Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்களிடம் நாம் கேட்பது பசியாற உணவு போடுங்கள் என்றில்லை! செம்மலை

Featured Replies

என்னுடைய பெயர் செம்மலை நான் தமிழீழத்தில் வாழ்ந்து வருகிறேன் தலைவர் காட்டிய பாதையில் தமிழீழ தனி அரசு உருவாகும் என்ற நம்பிக்கையுடன் இன்றும் விடியலை நோக்கி பயணிக்கிறேன், அதன் அடிப்படையில் இங்கு நாள் தோறும் நடந்துகொண்டிருக்கும் கொடுமைகளை வார்த்தைகளில் எழுதிவிட முடியாது என்பது எனது நிலைப்பாடு.

முள்ளிவாய்க்களில் நடந்து முடிந்த இன அழிப்பை விட இன்று தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பல்வேறுவகையான இனச் சுத்திகரிப்பை, சமூகச் சீர் கேடுகள் ஊடாக எமது இனம் சிதைந்து போவதை பார்க்கும் போது எத்தனை இலச்சம்பேர் எங்கு வாழ்ந்தும் என்ன பயன் என்ற வேதனை மட்டுமே மேலோங்கி நிற்கிறது. எங்கள் வேதனைகளைச் சொல்லி மண்டியிட்டு அழுவதற்கு இங்கு மாவீரர்களின் கல்லறைகளும் இல்லை, மாவீரர்கள் துயிலும் இல்லங்களுக்கு அருகில் செல்வதற்கு உரிமையும் இல்லை. துயிலும் இல்லங்களும் இல்லை.

தடுப்பு முகாம்களில் சித்திரவதைகள் மூலம் எம்மவர்கள் படுகொலை செய்யப்படுவது ஒன்றும் புதிதும் இல்லை. இருப்பினும் இவற்றுக்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பது மட்டுமே எனது ஆதங்கம் கேள்விகளாக உங்களிடம் வருகிறது சில வார்த்தைப் பிரயோகங்களுக்கு????.

அன்று குட்டிமணி தங்கத்துரை, சில நாட்களின் முன்னர் நிமலரூபன், இன்றுவரை வெளித்தெரியாமல் சிறைகளில் நாளுக்கு நாள் படுகொலை செய்யப்படும் எம்மவர்கள் பலர், நாளை கோமநிலையில் உள்ள தில்ருக்ஸன் என்று சிங்கள இனவெறி அரசினால் மேற்கொள்ளப்படும் சிறைச் சாலைப் படுகொலைகள் நாள்தோறும் தொடர்ந்துகொண்டே போகிறது. தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்களிடம் போராட்டம் கையளிக்கப்பட்டதாக கூறி பெருமை பேசித் திரியும் புலம்பெயர் தமிழர்களும், அதன் இளைய சமூகமும் தமிழீழ விடுதலைக்கான ஏற்பாடுகள் எதையாவது ஒன்றை உருப்படியாக செய்தது உண்டா?

புலம்பெயர் தேசத்தில் இருந்து விடுமுறையில் தாயகம் வந்து குதூகலமாக இருந்துவிட்டுப் போவதும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறு தொகை பணம் அனுப்பிவிட்டும், வாழைக் குட்டிகளைக் கொடுத்துவிட்டும், சில பாடசாலைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குகிறோம் என்று குறிக்கொண்டு கரம் போட்டுக்களையும், மட்டைப்பந்து விளையாட்டுப் பொருட்க்களையும் கொடுத்துவிட்டு இணையத்தளங்களில் புகைப்படங்களையும் பரப்பிவிட்டு எங்கள் கடமை முடிந்துவிட்டது என்று அப்படியே இருந்துவிடப் போகிறீர்களா?

