Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்போது நடப்பது 4 - ம் கட்ட உலகப்போர் - இந்திய ஜனாதிபதி..! அதென்ன நான்காம் கட்ட உலகப் போர்..?! அலசுகிறது ஈழதேசம்..!

Featured Replies

[size=3]தற்போது நடப்பது 4 - ம் கட்ட உலகப்போர் - இந்திய ஜனாதிபதி..! அதென்ன நான்காம் கட்ட உலகப் போர்..?! அலசுகிறது ஈழதேசம்..![/size]

[size=3]

முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர் அனைவரும் அறிவோம். இரண்டாம் கட்ட உலகப் போரில் என்றோ கொல்லப்பட்ட அல்லது சில ஆயிரம் மக்களான யூதர்களின் மரணத்திற்கு இன்றுவரை அரேபியர்கள் விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரில் யூதர்களை கொன்றது ஜெர்மனி,இத்தாலி மற்றும் ஜப்பான்.இந்த மூவரும் யூதர்களை கொன்றதற்கு அரபிய மக்கள் பெரும் விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நியாயமாக ஒழுங்காக பஞ்சாயத்து செய்திருந்தால், ஜெர்மனி,இத்தாலி மற்றும் ஜப்பான் நாடுகளைத் தானே பிரித்து கொடுத்திருக்க வேண்டும் யூத மக்களுக்கு..? ஆனால் நடந்தது என்ன..? சில ஆயிரம் யூத மக்களை கொன்றதற்கு இன்று வரை ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருக்கிறது ஐரோப்பாவும் அமெரிக்காவும். ( பல லட்சங்களில் யூத மக்கள் கொல்லப்பட்டதாக, படுகொலை [/size][size=3]

செய்யப்பட்டதாக பெரிய பெரிய பீரங்கிகளை வைத்து பொய் சொன்னது மேற்குலக ஐரோப்பிய ஊடங்கங்கள்.)[/size]

[size=3]

இன்றுவரை யூத மக்களை யூத அரசை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதைப் போல உலக போலீஸ்காரனும், அவர்களுக்கு குல்லா போடும் ஐரோப்பிய நாடுகளும் பார்கின்றன, ஆதரிக்கின்றன. யூத அரசு செய்யும் அணைத்து வித அயோக்கியத்தனங்களையும் மூடி மறைக்கிறார்கள். உலக நாடுகளில் உள்ள மக்களை வாட்டி வதைக்கும் யூத அரசை போற்றி புகழ்கிறது இந்திய அரசும். [/size]

[size=3]

மூன்றாம் உலகப் போர் என்பது நிழல் யுத்தமாம். அதாவது அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் நடைபெற்ற பனிப் போராம். இரண்டாம் உலகப் போரில் இருந்து ரசியா நாடு சிதறிய 90 கள் வரை என்று கருதலாமாம். அப்படியெனில், மூன்றாம் கட்ட ( ஈழப் போர்களை குறித்து படித்து படித்து....எழுதி எழுதி....., இவ்வாறு முதலாம் கட்ட, இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட, நான்காம் கட்ட ஈழப் போரில் என்றும், நடக்க இருக்கும் ஐந்தாம் கட்ட ஈழப் போர் என்று.....எழுத வருகிறது விரல்கள்..) உலகப் போரில் அமெரிக்கா அரசும் நேட்டோ நாடுகளும் வெற்றி அடைந்தன என்று எடுத்துக் கொள்ளலாமா..? அல்லது ரசியா தவிர அணைத்து நாடுகளும் வெற்றி அடைந்தன என்று கருதிக் கொள்ளலாமா..? அல்லது ஐரோப்பாவை பிடித்து ஆட்டிய கம்யூனிசம் என்ற பூதத்தை ஒரே அடியாக அடித்து வீழ்த்த இவ்வளவு காலம் ஆகி இருக்கின்றன என்று கருதலாமா..? [/size]

[size=3]

அதென்ன நான்காம் உலகப் போர்..? தற்பொழுது நடந்து கொண்டிருப்பது நான்காம் உலகப் போர் என்று இந்திய ஜனாதிபதியாக பதவி ஏற்ற உயர்திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் நாட்டு மக்களுக்கு, உலக மக்களுக்கு இவ்வாறு அறிவித்தார். தீவிரவாதம் பயங்கரவாதம் தானாம்... இந்த நான்காம் உலகப் போர்..?! அதாவது அமெரிக்காவும் ஐரோப்பாவும் தீவிரவாதம் பயங்கரவாதம் என்று காலையில் இருந்து இரவு படுக்கப் போகும் வரை, இரண்டாயிரம் ஆண்டில் இருந்து உலக மக்களை அச்சுறுத்தியும் பயமுறுத்தியும் வந்துள்ளன. இந்திய அரசோ 90 - களில் இருந்தே இந்திய மக்களிடம் எல்லை தாண்டிய பயங்கரவாதம், தீவிரவாதம் பயங்கரவாதம் என்று ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பே நான்காம் உலகப் போரை துவங்கி விட்டது இந்திய அரசு. இந்தியாவில் தனி நாடு கேட்டார்கள் ஆயுதங்களை தூக்கிக் கொண்டு காஷ்மீரில், எனவே போரை தொடுத்தார்கள் ஆயுதங்கள் தூக்கியவர்கள் மீது, ஆயுதம் தூக்கி போராடியவர்களை ஆதரித்த மக்கள் மீதும் இன்றுவரை. கிடக்கட்டும் இவைகள். [/size]

