Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயல் சினிமா

Featured Replies

pg3-t.jpg

"சினிமா என்பது ஒரு நிமிஷத்திற்குள் இருபத்து நான்கு பிரேம்களில் சொல்லப்படும் உண்மை" என்றார் பிரெஞ்ச் இயக்குனர் கோடார்ட்.

ஆனால் ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான பிரைன் டி பால்மா,

"ஒரு நிமிஷத்தில் இருபத்து நான்கு முறை பொய் சொல்லக்கூடியதற்கு பெயர்தான் சினிமா" என்கிறார். பெரும்பான்மை ஹாலிவுட் திரைப்படங்கள் பிரைன் டி பால்மாவின் வழித்தடத்தில் பயணிக்கக் கூடியவை.

வன்முறையும் கடத்தல் நாடகங்களும் துப்பறியும் கதைகளும் எப்போதுமே ஹாலிவுட்டின் மையப்பொருளாக இருந்து வந்திருக்கின்றன. ஒரு தீமையை அழித்தொழிப்பதற்காக நூற்றுக்கணக்கான வன்செயல்களைப் புரிவதுதான் ஹாலிவுட் படங்களின் கதை சொல்லும் முறை.

ஹாலிவுட் சினிமாக்கள் பெரிதும் ஸ்டுடியோவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. அங்கே கதைக்கான உரிமை பெறப்பட்ட பிறகு திரைக்கதை எழுதுபவர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என யாவரும் ஸ்டுடியோவின் விருப்பப்படியே முடிவு செய்யப்படுகின்றனர். ஸ்டுடியோ மாபெரும் வர்த்தக நிறுவனத்தைப் போல, தன் விருப்பத்தின்படி திரையுலகை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதை, சார்லி சாப்ளினில் துவங்கி மார்லன் பிராண்டோ வரை பலரும் கண்டித்திருக்கிறார்கள். சாப்ளின் கம்யூனிஸ்டுகளை ஆதரித்துப் பேசுகிறார். சினிமாவை அடிநிலை மக்களுக்கான வெளிப்பாட்டு சாதனமாக மாற்ற முயற்சிக்கிறார் என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஹாலிவுட் ஸ்டுடியோகள் அவர் மீது பகிரங்க விசாரணைக்கு ஏற்பாடு செய்தன. சாப்ளின், இதுதான் குற்றம் என்றால் அதைத்தான் தொடர்ந்து செய்வேன் என்று பகிரங்கமாகத் தெரியப்படுத்தினார். ஹாலிவுட் ஸ்டுடியோவால் அவரை எதுவும் செய்ய இயலவில்லை.

மார்லன் பிராண்டோவை காட்ஃபாதர் திரைப்படத்தில் நடிப்பதற்காக பிரான்சிஸ் போர்டு கபோலா சிபாரிசு செய்தபோது, தயாரிப்பு நிறுவனம் அவர் அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருந்துவாரா என்று வசனம் பேசச் செய்து, சோதனை செய்யவேண்டும் என வற்புறுத்தியது. இது புதுமுக நடிகர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சோதனை. ஆனால் பிராண்டோ, ஸ்டுடியோ அதிகாரத்தை விமரிசித்த காரணத்தால் அவரையும் இந்தச் சோதனையைச் செய்ய கட்டாயப்படுத்தினார்கள். பிராண்டோ, தான் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று பிடிவாதமாக இருந்தார். ஆனால், கபோலா, தனக்காக பிராண்டோ இதற்கு அனுமதிக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டதும், பிராண்டோ, தானே ஒரு ஒப்பனைக் கலைஞரை அழைத்து வந்து காட்ஃபாதர் படத்தில் வருவது போன்ற ஒப்பனையைத் தானே புனைந்துகொண்டு, வாயில் செயற்கையான தாடையைப் பொருத்திக்கொண்டு, கபோலா வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்தார். கபோலாவால் நம்ப முடியவில்லை. சோதனை படப்பிடிப்பு நடத்தினார்கள். ஸ்டுடியோ வாயை மூடிக்கொண்டு மௌனமாகியது.

ஸ்பீல்பெர்க், மார்டின் ஸ்கார்சசி, கபோலா, லூகாஸ் இந்த நால்வரின் வருகை ஹாலிவுட் சினிமாவின் போக்கை முற்றிலும் திசைமாற்றம் கொள்ளச் செய்தது. நால்வரில் ஸ்பீல்பெர்க் வணிக ரீதியான சாதனைகளை நிகழ்த்தியபோது, ஸ்கார்சசி, ஹாலிவுட் திரைப்படங்களுக்கு அடித்தட்டு உலகமான குற்றவாளிகளின் நிழல் உலகை அறிமுகம் செய்து வைத்தார். திரையில் இருண்ட உலகின் தினசரி காட்சிகளை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டினார். லூகாஸ், ஹாலிவுட் சினிமாவிற்கு கிராபிக்ஸ் எனும் புதிய தொழில்நுட்பத்தை முக்கியப்படுத்தி தனது விஞ்ஞானக் கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்தார். இந்த மூவருக்குப் பின்வந்த கபோலா, இத்தாலிய நிழல் உலகம் எப்படி அமெரிக்காவிற்குள் பெரிய சக்தியாக தொடர்ந்து வளர்ந்து வந்தது என்பதை, தனது காட்ஃபாதர் வரிசை படங்களில் உருவாக்கி, புதிய கதவை திறந்துவிட்டார். ஹாலிவுட் திரைப்படம் அதுவரை நம்பியிருந்த எளிய காதல் நாடகங்களும், சாகசக் கதைகளும், துப்பறியும் கதைகளும் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகத் துவங்கின. மாறாக, விஞ்ஞான புனைக்கதைப் படங்களின் உருவாக்கம் மேலோங்கத் துவங்கியது. விண்வெளியை மையமாகக் கொண்ட கதைகள் ஏராளமாக திரைக்கு வரத் துவங்கின.

ஹாலிவுட் சினிமாவின் கையில் எப்போதுமே இருக்கும் கதைக்களஞ்சியம் பைபிள். நேரடியாகவோ, மறைமுகமாகவோ பைபிள் கதைகள் திரைப்படங்களாக வெளிவந்தபடியே இருக்கும். பைபிளில் வலியுறுத்தப்படும் அறக்கோட்பாடுகளை மறைமுகமாக வெளிப்படுத்தும் கதைகளும் எப்போதுமே மிகுந்த வரவேற்பு பெற்று வந்திருக்கின்றன.

அமெரிக்கா இதுவரை தனது தேசத்திற்குள் எந்த யுத்தத்தையும் சந்தித்ததில்லை. அமெரிக்கா சந்தித்த மிகப்பெரிய பேரழிவு பியர்ல் ஹார்பர் மட்டும்தான். ஆனால், உலக யுத்தம் துவங்கி பல்வேறு யுத்தங்களில் அமெரிக்கா பங்கேற்றிருக்கிறது. அமெரிக்க வீரர்களை மக்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆகவே, அமெரிக்க மக்கள் யுத்தம் குறித்த திரைப்படங்களைக் காண்பதில் மிக ஆர்வமாக இருந்து வருகிறார்கள். இதன் விளைவு ஆண்டிற்கு பத்துக்கும் மேற்பட்ட யுத்த சம்பவப் படங்கள் அமெரிக்காவில் உருவாக்கப்படுகின்றன.

துப்பறியும் வகைப் படங்களும், குற்றவாளிகளின் உலகைப் பற்றிய படங்களும் கலைப்படங்களா என்ற கேள்வி எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. வெகுஜன சினிமா இந்த கதைக்கருக்களை ஜனரஞ்சகப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தியது. ஆனால் கலைப்படங்களோ, குற்றவாளிகள் மற்றும் கொலைக்கு பிந்திய மனநிலைகளை அதன் உளவியல் பார்வையில் ஆராயத் துவங்கியது. குற்றம் குறித்த நமது பார்வைகளுக்கு வெளியில் இந்தத் திரைப்படங்கள் குற்ற நிகழ்வை ஆழமான விசாரணைக்கு உட்படுத்தின. ஹிட்ச்காக்கின் படங்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். ஹிட்ச்காக் கொலையை சுவாரஸ்யப்படுத்துவதில்லை; மாறாக அவர் துப்பறிவாளரின் வேலையை விடவும் மனோதத்துவவாதியின் வேலையைத்தான் அதிகம் செய்கிறார். குற்றம் மறைக்கப்படும்போது குற்றவாளியின் மனவுலகம் எப்படியிருக்கிறது என்பதையும், எதிர்பாராமை என்பது குற்றங்களுக்குப் பின்னணியில் என்ன பங்கு வகிக்கிறது என்பதையும் ஹிட்ச்காக்கின் படங்கள் விவரிக்கின்றன. இன்னொரு வகையில், கோடார்ட் போன்றவர்கள், குற்றவாளிகள் எந்தப் புள்ளியில் இருந்து உருவாகிறார்கள் என்பதில் துவங்கி, சமூகத்தை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்தை திரைப்படமாக உருவாக்குகிறார்கள். இதற்கு நல்ல உதாரணம், கோடார்ட்டின் பிரெத்லெஸ். இப்படத்தின் கதாநாயகன் ஒரு குற்றவாளி. ஆனால் அவனது அன்றாட செயல்களில் குற்றம் பிரதிபலிக்கப்படுவதில்லை. மாறாக, கலாசார நெருக்கடிகளை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையே கோடார்ட் முக்கியத்துவப்படுத்துகிறார

  • தொடங்கியவர்

pg3-t.jpg

கேமராவைப் பயன்படுத்துவதில் குவென்டின் மியுசிக் சேனல்களின் உத்திகளை பயன்படுத்தினார். மியுசிக் சேனல்களின் வருகையால் கேமரா நடனம் ஆடுபவரோடு சேர்ந்து ஆடுவதும், அவர்களைப் பின்தொடர்ந்து செல்வதும் இசையின் தாள கதிக்கு ஏற்ப பல்வேறு நிலைகளில் தாவிச் செல்வதும், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவம் தருவதாக இருந்தது. அந்த உத்திகள் யாவையும் குவென்டின் குற்றவாளிகளைப் பற்றிய இந்த திரைப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். குற்றவாளிகள் மிகப் பெரிய வணிக நிறுவனப் பிரதிநிதிகள் போல உடையுடுத்திக் கொண்டு செல்வதும், கேமரா அவர்களை பின்தொடர்ந்து போவதும், குற்ற நிகழ்வுகளின் போது கேமரா அலைந்து திரிவதும், பரஸ்பரம் சந்தேகம் கொள்ளும்போது அவர்கள் முகங்கள் மிக அண்மைக் காட்சிகளாக படமாக்கப் பட்டிருப்பதும், பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமாக அமைந்தது. இந்தப் படத்தை மிரமாக்ஸ் நிறுவனம் விநியோகம் செய்தது. அவர்கள் இப்படத்தை சன்டேன் திரைப்பட விழாவில் பங்கேற்கும்படியாகச் செய்தனர். குவென்டின் மிகுந்த எதிர்பார்ப்போடு திரைப்பட விழாவில் பங்கேற்றார். ஆனால் அதில் அவருக்கு விருது கிடைக்கவில்லை. மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிய அவர் Pulp Fiction என்ற திரைக்கதையை உருவாக்கினார்.

Pulp Fiction கதைக்கான கரு, அவரது நண்பர் ரோஜர் அவாரியுடையது. அதற்கு முழுமையானதொரு திரைக்கதை வடிவம் தந்திருந்தார் குவென்டின். இந்த திரைக்கதை ஒரு நாவல் போன்று அத்தியாயங்கள் வடிவத்தை கொண்டிருந்தது. 1994இல் வெளியான இப்படம் பெரிய வரவேற்பு பெற்றதோடு, அந்த ஆண்டு நடைபெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த சினிமாவிற்கான விருதையும் பெற்றது. கான்ஸ் விருது பெற்றதும் குவென்டின் படங்களுக்கு ஒரு உலகச் சந்தை உருவாகத் துவங்கியது. பிரிட்டனிலும் இப்படம் மிகுந்த வரவேற்பு பெற்றது. அத்தோடு ஹாலிவுட் சரித்திரத்தில் இல்லாத அளவு, நூறு மில்லியன் டாலர் வசூல் செய்தது. அத்தோடு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளையும் பெற்றது. ஹாலிவுட் சினிமாவில் குவென்டின் புதிய அத்தியாயத்தை எழுதத் துவங்கினார். படம் வெளியாகி பத்தாண்டுகள் கடந்துவிட்ட சூழலில் இன்றும்கூட இந்தப் படம் குறித்த சர்ச்சைகளும் விவாதங்களும் தொடர்ந்து நடந்து கொண்டேதானிருக்கின்றன. பல்வேறு நாடுகளில் திரைப்படக் கல்லூரிகளில் இப்படம் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு கதையைப் பற்றிய மூன்று கதைகள் என்ற துணைத்தலைப்போடு வெளியான Pulp Fiction ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.The Prologue, Vincent Vega and Marsellus Wallace's wife, The Gold Watch, The Bonnie situation, மற்றும் The Epilogueஆகிய ஐந்து பகுதிகளில் முதலும் கடைசியும் ஒரே நிகழ்வின் இரண்டு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இது அமெரிக்காவில் பிரபலமாக உள்ள துப்பறியும் நாவல்களின் வடிவமாகும். நிழல் உலகிலிருந்து வெளியேற விரும்பும் இரண்டு பேர், ஒரு உணவு விடுதியில் சந்தித்து, இனி இந்தத் தொழில் தேவையில்லை என்று விலக விரும்புவது குறித்து உரையாடுவதில் துவங்குகிறது படம். இவர்களின் பேச்சின் ஊடாகவே ஒரு ஆள் கொலை செய்யப்படப் போவதைப் பற்றிய செய்தி விவரிக்கப்படுகிறது.

