Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உன்னதங்களுக்காகப் போராடுவோம்

Featured Replies

[size="4"]உன்னதங்களுக்காகப் போராடுவோம்[/size]

ஈழத்தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டபின்னடைவு காரணமாகத்

தோன்றியுள்ள மனச்சோர்வுகள்,குழப்பங்கள்,விரக்திகள் என்பவற்றிலிருந்து நம்மை

விடுவித்துக்கொண்டு,மீண்டும் புத்துணர்ச்சியுடனும்,புதுவேகத்துடனும் எழுந்து முன்

செல்லவேண்டியது நம் கடமையாகும்.நம் தாயகத்தில் அரக்கத்தனமான அடக்-

குமுறை நிலவுவதால், புலம்பெயர்தமிழர்கள் கைகளிலேயே விடுதலைப்போராட்-

டத்திற்கான முழுப்பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் புரிந்-

துகொள்ளவேண்டும்.நாம் புலம்பெயர்ந்துவாழும் நாடுகளிலுள்ள மக்களாட்சிவழி-

முறைகள் நமக்கு அதற்கான வாய்ப்பை வழங்குகின்றன.

நாம் புலம்பெயர்ந்துவாழும் நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக, அமை-

தியான ஆக்கபூர்வமான வழிகளில் நாம் நமது போராட்டங்களை முன்னெடுக்க

வேண்டும்.அத்தகைய போராட்டங்களில் ஈடுபட அதற்கான உந்துசக்தியையும்,

அர்ப்பணஉணர்வையும் பெற, நாம் போதிய அரசியல்விழிப்புணர்வு பெற்ற

சமூகமாக மாறவேண்டும்.நாம் புலம்பெயர்நாடுகளில் மேற்கொண்ட "வட்டுக்கோட்-

டைத்தீர்மானம்" பற்றிய கருத்துக்கணிப்பு, அதற்கு மக்கள் மிகப்பெருமளவில் அளி-

த்த ஆதரவுவாக்குகள் உற்சாகம் தருபவை. பின்பு நடந்த 'நாடுகடந்த தமிழீழஅரசு',

'தமிழர் தேசியஅவை', என்பவற்றுக்கான தேர்தல்கள் மிகுந்த நம்பிக்கை தருபவை.

ஏனெனில் நமது மக்கள் தாமாகவே ஒழுங்குசெய்து, தமது மக்களிடம் அதற்கான

ஏற்றுக்கொள்ளலை உருவாக்கி அவற்றைச் செய்துள்ளனர். சனநாயகஅரசியல் வழி-

முறைகளில், அமைதியான கவனஈர்ப்புப் போராட்டங்களை மேற்கொள்ளத்தேவை-

யான அமைப்புகள் அவையாகும். இத்தகைய செயற்பாடுகள் நம்மிடையே விரும்-

பத்தக்க அரசியல்பண்பாடுகளையும்,சுயகட்டுப்பாடுகளுடன்கூடிய முன்னெடுத்த-

ல்களையும் வளர்க்க வழிசெய்யும்.

நாம் உண்மையான விழிப்புணர்வுடன் நமது போராட்டச்செயற்பாடுகளில்

ஈடுபடின்,அந்தப்பங்குபற்றல் நம் மக்களிடையே மிகுந்த உன்னதங்களை வளர்-

க்கும். வழமையானவாழ்வில் நாம் சிந்தனையற்ற மந்தைக்கூட்டம் போன்று,

ஏனோதானோவென்று வாழ்ந்துபழகிவிட்டோம். ஆனால் போராட்டம் மிகுந்த

வாழ்வில் நாம் முன்வைக்கும் ஒவ்வொரு அடியையும் சிந்தித்து,உரிய தீர்மானத்தை

எடுத்தே மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதனால் நம்மிடையே

மறைந்துகிடக்கும் பல உன்னத ஆற்றல்கள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள்

ஏற்படுகின்றன. இந்திய விடுதலைப்போராட்ட காலத்தில் லோகமான்யதிலகர்,

கோபாலகிருஷ்ணகோகலே,கவிஞர் இரவீந்திரநாததாகூர்,மகாத்மாகாந்தி,சுபாஷ்சந்-

திரபோஸ்,போன்ற தலைவர்கள் தோன்றினார்கள்.தமிழ்நாட்டிலும் மகாகவி சுப்பிர-

மணியபாரதியார்,கப்பலோட்டியதமிழன் வ.உ.சிதம்பரப்பிள்ளை,பெரியார் ஈ.வெ.

