Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலியுணர்ந்தோரே வழிவிடுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வலியுணர்ந்தோரே வழிவிடுங்கள்[/size]

[size=4]a66d1c48faa73f0fd5dfb46694ca5f0c.jpg[/size]

[size=4]உங்களைப் பார்த்தால், எனக்கு வெட்கமடைவதைத் தவிர வேறு வழியில்லை! இரட்டைப் பதவிகளுக்காக ஆசைப்படுவது எவ்வளவு பெரிய அரச துரோகம் தெரியுமா? இரண்டு தினங்களுக்குள் புதிய பதவியை கடமைப் பொறுப்பேற்பதாயின் பொறுப்பெடுங்கள் அல்லது திணைக்களத் தலைவர் ஊடாக, நியமன அதிகாரிக்கு கடிதங்களை மீளக் கையளியுங்கள் என்று கடும் தொனியிலான மேற்படி எச்சரிக்கை வாசகங்கள் சாரப்படும் சுமார் அரைமணி நேரத்தை அண்மித்ததான அனல் உரையை ஆற்றி ஊற்றியவர் வடமாகாண சபையின் உயர் பெண்மணி![/size]

[size=4]வாசித்தலைத் தவிர மற்றெல்லாவற்றையும் இலகுவாகச் செய்து விடமுடிகின்ற, யாழ்.நூலகத்தின் கேட்போர் கூடத்தில் பிற்பகல் பொழுதொன்றில் ஏற்கனவே அரச சேவையில் உள்ளவர்களில் பட்டதாரிப் பயிலுநருக்கான நியமனக் (?) கடிதத்தை பெற்று இன்னமும் கடமையை பொறுப்பேற்காதவர்களுக்கான சந்திப்பில் ஆற்றப்பட்டதே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சியுரை.[/size]

[size=4]கூட்டத்திற்கான அழைப்பு திணைக்களங்களுக்கூடாக அவசர அறிவித்தலாக விடுக்கப்பட்டதும், பங்குபற்றும் அரச உத்தியோகத்தர்களின் பெயர் விவரங்களை "ஆலாய் பறந்து'' திரட்டும் பணிகளும் முதல் நாளே இடம்பெற்றதுமான காரணங்களினால் அரைவாசிக்கும் குறைவான தொகையினரே கலந்து கொள்ள முடிந்தது. "மண்ணாசையில், துரியோதனனுக்கு ஒரே ஒரு போட்டியாளனாகும்'' தகைமையைத் தன்னுள் கொண்டுள்ள "கௌரவ" ஆளுநரே மேற்படி மிரட்டல் கூட்டத்தின் மூத்த விருந்தினராகவும் கலந்து கொண்டமை ஆழ்ந்து கவனிக்கப்பட்ட விடயம்![/size]

[size=4]தேர்தல்களின் வாக்கு வங்கியை பலப்படுத்தும் மறைவெண்ணத்தை மனதில் கொண்டு நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுநர் நியமனங்களில் வடமாகாணத்திற்குட்பட்ட இளைஞர்களிடம் மென்போக்கை கடைப்பிடிக்க வேண்டிய தேவை அவ்வளவு, அத்தியாவசியமானதோ, அவசரமானதோ இல்லை என்பது "அவர்களின்' கணிப்பு! [/size]

[size=4]ஏறத்தாழ காலவரையறையின்றி ஒத்திப் போடப்பட்டுள்ள வடமாகாண சபைக்கான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல், பற்றிய அறிவிப்புக்கள் அதிகார மட்டங்களின் குறுகிய முகங்களை இன்னும் ஒரு படை "பவுடர்" பூசி இறுக்கமடையவே செய்துள்ளன. [/size]

[size=4]"யாவரும் துன்புற்றிருக்க வேண்டுவதன்றி, வேறொன்றறியேன் பெரியவரே!'' என்று, மக்கள் பிரதிநிதிகள் இல்லாத இந்தக் காலப்பகுதிகளுக்குள் மாகாண சபையும், அதற்குட்பட்ட அமைச்சுக்களும், திணைக்களங்களும் போடும் "குத்தாட்டங்கள்'' எம்மக்கள் யாவரும் நன்கறிந்தவைகளே! [/size]