குவென்டின் டெரான்டினோவின் வசனங்கள், குற்றவாளிகள் ரகசியமாகப் பேசிக் கொள்வது போலன்றி, தேசம் தோறும் உள்ள கலாசார வேறுபாடுகளைப் பற்றியதாக உள்ளது. சிறு குற்றவாளியான ஒருவன் ஐரோப்பாவில் உள்ள விடுதிகளில் போதை மருந்துகள் எப்படி விற்கப்படுகின்றன என்பதைப் பற்றி சொல்கிறான். அடுத்தவன் இத்தாலியில் மீனை எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதைப் பற்றி விவரிக்கிறான். அவர்கள் பேச்சு குற்றம் தொடர்பானதாக இன்றி, நீண்ட நாட்கள் பழகிய இருவர் பேசிக் கொள்வது போல உள்ளது. பேச்சின் ஊடாகவே அவர்கள் குற்ற உலகின் மீது கொண்டிருக்கும் அதிருப்தி வெளிப்படுகிறது. இங்கிருந்து துவங்கும் கதை, அதன் அடுத்த மூன்று பகுதிகளிலும் குற்றத்தின் தொடர்ச்சி என்ற கண்ணியால் பின்னப்படுகிறது. கடவுள் தீமையை அழிப்பதற்காக சில நேரம் இதுபோன்ற காரியங்களை செய்யத் தூண்டுவதாக ஒரு கதாபாத்திரம் கூறுகிறது. இவர்கள் தங்களைக் கொல்ல வரும் எதிராளிகளைக்கூட பிரதர் என்றே அழைக்கிறார்கள். ஹிட்ச்காக்கும், கோடாட்டும், பிரைன் டி பால்மாவும் ஒன்று கலந்தது போன்ற வடிவம் கொண்டிருக்கிறது இப்படம். தோற்றத்தில் இது ஒரு கேங்ஸ்டர் படம் போன்று உருவாக்கப்பட்டிருந்தாலும் படத்தின் ஊடாக அமெரிக்க மக்களின் மனதில் உள்ள குழப்பங்களும் வன்முறையும் தவிர்க்க இயலாதபடி வாழ்வின் பகுதியாகிவிட்டது துல்லியமாக வெளிப்படுகிறது.

திரைக்கதை அமைப்பில், முக்கிய கதாபாத்திரங்களும் அவர்களுக்கு ஏற்படப் போகும் பிரச்னையும் படத்தின் முதல் அங்கத்திலே சொல்லப்பட்டு விடவேண்டும் என்ற விதிகளிருந்தன. ஆனால் குவென்டின் படத்தில் கதாபாத்திரங்கள் தங்கள் செயல்களால் அறியப்படுகிறார்கள். படத்தின் முடிவு வரை பிரச்னை புதுப் புது வடிவம் எடுத்துக் கொண்டேயிருக்கிறது. வில்வியம்பாக்னரின், தி சவுண்ட் அண்ட் ப்யூரி நாவல் இது போன்று ஒரு வடிவம் கொண்டது. கதையின் முக்கிய சம்பவம் வேறு வேறு கதாபாத்திரங்களின் பார்வையில் விவரிக்கப்படுகிறது. ஆச்சரியமானதொரு ஒற்றுமை, பாக்னரின் நாவலில் டெரான்டினோ என்ற பெயரில் இருவர் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான்.

Pulp Fiction படத்தை விமரிசனம் செய்த எரிக் டேவிட், இப்படம் ஷேக்ஸ்பியரின் எழுத்துகளுக்கு நிகரானது என்கிறார். ஷேக்ஸ்பியரின் வசனங்கள் போல நீண்ட தனிமொழியும் கதாபாத்திரங்களின் மனநிலையை விளக்கும் உரையாடல்களும் படத்தில் உள்ளன என்று குறிப்பிடுகிறார். இப்படத்தில் ஒரு கதாபாத்திரம், அற்புதம் என்றால் என்ன? என்று கேட்கும் போது, அது இறைவன் நிகழ்த்தும் செயல் என்கிறான். அதற்கு மற்றவன், நிஜம், நாம் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டு சுடப்படாமல் தப்புகிறோம் இல்லையா; அது அற்புதம் இல்லையா? கடவுள்தான் நம்மை காப்பாற்றியிருக்கிறார். நாம் குடிக்கும் கோக் எப்படி பெப்சியாகியிருக்கிறது; அதுவும் கடவுளின் விருப்பம்தானே என்று அற்புதங்கள் அன்றாட நிகழ்வுகளைச் சுற்றி பின்னப்படுவதை விவரிக்கிறான். இதுதான் குவென்டினின் பார்வை.

எனது மதம் சினிமா, எனது தேவாலயம் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் என்று கூறும் குவென்டின், கடந்த பத்தாண்டுகளுக்குள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டவர். தயாரிப்பாளர்களோடு சண்டை, பழைய காதலிகளை மிரட்டினார் என்பது உட்பட எத்தனையோ பரபரப்புக் குற்றச்சாட்டுகள் இவர் மீது வைக்கப்பட்டபோதும், தொடர்ந்து தனது படங்களின் வழியே அதைத் தாண்டிய தனது வலிமையை வெளிப்படுத்தி வருகிறார் குவெண்டின். Sleep With Me, Four Rooms, Jackie Brown என தொடர்ந்து இவரது படங்கள் ஹாலிவுட்டில் புதிய சினிமாவிற்கான சாத்தியங்களை உருவாக்கி வருகிறது.

குவென்டினின் சமீபத்திய படங்களான Kill Bill, Hostel இரண்டுமே மர்மக் கதை படங்கள். ஆனால், இதில் Kill Bill சாமுராய், குங்பூ, பிரெஞ்சு துப்பறியும் படங்கள், அனிமேன் என்று பல்வேறு வகைப்பட்ட சினிமா வகைகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தினை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தது ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் என்று கூறும் குவென்டின், தான் ஹாம்லெட்டை ஒரு பெண்ணாக மாற்றியிருப்பதாகப் குறிப்பிடுகிறார்.

டெரான்டினோவின் படங்கள் உணர்ச்சிபூர்வமாக கதைகளை சொல்வதில்லை. பின்நவீனத்துவ நாவல்களைப் போல கதையை சொல்லும் முறையும் கதையின் மையப் பாத்திரங்களை சிதறடிக்கும் உத்தியும் இவரிடம் காணப்படுகிறது. இன்று குவென்டின் வகைப் படங்கள் என்று வகைப்படுத்துமளவு இவரது பாதிப்பில் உருவான படங்கள் ஏராளமாக உள்ளன. சமீபத்திய ஒரு பேட்டியில் அவரிடம், பைபிளை படம் எடுப்பதாக இருந்தால் எதைத் தேர்வு செய்வீர்கள் என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார்லகுவான்டின் சிரித்தபடியே, என்னை மிகவும் கவர்ந்த பகுதி பாம்பு ஏவாளை மயக்கி அறிவுக்கனியை தின்பதற்குத் தூண்டும் பகுதிதான்; அந்தப் பாம்பு இதுவரை நான் வாசித்த கதாபாத்திரங்கள் எல்லாவற்றையும் விடவும் மிகவும் தனித்துவமானது என்கிறார். யாரை நடிப்பதற்கு தேர்வு செய்வீர்கள் என்று கேட்டதும், உமா தர்ண்டனை ஏவாளாக நடிக்க வைப்பேன் என்றபடி நானே பாம்பாக நடித்துவிடுவேன் என்றார். இதுதான் குவென்டின்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக அவரது படங்கள் சீனாவில் திரையிடப்பட்டபோது, அதைக் காண்பதற்கு லட்சக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தார்கள். குவென்டின் இதன் காரணமாகவே தனது அடுத்த படத்தை சீனாவில் உருவாக்கினார். தொலைக்காட்சிக்கான சிறு தொடர்கள், டாகுமெண்டரி திரைப்படங்கள் என்று, தொடர்ந்து இயங்கி வரும் குவென்டின் டெரான்டினோ, சமகால அமெரிக்க சினிமாவின் மையப் புள்ளியாக இருந்து வருகிறார். குவென்டின் திரைப்படங்கள், இந்திய சினிமாவில் மலினமான ரீதியில் நகலெடுக்கப்பட்டிருக்கின்றன.

தொடரும்............

நன்றி:எஸ்.ராமகிருஸ்ணன் (தீராநதி)

  • தொடங்கியவர்

pg3.jpg

"மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு காகிதமும் பென்சிலும்

எப்படி எளிதாகக் கிடைக்கிறதோ,

அதுபோல சினிமா என்று சாத்தியமாகிறதோ,

அந்த நாளில்தான் அது சாமான்ய மனிதனின் கலை வடிவமாக அங்கீகரிக்கப்படும்."

-பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ழான் காக்தூ.

இன்றைய ஹாலிவுட் படங்கள், தயாரிக்க திட்டமிடும்போதே, அது ஆசிய நாடுகளில் வசூல் செய்யப்போகும் தொகையும் அந்த ரசிகர்களின் மனப்போக்கை ஊக்குவிக்கும் கேளிக்கை முறைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பன்னாட்டு வர்த்தக சினிமாவின் புதிய சந்தைகளாக சீனாவும் இந்தியாவுமே கவனம் கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, மார்ஷல் ஆர்ட்ஸ் எனப்படும் சாகசக்கலையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களுக்கு ஆசிய நாடுகளில் உள்ள வரவேற்பு, அதை ஒரு தனித்த வணிகப் பொருளாக வளர்த்து எடுத்து கொண்டு விட்டது. புருஸ்லீ துவங்கி ஜாக்கி ஜான் வரை பலரும் இந்த வரிசையில் பிரதான கதாநாயகர்களாக உருப்பெற்றவர்களே. அதிலும் குரோச்சிங் டைகர் அண்ட் கிடன் டிராகன் திரைப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டு அமெரிக்க வணிகச் சந்தையில் முக்கியத்துவம் பெற்றதிலிருந்து, மார்ஷல் ஆர்ட்ஸ் திரைப்படங்கள் அமெரிக்க வர்த்தகச் சந்தையில் முக்கியத்துவம் பெறத் துவங்கிவிட்டன.

மார்ஷல் ஆர்ட்ஸ் படங்களின் துவக்கப்புள்ளியாக ஹாங்காங் சினிமாவைக் குறிப்பிடலாம். இங்கிருந்துதான் இந்த வகை சாகசப்படங்கள் திரையுலகிற்குள் நுழையத் துவங்கின. அதிலும் குறிப்பாக புருஸ்லீயின் வெற்றி, ஹாங்காங் சினிமாவிற்குப் புதியதொரு கதவைத் திறந்துவிட்டது. ஜான் வூ போன்ற சாகசப்பட இயக்குநர்கள் உருவானார்கள். இன்றும் உலக நாடுகளில் திரைப்படம் தயாரிப்பதில் ஹாலிவுட் மற்றும் இந்தியாவிற்கு அடுத்த நிலையில் உள்ளது, ஹாங்காங்தான். ஹாங்காங் ஒரு பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த காரணத்தால், அங்கு திரைப்பட உருவாக்கம் முழுவதும் தனிநபர்களாலேயே முன்னெடுக்கப்பட்டது. ஹாங்காங்கில் குடியிருப்பவர்களில் பெரும்பான்மையினர் சீனர்கள் என்பதால், சீனாவின் அரசியல் மாற்றங்களும் பல்வேறு சீன நிலப்பரப்பிலிருந்து இடம் மாறி ஹாங்காங்கில் குடியேற்றப்பட்ட சீனர்களின் கலாசார விருப்பங்களும் இந்தத் திரைப்பட உருவாக்கத்தில் முக்கிய பிரச்னையாக இருந்தன. சீனாவின் பிரதான திரைப்பட வளர்ச்சியேகூட ஹாங்காங்கில் இருந்துதான் துவங்கியது என்றுகூட சொல்லலாம்.

போதைமருந்து கடத்தல், கூக் கொலையாளிகள், காசினோ போன்ற சூதாட்டரங்கப் பிரச்னைகள், குங்பூ சாகசக் கதைகள் என்று நாலைந்து விதமான கருப்பொருட்களுக்குள்ளாகப் பெரும்பான்மை ஹாங்காங் சினிமாகள் அடங்கி விடுகின்றன. இந்த வகைப்பாட்டிற்கு வெளியே ஒன்றிரண்டு காதல்கதைகளும் விஞ்ஞான படங்களும் அவ்வப்போது வெளியாகின்றன. மக்களுக்கான மலினமான கேளிக்கை மட்டுமே ஹாங்காங் சினிமாவின் பிரதான நோக்கமாகயிருக்கிறது. ஆனால், நீண்ட காலமாகவே ஹாங்காங்கின் கலாசார அடையாளம் மற்றும் தனிநபரின் உளச்சிக்கல் உள்ளுக்குள்ளாகவே புகைத்து கொண்டிருந்ததால், அது கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவிலும் பிரதிபலிக்கத் துவங்கியது. குறிப்பாக, சீனாவிடம் ஹாங்காங்கை ஒப்படைப்பது தொடர்பான அரசியல் நிலைப்பாட்டினை விரும்பாத கலைஞர்கள் அதற்கு எதிராக தங்களது கலைப்படைப்புகளை வெளிப்படுத்தத் துவங்கினர். ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வின் பிரதிபலிப்பை வாய்னே வாங் இயக்கிய சைனீஸ் பாக்ஸ் என்ற திரைப்படத்தில் துல்லியமாகக் காணமுடிகிறது. இந்தப் படத்திற்கு உலகப் பிரசித்தி பெற்ற திரைக்கதை ஆசிரியரான ழான் கிளாடே கேரியர் திரைக்கதை எழுதியிருக்கிறார். இப்படத்தில், ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்தது தவறு என்பதற்காக, ஒரு இளைஞன் புத்தாண்டு கொண்டாட்டம் ஒன்றில், அதை எதிர்த்து தற்கொலை செய்து கொள்கிறான். அங்கிருந்த பார்வையாளர்களிடம், அந்த மரணம் ஏற்படுத்தும் ஆழ்ந்த பாதிப்பை விவரிக்கிறது இத்திரைப்படம்.

தொடர்ந்து ஹாங்காங்கின் இளம் தலைமுறையினர் கான்டோனிஸ், மாண்ட்ரின் போன்ற ஹாங்காங்கின் வழக்கு மொழியில் தங்களது படங்களை உருவாக்கத் துவங்கினர். இது, உள்ளூர் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது. இதில் ட்சூயி கார்க் மற்றும் வாங்ஜிங் இருவரும் முக்கியமான இயக்குநர்கள். 1980 களுக்குப் பிறகு, ஹாங்காங் திரைப்படங்களில் அதன் புதிய அலை திரைப்படங்கள் உருவாகத் துவங்கின. ஸ்டன்லி க்வா, பேட்ரிக் டாம் போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள். வொங் கர்_வாய் இந்தப் புதிய அலையில் உருவாகியவர். இவர் பேட்ரிக் டாமின் திரைப்படங்களுக்கு கதையாசிரியராகப் பணியாற்றத் துவங்கி தனது திரையுலக வாழ்வை ஆரம்பித்தார். அதன் பிறகு, கடந்த பதினைந்து வருடங்களுக்குள், 'As Tears Go By, Days of Being Wild, Chungking Express, Ashes of Time, Fallen Angels Happy Together, In the Mood for Love 2046, என எட்டு முக்கிய திரைப்படங்களை உருவாக்கி, தனக்கெனத் தனியான திரைமொழியை ஏற்படுத்தினார்.