ரா., கர்மவீரர் காமராசர்,தோழர் ப.ஜீவானந்தம் போன்ற பெருமக்கள் தோன்றி-

னார்கள்.இந்தியவிடுதலைப்போராட்டம் உச்சக்கட்டநிலையில் இருந்தபோது

தோன்றிய இந்தத்தலைவர்கள்,தேசப்பற்றாளர்கள், மக்கள்நலனுக்காக தம்சொந்த

சுகபோகங்களைத் துறந்தவர்கள். விடுதலை பெற்றபின்பு இத்தகைய ஒருசிலர் கூடத்

தோன்றவில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும்.இப்போதுள்ள இந்தியஅரசியல்

தலைவர்கள் தமதும் தமதுகுடும்பத்தினரதும் சுகபோகவாழ்வுக்காக நலிவுற்ற மக்களைச்

சுரண்டுபவர்களாக,பதவிகளைப்பயன்படுத்திப் பணம்குவிப்பவர்களாக அமைந்திருப்-

பதை கவனிக்கலாம்.ஆனால் போராட்டகாலம் என்பது ஒரு புனிதவேள்விக்கா-

லம் போன்று நம்மைத் தூய்மைப்படுத்துகிறது;அதில் ஈடுபடுவோரை புடம்போடுகிறது.

தென்னாபிரிக்கமக்கள் வெள்ளையினமக்களின் நிறவெறிஅரசாங்கத்திற்கு எதிரான

போராட்டத்தை நடத்தியபோது,அந்த மக்களிடையே அற்புதமான அரசியல்

தலைவர்கள் தோன்றினார்கள்.அந்தச்சிறப்பைப்பற்றி நெல்சன் மண்டேலா அவர்கள்

பின்வருமாறு கூறுகின்றார்:

" The policy of apartheid created a deep and lasting wound in my country and my people. All of us will spend many years,if not

generations,recovering from that profound hurt.But that decades of oppression and brutality had another,unintended effect,and

that was that it produced the Oliver Tambos,the Walter Sisulus,the Chief Luthulis,the Yusuf Dadoos,the Bram Fischers, the

Robert Sobukwes of our time -- men of such extraordinary courage,wisdom,and generosity that their like may never be

known again. Perhaps it requires such depth of oppression to create such heights of character. My country is rich in the

minerals and gems that lie beneath its soil, but I have always known that its greatest wealth is its people,finer and truer

than the purest diamonds."

[Long Walk to Freedom by Nelson Mandela - Little,Brown & Co.New York- 1995 - p.622 ]

"நிறவெறிக்கொள்கை எனது நாட்டின்மீதும் எனது மக்கள்மீதும் ஆழமான,நிலை-

த்த காயங்களை ஏற்படுத்தியுள்ளது.நாம் எல்லோரும் அதன் ஆழமான துன்புறுத்-

தல்களிலிருந்து விடுபட்டுவர பல தலைமுறைகள் ஆகாவிடினும், பலஆண்டுகள்

எடுக்கவேண்டியிருக்கும்.ஆனால் அக்கால அடக்குமுறையும் மிருகத்தனமும்

வேறொரு எதிர்பாராத விளைவை ஏற்படுத்தியுள்ளது. அது ஒலிவர் தம்புகள்,

வால்ரர் சிசுலுக்கள், ..........போன்ற விதிவிலக்கான வீரம்,அறிவு,பெருந்தன்மை

கொண்டவர்களை உருவாக்கியுள்ளது.அவர்களைப் போன்றவர்கள் பின்பு

தோன்றுவார்களோ தெரியாது.ஒருவேளை அத்தகைய உன்னதங்களின் சிகரமான

குணநலன்களைக்கொண்டவர்கள் தோன்றுவதற்கு அத்தகைய ஆழமான அடக்கு

முறை அவசியமாகலாம்.எனது நாட்டின் மண்ணின்கீழ் பல தாதுப்பொருட்களும்

இரத்தினக்கற்களும் நிறைந்துகிடக்கின்றன.ஆனால் எனது நாட்டின் மிகப்பெரிய

செல்வமாக,மாசற்றவைரக்கற்களைவிடச் சிறப்பாக விளங்குபவர்கள் அந்த உயர்

ந்த மக்களே." என்கிறார் மண்டேலா.

அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கன் குடியரசுத் தலைவராக இருந்தபோது [1861 - 1865]

கறுப்பினமக்களுக்கு விடுதலை வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட உள்நாட்டுப்போர்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.உன்னதமான குறிக்கோள்களை அடிப்படையாகக்

கொண்டது. அக்காலப்பகுதியைப் பற்றிக் குறிப்பிடும் " Chicago Tribune" என்ற பத்திரிகை

" Half a century hence, to have lived in this age will be fame. To have served it as well as Lincoln, will

be immortality. " என எழுதியது. அதாவது; ' அரைநூற்றாண்டுக்குப் பின்பு, இக்காலப்பகுதியில்

வாழ்ந்தோம் என்பதே புகழுக்குரியதாகும். அக்காலப்பகுதியில் லிங்கனைப்போன்று சேவை

செய்திருப்பதென்பது இறவாத்தன்மை தருவதாகும்'.

இதுபோன்று 1789இல் பிரான்சியப்புரட்சி இடம்பெற்றது.அதன்பின்பாக,1791--92 காலப்பகு-

தியில் அந்த நாட்டைச் சென்றுபார்த்த புகழ்பெற்ற ஆங்கிலக்கவிஞர் வில்லியம்

வோட்ஸ்வேர்த் [ William Wordsworth] அவர்கள் பின்வருமாறு கூறினார்:

"Bliss was it in that dawn to be alive, But to be young was very heaven ! ". [ The Prelude ]

அந்த விடியல்பொழுதில் உயிர்வாழ்வது பேரானந்தமானது; அதிலும் அப்போது

இளமையாயிருப்பதென்பது மிகுந்த சுவர்க்க அனுபவமாகும்.அந்த ஆங்கில-

க்கவிஞர் பிரான்சுநாட்டில் அப்போது வாழ்வதை - அதிலும் இளைஞராக வாழ்

வதை - பேரானந்தமானது, சுவர்க்கம் போன்றது எனப்புகழ்ந்து பாராட்டுவதை

நாம் கவனிக்கவேண்டும்.ஒளிமயமான பகற்பொழுதிற்கான விடியல் அந்தப்புர-

ட்சி என அவர் கருதுகிறார்.பிரான்சிய மக்களின் உரிமைப்போராட்டத்தை சரி-

யாக இனங்கண்டு அதனைப் பெருமதிப்புடன் போற்றுவதின்மூலம் அவர் தம்மி-

டமுள்ள விடுதலைவேட்கையையும் வெளிப்படுத்துகிறார்.இதுதான் மேற்குநா-

ட்டினர்க்கும் நமக்கும் இடையேயுள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு. அவர்கள்

வீரத்தினையும் விடுதலைவேட்கையையும் போற்றும்போது நாம் அடிமைத்தனங்க-

களையும் குறுகியசுயநலங்களையும் மெச்சுபவர்களாக விளங்குகிறோம். எனவே

ஈழத்தமிழர்களாகிய நாமும்கூட, இந்த விடுதலைப்போராட்டகாலத்தில் வாழ்வத-

ற்கான வாய்ப்பு, நமக்கு கிடைத்திருப்பது குறித்து பெருமைப்படவேண்டும்;பெருமி-

தம் கொள்ளவேண்டும்.அதிலும் நம் இளம்தலைமுறையினரும் எதிர்காலச்சந்ததியி-

னரும் இந்த கிடைத்தற்கரிய வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த முனை-

ப்பாகமுயலவேண்டும்.

