Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக எதிர்ப்புகள் குறித்து கவலை இல்லை என்று சொல்கிறது இலங்கை..! இந்திய அரசைப் போலவே..?! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

தமிழக எதிர்ப்புகள் குறித்து கவலை இல்லை என்று சொல்கிறது இலங்கை..! இந்திய அரசைப் போலவே..?! ஈழதேசம் செய்தி..!

[size=3]

eeladhesam%20seythi%20aaivu.jpgஇலங்கையின் அமைச்சரவை பேச்சாளர் கெகலிய ரம்புக்கவெல கூறுகையில், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள உறவை யாராலும் அழிக்க முடியாது. இதற்கு சிறந்த உதாரணமே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்ததையே கூறலாம் என்றார். எனவே, இரு நாட்டிற்கும் இடையில் வெளியில் தெரியும் விசயங்களை விட ( அமைதியான ) ரகசியமான நடவடிக்கைகளே உண்மையானவை. தமிழ் நாட்டின் எதிர்ப்புகள் குறித்து இலங்கை அரசாங்கம் அலட்டிக் கொள்ளாது.

வருடத்திற்கு சுமார் ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐநூறு படையினர் இந்தியாவில் பயிற்சிகளைப் பெறுகின்றனர். இலங்கை படைகளுக்கு பயிற்சி வழங்கும் பிரதான பங்குதாரரே இந்தியா தான். சமீபத்தில் தமிழகத்தில் 9 விமானப் படை வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். இது இலங்கை வீரர்களின் பாதுகாப்புக் கருதியே தவிர, தமிழக எதிர்ப்புகளுக்கு பயந்து அல்ல என்றார். மேலும் தனி ஈழ தீர்மானத்தை நீக்குமாறு டேசொவிற்கும் கருணாநிதிக்கும் சோனியா அரசு உத்தரவிட்டது. எனவே, சிறு குழுக்கள் செய்யும் விசயங்களை பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றார். " இலங்கையின் நட்பு நாடு என்ற முறையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது " என தெரிவித்துள்ளார்.

நமக்கு எழும் சந்தேகம் எனில், சீனா இந்தியாவிற்கு எதிரி நாடு என்று சொல்வதன் மூலம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை மதிப்பிடுவதில் தவறு செய்கிறோமோ என்று தான். எவ்வாறு அமெரிக்காவும் இங்கிலாந்தும் பின்னிப் பிணைந்து கிடக்கிறார்களோ..! அதைப் போன்ற உறவு நிலையே இந்திய சீனா உறவில் உள்ளது. எனவே தான் இலங்கையின் மனித உரிமை மீறல், போரினால் பாதிக்கப்பட்ட அல்ல, இடம் பெயர்ந்த மக்களின் நிவாரண உதவிகள் அல்லது போரினால் இடம் பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு ( இப்படித்தான் கூறுகிறது, இந்த மொழியில் தான் பேசுகிறார்கள். இந்தியாவும் இலங்கையும் ஐ.நா.சபையில், அறிக்கைகளில்.) மற்றும் அரசியல் ரீதியான வெளி மற்றும் உள் விவகாரங்களை இந்திய அரசு பார்த்துக் கொள்ளும், யோசனை சொல்லும், வழிகாட்டுதல் புரியும். பிறகு சார்க் நாடுகளின் அடிப்படையில் போர் பயிற்சி மற்றும் போர் ஒத்திகை, தெற்காசிய கப்பல் படை போர் ஒத்திகை போன்றவைகளை எல்லாம் இந்திய அரசு பார்த்துக் கொள்ளும்.

இதற்கு அர்த்தம் இலங்கை அரசு சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும்.. மாறப்போகிறது, இந்திய பொருளாதார நலன்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு வருகின்றன,சீனாவுடன் அளவுக்கு அதிகமான நெருக்கம் என்று சொல்வதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். அல்லது தெளிவற்ற அரசியல் பார்வை குறைகள் உள்ள விசயங்களாகும் என்று கருத வேண்டியுள்ளது. இந்திய அரசைப் போலவே இலங்கை அரசு பேசுகிறது. தமிழர்களுக்கு எதிராக ஒன்றாக இணைந்து குரல் கொடுக்கிறார்கள். இலங்கையில் நேரடியாக யுத்தத்தின் மூலம் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள். இந்தியாவில் உயர் தொழில்நுட்ப, ராணுவ கேந்திரமான பகுதியாக தமிழகப் பகுதிகள் அனைத்தும் மாற்றப்பட்டு இந்தியத் தமிழர்கள் அழிக்கப்பட்டு விரட்டியடிக்கப்படுவார்கள். அந்த வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

சங்கிலிக்கருப்பு.

[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.