_______________________

'In the Mood for Love' திரைப்படத்தை 2002 ல் ஒரு திரைப்பட விழாவில் முதன் முறையாகப் பார்த்தபோது, படம் முடிந்து பத்து நிமிடங்களுக்கு மேலாக பார்வையாளர்கள் தொடர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தபடியே இருந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு திரைப்படம் பார்வையாளர்களை முற்றாக தனது இருப்பிற்குள்ளாக கவ்விக் கொண்ட அரிய நிகழ்வாகயிருந்தது அது. அநேகமாக, அன்றிலிருந்து சமீபத்திய நாட்கள் வரை அந்தப் படத்தை ஐம்பதுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறையும் அது ஒரு விசித்திர கனவிற்குள் நுழைந்து வருவதைப் போன்ற பரவசத்தையே ஏற்படுத்துகிறது. வொங் கர்_வாயின் படங்களை அதன் பிறகு, தேடிப் பார்க்க துவங்கினேன். வொங் கர்_வாயின் சினிமா வெகு தனித்துவமானது. அது கதையை விவரிப்பதற்கான ஊடகமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. மாறாக ரெனாரின் ஓவியம் தரும் சந்தோஷம் போலவோ, பீத்தோவனின் இசைக்கோர்வையைக் கேட்கும் போது ஏற்படும் சிலிர்ப்பைப் போலவோ ஒரு கவித்துவ அனுபவ நிலையை உருவாக்குகிறது. இசையின் தாள லயங்களுக்கு ஏற்ப காட்சிகள் மாறுகின்றதா அல்லது காட்சிகளின் கரைதலுக்கு ஏற்ப இசை தன்னைப் பொருத்திக் கொண்டிருக்கிறதா என்று பிரித்து அறிய முடியாததொரு தனித்த அனுபவம் அது.

வொங் கர்_வாயின் அப்பா ஒரு மாலுமியாக இருந்தவர். சிறுவயதில் வொங் கர்_வாய், ஷாங்காய் நகரில் ஆரம்ப கல்வி கற்றிருக்கிறார். அன்றைய சீனக் குடும்பங்களைப் போலவே அவர்களும் ஹாங்காங்கிற்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். ஹாங்காங்கிற்குள் நுழைந்ததும் தனக்கு ஏற்பட்ட முதல் அனுபவம், அங்கு சதா பெருகியோடிக் கொண்டிருக்கும் இசைதான் என்றும் ஹாங்காங்கின் இசை ஒரு விநோத கலவையானது என்றும் ஒரு நேர்முகத்தில் வொங் கர்_வாய் குறிப்பிடுகிறார். ஹாங்காங்கின் பாலிடெக்னிக்கில் கிராபிக்ஸ் தொடர்பான படிப்பை முடித்த வொங் கர்_வாய் தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றத் துவங்கினார். அங்கு ஏற்பட்ட தொடர்பின் காரணமாக, திரைக்கதையை எழுதும் சந்தர்ப்பங்கள் உருவாகின. வழக்கமான ஹாங்காங் திரைப்படங்களைப் போலவே அவரது ஆரம்ப கால முயற்சிகளும் கடத்தல் மற்றும் வன்முறை சார்ந்த திரைப்படமாகவே இருந்தது. ஆனால், இவரது 'சுங்கிங் எக்ஸ்பிரஸ்' என்ற திரைப்படம் ஹாங்காங்கில் மிகப் பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் இளம் தலைமுறையின் முக்கிய இயக்குநராக உருவாகினார்.

சுங்கிங் எக்ஸ்பிரஸ் திரைப்படம் இரண்டு போலீஸ்காரர்களின் வாழ்க்கையைப் பற்றியது. கதை சொல்லும் முறையில் பல புதுமைகளைக் கொண்டிருந்தது. 223 என்ற எண்ணுள்ள ஒரு போலீஸ்காரன், 663 என்ற எண்ணுள்ள ஒரு போலீஸ்காரன், இருவரது கதையும் ஒன்றுக்குள் ஒன்றாக கலந்திருப்பது போன்று கதை சொல்லும் முறை உருவாக்கப்பட்டிருந்தன. இந்த இரண்டு போலீஸ்காரர்களும் காதல் தோல்வியடைந்தவர்கள். அவர்கள் காதலித்த பெண்களைப் பிரிந்து வெறுமையில் உழன்று கொண்டிருப்பவர்கள். இருவரது வாழ்விலும் புதிதாக ஒரு பெண் நுழைகிறாள். அந்த உறவு எப்படியிருக்கிறது என்பதையே இப்படம் விவரிக்கிறது.

223 எண்ணுள்ள போலீஸ்காரன், படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு கிரிமினலைத் துரத்திக்கொண்டு ஓடிவருகிறான். ஹாங்காங்கின் இரவுக் காட்சிகள் துரித வேகத்தில் கரைந்து மறைகின்றன. கைதியை மடக்கிப் பிடிக்கும்போது அழகான இளம்பெண் ஒருத்தி அந்த போலீஸ்காரனைக் கடந்து போகிறாள். வாய்ஸ் ஓவரில் கதை துவங்குகிறது. போலீஸ்காரன், கடந்து போன அழகியின் மீது பார்த்த நிமிசத்திலே காதல் கொள்கிறான். அந்தப் பெண்ணோ ஒரு போதை மருந்துக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவள். அவளை சில இந்தியர்கள் ஏமாற்றி விடுகிறார்கள். அவள், அவர்களைத் தேடி நகரெங்கும் அலைந்து கொண்டிருக்கிறாள்.

போலீஸ்காரன் தனது காதலியை விட்டுப் பிரிந்து சில மாதங்களாகின்றது. என்றாலும் அவன் தினமும் அவளது செல்பேசிக்கு ஒரு தகவல் அனுப்புகிறான். அவளிடமிருந்து பதிலே இல்லை. காதல் பிரிவு ஏற்படுத்திய துயரத்தில் அவன் ஒரு பாரில் மித மிஞ்சிக் குடிக்கிறான். அங்கே தற்செயலாக காலையில் பார்த்த போதை மருந்துக் கடத்தல்காரியைச் சந்திக்கிறான். இருவரும் ஒன்றாகக் குடிக்கிறார்கள். அவனது அறைக்கு அந்தப் பெண்ணை அழைத்துப் போகிறான். அறையில் அந்தப் பெண்ணோடு உடலுறவு கொள்வதற்கு பதிலாக அவளது காலணிகளைச் சுத்தமாகத் துடைத்து வைத்து விட்டு அவன் உறங்கிவிடுகிறான். அந்தப் பெண்ணால் போலீஸ்காரனைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மறுநாள் அவளும் அவனைப் பிரிந்து போய்விடுகிறாள்.

இன்னொரு பக்கம் 663 எண்ணுள்ள போலீஸ்காரன் ஒரு விமானப் பயணத்தில் சந்தித்த விமான பணிப்பெண்ணைக் காதலிக்கிறான். அவள் வேறு ஒரு ஆளோடு பிரிந்து போய்விட்டதால், மனம் வெறுத்துப் போய் தற்போது நகரில் உள்ள சீன உணவகம் ஒன்றில் வந்து தினமும் உணவு அருந்துகிறான். அவனுக்கு நகரம் அலுப்பூட்டுவதாகயிருக்கிறது. அந்தக் கடையில் வேலை செய்யும் அப்பாவி இளம்பெண் ஒருத்தி 663ஐ காதலிக்கிறாள். அவள் தினமும் அவனுக்குத் தெரியாமல் அவனது அறைக்குச் சென்று அறையைச் சுத்தம் செய்து வைக்கிறாள். அவனுக்குத் தன்னைக் காதலிப்பது யார் என்று தெரியாதபடி அவனோடு பழகுகிறாள். முடிவில் அவனுக்கு அந்தக் காதலி தெரிய வரும்போது எதிர்பாராத விதமாக அந்த உணவகத்தில் ஒரு பிரச்னை ஏற்பட்டு அந்தப் பெண் சிக்கலில் மாட்டிக் கொள்கிறாள்.

இரண்டு காதல்கதைகள் என்ற மெலிதான கதை அமைப்பிற்குள்ளாகவே வொங் கர்_வாய் இந்த படத்தில் ஹாங்காங்கின் துரித உணவுக் கலாசாரத்தையும், மாநகர நெருக்கடியில் ஒவ்வொருவரும் யாராவது தன்னைக் காதலிக்க மாட்டார்களா என்று ஏங்குபவர்களாக இருப்பதையும் வெளிப்படுத்துகிறார். இந்தப் படத்தின் கதை சொல்லும் முறை லத்தீன் அமெரிக்க நாவல்களை நினைவூட்டக் கூடியது. குறிப்பாக, மானுவல் ப்யுக்கின் நாவல்களின் கதை கூறும் முறைக்கு அருகில் இருக்கிறது. அத்தோடு, இதில் பயன்படுத்தப்பட்ட இசை மற்றும் படத்தொகுப்பு முறையும் மிகவும் குறிப்பிடத்தக்கது. கேமிரா சம்பிரதாயமான ஒளிப்பதிவு முறையை விட்டு விலகி பார்வையாளனுக்கு காட்சியோடு மிகுந்த நெருக்கம் உண்டாகும் வகையில் அலைந்து திரிகிறது. அதிலும், ஹாங்காங்கின் இரவு வாழ்க்கையைப் படம் பிடித்துள்ள விதம் மிகக் கவித்துவமானது. ஒருவகையில் சொல்வதாயின் வொங் கர்_வாயின் எல்லாப் படங்களும் மனித உறவுகள் குறித்த ஆழ்ந்த பரிசோதனையை மேற்கொள்பவை எனலாம். குறிப்பாக அதிவேக வாழ்க்கையில் மக்கள் எப்படி அன்பிற்காக ஏங்குகிறார்கள் என்பதை அவர் ஆராய்கிறார். இன்னொரு பக்கம் அந்நியமாதல் எப்படி வாழ்வின் பகுதியாகி விட்டது என்பதையும் இப்படங்கள் விவரிக்கின்றன. குடும்பம் என்ற அமைப்பு மெல்ல சிதைந்து வருவதையும் ஆண், பெண் யாவரும் சதா கேளிக்கைகளிலும் பால் உணர்வு சார்ந்த நாட்டங்களிலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதையும் இவரது படங்கள் துல்லியமாகச் சித்திரிக்கின்றன.

சுங்கிங் எக்ஸ்பிரஸ்ஸின் வெற்றி 'வொங்க்' கர்_வாயின் பரிசோதனை திரைப்படங்களுக்கு வழி வகுக்கத் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக, இவர் உருவாக்கிய 'ஹேப்பி டு கெதர்.' அர்ஜென்டினாவில் வாழும் இரண்டு ஹாங்காங்காரர்களைப் பற்றியது. ஓரினச்சேர்க்கை பற்றிய படம் என்ற சர்ச்சையைக் கிளப்பிய இத்திரைப்படம் இரண்டு நண்பர்களைப் பற்றியது. அவர்களுக்குள் உடல்ரீதியாகவும் உறவிருக்கிறது. ஆனால், ஒருவரையருவர் எப்படிப் புரிந்துகொண்டிருந்தார்கள், எப்படிப் பாதித்து கொண்டார்கள் என்பதை மையம் கொண்டே விவரிக்கும் இத்திரைப்படம் வொங் கர்_வாங்க்கு கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்று தந்தது.

இந்தப் படங்களின் தொடர்ச்சியாக வெளிவந்த In the Mood for Love கதையும் ஒரு காதல்கதைதான். ஆனால், சம்பிரதாயமான காதல்கதையல்ல. டி.ஹெச். லாரன்சின் லேடி சார்ட்டர் லவ்வர் மற்றும் நபகோவின் லோலிதா வகை காதல் படம் என்று இதை சொல்லலாம். காரணம், இதன் கதையமைப்பு அல்ல, மாறாக லாரன்ஸ் சொல்வது போல ரத்த வேகம்தான் காதலைத் தீர்மானிக்கிறது என்ற காரணத்தாலும், காதல் எண்ணிக்கையற்ற ரகசிய குமிழ்கள் கொண்டது எனும் நபகோவின் வாக்கியங்களுக்கு நெருக்கமாக இருப்பதாலும்தான்.

1962ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றிற்கு புதிதாக குடி வருகிறான் சௌ மாங் வான். இவன் ஒரு பத்திரிகையாளர். இவனது மனைவி ஒரு ஹோட்டலில் வரவேற்பாளராக வேலை செய்கிறாள். அதனால், அவளது வேலை ஷிப்ட் முறையில் பகல்_இரவு என்று மாறக்கூடியதாக இருக்கிறது. இவர்கள் புதுவீட்டிற்கு, குடியேறும் அதே நாளில், எதிர்வீட்டிற்கு ஒரு குடும்பம் குடி வருகிறது. அது, சூ சென் என்ற பெண்ணும் அவளது கணவனும். சூ சென்னின் கணவன் சதா வியாபார விசயமாகப் பயணத்திலேயே இருக்கிறான். பகல் நேரத்தை எப்படிக் கழிப்பது என்று தெரியாத வெறுமையில் திளைக்கிறாள் சூசென். அவளது தனிமை பொங்கி வழிந்தபடியே உள்ளது. இந்தச் சூழலில் சௌ மாங் வான்னும் சூ சென்னும் பகலில் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். சூ சென் தினமும் தன் வீட்டின் அருகாமையில் உள்ள சீன உணவகம் ஒன்றிற்குச் சென்று நூடுல்ஸ் வாங்கிக் கொண்டு வந்து சாப்பிடுகிறாள். சிலநேரம் அவள் படிப்பதற்காக பத்திரிகைகள் வாங்கிப் போகிறாள். அந்த நேரங்களில், தற்செயலாக இருவரும் படிகளில் ஏறும்போது ஒருவரையருவர் சந்தித்துக் கொள்கிறார்கள். மெதுவாக, அவர்களுக்குள் ஒரு நட்பு உருவாகிறது.

ஒரு நாள், சௌ மாங் வான் தனது மனைவிக்கும் சூ சென்னின் கணவனுக்கும் இடையே கள்ள உறவு இருப்பதைக் கண்டுபிடிக்கிறான். இந்தச் செய்தி சூ சென்னிற்கும் தெரிய வருகிறது. இருவரும் அதிர்ச்சியடைகிறார்கள். இதை எப்படிச் சமாளிப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், இருவரும் அந்தச் சம்பவத்தைக் காரணமாகக் கொண்டு தீவிரமாகப் பழகத் துவங்குகிறார்கள். அவர்களுக்குள் ஒரு ரகசிய உறவு ஏற்பட்டுவிடுமோ எனும் அளவு, அந்தப் பழக்கம் நீடிக்கிறது. என்ன வகையான உறவு இது என்று பெயரிடப்படாத அந்த நெருக்கம், இருவருக்குள்ளும் ஒரு நெருப்பைப் போல பற்றி எரிகிறது. அண்டை வீட்டார்களும் தெருவாசிகளும் இதனை கவனிக்கிறார்கள் என்றபோதும் அதை அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை. ஆனால், ஒரு நாளில் அவர்கள் இருவரும் தாங்கள் பிரிவது என்று முடிவு செய்துகொள்கிறார்கள். தங்கள் கணவனோ, மனைவியோ செய்த தவற்றை தாங்களும் செய்ய வேண்டியதில்லை என்று முடிவு செய்துகொள்கிறார்கள்.