[size=4]அரியாலை அலுவலகத்துப் பெரியோனின், "நயன தீட்சை'' பெற்றிட்ட மாத்திரத்திலேயே, வேண்டுவன வேண்டியவாறு கைவரப் பெறுங் கலை சகலருக்கும் இலகுவில் வாய்த்து விடுவதில்லை. மறுபடியொரு முறை, "அவர்' சப்பாத்து நூல் அவிழக் கூடாதா? அதை "இறுக" கட்டிவிடும் பாக்கியம் எனக்கே கிட்டிவிடக் கூடாதா? என்று முப்பொழுதும் ""இதே'' கற்பனைகளில் உலாவுவோரே அதிகார ஆசனங்களை ஆக்கிரமித்துள்ள பெரும்பான்மையோர்! ""நமக்கு வாய்த்த அடிமைகள், மிகவும் திறமைசாலிகள்'' என்று நிலைக் கண்ணாடி முன்பாக "அவர்' தன்னைத்தானே வெகுவாக சிலாகித்துக் கொள்ளுமளவுக்கு நம்மவர்களின் நட்டுவாங்கங்கள் தாளம் தப்பியதேயில்லை.[/size]

[size=4]இந்த வெட்கங்கெட்ட கதைகளின் முதன்மை அத்தியாயங்கள் யாவற்றையுமே பக்கம் பக்கமாக ஆழ்வாசிப்புச் செய்தவர்கள் அந்தந்த அலுவலகங்களின் சாதாரண அலுவலகர்கள் தான். சாப்பாட்டு மேசைகளிலும், தேநீர் கோப்பைகளிலும், பயண வழிகளிலும் பரிமாறப்படுகின்ற அதிகார மட்டங்கள் பற்றிய விடுப்பு விண்ணாணங்கள் அவர்களில் பலரை "எதையும் தாங்கும் இதயங்களாகவும், "அகழ்வாரையும் தாங்கும் நிலமாகவும்', சினம் கொன்று சிரிக்கும் செவ்வாய்களாகவும், "அடுத்தது கூறும் தீர்க்கதரிசிகளாகவும்'' ஆக்கி வைத்திருப்பதை அடிக்கடி பரிமாறுவாள் தோழியொருத்தி. இதே அலுவலர் குழாமிலிருப்பவர்களே, அன்றைய கூட்டத்திற்கு பலியாடுகளாக அழைத்து அறுத்து விடப்போவதாக மிரட்டப்பட்டவர்கள்.[/size]

[size=4]தமது மேலதிகாரிகள் மனுதர்மத்திற்கும், நீதிக்கும், நியாயத்துக்கும், நேர்மைக்கும் எதிராகச் செயற்படுவதை சொல்லளவிலேனும் எதிர்க்கும் விம்பமொன்றை தமக்குள் சுமப்பவர்கள் சரியாகவும் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமலும் தாங்கள் எடுக்கின்ற முடிவுகளை, செயல்வடிவமாக்க விடாமல் தடுப்பதுதத்தமது அதிகாரிகளின் மனோபாவமே என்கின்ற தொனியில் "குணசித்திர' வேடமொன்று தாங்கி, அலுவலக நேரங்களில் வில்லனாகவும், ஆறுதலான பிற்பகல் பொழுதுகளில் ஹீரோவாகவும் பேசித்துடிக்கும் பலரை பார்த்திருக்கின்றோம். [/size]

[size=4]பட்டதாரிகள் ஆன போதிலும், பாடசாலைக் கல்வித் தகைமையே ஆகக் கீழ் தகுதியாகக் கொண்ட "முகாமைத்துவ உதவியாளர்கள்' என்கின்ற பதவிப்பெயர்களுக்குள் தம்மை இறுக்கி அடைத்து அரச சேவையொன்றைப் பெற்று விட்டதற்கான பெருமூச்சு விட்டவர்களின், இன்றைய அவதாரம் கொஞ்சம் இளக்காரமானதுதான். [/size]

[size=4]பட்டதாரி பயிலுநர் என்கின்ற ஆறுமாத காலப் பயிற்சிக்குப் பின்னால் நிரந்தர பதவிநிலையுள்ள நியமன மொன்றை பெற்றுக் கொள்பவர்களுக்கும், இன்றைய முகாமைத்துவ உதவியாளர் சேவையிலுள்ளவர்களுக்குமான அடிப்படைச் சம்பள வித்தியாசம் வெறும் எண்ணூற்று சொச்ச ரூபாய்களே! [/size]

