Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைவிடப்படும் தமிழ் அகதிகள்.

Featured Replies

நாங்கள் தற்போது இக்கட்டான சூழலுக்கு முகங்கொடுக்கிறோம். மக்களுக்கு ஏற்கனவே கிடைத்திருக்கக்கூடிய நல்வாய்ப்புக்களை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உதவி வழங்குநர்களாகிய நாம் தொடர்ந்தும் செயற்பட வேண்டியது இன்றியமையாதது.

உணவு, வீடு, பாதுகாப்பு மற்றும் போசாக்குப் போன்றவை முக்கியமாகத் தேவைப்படுகின்ற இலங்கையின் வடக்கைச் சேர்ந்த மக்களுக்குச் சென்றடைகின்ற உதவித் தொகையானது மிக அரிதாகவே காணப்படுகின்றது.

உள்நாட்டுப் போரின் நீண்ட காலப் பாதிப்பைச் சந்தித்த இந்த மக்கள், போர் முடிவுற்று மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட தற்போதும் அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவி நிறுவனங்களை எதிர்பார்த்து நிற்கின்றனர்.

"நாங்கள் தற்போது இக்கட்டான சூழலுக்கு முகங்கொடுக்கிறோம். ஏற்கனவே மக்கள் அடைந்து கொள்ள நல் வாய்ப்புக்களை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உதவி வழங்குநர்களாகிய நாம் தொடர்ந்தும் செயற்பட வேண்டியது இன்றியமையாதது'' என மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைக்கும் ஐ.நா. அமைப்பின் இயக்குநர் வின்சென்ற் லெலீ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான "உதவி வழங்கலுக்கான கூட்டுத் திட்டம்' என்கின்ற திட்டத்தின் கீழ் 2012இல் 147 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், ஆனால் ஜூலை 6 வரை 17.5 சதவீத நிதி மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், மேலதிகமாக இன்னமும் 122 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், உதவி தேவைப்படும் மக்களுக்கு தொடர்ந்தும் உதவித் திட்டங்களை வழங்கவேண்டிய தேவையுள்ளதாகவும் ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.

தங்குமிடம், வாழ்வாதாரம் மற்றும் நிலக் கண்ணிவெடி அகற்றல் போன்ற முக்கிய துறைகளுக்குப் போதியளவு நிதி கிடைக்கப் பெறவில்லை என, இலங்கையில் பணிபுரியும் அரச சார்பற்ற நிறுவனங்கள், செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கம், தனிப்பட்ட உதவி அமைப்புக்கள் போன்ற பல்வேறு அனைத்துலக மனிதாபிமான நிறுவனங்களின் அறிக்கைகளைத் தொகுத்து ஐ.நாவின் நிதியியல் கட்டுப்பாட்டு மையத் தரவுத் தளத்தால் வெளியிடப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"சில வேலைத் திட்டங்களுக்கு எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை. நீர் மற்றும் தூய்மையாக்கலுக்கு 5 மில்லியன் டொலர்களும், நிலக்கண்ணி வெடியகற்றலுக்கு 29 மில்லியன் அமெரிக்க டொலர்களும் தேவைப்படுகின்றன. இவ்வாறான திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு உதவி அமைப்புக்கள் பின்நிற்கின்றன. நிரந்தர வீடுகளை அமைப்பதற்கு 40 மில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்ற போதிலும் இதன் 70 சதவீதமான நிதி கிடைக்கப் பெறவில்லை'' என லெலீ குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய உதவி நிறுவனம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்றன பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிரந்தர வீடுகளை அதிகளவில் கட்டித் தரமுன்வந்துள்ள போதிலும் கூட இலங்கையின் வடக்கில் நிரந்தர வீடுகள் மிகப் பெரும் எண்ணிக்கையில் கட்டிக்கொடுக்கப்பட வேண்டியுள்ளது'' என ஐ.நா குடியிருப்பு நிகழ்ச்சித் திட்டத்துக்கான பிரதம தொழிநுட்ப ஆலோசகர் டேவிட் இவான்ஸ் தெரிவித்துள்ளார்.

"உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வடக்கில் வாழும் 300,000 வரையான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்களுக்கு உதவி வழங்கப்படுகின்றது. ஆனால் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்வதில் கணிசமான அளவில் நிதிசார்ந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த அமைப்பானது தனது பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டியேற்படலாம்'' என உலக உணவுத்திட்ட அமைப்பின் பேச்சாளர் போலெற் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

"சீனி, அரிசி, எண்ணெய் மற்றும் இதர உலருணவுப் பொருள்களுக்கான வழங்கலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உதவி வழங்குநர்கள் தொடர்ந்தும் நிதியை வழங்காது விடில், பயனாளிகளுக்கு வழங்குகின்ற உலருணவு நிவாரணத்தின் அளவைக் குறைக்க வேண்டிய நெருக்கடி ஏற்படலாம்'' என ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது பெரும்பாலான ஐ.நா. அமைப்புக்கள் தமது செயற்பாடுகளை மீள ஆராயத் தொடங்கியுள்ளதுடன் தமது செயலகங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறான போக்கானது 2013 முழுவதும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இலங்கையானது அமைதி நிலவும் மத்திய வருவாயைப் பெறும் நாடு என உலக வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில் உதவி வழங்குநர்கள், மனிதாபிமானத் தேவை அதிகம் உள்ள இடங்களில் தமது நிதியைச் செலவிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

இலங்கையின் வடக்கில் பணிபுரியும் 32 அனைத்துலக அரச சார்பற்ற அமைப்புக்களும் நிதி நெருக்கடியால் அவதிப்படுகின்றன. "உண்மையில் நிதியைப் பெற்றுக் கொள்வது மிகக் கடினமானதாக உள்ளது. நாங்கள் பெரும் துன்பங்களை எதிர்நோக்குகின்றோம். நிதி வழங்குநர்களின் நிதி ஐக்கிய நாடுகள் சபையைச் சென்றடைகின்றது. இந்த நிலையில் எமக்கான நிதியீட்டம் பற்றாக்குறையாக உள்ளது'' என இலங்கைக்கான சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி ஜோஸ் றவனோ தெரிவித்துள்ளார்.

பல அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏற்கனவே தமது செயற்பாடுகளையும் தமது பணியாளர்களையும் குறைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் செயற்படும் நிலக்கண்ணி வெடி அகற்றும் அனைத்துலக அரசசார்பற்ற அமைப்பொன்று நிதி நெருக்கடியால் கடந்த மே மாதத்தில் 200 உள்ளுர் பணியாளர்களைப் பணியிலிருந்து நீக்கியது.

ஆனால் நிலக்கண்ணி வெடி அகற்றாததால் குறிப்பிட்ட எண்ணிக்கையான மக்கள் தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்ல முடியாதுள்ளனர். இதைவிட விஸாவைப் புதுப்பித்தல், அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஒப்புதலைப் பெற்றுக் கொள்ளுதல் போன்ற பல்வேறு நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கும் இலங்கையில் செயற்படும் அரச சார்பற்ற அமைப்புக்கள் முகங்கொடுக்கின்றன.

போர் நடைபெற்ற காலப்பகுதியில் இலங்கை அரசானது அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளுக்குக் கட்டுப்பாடு விதித்தமையும் தெரிந்ததே. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம் பெயர்ந்த 445,000 வரையான மக்கள் தற்போது மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளதாகவும், இவர்களில் 229,227 ஏப்ரல் 2008 இற்குப் பின்னர் இடம்பெயர்ந்தனர் எனவும் 215,985 பேர் ஏப்ரல் 2008 இற்கு முன்னர் இடம்பெயர்ந்தனர் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

இலங்கையில் போர்ப் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு தொடர்ந்தும் உதவி செய்யவேண்டியது முக்கியமானதாகும். போரால் பாதிக்கப்பட்ட, போரின் வடுக்களைத் தாங்கி நிற்கும் மக்களுக்கு சேவை செய்வதற்கு நாட்டில் மீள் இணக்கப்பாடு மற்றும் அமைதி என்பன நிலைநாட்டப்பட வேண்டும் என லெலீ வலியுறுத்தியுள்ளார்.

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.