காலம் மாறுகிறது. சௌ மாங் வான் தனது அலுவலக வேலை விசயமாக கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட்டிற்குச் செல்கிறான். அங்குள்ள சிதைந்த கோவிலின் உள்ளே ஒரு கற்துவாரத்தில், தன் மனதில் இத்தனை நாட்களாக உறுத்திக்கொண்டேயிருந்த, அவர்களுக்குள்ளிருந்த ரகசிய உறவு பற்றிய அத்தனை விசயங்களையும், சொல்லிவிடுகிறான். அவனது மனது இப்போது லகுவாகிறது. அவன் பிரம்மாண்டமான அந்தக் கோவிலை விட்டு வெளியே வருகிறான். இப்போது அந்த ரகசியம் சிதைவுண்டு போயுள்ள அங்கோர்வாட்டின் பகுதியாக உறைந்து போய்விடுகிறது. பகலும் இரவும் மாறிக் கொண்டிருக்கின்றன. சௌமாங் வான் அங்கோர்ட்வாட்டை விட்டுப் பிரிந்து செல்கிறான்.

கதை என்ற அளவில் இந்தப் படம் விசித்திரமானதொரு காதல் கதையை விவரிக்கிறது. காதலிப்பவர்கள் இருவரும் திருமணமானவர்கள் என்பதோடு, தனிமையும் நகரின் வெறுமை அவர்களுக்குள் காதலை ஏற்படுத்துகிறது என்ற நிஜமும் படத்தில் வெளியாகிறது. சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பது, இந்தப் படத்தில் நூறு சதவீதம் உறுதி செய்யப்படுகிறது. கேமிரா இந்தத் திரைப்படத்தில் காட்சியை மட்டுமின்றி, இசையின் தாளகதியையும் ஒருங்கிணைக்கும் அரிய பணியை மேற்கொண்டுள்ளது.

இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் கிறிஸ்டோபர் டாயல். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், வொங் கர்_வாயின் ஐந்து படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவரது ஒளியமைப்பு விட்டோரியா ஸ்டெரெராவின் ஒளியமைப்பு பாணியைச் சேர்ந்தது என்று குறிப்பிடலாம். ஒளிப்பதிவிற்கு செழுமை ஊட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது கலை இயக்கம். குறிப்பாக, சூ சென்னின் உடைகள் முழுவதும் சீனாவின் பாரம்பரிய பாணியில் அமைந்த சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உருவாக்கப்பட்டிருந்தன. அத்தோடு, சுவரில் வரையப்பட்டிருந்த பூ சித்திரங்கள் மற்றும் மீன்தொட்டிகள் யாவும் மிக நுட்பமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தப் படத்திற்கு கலை இயக்கமும் படத்தொகுப்பும் செய்தவர் ஒருவரே என்பதால், அவரது கவனம் காட்சியை உருவாக்குவதிலும் தொகுப்பதிலும் ஒருங்கே குவிந்திருந்ததைப் படம் முழுவதிலும் காணமுடிகிறது.

இந்தக் காட்சியமைப்பிற்கு வலுசேர்க்கும் விதத்தில் வெவ்வேறு வகையான இசை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஹாங்காங்கில் 1962ஆம் ஆண்டில் ரேடியோ கேட்பது பலருக்கும் பிரதான பொழுது போக்காக இருந்தது. அத்தோடு, இரவு விடுதிகளில் லத்தீன் இசைக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. அந்தக் காலத்தை மறுஉருவாக்கம் செய்யும்போது அந்த இசைக்கும் திரும்ப உயிர் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக, செல்லோவும் வயலினும் பயன்படுத்தி அமைக்கப்பட்ட இசைக்கோர்வைகள் மயக்க மூட்டுபவை. படத்தின் பிரதான இசையமைப்பாளராக பணியாற்றியவர் உலகப்பிரசித்தி பெற்ற இசையமைப்பாளர் மைக்கல் கலாசோ. இவரது இசைத்தட்டு ஒன்றிலிருந்து சிறு பகுதியை வொங் கர்_வாய் முன்னதாக தனது சுங்கிங் எக்ஸ்பிரஸ் படத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்திற்கென மைக்கேல் கலாசோ முற்றிலுமாக புதியதொரு இசைமொழியை உருவாக்கியிருக்கிறார். அதிலும் காதல் காட்சிகளில் இசை அவர்களுக்குள் ஏற்படும் நெருக்கத்தையும் நெகிழ்வையும் துல்லியமாக வெளிப்படுத்துகிறது. ஜப்பானியரான உமெபயாஸி செகெறா அங்கோர்வாட் இசைப்பகுதியை உருவாக்கித் தந்திருக்கிறார். இப்படத்தின் பின்ணணி இசைக்கோர்வை மட்டும் தனியாக வெளியாகி, அதுவே விற்பனையில் பெரிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படம், கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதும் சிறந்த இயக்குநருக்குமான விருதும் உட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றது. அதே ஆண்டு ஹாங்காங் திரைப்பட விழாவில் ஏழு முக்கிய விருதுகளை வென்றது. இந்தப் படத்தின் தொடர்ச்சி என்பது போல கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, 2046 என்ற படத்தை இயக்கினார் வொங் கர் _ வாய். இது, அதே சௌ மாங் வான் கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் பல வருடங்களுக்குப் பிறகு நடந்த சில சம்பவங்களை விவரிக்கிறது.

வொங் கர்_வாய் தனது திரைப்படங்களுக்கான கதையை யாரிடமும் விவாதிப்பதோ எழுதிக் கொள்வதோயில்லை. அவர் காட்சிகளை அவ்வப்போது உருவாக்குகிறார். கதாபாத்திரங்கள் யார் யார், அவர்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி நடிகர்களுக்கு சிறிய அறிமுகம் தந்துவிடுவதோடு, நடிகர்களை ஒவ்வொரு நாளும் புதிதாக தான் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்த முயற்சிக்கிறார். இதன் காரணமாக, பல நாட்கள் ஒரே காட்சி திரும்பத் திரும்ப எடுக்கப்பட்டிருக்கிறது. இது தன்னுடைய பாணி என்று கூறும் வொங் கர்_வாய் தன்னால் ஒரு திரைக்கதையை படம் துவங்கும் முன்பாக, ஒரு போதும் எழுதி முடிக்க முடியாது என்று கூறுகிறார். இதைக் கேலி செய்யும் விதமாக, அவரது நடிகர்களில் ஒருவர், படம் வெளியான பிறகும் எது திரைக்கதை என்று கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் உண்மை என்று கூறியதும் நடந்தேறியிருக்கிறது.

வொங் கர்_வாயின் திரைப்படங்களை பின்நவீனத்துவ திரைப்படங்கள் என்று வகைப்படுத்தலாம். குறிப்பாக, பின்நவீனத்துவ கூறுகளான அடக்கப்பட்ட வன்முறை மற்றும் பால்உறவு சிக்கல்கள், மாநகரங்களில் தனிநபரின் இருப்பு மற்றும் அடையாளமின்மை, கதை சொல்லுதலில் நேர்க்கோட்டு தன்மையை விட்டுவிலகிய புதிய உத்திகள், அரசியல் மற்றும் கலாசார அடக்குமுறைகளுக்கான எதிர்வினை போன்ற காரணிகள் இதை பின்நவீனத்துவ சினிமாவாக அடையாளம் காட்டுகின்றன. அவ்வகையில், வொங் கர்_வாயின் சினிமா ஹாங்காங்கின் சரித்திரத்தை, அதன் தினசரி வாழ்வை என்றும் அழிவற்றதாக உருமாற்றிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

2006ஆம் ஆண்டிற்கான கான்ஸ் திரைப்பட விழாவிற்காக நடுவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள வொங் கர்_வாய் தற்போது நிகோல் கிட்மனை வைத்து 'Lady From Shanghai' என்ற ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

தொடரும்

நன்றி:எஸ்.ராமகிருஸ்ணன் (தீராநதி)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

pg7-t.jpg

அழுக்கடைந்து போன தெருக்கள்; சிறியதும் பெரியதுமான நூற்றுக்கணக்கான தகர வீடுகள்; கைப்பந்தாடும் முரட்டுச் சிறுவர்கள். கேஸ் ஏற்றிவரும் வாகனத்தை துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தி ஆண்களும், பெண்களும் சிலிண்டர்களை அவசரமாக தூக்கிச் செல்கிறார்கள்; போதை மருந்து கடத்தலில் சிக்கி கைதாகி செல்லும் பதினான்கு வயது சிறுவர்கள் வெகு இயல்பாக விசாரணைக்கு அழைத்து போகப்படுகிறார்கள்; இரவில் நகரமே களிப்பூட்டும் சம்பா நடனத்தில் மிதக்கிறது;

இன்னொருபுறம் விறுவிறுப்பான கால்பந்து போட்டிகள்; அதில் நடக்கும் வன்முறை என புறநகரச் சேரி விரிந்து கிடக்கிறது. அதில் சேவல் ஒன்றை சிலர் துரத்திக்கொண்டு வருகிறார்கள். அது அவர்களின் கையில் அகப்படாமல் தப்பியோடுகிறது. எப்படியாவது அதைப் பிடித்துவிட வேண்டும் என்ற வெறியில் பத்துப் பதினைந்து வயதுக்குட்பட்ட நாலைந்து சிறுவர்கள் கையில் துப்பாக்கியோடு சேவலை சுட்டபடியே வருகிறார்கள்.

துப்பாக்கி குண்டிற்கு தப்பி சேவல் பறக்கிறது. எதிர்பாராமல் ரோந்து சுற்றும் போலீஸ் வந்து சேரவே, அவர்கள் தங்களது துப்பாக்கிகளை மறைத்துக்கொண்டு, சாதாரண சிறுவர்கள் போல, ஒருவரோடு ஒருவர் தோளில் கைபோட்டு பேசி சிரித்தபடியே கலைந்து போகிறார்கள்.

இப்படிதான் 'சிட்டி ஆஃப் காட்' (City of God) திரைப்படம் துவங்குகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரேசிலில் வெளியாகி, உலகின் கவனத்தை ஈர்த்த இந்தப் படம் காட்டும் உலகம்தான் இன்றைய பிரேசிலின் நகர வாழ்வு. குறிப்பாக ரியோ டி ஜெனிரோ எனும் கேளிக்கை நகரில் வளர்ந்து விஸ்வரூபம் கொண்டுள்ள வன்முறையை விவரிக்கிறது இப்படம்.

ரியோ டி ஜெனிரோ நகரம் கேளிக்கைகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த நகரை சுற்றிலும் உள்ள மலையடிவாரத்தில், வீடற்றவர்கள் தாங்களாக சேரி போன்ற குடியிருப்புகளை உருவாக்கி கொண்டு குடியிருந்து வருகிறார்கள். அந்தக் குடியிருப்புகளுக்கு பெவியோலோ என்று பெயர். ரியோவை சுற்றிலும் 500க்கும் மேற்பட்ட பெவியோலோக்கள் இருக்கின்றன. இங்குள்ள மக்கள் வறுமையில் உழண்டு கிடப்பவர்கள். பத்து வயதிற்குள்ளாகவே அவர்கள் போதை மருந்து கடத்தல் உலகிற்குள் நுழைந்து விடுகிறார்கள். இதில் ஆண்கள், பெண்கள் என்று எந்தப் பேதமும் இல்லை. துப்பாக்கியும் போதை மருந்து பாக்கெட்டுகளும் இவர்களது உலகை அரசாட்சி செய்கின்றன. அதைக் காவல்துறையும் இதர அரசு அமைப்புகளும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றன.

தொடர்ந்த அரசியல் கொந்தளிப்பின் காரணமாக பிரேசில் தள்ளாடி வரும் நிலையில், வன்முறையும் போதை மருந்து கடத்தலும் தீர்க்கப்பட முடியாத முக்கியப் பிரச்னையாக வளர்ந்து வருகிறது. இந்த உலகின் நிஜத்தைத் துல்லியமாக பிரதிபலித்த படம் 'சிட்டி ஆஃப் காட்'.

அதைத் தயாரித்தவர் வால்டர் செலஸ்.

பிரேசில் சினிமாவில் புதிய அலையை உருவாக்கியவர் க்ளோபர் ரோச்சா (Glauber Rocha).

இவரது திரைப்படங்கள் அடிநிலை மக்களின் வாழ்க்கைப் பிரசினைகளைச் பிரதிபலிப்பவை. க்ளோபர் ரோச்சா, திரைப்படத்தை மக்களின் விழிப்புணர்வு சாதனமாக கருதினார். திரைப்படத்தின் வழியாக, அடிநிலை மக்களின் பிரச்னைகள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, தீர்க்கப்பட்டுவிடும் என்று நம்பிக்கை கொண்டிருந்தார். பிரேசில் போன்ற அதிகார அரசியல் நடந்துவரும் நாடுகளில், சினிமா ஒரு மாற்று கலாச்சாரத்திற்கான நடவடிக்கை என்று அறிவித்தார். அந்த நம்பிக்கையின் தொடர்ச்சிதான் இன்றைய சமகால பிரேசிலிய சினிமா. சில ஆண்டுகளுக்கு முன்பு உலகத் திரைப்பட விழாவில் பிரேசில் நாட்டு சமகால திரைப்படங்கள் இருபதிற்கும் மேற்பட்டதை கண்டேன். பொதுவாக பிரெஞ்ச், இத்தாலி தேசப் படங்கள் அறிமுகமான அளவிற்கு நமக்கு லத்தீன் அமெரிக்க சினிமா அறிமுகமானதில்லை. இந்தத் திரைப்படங்களை ஒட்டுமொத்தமாக பார்த்தபோது, பிரேசில் சினிமா தனக்கான தனித்துவமான கதை சொல்லலையும், காட்சிப்படுத்தும் முறையையும் கொண்டிருப்பதை உணரமுடிந்தது.

பிரேசில்வாசிகளுக்கு அரசியலும் கால்பந்தாட்டமும் பிரிக்கவேமுடியாத இரண்டு அம்சங்கள். எல்லா திரைப்படங்களிலும் நேரிடையாகவோ, மறைமுகமாகவே அரசியல் நிலைப்பாடுகள் பதிவாகின்றன. அதுபோலவே கதையின் ஊடாகவே பிரேசில் தேசத்தில் கால்பந்து விளையாட்டு அடைந்துள்ள முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டு கொண்டே வருகிறது. பிரேசில் போர்த்துகீசிய காலனியாக இருந்த காரணத்தால் இன்றும் அங்கு நிலவும் போர்த்துகீசிய மரபு மற்றும் ஸ்பானிய மரபுகளுக்கான வெளிப்படையான மோதல்கள் இலக்கியத்திலும், திரைப்படங்களிலும் தொடர்ந்து பிரதிபலிக்கப்படுகின்றன. இந்த வகை அரசியல் படத்திற்கு எடுத்துக்காட்டாக கார்லோ கமுராட்டி என்ற பெண் இயக்குநர் இயக்கிய 'பிரின்சஸ் ஆஃப் பிரேசில்' என்ற திரைப்படத்தை குறிப்பிடலாம்.