[size=4]ஆயிரத்திலும் குறைவான ரூபாய்க்களில் அளவிடக் கூடிய மேற்படி பதவி மாற்றத்தினை கீழுழைப்பு பட்டதாரிகள் எனும் சொல்லினால் பிரதியீடு செய்து தம்மை நியாயப்படுத்திக் கொள்ளுமளவுக்கு, இவர்களுக்கு வழங்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் என்கின்ற பதவிப் பெயருக்குரிய சேவை, வடமாகாணத்தைத் தவிர வேறெங்கும் கிடையாது என்பதும், நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் பதவிக்கென்று தனியான "சேவைப் பிரமாண குறிப்பு' இந்த நொடிவரை ஏற்படுத்தப்படவில்லை என்பதும் அவர்களே நன்கறிந்த சங்கதிகள்![/size]

[size=4]பயிலுநர்களுக்கான தற்காலிக இணைப்புக் கடிதங்களைப் பெற்று இன்றுவரை கடமையைப் பொறுப்பேற்காத முகாமைத்துவ உதவியாளர் போன்ற கீழுழைப்பு(?) சேவைகளில் உள்ளவர்களின் ஒரேயொரு நியாயமான வாதம் ""மத்திய அரசாள்கைக்குட்பட்ட மாவட்ட செயலாளரினால், ஒப்பமிட்டு வழங்கப்பட்டுள்ள கடிதங்களை மீள ஒப்படைக்குமாறு, மாகாண சபை அதிகாரி மட்டங்களில் உள்ளவர்கள் எவ்வாறு கேட்கலாம்?'' என்பது மட்டுமே! ஆனால் நிரந்தரமாக்கப்படும் பட்டதாரி நியமனத்திற்கான ஆசையை தூரத்தூக்கியெறிய முடியாமலும், இப்போது கிடைக்கின்ற இருபத்தி மூன்றுக்கு அண்மித்த திரட்டிய சம்பளத்தை கோட்டைவிட முடியாமலும் கூழுக்கும், மீசைக்கும் ஏக நேரத்தில் ஆசைப்படுபவர்களின் கதாநாயக வேஷம், வெளியில் இருந்து வேலை கேட்டுப் போராடுகின்ற டிப்ளோமாதாரிகளின் நியாயமான கோஷங்களின் முன்னால் வெறுமையாகியே போகும். [/size]

[size=4]ஏனைய மாகாணங்களில் உயர் தேசிய டிப்ளோமா உடையவர்களையும், பட்டதாரி பயிலுநர்களாக சேர்த்துக் கொண்டதன் பின்னணியில் வடமாகாணத்தில் மட்டும் அவர்கள் தவறவிடப்பட்டதன் முக்கிய காரணமாக நாடளாவிய ரீதியிலான எண்ணிக்கையே சொல்லப்படுகின்றது. கேட்கின்ற யாவருக்கும் பட்டதாரி நியமனத்தை கொடுத்து விடுவதாயின் ஏனைய மாகாணங்களை விட, அரச செயல்திட்டங்களுக்கு மேலதிகமான விகித எண்ணிக்கையில் ஆள்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளமையையிட்டு எதிர்ப்புக் குரல்களை சமாளிக்க வேண்டிய அச்சம், சரியான ஊகத்திற்குரியதே![/size]

[size=4]இதற்கான முதற்கட்டத் தீர்வாக, ஏற்கனவே சேவையிலிருந்து கொண்டு பயிலுநர் நியமனம் பெற்றவர்களை அவர்களின் ஒப்புதலோடு ஏதாவது ஒரு பதவியை தெரிவு செய்ய நிர்ப்பந்திப்பதன் மூலம் கிடைக்கும் வெற்றிடங்களுக்கு டிப்ளோமா தாரிகளை நியமிக்கலாம் எனும் மந்திராலோசனை வடமாகாண அமைச்சர்களின் பூட்டிய கதவுகளினுள் நிகழ்ந்திருக்கலாம். [/size]

[size=4]"பயிலுநர் நியமனக் கடிதங்களை மீளத் தாருங்கள் அல்லது கடமையை பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்'' என்று வலியுறுத்திக் கேட்ட முறையில் உள்ள தவறுகள் மட்டும் நியாயத்தின் பக்கம் உள்ள பகடைகளை வீழ்த்துமளவு வலிமையானவையல்ல நண்பர்களே! [/size]

[size=4]"கணக்குப் பிரிவில் பணியாற்றும் உமக்கு தாபன விதிக்கோவையின் உட்பிரிவுகள் எல்லாமே எப்படி தெரியும்?'' என்று அந்த "அம்மா" குரலில் சூடேற்றி சமாளிப்பு நியாயம் பேசிய போது நூலக கேட்போர் கூடத்தில் குனிந்திருந்த சகல கண்களிலும் நிறைந்து நின்ற "கோபக் கனல்'' மாவட்ட செயலகத்தின் முன்பக்கத்து புழுதி உமிழும் வீதியோரத்தில் சுலோக அட்டைகளோடு வேகக் கொதிக்கும் வெயிலில் விறைத்து நின்றவர்களின் கோடிக் கண்களில் விரவி நின்ற "வேலைக்கான ஏக்கத்திலும்'' எப்போதும் சிறியதே! [/size]