எமது விடுதலைப்போராட்ட காலத்தில்,அந்தப்போராட்டவேள்வியில் புடமிட்டவர்களாக பெருந்தலைவர்

பிரபாகரன், பால்ராஜ்,தீபன் போன்ற சமர்க்களநாயகர்கள், அன்ரன் பாலசிங்கம்,தமிழ்ச்செல்வன் போன்ற

அரசியல்செயற்பாட்டாளர்கள், நம்மிடையே பணிபுரிந்து சிறப்புப்பெற்றார்கள்.ஈழத்தமிழ்மக்களின் விடுத-

லையும் நல்வாழ்வுமே அவர்களின் முதன்மையான,முழுமையான குறிக்கோளாக இருந்தது.அதனாலேயே

அவர்கள் மதிப்புக்குரியவர்களாகச் சிறப்புப்பெற்றார்கள்.தமது அழியும்வாழ்வை அழியாத இலட்சியங்க-

ளுக்காக அர்ப்பணித்தார்கள். உன்னதமானவிடுதலைப்போராட்டவேள்வியில் ஆகுதியாகி,அதன் மகிமையி-

னால் தீண்டப்பட்டவர்களாகிச் சுடர்விடுகிறார்கள்.

நமக்கு ஏற்பட்ட பின்னடைவிலிருந்து விடுபடவேண்டுமென்பதற்காகமட்டும் நாம் உன்னதமானகுறிக்கோ-

ள்களை மேற்கொள்ளவேண்டும் என்பது எனது கருத்தல்ல. நம் எல்லோரினதும்வாழ்வில் தொடர்ச்சியான

ஏற்றமும் உயர்ச்சியும் ஏற்படவேண்டுமெனில் தேசவிடுதலை என்பதற்கும் அப்பாலும் நாம் செல்லவே-

ண்டும்.அரசியல்விடுதலை என்பது முதற்தேவைதான்.ஆனால் அதுவே முழுத்தேவை என்பதாக நாம் குறுக்-

கிக்கொள்ளமுடியாது. வேறும் பலஅரண்களை,அசைக்கவோ அழிக்கவோ முடியாத பாதுகாப்புகளை நாம்

ஏற்படுத்திப் பலம்பெறவேண்டும்.நாம் ஒரு சிறுபான்மை இனம்; அங்கீகரிக்கப்பட்ட ஒரு 'தேசஅரசு' என்பது

நம்மிடம் இல்லை. பூகோளஅரசியலில் எல்லாஆதிக்கசக்திகளும் தமது அரசியல்பொருளாதார நலன்களை

முன்னிறுத்தியே செயற்படுவார்கள். எனவே அத்தகைய சூழலில் நாம் குறுகியகாலத்தில்,விரைவாக வெற்றி

பெறுவோம் எனக்கருதமுடியாது.நீண்டகாலத்தொடர்ச்சியான போராட்டம்,உறுதியுடன்கூடிய உழைப்பு,எத்-

தகைய பின்னடைவுகளையும் சமாளித்துக்கொண்டு முன்செல்லும் ஓர்மம்,திடசங்கற்பம்,முதலான உன்ன-

தங்கள் நம் எல்லோரினதும் பொதுச்சொத்தாக மாறவேண்டும். நம் எதிர்காலச்சந்ததியினரின் தொடர்ச்சி

யான பங்களிப்பு அவசியமென்பதால் அதற்கான தூண்டுதலாக நம் தலைமுறையினரின் செயற்பாடுகள்

அமையவேண்டும். நமது போராட்டஉணர்வு மிகுந்த செயற்பாடுகளை தலைமுறை,தலைமுறையாகக்

கையளிப்பதற்கான பொறிமுறைகளை,வழிமுறைகளை உருவாக்கிப் பேணுபவர்களாக நாம் மாறவே-

ண்டும். தொடரும் நமது விடுதலைக்கானபோராட்டம் என்ற புனிதவேள்வியில் பங்குபற்றுவதற்கு

நம்மவர்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அரியவாய்ப்பில் பங்குபற்றி நம்வாழ்வில் உன்னதங்களை

ச்சேர்த்துக் கொள்வோம். மிகுந்த பழமையும் பண்பாடும் கொண்ட தமிழ்மக்களாகிய நாம், நம்மிடமுள்ள

மனிதமாண்புகளையும்,மனிதவிழுமியங்களையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும் இதுவாகும்.

தோல்வி நிலையென நினைத்தால் ....

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை

பறவையே, இது கேள்;

நீதிநியாயத்திற்கான போராட்டம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.