இப்படத்தில் மனநலமற்ற இளவரசன் ஒருவனுக்கு ஸ்பானிய பெண் ஒருத்தியை திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த அப்பாவி பெண், அரசியல் காரணங்களுக்காக பணயம் வைக்கப்படுகிறாள். கட்டாயத் திருமணமாகி வரும் அவள், மெல்ல அரசின் செயல்பாடுகளை உற்றுக் கவனிக்க துவங்குகிறாள். அரசன் சதா நேரமும் விதவிதமான உணவுகளையும், போகங்களையும் அனுபவிப்பதை மட்டுமே தனது வேலையாக கொண்டிருக்கிறான்.

நான் பார்த்த வரையில் இந்தப் படத்தில்தான் அரசன் தனது பல்லக்கில் போய்கொண்டிருக்கும்போது தனக்கு மலம் கழிக்க வேண்டியிருக்கிறது என்று கூறுகிறான். உடனே பல்லக்கு அப்படியே நிறுத்தப்படுகிறது. குழந்தையைத் தூக்கி மலம் கழிக்க செய்வது போல அரசனை தூக்கிக்கொண்டு போய் மலம் கழிக்க வைக்கிறார்கள். அரசன் திரும்பவும் பல்லக்கில் ஏறிக்கொள்கிறான். பசி வந்துவிடுகிறது. உடனே ஒரு முழுக்கோழியை சாப்பிட துவங்குகிறான். இப்படிப் படம் முழுவதும் அரசர்களும் உடல் உபாதை கொண்டவர்கள் என்பதைக் காணமுடிகிறது.

இன்னொரு காட்சியில் அரசன் நியாய சபையில் மூத்திரக் கடுப்பு காரணமாக தொடர்ந்து மூத்திரம் பெய்து கொண்டேயிருக்கிறான். அது அவனது சிம்மாசனத்திலிருந்து வழிந்து காலடியில் ஓடுகிறது. அவனால் நியாயம் சொல்ல முடியவில்லை. சமாதானம் பேசவேண்டிய தேசத்தோடு யுத்தம் என்று அறிவித்து விடுகிறான். இப்படி அரசியலின் முட்டாள்தனத்தை முகத்தில் அறைவது போல விவரிக்கிறது இத்திரைப்படம். இதுதான் இன்றைய பிரேசில் சினிமா. இந்த வாழ்வுதான் இன்றைய பிரேசிலின் வாழ்வு.

பிரேசில் சினிமாவிற்கு உலக அந்தஸ்தை பெற்று தந்த இளம் இயக்குநர் வார்டர் செலஸ். அவரது படங்கள் மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருது பெற்றிருக்கின்றன. கான்ஸ், வெனிஸ் உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்ற வார்டர் செலஸ், ஒரு இயக்குநராக மட்டுமின்றி ஒரு திரைப்பட இயக்கமாகவே செயல்பட்டு வருகிறார்.

வால்டர் செலஸ் இயக்கி 2004_ல் வெளியான 'மோட்டார் சைக்கிள் டயரீஸ்' என்ற படம், சே குவேரா லத்தீன் அமெரிக்க நாடுகளை காண்பதற்காக ஒரு மோட்டார் பைக்கில் சுற்றி வந்த பயண அனுபவத்தை விவரிக்கிறது.

இந்தப் படத்தை தயாரிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள ஒரு திரைப்பட நிறுவனத்தை செலஸ் அணுகியபோது, அந்த நிறுவனம், 'இந்த திரைக்கதையில் ஆக்ட் 1, ஆக்ட் 2, ஆக்ட் 3 என்ற சம்பிரதாயமான வகைப்பாடு இல்லை. அதைவிடவும் வில்லன் என்று எவருமே படத்தில் இல்லை. ஒவ்வொரு நாடாக சுற்றி வருவதைத் தவிர இதில் என்ன இருக்கிறது' என்று ஒதுக்கிவிட்டது.

ஆனால் ராபர்ட் ரெட்போர்ட் என்ற அமெரிக்க நடிகருக்கு மட்டும் இந்தத் திரைக்கதை மிக அபாரமாக இருக்கிறது என்ற நம்பிக்கையிருந்தது. ஆகவே அவர் தனிப்பட்ட முறையில் பொருளாதார உதவிகள் செய்து இந்தப் படத்தை உருவாக்கினார்.

**************

வால்டர் செலஸ், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 1956_ல் பிறந்தவர். இவரது அப்பா ஒரு தூதுவர். ஆகையால் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்யவும் அதன் கலாசாரத்தை அறிந்து கொள்ளவும் சிறுவயதிலே இவருக்கு சாத்தியம் ஏற்பட்டது. வால்டர் செலஸின் சகோதரர் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று கனவு கண்டவர். இதனால் அவர் வீட்டில் திரைப்படம் குறித்த எண்ணிக்கையற்ற புத்தகங்களை வாங்கி வந்து நிரப்பியிருந்தார். செலஸ் அதை வாசிக்க துவங்கி திரைப்படங்களின் மீது ஆர்வமாகினார். தனது சகோதரருடன் சேர்ந்துகொண்டு குறும்படங்களை இயக்கவும், ஆவணப் படங்களுக்கு உறுதுணை செய்யவும் மேற்கொண்டார். ஆவணப் படங்களுக்காக அலைந்து திரிந்தபோது அவர் கண்ட சமூக நிலைமை அவருக்குள் மிகுந்த கோபத்தை உருவாக்கியது. வறுமையிலும், போதை மருந்து கடத்தலிலும் சிக்கி, ஆயிரக்கணக்கான மக்கள் எலிகளைப் போல பதுங்கி வாழ்வதை கண்ட வால்டர் செலஸ், அவர்களின் உலகிற்குள் மெல்ல நுழையத் துவங்கினார். இதற்காக ரியோவை சுற்றிலும் உள்ள சேரிகளில் அலைந்து திரிந்தார். இசையில் சில ஆண்டுகள் தொடர்ந்து ஆவணப் படங்களை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தினார்.

இவரது 'Life Somewhere Else' என்ற ஆவணப் படம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

Foreign Land, Central Station, Midnight, Behind the Sun, The Motorcycle Diaries, Dark Water போன்றவை இவரது முக்கியத் திரைப்படங்கள்.

1990களில் பிரேசிலின் அரசியல் மாறுபாடுகளால் வெறுப்புற்ற இளைஞர்கள் அங்கிருந்து வெளியேறி ஸ்பெயினுக்கோ, அமெரிக்காவிற்கோ இடம் பெயர்ந்துவிட முயன்றார்கள். அந்த நிலைமையை விவரிக்கும் படம் Foreign Land. அது பிரேசிலில் வாழும் ஒரு இளைஞன், தனது அம்மாவின் இறப்பு ஏற்படுத்திய வெறுமையைப் போக்கிக்கொள்வதற்காக, எப்படி போதை மருந்து கடத்தும் கும்பலின் செயலுக்குள் மாட்டிக்கொள்கிறான் என்பதை விவரிக்கிறது. கறுப்பு வெள்ளையில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் 1990களில் உள்ள இளைஞர்களின் உலகை நிதர்சனமாக வெளிப்படுத்தியது.

பிரேசிலுக்குள் மட்டுமேயிருந்த வால்டர் செலஸை உலகமறிய செய்த படம் 'சென்ட்ரல் ஸ்டேஷன்.' இந்தத் திரைப்படம் ஒரு சிறுவன் தனது முகம் தெரியாத அப்பாவைத் தேடிச் செல்வதைப் பற்றியது. ரியோவின் சென்ட்ரல் ஸ்டேஷனில் துவங்கும் இப்படம், ரயில்வே நிலையத்தில் ஒரு பெஞ்சில் அமர்ந்தபடியே கடிதங்கள் எழுதித் தரும் ஒரு வயதான பெண்ணிடமிருந்து துவங்குகிறது. அவள் பரபரப்பான ரயில்வே நிலையத்தில் பயணிகள் சொல்லச் சொல்ல கடிதங்கள் எழுதி, தரும் வேலை செய்து கொண்டிருக்கிறாள். படத்தின் துவக்கக் காட்சிகளில் ரயில் வந்து நிற்கிறது. ஒரே நேரத்தில் அத்தனை பெட்டிகளிலும் இருந்து பயணிகள் இயந்திரத்தின் விசை விடுபட்டது போன்று இறங்குகிறார்கள். ஒரு கவிதை போன்று கச்சிதமாக உருவாக்கப்பட்ட காட்சியது. இந்தக் காட்சியை படம் பிடிப்பதற்காக ஒரு வார காலம் தினமும் அதே ரயில்நிலையத்தில் படம் பிடித்திருக்கிறார்கள்.

ரியோவின் ரயில் நிலையம், உலகிலே மிகப் பரபரப்பான ரயில் நிலையமாகும். ஒரு நாளைக்கு மூன்று லட்சம் பேர் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகிறார்கள். ஆகவே படப்பிடிப்பு நடக்கிறது என்று காட்டிக்கொள்ளாமலே ஒரு நாற்காலி மேஜையை தயார் செய்து, அதில் நடிகையை அமர செய்து, நிஜமாகவே அவளைக் கடிதங்கள் எழுதும்படியாக செய்திருக்கிறார்கள். பொதுமக்களில் பலரும் அந்தப் பெண்ணிடம் வந்து கடிதம் எழுதுவதற்காக தங்களது சொந்த வாழ்க்கையை பகிர்ந்துகொள்வது, அப்படியே படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு நாள் இரவும், வீடு திரும்பிய அந்த வயதானவள், தான் எழுதிய எல்லா கடிதங்களையும் பிரித்து, பெரும்பகுதியை கிழித்து குப்பைப் தொட்டியில் போட்டுவிடுகிறாள். ஒருவகையில் அவள் ஒரு ஏமாற்றுகாரி. சொற்ப பணம் கிடைக்கிறது என்பதற்காக அவள் தினமும் பலரை ஏமாற்றுகிறாள்.

ஒரு நாள் அந்த ரயில் நிலையத்திற்கு தனது மகனோடு வரும் ஒரு பெண், சிறுவனின் அப்பாவிற்கு ஒரு கடிதம் எழுதவேண்டும் என்று சொல்கிறாள். அந்தச் சிறுவன் பிறந்ததில் இருந்து தனது அப்பாவைக் கண்டதேயில்லை என்பதால், அந்தக் கடிதத்தை அவனது அப்பாவிற்கு அனுப்பும்படியாக எழுத சொல்கிறாள். வயதானவள் கடிதம் எழுதித் தருகிறாள். அன்றும் இரவு வீடு திரும்பியதும் அந்தக் கடிதத்தை கிழித்து குப்பைக்குப் போட இருக்கும் நேரத்தில், அவளது பக்கத்து வீட்டுப் பெண் அதைப் படித்து விட்டு தடுத்து விடுகிறாள். மறுநாள் எதிர்பாராத விதமாக, அதே ரயில் நிலைய வாசலில், அந்தச் சிறுவனின் தாய் விபத்தில் இறந்து போய்விடுகிறாள். அனாதையாக இருக்கும் சிறுவன் கடிதம் எழுதும் பெண்ணின் வீட்டிற்கு அடைக்கலமாக வந்து சேர்கிறான்.

இந்தச் சிறுவனை என்ன செய்வது என்று தெரியாமல், சிறுவர்களை குற்ற உலகிற்குப் பயன்படுத்தும் ஒரு ஆளிடம் விற்றுவிடுகிறாள் அந்த முதியவள். வீட்டிற்கு வந்த பிறகு அவளுக்கு மனசாட்சி உறுத்துகிறது. பாவம் அந்தச் சிறுவன், பிறந்ததில் இருந்து தன் அப்பாவைக் கண்டதேயில்லை. அவனது அப்பாவை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைப்பதுதான் தனது கடமை என்று முடிவு செய்து கொண்டவளை போல, அந்தச் சிறுவனை தானே மீட்டு அப்பாவைக் காண்பதற்காக அழைத்துப் போகிறாள். இந்தப் பயணம் இருவருக்குள்ளும் ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது. பிரேசிலின் அறியப்படாத குக்கிராமம் ஒன்றில் வசிக்கும் சிறுவனின் அப்பாவைக் காண்பதற்காக சென்று சேர்கிறார்கள். அங்கே அந்தச் சிறுவனின் அப்பாவிற்கு இன்னொரு குடும்பம் இருப்பது தெரியவருகிறது. அத்தோடு அவனது அப்பா அவர்களைத் தேடி மாநகருக்கு சென்றுவிட்டதை அறிகிறார்கள். என்றாலும் அந்தக் குடும்பத்தில் சிறுவனை ஒப்படைத்துவிட்டு திரும்புகிறாள். சிறுவனுக்கு அவளை விட்டுப் பிரிவது, மிகுந்த வேதனை தருவதாக மாறிவிடுகிறது. வாழ்வில் தன்னையும் நேசிக்கக்கூடிய ஒரு உயிர் இருக்கிறது என்று உணர்ச்சிபூர்வமாக உணர்ந்த அந்தப் பெண், ரியோவை நோக்கி திரும்பவும் தனது பயணத்தை மேற்கொள்ள துவங்குவதோடு படம் முடிகிறது.

குழந்தையை அதன் அப்பாவிடம் ஒப்படைக்கும் ஒரு நிகழ்வு என்ற சிறிய நூலின் மீது நகரும் இக்கதை, வழியில் நடக்கும் சம்பவங்களாலும், இரண்டு கதாபாத்திரங்களின் வெளிப்படுத்தப்படாத அன்பின் காரணமாகவும் ஆழ்ந்த மனப்பாதிப்பை உருவாக்குகின்றது.

இந்தப் படத்தில் வால்டர் கெர்வல்கோவின் ஒளிப்பதிவு நிலக்காட்சி ஓவியங்களை நினைவுப்படுத்த கூடியது. குறிப்பாக ரயில் நிலையக் காட்சிகளில் அவரது கேமிரா கோணங்கள் ரயிலின் உள்ளும்புறமும் ஒரே நேரத்தில் சென்று வருவதையும் பயணத்தில் தென்படும் பளுப்பு நிற மேகங்களும் புழுதி பறக்கும் சாலைகளின் நீண்ட காட்சிகளையும் குறிப்பிடலாம்.

வால்டர் கெர்வல்கோவுடன் இணைந்து வால்டர் செலஸ் இயக்கிய இன்னொரு படம் Behind the Sun. இப்படத்தின் கதை புக்கர் பரிசு பெற்ற அல்பேனிய எழுத்தாளரான இஸ்மால் கதாரேயுடையது. இவரது Broken April என்ற நாவலை அடிப்படையாக கொண்டு வால்டர் செலஸ் உருவாக்கிய இத்திரைப்படம்.

