Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசியன் கூட்டமைப்பில் ஏற்படும் விரிசல் – க.வீமன்

Featured Replies

தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of South – East Asian Nations)1967 ஆகஸ்து 8ம் நாள் தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று இந்த அமைப்பிற்கு 45 வயதாகிறது. இவ்வளவு காலமும் இல்லாத உறுப்பு நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகள் சென்ற வாரம் (யூலை 13-20,2012) வெளிப்பட்டன.

ஆசியன் அமைப்பின் ஆரம்ப கால உறுப்பு நாடுகளாக தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர் என்பன இருக்கின்றன. இன்று கம்போடியா. பர்மா, வியற்நாம், லாவோஸ், புரூணை போன்றவை சேர்த்துக் கொண்டபடியால் உறுப்பு நாடுகள் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி. பிராந்திய அமைதி, பரஸ்பர உதவி, கல்வி தொடர்பான பயற்சி மற்றும் ஆராய்ச்சி, தொழில்சார் வளர்ச்சி, பிற பிராந்திய மற்றும் சர்வதேச கூட்டமைப்புகளோடு ஒத்துழைப்பு என்ற உன்னத நோக்கங்களுக்காக ஆசியன் உருவாக்கப்பட்டது.

ஆசியனின் ஆதாரக் கோட்பாடுகளாகப் பின்வருவன அமைகின்றன.

1. உறுப்பு நாடுகளின் தன்னாட்சி, இறைமை, சமத்துவம், தரைப்பரப்பு ஒருமைப்பாடு, தேசிய அடையாளம் ஆகியவற்றிற்கு பரஸ்பர மதிப்பு அங்கீகாரம் அளித்தல்.

2. ஒவ்வொரு உறுப்பு நாடும் வெளித் தலையீடு, ஆட்சிக் கவிழ்ப்பு, பலாத்காரம் ஆகியவை இன்றி இயங்கும் உரிமை.

3. உள் விவகாரங்களில் தலையிடாமை.

4. பிணக்குகள், முரண்பாடுகள் ஏற்பட்டால் அமைதி வழியில் தீர்வு காணல்

5. மிரட்டல், ஆயுத பலாத்காரம் ஆகியவற்றைக் கைவிடுதல்.

6. உறுப்பு நாடுகளுக்கிடையிலான முழுமையான ஒத்துழைப்பு.

இவை இருந்தும் சென்ற வாரம் கம்போடியாவில் நடந்த ஆசியன் அமைப்பின் பிராந்திய அமர்வில் சீனாவின் தென் சீனக் கடல் மீதான உரிமைக் கோரிக்கை தொடர்பாக அனைத்து உறுப்பு நாடுகளும் இணைந்த கூட்டறிக்கையை வெளியிட முடியாமல் போய்விட்டது.

ஆசியனின் 45 வருட வரலாற்றில் இந்த “முடியாமை” இது தான் முதற் தடைவ. இந்த இயலாமை ஒரு முக்கிய விடயத்தை வலியுறுத்துகிறது. தென் கிழக்கு ஆசிய நாடுகளின் உள் விவகாரங்களில் சீனா செலுத்தும் நேரடி மற்றும் மறைமுக ஆதிக்கத்தை இந்த இயலாமை வெளிப்படுத்துகிறது.

எதிர்வரும் காலத்தில் சார்க் (SAARC) எனப்படும் பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிலும் சீனா தொடர்பாக முரண்பாடுகள் தோன்ற வாய்ப்பு இருக்கிறது. சார்க் அமைப்பில் இலங்கை, இந்தியா, பூட்டான், நேபாளம், வங்க தேசம், மாலைதீவுகள், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியன உறுப்பியம் வகிக்கின்றன.

சீனாவின் படை பலம், பொருளாதார பலம் என்பன ஆசியன் அமைப்பில் பிளவை ஏற்படுத்துகின்றன. தாய்லாந்து அமெரிக்க சார்பு நாடு. மியன்மாரையும் தனது ஆதிக்க வலயத்திற்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா தீவிரமுயற்சி எடுக்கிறது. அமெரிக்க நட்பு நாடான பிலிப்பீன்சில் சீனா முதலீடுகள் செய்துள்ளது.

ஆனால் பிலிப்பீன்ஸ் உரிமை கோரும் தென் சீனக் கடலின் ஒரு பகுதியைச் சீனா விட்டுக் கொடுக்க மறுக்கிறது. பிலிப்பீன்சின் வடமேற்கு எல்லைக் கடலில் சீனாவுக்குச் சொந்தமான மீன்பிடிக் கப்பல்களும் கண்காணிப்புக் கடற் கலங்களும் வழமையாகச் சஞ்சரிக்கின்றன.

