]நடைபெறவிருக்கும் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டு அடிப்படையில் போட்டியிட வேண்டும் என்ற பரவலான எதிர் பார்ப்புகளுக்கு மத்தியிலேயே முஸ்லிம் காங்கிரஸ் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகக் கூறபபடுகின்றது.[/size][/size]

[size=4]ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் இனைந்து போட்டியிட எடுத்த தீர்மானம் காரணமாக கட்சியின் முக்கிய தலைவர்களில் சிலர் அதிருப்தியடைந்துள்ளதாகவும் பிபிசியால் அறியக் கூடியதாக உள்ளது.[/size]

[size=4]ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பலம் மிக்க மாகாணம் என்று கருதப்படும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் கூட இந்த தீர்மானம் குறித்து மாறு பட்ட கருத்துக்களை தமிழோசைக்கு தெரிவித்துள்ளனர்.[/size]

[size=4]ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இனைந்து போட்டியிடுவதன் மூலமே முஸ்லிம்களின் எதிர்பார்ப்பான முஸ்லிம் முதலமைச்சர் என்ற இலக்கை எட்ட முடியும் என ஒரு சாரார் நம்பிக்கையுடன் காணப்படுகின்றார்கள்.[/size]

[size=4]ஆனால், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்று சவுதி அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளைக் கூட வழங்கத் தயங்கும் அரசாங்கத்துடன் எப்படி முஸ்லிம் காங்கிரஸ் இணக்கப்பாட்டுக்கு வரலாம் என்று மறு சாரார் கூறுகிறார்கள்.[/size]

[size=4]இந்த தீர்மானம் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது அரசியல் தனித்துவத்தை இழந்து விட்டதாகவும் சில மக்கள் தமிழோசையிடம் தெரிவித்தனர்.[/size]

[size=4]"தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் மத்தியில் கட்சி சிக்கியுள்ளது"

இலங்கையில் தேசிய அளவில் முஸ்லிம்களின் பெரிய கட்சியாகவும், தன்னை முஸ்லிம் மக்களின் தலைவராகவும் ரவூஃப் ஹக்கிம் அவர்கள் காட்டிக் கொள்ள விழைகிறார், ஆனால் யதார்த்தத்தில் அது சாத்தியப்படாத ஒன்றாகவே இருந்துள்ளது என்று சுட்டிக்காட்டுக்கிறார் இலங்கை ஆய்வாளரும் கிழக்கு பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் யுவி தங்கராஜா.

போருக்கு முன்னர் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு மத்திய அரசுக்கு தேவைப்பட்டது என்றும், போருக்கு பின்னரான காலத்தில் அந்தச் சூழல் மாறிவிட்டது என்றும் அவர் கூறுகிறார். மத்திய அரசில் பல கட்சிகளின் முஸ்லிம் தலைவர்கள் அமைச்சர்களாக இருக்கும் வேளையில், முஸ்லிம் வாக்குகளுக்காம ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சியை மட்டுமே மஹிந்த ராஜபக்ஷ அரசு சார்ந்திருக்க வேண்டிய நிலை இல்லை எனவும் டாக்டர் தங்கராஜா தெரிவித்தார்.[/size]

[size=4]அரசாங்கத்துடன் தான் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தனக்கும், தனது சமூக மக்களுக்கும் நலன் ஏற்படும் என்று ஹக்கீம் கருதியிருக்கக் கூடும் எனவும் கூறும் டாக்டர் தங்கராஜா, அப்படியான சிக்கலின் பின்னணியிலேயே இந்த முடிவை அவர் எடுத்திருத்திருக்கலாம் எனவும் கூறுகிறார்.[/size]

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/07/120715_slmcdecision_views.shtml

  • தொடங்கியவர்

[size=5]கிழக்குத் தேர்தல் 1034249 பேர் வாக்களிக்கத் தகுதி; [/size]

[size=5]1163 வாக்குச் சாவடிகள், [/size][size=5]74 வாக்கு எண்ணும் நிலையங்கள் [/size][size=5]_[/size]

[size=4]எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 10 இலட்சத்து 34 ஆயிரத்து 249 பேர் 2011 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படி வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.[/size]

[size=4]இதன்படி அம்பாறை மாவட்டத்தில் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 287 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இலட்சத்து 47 ஆயிரத்து 99 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 2 இலட்சத்து 45 ஆயிரத்து 363 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இம்மூன்று மாவட்டங்களிலும் 1163 வாக்களிப்பு நிலையங்களும் 74 வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. இம்மாகாணத்தில் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 2009 ஆம் ஆண்டுக்கான வாக்குப்பட்டியலில் 995612 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். எனினும் நடைபெறவிருக்கும் மாகாண சபைத்தேர்தலுக்கு மேலும் 38637 பேர் வாக்களிக்க உள்வாங்கப்பட்டுள்ளனர். [/size][size=3][size=4]_[/size]__[/size]

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39353

அம்பாறையில் முஸ்லிம்களுக்கான கரையோர மாவட்டம் மற்றும் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்குத் தமிழ் பேசும் அரச அதிபர்கள் நியமனம் ஆகிய இரண்டு கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒருபோதும் கையொப்பமிடப்போவதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ரி.எம்.ஹசனலி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்றுக் காலை கூடியபோது தனது இந்த நிலைப்பாட்டைக் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வலியுறுத்தியுள்ள ஹசனலி, மேற்படி இரு விடயங்களையும் அரசு ஏற்றுக்கொள்ளாவிட்டால் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வேறு ஒருவரை வைத்துக் கைச்சாத்திட்டுக்கொள்ளுமாறும் நேரடியாகவே தெரிவித்துள்ளார்.

கட்சியின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் கொள்கையாகக் கொண்டிருந்த மேற்கண்ட இரு விடயங்களையும் நிறைவேற்றக் கோருவதில் எதுவித தவறுமில்லையென்றும், இதற்கு மேலாகச் சென்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு முஸ்லிம் சமூகத்திற்கே துரோகமிழைக்க விரும்பவில்லையென்றும் ஹசனலி இந்தக் கூட்டத்தின்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம், அரசுடன் இணைந்து மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட கட்சிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும், முஸ்லிம் மக்களின் உரிமைகள் குறித்தான கட்சியின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே இந்த ஆதரவு உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் மு.கா. உயர்பீடம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளையில் கட்சியின் செயலாளர் ஹசனலி எடுத்துள்ள நிலைப்பாடு கட்சித் தலைவர் ஹக்கீமுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்திருக்கின்றது. கட்சியின் செயலாளர் நாயகம் என்ற முறையில் ஹசனலியே புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடவேண்டியவர் என்பதனால் ஹக்கீம் பெரும் குழப்பமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது

http://tamilleader.c...7-01-47-35.html

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.