குடும்ப பகையின் காரணமாக ஏற்படும் கொலையையும் அது பராம்பரியாக தொடர்ந்து வருவதையும் விவரிக்கிறது. இப்படத்தில் செக்கு மாடு ஒரு உருவகம் போலவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரேசிலின் குடும்ப வாழ்க்கை, ஒரு செக்குமாட்டை போல சுழன்று பாதையிலே சுற்றிக்கொண்டேயிருக்கிறது என்று வால்டல் செலஸ் ஒரு நேர்காணலிலும் குறிப்பிடுகிறார். கிரேக்க துன்பியல் நாடகங்களை நினைவுபடுத்தும் இந்தத் திரைப்படம் பிரேசிலின் வெக்கை படிந்த கிராம வாழ்வை வெளிப்படுத்துகிறது.

2004_ல் இவர் இயக்கிய 'மோட்டார் சைக்கிள் டயரீஸ்' திரைப்படம் க்யூபாவின் புரட்சியாளரான சே குவாராவின் இளமைப் பருவத்தை விவரிக்க கூடியது.

ஒரு போராளியாக உருக்கொள்வதற்கு முந்தி, சேவின் உலகை விவரிக்கும் இந்தத் திரைப்படமும் ஒரு புத்தகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே. சே குவேராவின் நண்பரும், அவரோடு பயணத்தில் உடன் சென்றவருமான அல்பெர்டோ கிரானடோ தனது அனுபவங்களை 'மோட்டார் சைக்கிள் டயரீஸ்' என்ற பெயரில் பதிவு செய்துள்ளார்.

சே குவாரா, மருத்துவக்கல்லூரியின் கடைசி ஆண்டில் படித்து கொண்டிருந்தபோது, தனது நண்பருடன் இணைந்து கொண்டு பைக் ஒன்றில் லத்தீன் அமெரிக்கா முழுவதுமான 8000 மைல் தூரத்தை கண்டுவருவது என்று திட்டமிட்டார். இந்தப் பயணத்தை துவக்கியதற்கு அவர்களுக்கு இருந்த ஒரே காரணம் கேளிக்கை மட்டுமே. விதவிதமான ஒயின்களை அருந்தவும், அழகான பெண்களோடு காதல் புரியவும் அவர்கள் தங்களது பயணத்தை துவக்கினார்கள்.

1952_ம் ஆண்டு ஜனவரியில் அர்ஜென்டினாவின் ப்யூனஸ் அயர்ஸ் நகரில் இருந்து, நார்டன் 500 சிசி பைக்கில் பயணம் செய்ய துவங்கும்போது சேவிற்கு வயது 23. அவரோடு மருத்துவம் பயிலும் அல்பெர்டோ கிரானடோவும் உடன் செல்கிறார். இருவரும் பத்து நாட்கள் பயணம் செய்து, சே குவாரேயின் காதலி ஒருத்தியின் வீட்டில் தங்குகிறார்கள். அங்கு அவளின் காதலுக்குள் மூழ்கிபோன சே, அப்படியே அங்கேயே தங்கிவிடலாமா என்றுகூட யோசிக்கிறார். ஆனால் பயணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று நண்பன் வற்புறுத்தியதால் திரும்பவும் பயணத்தை துவக்குகிறார். பைக் வழியில் தறிகெட்டு ஓடி, ஒரு புழுதி பரப்பில் விழுகிறது. சரிசெய்து கொள்கிறார்கள். வழியில் தென்படும் மது விடுதியில் காசில்லாமல் குடிக்கிறார்கள். இப்படியாக பயணம் செய்து பிப்ரவரி 15_ல் சிலி நாட்டிற்குள் நுழைகிறார்கள். அங்கே ஒரு மது விடுதியில் நடைபெறும். நடன விருந்தில், எதிர்பாராமல் ஏற்படும் காதல், பிரச்னையை உருவாக்குகிறது. அதனால் துரத்தப்படுகிறார்கள். பைக் திரும்பவும் பழுதடைந்து போகிறது. இருபது நாட்கள் பயணத்தின் பிறகு அவர்கள் சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலைவனத்தை கடக்கிறார்கள்.

அப்போது அங்கு வாழும் பூர்வ குடி குடும்பம் ஒன்றை சந்திக்கிறார்கள். மிகுந்த வறுமையிலும் கூட அந்தக் குடும்பம் கம்யூனிசத்தின் மீது கொண்டிருந்த பிடிப்பையும், அன்பையும் காண்கிறார்கள். அது அவர்களுக்கு ஆச்சரியமூட்டுகிறது. அங்கிருந்து பயணம் செய்யும்போது, வழியில் சுரங்கத் தொழிலாளர்கள் பலரையும் காண்கிறார்கள். வேலைக்காக அவர்கள் படும் இன்னல்கள் சேவின் மனதை வெகுவாக பாதிக்கின்றது.

ஏப்ரல் 15_ம் நாள் இங்கா பழங்குடியினரின் கட்டிடக்கலை சாதனையாக கருதப்படும் மச்சுபிச்சு என்ற புராதன மலைநகரை பார்வையிடுகிறார்கள். அடர்ந்த காட்டிற்குள் இடிபாடுகளாகிக் கிடக்கும் அந்த நகரம், பழங்குடியினரின் கலை உணர்வை வெளிப்படுத்துவதை உணர்ந்துகொள்வதோடு கட்டிடக்கலை, வான் அறிவியல், கணிதம் என்று தேர்ந்த அறிவுத்திறன் கொண்டிருந்த பூர்வகுடிகளை, துப்பாக்கி என்ற ஒரேயொரு சாதனத்தைக் கொண்டு வேட்டையாடி அழித்த சரித்திர நிகழ்வுகள் அவர்கள் நெஞ்சில் விரிகிறது.

அங்கிருந்து மே மாதத்தில் அவர்கள் பெருவிற்குள் நுழைகிறார்கள். ஆஸ்துமா நோயாளியான சோகுவாரா உடல்நலமற்று போகிறார். இதனால் மருத்துவத்திற்காக அவரை மருத்துவமனைக்கு கொண்டு போகிறார்கள். மூச்சு அழற்சியின் காரணமாக அவர் பாதிக்கப்படுகிறார்.

உடல்நலம் தேறியதும் அவர்கள் பெருநாட்டில் அமேசான் நதியில் உள்ள சான் பாப்லோ என்ற தொழுநோயாளிகளின் புகலிடம் ஒன்றிற்கு மருத்துவ சேவை செய்ய செல்கிறார்கள். அங்குள்ள நோயாளிகளை காணும்போதுதான், தனது தேசம் எந்த அளவிற்கு வறுமையில் புரையோடிப் போயிருக்கிறது என்பதை உணர்கிறார் சே குவாரா. கடவுளாலும் கைவிடப்பட்டவர்களாக அந்த நோயாளிகள் தங்கள் உடல் உறுப்புகளை இழந்து அவஸ்தைப்படுவதைக் கண்டது, அவர் மனதை வெகுவாக உலுக்குகிறது. தொழுநோயாளிகளோடு நெருங்கிப் பழகத் துவங்குகிறார். முடிவில் ஜூலை மாதத்தில் வெனிசுலாவில் அவர்கள் திட்டமிட்டபடியே தங்களது பயணத்தை நிறைவு செய்கிறார்கள்.

தொழுநோயாளிகளுக்கு சேவை செய்வதே தனது முதற்கடமை என்று உணர்ந்த சே திரும்பவும் சான் பாப்லோ காலனிக்கு போக முடிவு செய்கிறார். அல்பெர்டோ மருத்துவப் பரிசோதனை நிலையத்தில் பணியாற்றுவதற்காக அங்கிருந்து பிரிந்துபோகிறார்.

இரண்டு நண்பர்களின் பயண அனுபவமாக துவங்கி, ஒரு தேசத்தின் நூற்றாண்டுகால சரித்திரமாக உருமாறும் இந்தத் திரைப்படம், இதுவரை போராளியாக மட்டுமே சித்திரிக்கப்பட்டு வந்த சே குவாராவின் மறுபக்கத்தைக் காட்டுகிறது. கேல் கார்சியா பெர்னல் என்ற நடிகர், சே குவாராவாக சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் அமோரஸ் பெரஸ் திரைப்படத்தில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து ஆண்டு காலம் இந்தப் படத்தின் திரைக்கதைக்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பிற்கு முன்னால் இந்த 800 மைல் தூரத்தை இரண்டுமுறை பயணம் மேற்கொண்டிருக்கிறார் வால்டர் செலஸ். 80 வயதைக் கடந்த ஆல்பெர்டோ கிரானடாவை திரும்பவும் சந்தித்து, அவரோடு பத்து மணி நேரம் உரையாடி பதிவு செய்துகொண்டு, அதில் இருந்த தகவல்களை திரைக்கதைக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்படம் கனவுலகில் சஞ்சரிக்கும் இரண்டு இளைஞர்கள் எப்படி சமகால உலகின் பிரச்னைகளை புரிந்துகொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. லத்தீன் அமெரிக்கா நாடுகளில் பலத்த வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படம், கோவாவில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவிலும் முக்கியக் கவனம் பெற்றது.

பிரேசிலின் சமகால வாழ்வை தனது படங்களின் மையமாக கொண்டிருந்த வால்டர் செலஸ் அதிலிருந்து, முற்றிலும் மாறுபட்டு ஜப்பானில் 1970_களில் வெளியான கறுப்பு_வெள்ளை திகில் படமான 'டார்க் வாட்டரை' சமீபத்தில் மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்.

கான்ஸ் திரைப்பட விழாவின் நடுவராக பணியாற்றியுள்ள இவர், இன்றைய பிரேசிலின் இளம் தலைமுறை இயக்குநர்களுக்கு வழிகாட்டுபவராகயிருக்கிறார். இவர் தயாரித்த 'சிட்டி ஆஃப் காட்' மற்றும் 'மேடம்சாதா' போன்ற படங்கள் பிரேசிலின் சமகாலத் திரைப்படங்களில் புதிய பாய்ச்சலை உருவாக்கின.

'தனது திரைப்படங்கள் யாவும் சுதந்திரத்தையும் சுய அடையாளத்தை தேடுவதை பற்றியதுமேயாகும்' எனும் வால்டர் செலஸ், தற்போது பிரான்சிஸ் போர்டு கபோலோவின் தயாரிப்பில் On the Road என்ற படத்தை இயக்கி வருகிறார். றீ

-நன்றி: தீராநதிக்கு

jp125.jpg

B00005JNCX.01.LZZZZZZZ.jpg

dark-water.jpgbehind-the-sun-DVDcover.jpg

poster_under_licence.gif

தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா!

நல்ல கட்டுரை

வணக்கம் அஜீவன்

என் மனம் கவர்ந்த எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் படைப்பைத்தந்திருக்கிறீர்கள

  • தொடங்கியவர்

வணக்கம் அஜீவன்

என் மனம் கவர்ந்த எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் படைப்பைத்தந்திருக்கிறீர்கள

தகவலுக்கு நன்றி

வணக்கம் அஜீவன், உலக சினிமாவில் உங்கள் பங்களிப்பு இருந்தது அறிந்து மகிழ்கின்றேன்.

ஓ உங்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார்களா? :-(

  • தொடங்கியவர்

வணக்கம் அஜீவன், உலக சினிமாவில் உங்கள் பங்களிப்பு இருந்தது அறிந்து மகிழ்கின்றேன்.

ஓ உங்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார்களா? :-(

உலக சினிமா இல்லை

உலக சினிமாவுக்கே அல்வா கொடுக்கக் கூடியவர்கள்.

புத்தகம் எழுதியவருக்கே பணம் கிடைக்கவில்லையாம்!

இந்த புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகத்தார்

என்னை ஒரு புலம் பெயர் தமிழன் என நினைத்து

அல்வாவை கையில் எடுத்துக் கொடுப்பதற்கு எத்தனித்தார்கள்.

இதை மணி(த) நேயத்துக்காக மேகலை போல்

பாதிக்கப்பட்டோருக்கு உதவும் குறும்படமெடுக்கும் வேசதாரி ஓருவரும்

அவரது துணை நண்பர் என சொல்பவரும்தான் செய்கிறார்கள்.

இனிப்பு கலந்த பழக்கம்........

பேச்சு........

நேர்மையின்

உறைவிடம்.............

ஆகா!

கொடுத்ததை திருப்பிக் கேட்டால்.........

அப்போதான் உனக்கு என்ன சம்பந்தம்

உன் பணம் கறுப்பு பணம்

என்பது போல

வல்கரான மொழியோடு தொடங்கும்

அவர்களின் அடாவடித்தனம்..........

நானும் தமிழ்நாட்டில் ஒரு காலத்தில்

அவர்களை விட

அதைச் செய்தவன் என்று

தெரிய வந்த போதுதான் திகைத்தார்கள்.........

அதுவரை அவர்கள் என்ன செய்ய முயன்றார்கள்

செய்தார்கள் என்பது

சிலருக்குத்தான் தெரியும்.........

அதன் பிறகு என் (நண்பர்கள்) பக்கத்தவர்கள் என்ன செய்தார்கள்

என்பதை தமிழகத்தில் அவர்களை அறிந்தவர்கள் எல்லோருக்கும் தெரியும்.

சினிமா - அரசியல் - போலீஸ் - ஊடகம் - கட்டப்பஞ்சாயம்

இப்படி எங்கு போயும் இவர்களால் நிமிர முடியவில்லை.

இன்னும் பல லட்சம் வரணும் சாமி.........

கையெழுத்து போடுவதற்கு போட்ட

சினிமா இருக்கே...........அதுவே

உலக சினிமாதான்.

முன்ன நினைச்சதும் உலகம் சுற்றி வந்தவங்க

இப்ப உலக நண்பர்கள் வரவேற்பால

நாட்டுக்குள்ளயே முடங்கி :oops:................. :?:

நமக்கு எல்லா இடத்திலயும் நண்பர்கள்.

ஏமாத்திறவங்கள் நம்ம நண்பர்களை ஏமாத்த

விடக் கூடாது பாருங்க.

முதன் முறையாக இப்போதான் எழுத்தில் வருகிறது.

தெரியாதவர்கள் மாட்டிக் கொண்டு

முழிக்காமல் இருக்க

கொஞ்சமாய் உங்களைப் போன்றவர்கள் காதில் போட்டு வைக்கிறேன்............

கவனம் :P

தங்களைப்போலப் படைப்பார்வம் கொண்டவருக்கு நிகழ்ந்த கொடுமை கண்டு வருந்துகின்றேன்.

  • தொடங்கியவர்

தங்களைப்போலப் படைப்பார்வம் கொண்டவருக்கு நிகழ்ந்த கொடுமை கண்டு வருந்துகின்றேன்.