இவற்றைச் செய்வதற்குத் தான் ஆயுதங்களை அமைதியாக்கி அரசியல் ஜனநாயக போராட்டத்தை புலம்பெயர் தேசத்துக்கு தலைவர் நகர்த்திச் சென்றாரா? இவற்றுக்காகவா இத்தனை உயிர் விலை கொடுப்புக்கள்? சிங்களச் சிறைகளில் கொடூரமான சித்திரவதைகளின் மூலம் படுகொலை செய்யப்பட்ட (மாவீரர்களான) குட்டிமணி, தங்கத்துரை, வரிசையில் இன்று இன்று வெளிப்படையாகவே நிமலரூபன்,கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம். இந்த படுகொலையைக் கண்டிக்கவும், அதனை உலக நாடுகளுக்கும் மனிதாபிமான அமைப்புக்களுக்கும் உரியமுறையில் கொண்டுசென்று சேர்க்கத் தவறிய புலம்பெயர் சமூகம், தமிழர்களின் விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்து போராடும் என்பதை எவ்வாறு எம்மால் ஏற்றுக்கொள்ள முடியும்.

நாம் உங்களிடம் கேட்பது பசியாற எங்களுக்கு உணவு போடுங்கள் என்று அல்ல, வந்தாரை வாழ வைத்த ஈழ பூமி ஒரு வாய் சோற்றுகேனும் நாம் கையேந்தி நிற்க மாட்டோம் என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளுங்கள். சிங்கள இனவெறியர்களால் பறிக்கப்பட்ட எமது உரிமைகளை மீட்டு, எமது நிலத்தில் நாம் சுதந்திரமாக வாழ வழிசெய்யுங்கள் என்பதையே நாங்கள் உங்களிடம் கேட்கின்றேம்! அதற்காக உங்களை ஆயுதம் ஏந்திப் போராடுங்கள் என்று நாம் கேட்கவில்லை, அது உங்களால் முடியாது என்பதையும் நாம் அறிவோம், அமைதியாக்கப்பட்ட ஆயுதங்களை மீண்டும் விடுதலைப் புலிகளே ஆர்ப்பரிக்கச் செய்வார்கள் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். அதனைத் தடுக்கவும் உங்கள் மத்தியில் காத்திருந்து குழிபறிக்கும் கஜவர்களின் செயற்பாடுகளும் அதிகமாகவே உள்ளது.

தமிழீழம், தேசியத் தலைவர், தேசியக்கொடி, விடுதலைப் புலிகள் என்று பேசுவதற்கும், அதனைத் தடுப்பதற்கும் புலம்பெயர் தமிழர் கட்டமைப்புக்களுக்குள் ஊடுருவிய, ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டவர்களும், காட்டிக்கொடுப்புக்களையும், துரோகத்தனங்களையிம் செய்ததன் காரணமாக தண்டனைகள் வழங்கப்பட்டு அமைப்பில் இருந்தும் தமிழீழ பகுதிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டவர்கள் சிலர் இன்று விடுதலைப் புலிகளையும், விடுதலைப் போராட்டத்தையும் மீண்டும் எழுச்சி கொள்ளவிடாமல் தடுப்பதில் சிங்கள இந்திய புலனாய்வாளர்களுடன் இணைந்து செயற்படுவது பல ஆதாரங்களுடன் எமக்கு கிடைத்துள்ளது.

இப்படிப்பட்டவர்களின் செயற்பாடுகள் புலம்பெயர் தேசத்தில் மட்டுமல்லாது, தமிழர் தாயகப் பகுதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் தமது துரோக காட்டிக்கொடுப்பு, கூட்டிக் கொடுப்பு போன்ற மிகவும் கீழ்த்தரமான இனச் சீரழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படியாக தமிழர்களின் இன ஒற்றுமையை சீரழித்து, சிங்களத் தலைமைகளுடன் இணைத்து தமது உறவுகளை வளர்த்துக்கொண்டு தொழிலதிபர்களாக தாயக நிலப்பரப்புகளிலும் சிறிலங்கா,உட்பட உலக நாடுகளிலும் வலம்வரும் தமிழீழத்திற்கு எதிரான தீய சக்திகள் முயற்ச்சிப்பதை நாம் நன்கு அறிவோம்.