இந்த கடற் பகுதியைப் பிலிப்பீன்ஸ் நாடு மேற்கு பிலிப்பீன்ஸ் கடல் (West Phillipines Sea) என்று அழைக்கிறது. ஆனால் தென் சீனக் கடல் முழுவதும் தனது நாட்டிற்கே சொந்தம் என்று கூறும் சீனா பிலிப்பீன்சின் உரிமைக் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. சீனாவின் மிரட்டலைச் சமாளிப்பதற்கு பிலிப்பீன்ஸ் அமெரிக்கா உதவியை நாடுகிறது.

ஏந்த நேரமும் போர் வெடிக்கக் கூடிய மூன்று இடங்கள் அடையாளம் உலகில் காணப்படுகின்றன. இவை பிளாஷ் பொயின்ற்ஸ் (Flashpoints) என்று அழைக்கப்படுகின்றன. காஷ்மீர், கொரிய தீபகற்பம், தென்சீனக் கடல் என்பன அந்த மூன்றுமாகும்.

தென் சீனக் கடலும் அதில் காணப்படும் ஸ்பிறாட்லி தீவுகளும் (Spratly Islands) பெருமளவு எண்ணை, எரிவாயு ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. சீனா கடலுக்கும் இந்தத் தீவுகளுக்கும் முழு உரிமை கோருகிறது. புரூணை, தாய்வான், வியற்நாம், பிலிப்பீன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளும் இவற்றிற்கு உரிமை கோருகின்றன.

ஸ்பிறாட்லி தீவுகள் தென் சீனக் கடலில் பரந்து கிடக்கின்றன. மக்கள் குடியிருப்புக்கள் இல்லாவிட்டாலும் உரிமை கோரும் நாடுகள் சில தமது கடற்படையை அங்கு நிறுத்தியுள்ளன. சீனா நிரந்தரமான தளத்தை அமைத்துள்ளது.

ஸ்பிறாட்லி தீவுப் பிராந்தியத்தில் எண்ணை, எரிவாயு மாத்திரமல்ல மீன், இறால், சுறா போன்ற கடற் செல்வங்களும் பெருமளவில் உள்ளன. அது மாத்திரமல்ல கிழக்கு மேற்கு கடற்பாதை தென்சீனக் கடலூடாக இந்தத் தீவுகளைக் கடந்து செல்கிறது.

மத்திய கிழக்கில் இருந்து வரும் எண்ணை சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இந்தக் கடற்பாதை ஊடாகச் செல்கின்றன. தென் சீனக் கடல் தொடர்பான ஆதிக்கப் போட்டி மிக ஆழமான பின்னணியைக் கொண்டது. இதனால் தான் அது போர் வெடிக்கக் கூடிய பகுதியாக அடையாளமிடப்படுகிறது.

தென் சீனக் கடலுக்கும் அதில் பரந்து கிடக்கும் தீவுகளுக்கும் உரிமை கோரும் நாடுகள் 1982ம் ஆண்டு ஜநா நிறைவேற்றிய கடல் வலயச் சட்டத்தின் அடிப்படையில் உரிமைக் கோரிக்கையை எழுப்புகின்றன. UN Convention on the Law of the Sea என்ற கடல் வலயச் சட்டம் பின்வரும் உரிமையை வழங்குகிறது. இந்தச் சட்டம் சுருக்கமாக Unclos எனப்படுகிறது.

கடலை எல்லையாகக் கொண்ட நாடுகள் கடற் கரையில் இருந்து 200 கடல் மைல் கொண்ட கடற் பகுதிக்கு பிரத்தியேக பொருளாதார வலயம் என்ற அடிப்படையில் உரித்து உடையவையாகின்றன. -200 Nautical mile exclusive zone.

சட்டம் இவ்வாறு இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளச் சீனா தயாரில்லை. சீனாவின் பொருளாதார மற்றும் ஆயுத பலத்தை ஆசியன் நாடுகளால் எதிர் கொள்ள முடியவில்லை. அதன் வரலாற்றில் முதன் முறையாகத் தடுமாற்றம் தோன்றியுள்ளது. சார்க் அமைப்பிற்கும் அதே நிலை வர நெடுநாள் எடுக்கப் போவதில்லை.

www.tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.