நாம் சிலரது படைப்புகளைப் பார்த்து

இவர்களது மனதில் உள்ள இரக்கமும்

அடுத்தவருக்கு உதவ வேண்டுமென்ற எண்ணமுமே

இப்படியான படைப்புகளை உருவாக்க உந்துதலாக இருந்திருக்கிறது

என நினைக்கிறோம்...........

ஆனால் இப்படியான பலர்

தம்மை வளர்த்துக் கொள்வதற்கு (தமது முன்னனேற்றத்துக்காக )

பாதிக்கப்பட்ட மக்களைப் பகடைக் காயாக்கி

அவர்களுக்கு உதவ முனைவது போல

படைப்புகளை உருவாக்கி தம்மை

வளர்த்துக் கொள்ளும் சுயநல பேய்கள்.

குறிப்பாக இந்திய மக்களின்

தலித் மற்றும் சாதிய பிரச்சனைகளை வைத்து

குறும் மற்றும் ஆவணப் படங்களைப் பண்ணும் பலர்

ஐரோப்பா மற்றும் மேலைத் தேசங்களுக்குச் சென்று

அவர்களது படைப்புகளை வியாபாரமாக்கி

தம்மை பிரபல்யமாக்கிக் கொள்வதோடு

இந்த நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொடுக்கும்

உதவிகளையும் இந்த கேடு கெட்ட படைப்பாளிகளே

சாப்பிட்டு கொட்டாவி விடுகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள்

பாலியல் வல்லுறவு பலாத்காரம் சாதிய கொடுமைகள்

போன்றவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டது போக

இவர்கள் செய்யும் படைப்புகள் மூலம்

"சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்தது போல...."

அந்த அப்பாவிகள்

முழு உலகத்துக்கே தம்மை அடையாளப்படுத்தி விடுகின்றனர்.

இந்த படைப்பாளிகளால் தமக்கு ஏதாவது விடிவு ஏற்படும்

என்று அந்த மக்கள் நம்புகின்றனர்.

ஆனால் உண்மையில் இப்படியான படைப்பாளிகள்

பாதக்கப் பட்டோர் பெயரால் தம் வயிற்றை வளர்க்கும் தாசிகளே!

இதுபோல் சில சஞ்சிகைகளும் இதையே செய்கிறது.

பொழுது போக்கு சினிமாக்காரரை விட

இவர்கள் மிகவும் பயங்கரமானவர்கள்.

இப்படியானவர்கள் மக்களால் நிச்சயம் அடையாளப்படுத்தப்பட்டு

ஒதுக்கப்பட வேண்டியவர்கள்.

  • 1 month later...
  • தொடங்கியவர்

pg7.jpg

சீனாவின் பீகிங் திரைப்படக் கல்லூரியில் இருந்து 1982ஆம் ஆண்டு நூறு மாணவர்கள் திரைக்கலை பயின்று வெளியே வந்தார்கள். அதுவரை சீன சினிமாவில் இருந்து வந்த சோசலிச யதார்த்தவாதம் என்ற கோட்பாட்டினை விலக்கி, தங்களுக்கென தனித்துவமானதொரு கதை சொல்லும் புதிய காட்சிபடுத்துதல் கொண்ட திரை இயக்கத்தை இவர்கள் உருவாக்கினார்கள். ஐந்தாம் தலைமுறை திரைப்பட இயக்குனர்கள் என்று கௌரவிக்கப்படும் இவர்கள், உலகத் திரைப்பட விழாக்களில் சீனத் திரைப்படத்திற்குப் பெரிய அந்தஸ்தை உருவாக்கித் தந்தனர். அவர்களில் ஒருவர்தான் ஷாங் யுமு (Zhang Yimou).

பீகிங் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறையில் பயின்ற ஷாங் யுமு வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே படிப்பைத் துறந்து வேலைக்குச் செல்லும் கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. ஆனால், தனது பதின்பருவத்தில் புகைப்பட கலையின் மீது ஏற்பட்ட விருப்பம் காரணமாக, தனது ரத்தத்தை விற்று, ஒரு கேமிராவை விலைக்கு வாங்கினார். அதில் எடுத்த புகைப்படங்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அந்தப் புகைப்படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு, அவரை, திரைப்பட பள்ளியில் சேர்வதற்குத் தூண்டியது. ஆனால் ஏற்கெனவே திரைப்படக் கல்லூரியில் சேர்வதற்கான வயது வரம்பை அவர் தாண்டியிருந்தார். எனவே சிறப்பு அனுமதி வேண்டி அரசிடம் விண்ணப்பித்தார். அவரது புகைப்படங்களின் நேர்த்தியைக் கண்ட அதிகாரிகள், சிறப்பு அனுமதி அளித்தனர்.

சீனாவில் ஏற்பட்ட கலாசார புரட்சிக்குப் பிறகு, அங்குள்ள கலைவடிவங்கள் யாவும் முதலாளித்துவ ரசனைக்கு உரியவை என்று தடை விதிக்கப்பட்டன. குறிப்பாக, சீனாவின் இசை மற்றும் ஓவிய முறைகள் யாவும் தடை செய்யப்பட்டன. விதிவிலக்காக பீகிங் ஒபரா நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதற்குக் காரணம் மாவோவின் மனைவிக்கு ஒபராவின் மீது இருந்த ஈடுபாடு. மற்ற கலைவடிவங்களை மக்களுக்கானவை அல்ல என்று முடிவு செய்து தடை செய்ததோடு, அரசு, மக்களுக்கு கலை ஆற்ற வேண்டிய பணிகள் எவை என்றும் பட்டியலிட்டு, அதை மட்டுமே கலை இலக்கியங்கள் பிரதிபலிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. குறிப்பாக, இலக்கியம் மற்றும் காட்சிக்கலைகளின் பிரதான நோக்கமாக பிரச்சாரம் செய்வது மட்டுமே இருந்தது.

1980களுக்குப் பிறகே பிரச்சாரத்தை விலக்கிய இலக்கிய முயற்சிகளும் திரைப்படங்களும் உருவாகத் துவங்கின. சீனாவிற்கு 1896இல் திரைப்படம் அறிமுகமான போதிலும், சீனாவில் திரைப்படம் தயாரிப்பது பிரபலமாவதற்கு முப்பது ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனாலும், அங்கு நடைபெற்ற புரட்சியும் அதற்குப் பிந்திய அரசியல் சூழ்நிலைகளும் திரைப்பட வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதையே பிரதானமாகக் கருதின.

கடந்த காலத்தைய இயக்குனர்களை விடவும் இன்றைய திரைப்பட இயக்குனர்களுக்குக் கிடைத்த பெரிய சுதந்திரம், படத்தயாரிப்பிற்கான முதலீடு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி. அரசின் கட்டுப்பாட்டிலும் ஸ்டுடியோக்களின் கட்டுப்பாட்டிலும் இருந்த திரைப்படம், இன்று முழுமையாக வர்த்தக நிறுவனங்களின் கைகளுக்குச் சென்று விட்டதால், திரைப்பட தயாரிப்பிற்கான முதலீடு பெரிய அளவில் விரிவடைந்தது. அது போல, சீன சினிமாவின் விநியோகம் உலகம் முழுவதும் பரவியதும், இந்த முதலீட்டை அதிகப்படுத்தியது.

திரைப்பட ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இன்று சீனாவின் பிரபல இயக்குனராக உள்ள ஷாங் யுமு கடந்த இருபது ஆண்டிற்குள் Red Sorghum, Operation Cougar, Judou, Raise the Red Lantern, Not One Less, The Story of Qiu Ju, To Live, Shanghai Triad, The Road Home, Happy Times, Hero, House of Flying Daggers

உள்ளிட்ட பல முக்கியப் படங்களை இயக்கியிருக்கிறார். ஷாங் யுமுவின் திரைப்படங்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று, அவர் சீனாவில் முக்கிய இயக்குனராக அறியப்பட்ட காலங்களில் உருவாக்கப்பட்டவை. இரண்டு, அவர் ஹாலிவுட்டிற்குள் பிரவேசம் செய்த பிறகு எடுக்கப்பட்ட திரைப்படங்கள். முன்னதில் பெரும்பாலும் எளிய மனிதர்களின் வாழ்வும் போராட்டமும் முக்கியத்துவம் பெற்றன. ஹாலிவுட்டின் பிரவேசம் ஷாங் யுமுவை சாகச திரைப்படங்களை நோக்கியதாக திசை திருப்பியது. குறிப்பாக மார்ஷல் ஆர்ட்ஸ் எனப்படும் தற்காப்புக்கலையை மையமாகக் கொண்டு, அவர் இயக்கிய House of Flying Daggers போன்றவற்றிற்குக் கிடைத்த வரவேற்பு, அவரது கடந்த கால படங்கள் உருவாக்கியிருந்த கலைப்பட இயக்குனர் என்ற அடையாளத்தை உருமாற்றியது.

ஷாங் யுமுவின் திரைப்படங்கள் பெரும்பாலும் சிறுகதைகள் மற்றும் நாவல்களை அடிப்படையாகக் கொண்டவை. சீனாவின் பிரபல எழுத்தாளரான லூசுகன் மீதிருந்த ஈடுபாடு காரணமாக, அவரது சிறுகதை ஒன்றை மையமாகக் கொண்டு திரைப்படம் ஒன்றை உருவாக்கினர். இன்று வரை அவரது முக்கிய திரைப்படங்கள் யாவிற்கும் அடிப்படையில் நல்ல இலக்கியமே உள்ளது. மேலும் இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் பெண்களின் அகஉலகை முன்னிறுத்துபவை. அவரது முதல் படமான Red Sorghum துவங்கி To Live வரை அத்தனை படங்களிலும், பெண்களைச் சுற்றியே கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குடும்பம் மற்றும் சமூக காரணங்களால் ஒரு பெண் படும் அவஸ்தையும் இன்னல்களுமே, அவரது படத்தின் மையப்புள்ளியாக உள்ளது. இதற்கு உதாரணமாக, Not One Less என்ற திரைப்படத்தைக் குறிப்பிடலாம். அந்தப் படம் வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டதோடு, யுனெஸ்கோவின் சிறப்பு விருதையும் பெற்றுத் தந்தது.

சீனாவின் கிராமப்புறம் ஒன்றில் உள்ள ஓராசிரியர் பள்ளியில் கோ எமான் என்ற ஆசிரியர் வேலை செய்கிறார். எதிர்பாராமல் அவரது அம்மாவிற்கு உடல் நலமில்லாமல் போன காரணத்தால், அவர் விடுமுறையில் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்கு முயற்சிக்கிறார். ஆனால், அவருக்குப் பதிலாக மாற்று ஆசிரியர் கிடைக்காமல், பள்ளியை விட்டுப் போக முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்காக கிராம நிர்வாக அதிகாரி பதிமூன்று வயதான வொய் மின்ஷி என்ற சிறுமியை, பள்ளி ஆசிரியைப் பணிக்குத் தேர்வு செய்கிறார். அவளே பள்ளியில் படிக்கும் மாணவியைப் போன்றுதான் இருக்கிறாள். ஆனாலும், இந்தத் தற்காலிக வேலை தரும் சம்பளத்திற்காக, ஆசிரியையாக இருக்க ஒத்துக் கொள்கிறாள். வேறு வழியில்லாமல் அவளை ஏற்றுக் கொள்ளும் கோ எமான் பள்ளியில் இருந்து ஒரு மாணவன் கூட நின்று விடாமல் கவனித்துக் கொள்ளவேண்டியது அவளது பொறுப்பு என்றும், ஒரு ஆள் நின்று போனால்கூட, அவளது சம்பளத்தைத் தர முடியாது எனவும் கட்டாயமாகக் கூறி விடுகிறார். அவளும் இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொள்கிறாள்.

ஆசிரியர் தன் உடல்நலமற்ற தாயைக் காண புறப்பட்டுப் போகிறார். வொய் மின்ஷி தனக்குத் தெரிந்த விதத்தில், பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துகிறாள். பாட்டு பாடுகிறாள். ஆனாலும் அவளால் பள்ளிப்பிள்ளைகளைத் தனது கட்டுபாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், ஷாங் குய்கி என்ற சிறுவன் திடீரென பள்ளியில் இருந்து நின்று விடுகிறான். அவனைத் தேடி அவனது வீட்டிற்கே செல்கிறாள் வொய் மின்ஷி. அங்கே அந்த சிறுவனின் தாய், வீட்டின் வறுமை காரணமாக சிறுவனை நகரத்துக்கு வேலைக்கு அனுப்பிவிட்டதாக கூறுகிறாள். இப்போது என்ன செய்வது என அறியாத வொய், அந்தச் சிறுவனை மீட்டு வருவதற்காக நகரத்துக்குப் போக முடிவு செய்கிறாள்.

அதற்குத் தேவையான பணம் சேர்க்க, பள்ளி பிள்ளைகள் அத்தனை பேரையும் செங்கல் சூளையில் வேலை செய்ய வைக்கிறாள். பணம் கிடைத்ததும், நகரத்துக்குப் புறப்படுகிறாள். ஆனால் நகரில் அந்தச் சிறுவனைக் கண்டுபிடிப்பது எளிதாகயில்லை. ஒரு நாள் முழுவதும் ரயில்வே நிலையத்தில் காத்துக் கிடந்து தேடுகிறாள். அந்தச் சிறுவனைப் பற்றிய தகவல்களைச் சிறிய காகிதத்தில் எழுதி ஆங்காங்கே ஒட்ட முயற்சிக்கிறாள். அப்படியும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. முடிவில் அந்தச் சிறுவனைப் பற்றிய விபரத்தை எடுத்துக்கொண்டு, தொலைக்காட்சி நிலையத்திற்குச் செல்கிறாள். அங்கே அவளை உள்ளே விட மறுக்கிறார்கள். தொலைக்காட்சி நிலைய வாசலில் அவள் தவம் கிடக்கிறாள். பகலும் இரவும் கடந்து போகிறது. முடிவில் தொலைக்காட்சி இயக்குனரின் கண்ணில் படும் அவளை, நிலையத்தினுள் அழைத்து வருகிறார்கள்.

நாடு முழுவதும் ஒளிபரப்பாகும் ஒரு நேரடி நிகழ்ச்சியில் அவள் காணாமல் போன சிறுவனைப் பற்றி பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். அவள் கேமிரா முன்பாகப் போய் அமர்கிறாள். ஆனால் வார்த்தைகள் வரவில்லை. அவளை அறியாமல் கண்ணீர் பெருகி வழிகிறது. தனது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாத துயரத்தோடு, அந்தச் சிறுவனைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கிறாள். தேசமே அவளது கண்ணீரின் காரணத்தை அறிகிறது. சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டு அவளிடம் ஒப்படைக்கப்படுகிறான். அவனை அழைத்துக்கொண்டு தனது கிராமத்திற்குத் திரும்பி வருகிறாள். அவளது பள்ளியைப் பற்றி அறிந்த நகர மக்கள் அளித்த உதவியோடு, இப்போது கிராமப்பள்ளி புதிய தோற்றம் பெறுகிறது. ஒரு நல்ல ஆசிரியையாக அவள் மாணவர்கள் மனதில் உயர்கிறாள்.