[size=4]இருபதுக்கு மேற்பட்ட ஆயிரங்களில் வாங்கும் சம்பாத்தியத்தினை, அதிரடியாக பத்திற்கும் குறைவானதான பயிலுநர் நியமனத்துக்கு கீழிறங்கும் உங்களின் தயக்கத்தில் வினா எழுப்பப்படுகின்ற நீதி, ஆர்ப்பாட்டத்திற்கு வருவதற்கான பஸ் கட்டணத்துக்குகூட அப்பாவிடமோ, அம்மாவிடமோ காலையில் கையேந்தி நிற்கின்ற அவர்களின் அவலத்தினால் புரிந்துணர்த்தப்படுவதற்கு, "பொருளாதார மேதைகள்'தான் வேண்டுமென்றில்லையே! [/size]

[size=4]உயர் தேசிய டிப்ளோமாக்களை "கூவி' விற்பனை செய்வதற்கு வந்தவர்களை, பெரும் தொகையான தரகுப் பணத் தொகைகளோடு இலங்கையின் கல்வி முறைகளுக்குள் அனுமதித்தவர்களே, இன்று கல்வித் தரம் பற்றிய கேள்விகளை சாட்டாகக் கொண்டு நிராகரிப்பதில் ஆங்காங்கே ஒளிந்திருக்கும் அரசியல் குதர்க்கங்களை, அதே சூழலில் வளர்ந்து பட்டதாரிகளானவர்களும் நன்கறிவார்கள். [/size]

[size=4]சில பட்டப் படிப்புகளைவிட மேலான உழைப்பும், பெறுமதி கூடிய பணப்பரிமாற்றங்களும் கற்கைநெறிக் கால விரயமும் செலவழிக்கப்பட்ட பட்டத்துக்கு நிகரான கல்வித் தரம் அவர்களுடையது என்பதை மனந்திறந்து நோக்கும் எந்தவொரு மனிதநேயனாலும் வெகு எளிதில் விளங்கிட முடியுமே![/size]

[size=4]அனைத்திலும் மேலாக சுற்றறிக்கை வாசகங்களையும், திரட்டிய சம்பளத் தொகையையும், பதவிப் பெயர்களையும், வேலைவாய்ப்புப் போட்டிகளையும் தூக்கியெறிந்த மானுடதர்மத்தின் புறவெளியில் நின்று "தன்னைப்போல் அயலானையும்" நேசித்து உண்மை உணரும் நிமிடங்களை ஏன் இன்னமும் ஏற்படுத்திக்கொள்வதை தள்ளிப்போடுகின்றோம். [/size]

[size=4]இனமழித்து ஏப்பம் விட்ட அரசியல் தலைவர்களிடம் மன்றாடுவதை விட, பாடசாலை காலைக் கூட்டங்களில் உரையாற்றுமளவுக்கு தாழ்ந்து சுயநலன்களுக்காக சுற்றுகின்ற குறுநில மன்னர்களிடம் மகஜர் அளிப்பதை விட, தாபன விதிக்கோவை வார்த்தைகளாலும், கோப்பு இலக்கங்களாலும் மட்டுமே சட்டம் பேசத் தெரிந்த நாற்காலி விரும்பிகளை நாடுவதை விட, "வேலையின்மை" என்கின்ற கரும்புள்ளிகளை கடந்த இருள் அனுபவங்களை ஏற்கனவே சுமந்தவர்களிடம் அன்புரிமையுடன் பேசுவது பன்மடங்கு மேலானதில்லையா, என்ன?[/size]

[size=4]"தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்தச் செகத்தினை அழித்திட" எழுந்த பார"தீ"க் குழந்தைகளாய், தலைமுறைக் குழுமம் ஒன்றுக்கு அரச பணியாற்றும் சந்தர்ப்பம் கொடுத்ததை, வரலாற்றின் பக்கங்கள் நிச்சயம் தன்னுள் செதுக்கும். ஆதலினால்.... (விழிநிமிர்ந்து, தலைப்பை மீளக் வாசியுங்கள் நண்பர்களே!)[/size]

[size=4]http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=7095831921313080[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.