[size=3]

மேலும் கூறியுள்ளார் பிரணாப் முகர்ஜி அவர்கள். இந்த நான்காம் உலகப் போரை முதன் முதல் துவக்கி வைத்த பெருமை நம் நாட்டையே சாரும்.மேலும் உலக நாடுகளுக்கு இந்த நான்காம் கட்ட உலகப் போருக்கு தலைமை தாங்கி போர் புரிந்தது இந்தியா தான் என்றும், உலக மக்களுக்கு இந்திய மக்களுக்கு இந்த பயங்கரவாதம் தீவிரவாதம் தான் மிகப் பெரும் சவாலாக இருக்கிறதாம். என்றார். [/size]

[size=3]

அமெரிக்காவும் ஐரோப்பாவும் கூறிவரும் தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற கொள்கைக்கு, அச்சுறுத்தலுக்கு இது காறும் இலங்கையில் மட்டும் சுமார் லட்சக் கணக்கில் மக்கள் பாஸ்பரஸ் குண்டு போட்டு கொல்லப்பட்டார்கள். தனி நாட்டை ஆதரித்த ஒரே காரணத்திற்காக எஞ்சிய பல லட்சம் மக்கள் முள்வேலி முகாம்களில் வசதியாக வாழ வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் நம் கண் முன்னே நடந்த மிகப்பெரும் மக்கள் அழிவுகள். கிடக்கட்டும் இவைகளும். [/size]

[size=3]

நான்காம் உலகப் போர் நடத்துவதற்கு பழைய இத்துப்போன இந்த அல்கொய்தா, லக்சர் மற்றும் தாலிபான்கள் எவ்வளவு காலம் தான் பயன்படுவார்கள்.? தற்பொழுதே அமெரிக்கா ஐரோப்பிய மக்கள் அட போங்கப்பா...[/size][size=3]

நீங்களும் உங்கள் தீவிரவாதமும் பயங்கரவாதமும் என்கிறார்கள். நிலைமை இப்படியாக இருக்க, மேலும் மேலும் அவர்களிடம் மேற்சொன்ன இரண்டு வார்த்தைகளை கூறினால் விழுந்து விழுந்து வயிறு வலிக்க சிரிக்கப் போகிறார்கள். வேலை கொடு, சம்பளம் கொடு... என்று கேட்டால் பயங்கரவாதம் தீவிரவாதம் என்றா சொல்கிறாய்..? என்று ஐரோப்பிய மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நிலைமை இவ்வாறு இருக்க, [/size]

[size=3]

எனவே புதிய பயங்கரவாதிகளை உருவாக்கினால் தான் புதிய உற்சாகமாகவும், ஆக்ரோசமாகவும் பல கோடி மக்களை கொல்ல முடியும்..? எனவே மியான்மரில் நடந்த மதக் கலவரமும், அசாம் மாநிலத்தில் நடந்த மதக் கலவரமும் புதிய தீவிரவாத குழுக்களை உருவாக்கி விடும் சூழல் அங்கு நிலவிக் கொண்டிருக்கின்றன அல்லது அந்த சூழல் விரைவில் உருவாகி விடும். அல்லது மக்கள் மிக நீண்ட அமைதியாக இருந்தால், புதிய தீவிரவாத குழுக்கள் உருவாக்கப்படும். எனவே தான் அசாமில் நடைபெற்ற மத கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 300 கோடி ரூபாய்களை பறந்து பறந்து கொண்டு போய் கொடுக்கிறார்களோ என்று லேசான சந்தேகம் வருகிறது என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். மியான்மரும் அசாமும் பல எல்லைப் பகுதிகளை கொண்டிருக்கிறது. குண்டுகள் போடுவதற்கு ஏற்ற இடங்கள். [/size]

[size=3]

இந்த நான்காம் கட்ட உலகப்போரில் சீனாவும் சேர்ந்து கொண்டு கூவப் போகிறது மேற்சொன்ன இரண்டு வார்த்தைகள உரக்கச் சொல்லியவாறு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். [/size]

[size=3]

மாயாண்டிக்கருப்பு[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.