இப்படியானவர்கள் உங்களுடனே இருந்துகொண்டு உங்களுக்கு குழிபறிக்க முனைகின்றனர் இப்படியானவர்களை இனம் கண்டுகொள்வதை விட்டுவிட்டு ஏதோ ஒரு புராணம் பாடிக்கொண்டு ஆள் ஆளுக்கு முரண்பட்டுக்கொண்டு,உங்களுக்கு முன்னாள் உள்ள கடமைகளை மறந்து ஆள் ஆளுக்கு ஒரு திசையில் ஒவ்வெரு போராட்டம். தங்கள் பெயர்களை நிலைநாட்டவும் தாங்கள் தான் புலம்பெயர் தேசத்து தமிழர் பிரதிநிதிகள் என்பதை வெளிக்காட்டவும் பலர் போட்டி போட்டுக்கொண்டு, அனைத்தையும் நாமே செய்தோம், இனியும் நாமே செய்வோம் என்று விதண்டாவாதம் பேசிக்கொண்டும் மக்களையும் குழப்பிவிடுகின்றனர். எதைச் செய்தாலும் ஒன்றிணைந்து ஒருகொடியின் கீழ் அணிதிரண்ட மக்களை இன்று ஒருசில புல்லுருவிகள் பிளவுபடுத்தி நிற்கின்றனர் என்பதை மட்டும் நாம் நன்கு அறிந்துள்ளோம்.

எப்பொழுது வந்தது இந்த நடைமுறை? யாரால் கொண்டுவரப்பட்டது? எதற்காக கொண்டுவரப்பட்டது என்று யாரவது கேட்டது உண்டா? விடைகான முயற்ச்சியுங்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் வழிகாட்டலில் உரிமைகளை வென்றெடுக்க அணிதிரண்ட தமிழ் மக்களை அதே புலிகளால் தான் வழிநடத்த முடியுமே தவிர, சுயநலவாத போக்குடையவர்களால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எவரையும் வழிநடத்த முடியாது. செல்வந்தர்களாக பாதுகாப்பாக பதுங்கி இருந்துகொண்டு தமிழர்கள் ஓர் அணியில் நிற்பதை விரும்பாத மாற்றுக் கருத்துடைய, மாற்றுக் குழுக்களில் இருந்த சிலர் விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களில் ஒன்றை தம்வசப்படுத்த பெரும் பாடு படுகின்றனர் என்பது மட்டும் தெளிவாகியுள்ளது. அதன் விளைவுகள் தான் கடந்த மூன்று வருட காலமாக நடந்த கசப்பான உண்மைக்குப் புறம்பான பொய்ப் பிரச்சாரங்கள் என்பதையும் தமிழ்மக்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள்.

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்டுக் கொண்டிருக்கும் சிலர் மக்களையும், செயற்பாட்டாளர்களையும் குழப்பி அதில் சுயலாபம் தேடிக்கொள்ளவும் தமது பெயர்களில், தமது கண்காணிப்பில் இருக்கும் தேசிய சொத்துக்களை தம்வசப்படுத்திக்கொள்ளவே தவிர வேறு எதற்காகவும் இல்லை. அவர்களால் திட்டமிட்டு பரப்பப்படும் பொய்யான தகவல்கள் தான் விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களுக்குள் பிளவு என்பது. பிளவுகள் என்று கூறிக்கொண்டு தேசிய சொத்துக்களை சூறையாடும் கூட்டம் தாயக விடுதலை நோக்கிய எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்காமல் இருந்துகொண்டு, உரியவர்கள் முன்னெடுக்கும் தாயகம் நோக்கிய செயற்பாடுகளுக்கும் தடைகளைப் போட்டுக்கொண்டே தமது சொத்துச் சேர்க்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.

ஆகவே தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பிளவுபடுத்த முனையும் நபர்களின் செயற்பாடுகளை இனம்கண்டு அவர்களைப் புறம்தள்ளி உரியவர்களைப் பலப்படுத்துவதன் ஊடாக எமது அடுத்தகட்ட செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க முடியும் என்பதை மக்களாகிய நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மாவீரர்களினதும், மக்களினதும் தியாகங்களை நெஞ்சில் சுமந்து தமிழீழ விடுதலைக்காக உண்மையாக பாடுபடுவோம் என்று தமிழீழ தேசியத்தலைவர் மீதும் மாவீரர்கள் மீதும் உறுதி எடுத்துக் கொள்வோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

- செம்மலை – 957.

தமிழீழம்

http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.