இப்படத்தின் கதை முழுவதுமே வொய் மின்ஷி என்ற பதிமூன்று வயது சிறுமியின் மீதே நகர்ந்து செல்கிறது. அந்தச் சிறுமி இதன் முன்பு திரைப்படம் எதிலும் நடித்தவள் இல்லை. இப்படத்திற்காக ஷாங் யுமு ஒரு கிராமத்தில் பள்ளி ஒன்றைக் கட்டி, படப்பிடிப்பு முடிந்த பிறகு அதை கிராமத்திற்கே தந்துவிட்டார். படத்தில் நடித்த மாணவர்களும் கிராம அதிகாரியும்கூட உண்மையான கிராமவாசிகளே. இந்தப் படம் சீனாவின் கிராமப்புறங்களின் உள்ள கல்வி நிலையங்கள் எப்படி நடைபெறுகின்றன என்ற உண்மையை வெளிப்படுத்தியதோடு, கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதையும் குழந்தைத் தொழிலாளர் முறை எப்படி எல்லா இடங்களிலும் நீக்கமற்று உள்ளது என்பதையும் விமர்சிக்கிறது. இதன் காரணமாக, கல்வியறிவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் அரிய கலைப்படைப்பு என்று பாராட்டிய யுனெஸ்கோ, பல இடங்களில் இப்படத்தைத் திரையிட்டு வருகிறது.

இந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்பு, இன்றுவரை சீன திரைப்படங்களில் கல்வி சார்ந்த பிரசினைகளை முதன்மைப்படுத்திய திரைப்படங்களை உருவாக்குவதற்கு அடிகோலியது. சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில், சீனாவின் சமகால இயக்குனர்களின் ஒருவரான ஷாங் யஷோவின் preety big feet என்ற படத்தைப் பார்த்தேன். அப்படமும் இது போன்றதொரு கிராமப்புற கல்வி சார்ந்ததே.

இந்த இரண்டு திரைப்படங்களும் கல்வி நிறுவனம் சார்ந்த சமகால நிலையை பிரதிபலிப்பதோடு, கிராமப்புற மாணவர்களின் நிலையை மிக கச்சிதமாக வெளிப்படுத்துகின்றன. திரைப்படம் வெறும் பொழுது போக்குச் சாதனம் மட்டுமல்ல. அது பொறுப்புணர்ச்சி மிக்க ஒரு கலை என்பது இந்த இரண்டிலும் மெய்ப்பிக்கப்படுகிறது. அதே நேரம் பிரசினைகளைச் சொல்லும் படம் என்பதற்காக வறண்ட கதையமைப்போ, விவரணப்படம் போன்ற தகவல்களோ இதிலில்லை. படம் முழுவதும் மெல்லிய நகைச்சுவையும் ஆழ்ந்த வேதனைகளும் பதிவாகியுள்ளன. இரண்டு படங்களிலும் சீனாவின் இயற்கை அழகு மிக்க கிராமங்களும் தனிமையான வாழ்க்கை சூழலும் நீர்வண்ண ஓவிய காட்சிகளைப் போல படமாக்கப்பட்டுள்ளன. இரண்டின் இசையும் படத்தின் கதை போக்கினை வலிமைபடுத்துகின்றன. குறிப்பாக நாட் ஒன் லெஸ் என்ற ஷாங் யுமுவின் படத்தில், பெரும்பான்மை காட்சிகளில் பின்னணி இசை தவிர்க்கப்பட்டிருப்பதோடு, காமிரா ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டு, பொதுமக்களின் ஊடாக கதாநாயகி அலைந்து திரிவது படமாக்கப்பட்டிருக்கிறது. ஷாங் யுமு ஒளிப்பதிவாளர் என்பதால், அவரது கதைகள் பெரும்பாலும் கவித்துமான காட்சிகள் கொண்டதாக உள்ளது.

கலாசார புரட்சி ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்த மீள்பார்வைகள் இன்றைய சீன சினிமாவின் பிரதான அம்சமாக காணப்படுகிறது. இதை ஷாங் யுமுவின் திரைப்படங்களிலும் காண முடிகிறது. குறிப்பாக, இவரது படங்களில் கலையின் மீது ஏற்படுத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் கலையைச் சார்ந்து வாழ்ந்தவர்கள் அடைந்த துயரங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகின்றன. இந்த வகைப் படங்களில் மூன்று மிகவும் குறிப்பிடத்தக்கது.

Zhuangzhuang இயக்கிய The Blue Kite ஷாங் யுமு இயக்கிய To Live, Chen Kaigeஇயக்கிய Farewell My Concubine. மூன்று திரைப்படங்களும் நாடகம், பொம்மலாட்டம், நடனம் சார்ந்து வாழ்ந்த கலைஞர்களின் வாழ்வு புரட்சியால் சூறையாடப்பட்ட விதம் குறித்து ஆழமாக ஆராய்கின்றன.

அதிலும் ஷாங் யுமு இயக்கிய To Live பொம்மலாட்டம் நடத்திப் பிழைக்கும் குடும்பம் ஒன்று கலாசார புரட்சி காரணமாக எவ்வளவு இடையூறுகளைச் சந்திக்கின்றது என்பதை விவரிக்கிறது. அரசியல் மாற்றங்கள் சாதாரண மனிதர்களின் வாழ்வைப் புரட்டிப் போட்டுவிடக்கூடியது என்பதை, இப்படம் துல்லியமாக வெளிப்படுத்துகிறது. கோங்லீ கதாநாயகியாக நடித்த இப்படத்தில் பொம்மலாட்டத்தை அரசு தடைசெய்துவிட்டதால், அந்தக் குடும்பமே தெருவிற்கு வந்துவிடுகிறது. கோங்லீயின் கணவன் உயிருக்குப் பயந்து தப்பியோடுகிறான். அவள், இரண்டு குழந்தைகளைத் தனியே போராடி வளர்க்கிறாள். எதிர்பாராத ஒரு விபத்தில் குழந்தை இறந்து போய்விடுகிறது. விபத்திற்குக் காரணமானவன் கட்சியின் மாவட்ட செயலாளர் பதவி வகிப்பவன் என்பதால், அவளது வாய் அடைக்கப்படுகிறது. மீதமிருக்கும் ஒரு பெண்ணை வளர்த்து பெரியவளாக்குகிறாள். கணவன் பல வருடங்களுக்குப் பிறகு வீடு திரும்புகிறான். மகளைத் திருமணம் செய்து தருகிறார்கள். ஆனால் அங்கும், அரசியல் அவர்கள் வாழ்வில் விளையாடுகிறது. மகள் பிரசவத்தில் சிக்கலாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். வயதான மருத்துவர்களை அப்புறப்படுத்திவிட்டு, இளையவர்களுக்கு வாய்ப்பு தரப்படும் என்ற அரசின் கொள்கையால் கோங்லீயின் மகள் பிரசவத்தில் அனுபவமற்ற மருத்துவர் தந்த சிகிச்சையால், இறந்துபோய்விடுகிறாள். பொம்மலாட்ட பொம்மைகளைப் போல தாங்கள் எவரது கையாலோ இயக்கப்படும் துயரத்தோடு, அவர்கள், வாழ்வை வெறுமையில் எதிர் கொள்கிறார்கள். அத்தோடு படம் முடிவடைகிறது.

ஒரு புறம், இது போன்ற நேரடியான அரசியல் பாதிப்பு ஏற்படுத்திய விளைவுகளைப் போலவே, மறைமுகமான அதிகார அரசியல் மற்றும் நீதி வழங்குதலால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் பற்றியதாக, அவரது The Story of Qiu Ju அமைந்திருந்தது. இதிலும் கோங்லீதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாள். கீகாங்லீயின் கணவனை கிராம அதிகாரி ஒருவன் ஓங்கி எத்திவிடுகிறான். அதில் அவனது ஆண்உறுப்பில் அடிபட்டுவிடுகிறது. தன் கணவனைக் காரணமில்லாமல் எப்படி ஒருவன் அடிக்கலாம் என்று நியாயம் கேட்டுப் போகிறாள் கோங்லீ. ஆனால் நியாயம் கிடைப்பதற்குப் பதிலாக, அவமானம் கிடைக்கிறது. உடனே இதை மாவட்ட அளவிலான நியாயசபைக்குக் கொண்டு போகிறாள். அங்கும் உரிய நியாயம் கிடைக்கவில்லை. முடிவில் அவள் தேசத்தின் உச்ச நீதி மன்றத்திற்கு, தனது பிரசினையைக் கொண்டு போகிறாள். அரசு உண்மையைக் கண்டறிய ஒரு கமிட்டியை நியமிக்கிறது. இதற்குள் கர்ப்பிணியான அவள் ஊரை விட்டுப் போக முடியாத நிலை ஏற்படுகிறது.

அவள் யாரை எதிர்த்து நியாயம் கேட்டு போராடிக் கொண்டிருக்கிறாளோ, அதே ஆள் அவளது பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலின்போது, உதவிக்கு வந்து நிற்கிறான். நல்லபடியாக குழந்தை பிறக்கிறது. பகை மறந்து அவர்கள் நல்லுறவை உருவாக்கிக் கொள்கிறார்கள். குழந்தை பிறந்ததற்காக, கோங்லீ வீட்டில் ஒரு விருந்து நடக்கிறது. அதில் கிராம அதிகாரி கலந்து கொள்கிறான். இப்போது உண்மையைக் கண்டறிந்த அரசாங்கம் அவளுக்கு நியாயம் வழங்குவதாக கூறிக் கொண்டு, அந்த கிராம அதிகாரியைக் கைது செய்து கூட்டிப் போகிறது. தாமதமாக வழங்கப்படும் நியாயம் எந்த விதத்திலும் பயனற்றது என்பதை, இப்படம் முகத்தில் அறைவது போல வெளிப்படுத்துகிறது.

ஷாங் யுமுவின் கதாநாயகியாக அறியப்படும் கோங்லீன் நடிப்பு, இந்த இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. ஷாங் யுமுவின் திரைப்படங்கள், உலக திரைப்படவிழாக்களில் பங்குபெற்று பல முக்கிய விருதுகள் பெற்றுள்ளன. குறிப்பாக கான்ஸ், வெனிஸ். கெய்ரோ, ஆம்ஸ்டர்டம், டோக்கியோ உள்ளிட்ட திரைப்பட விழாக்களில், சிறந்த திரைப்படம், இயக்கம் மற்றும் நடிப்பிற்காக விருது பெற்றிருக்கிறது. பல முறை சிறந்த அயல்மொழி திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருதிற்கு, சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது.

ஷாங் யுமு திரைப்பட உருவாக்கத்தில் பல முக்கிய மாற்றங்களை உருவாக்கியிருக்கிறார். அவரது ரோடு ஹோம் என்ற திரைப்படத்தில் தனது இறந்து போன அப்பாவைக் காண்பதற்காக, கதாநாயகன் கிராமத்திற்கு ஒரு காரில் பயணம் செய்கிறான். அந்தக் காட்சிகள் முழுவதும் கறுப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ளது. கிராமத்திற்குச் சென்று அம்மாவைச் சந்திக்கிறான். அம்மா அவனது அப்பாவை தான் காதலித்த பழைய நாட்களை நினைவு கூர்கிறாள். அவளது பிளாஷ்பேக் முழுவதும் கலரில் விவரிக்கப்படுகிறது. இது போலவே, இவரது பெரும்பான்மையான படங்கள் சிவப்பு நிறத்தைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக இவரது ஷாங்காய் டிரையாட் என்ற திரைப்படத்தில், சிறுவன் ஒருவன் பார்வையில் மாபியா உலகம் சித்திரிக்கபடுவதால், படம் முழுவதும் கேமிரா கோணங்கள் சிறுவனின் உயர அளவிலே இருக்கக்கூடியதாகவும் செபியா நிறத்தில் உள்ளதாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஷாங்காய் டிரையாடின் இன்னொரு சிறப்பம்சம், அதில் இடம் பெறும் ஒபரா வகை இசைப்பாடல்கள்.

இன்றைய சீன சினிமா ஹாலிவுட்டைப் போன்று, மூன்று அங்கம் கொண்ட திரைக்கதை அமைப்பை நம்பியிருப்பதில்லை. அதிலும் ஷாங் யுமுவின் படங்கள் மாறுபட்ட திரைக்கதை அமைப்பைக் கொண்டிருக்கின்றன. இவரது படங்களில் கதாநாயகர்களுக்கு முக்கியமில்லை. கதாபாத்திரங்கள்தான் முக்கியத்துவம் பெறுகின்றன. ஹாலிவுட் திரைக்கதைகள் பெரிதும் ஒரு நபரை மையம் கொண்டவை. அந்த நபர் எதிர் கொள்ளும் சிக்கலும் அதைத் தீர்க்கும் முறையும்தான், அங்கு பிரதான திரைக்கதை முறையாக அறியப்படுகிறது. ஆனால் நல்ல திரைப்படம் இதுபோன்ற எந்தத் திரைக்கதை மாதிரிகளுக்கும் உட்பட்டதல்ல.

ஆனால், கதாநாயகன், கதாபாத்திரம், முக்கிய கதாபாத்திரம் இந்த மூன்றும் இந்திய சினிமாவைப் பொறுத்தவரையில், ஒரே ஆள்தான். படத்தின் கதாநாயகனைச் சுற்றிலுமே கதை வளர்த்து எடுக்கப்படுகிறது. விதிவிலக்காக ஒன்றிரண்டு திரைப்படங்கள் கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் போதும்கூட, அவள் கதாநாயகனின் செயல்களை நகலெடுப்பவளாகவே சித்திரிக்கப்படுகிறாள். உண்மையில் கதாநாயகன், கதாபாத்திரம், மைய கதாபாத்திரம் ஆகிய மூன்றும் மூன்றுவிதமானவை.

ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் கதாபாத்திரம் இல்லாத கதையிருக்காது. கதாநாயகன் போலீஸாக நடிப்பது வேறு; ஒரு போலீஸ் கதாபாத்திரம் கதையின் முக்கிய சம்பவங்களுக்குக் காரணமாக அமைவது வேறு. நம் திரைக்கதை அமைப்புகளில், இந்த இரண்டும் பெரிய வேறுபாடு கொண்டவையல்ல. முக்கிய கதாபாத்திரம் என்பது, கதையின் போக்கைத் தீர்மானிக்கக் கூடியது. அது ஒன்றிரண்டு காட்சிகள் மட்டுமே தோன்றி மறையக் கூடியதாகக்கூட இருக்கக்கூடும். இந்தப் புரிதல்கள் தெளிவாக இருக்கும்பட்சத்தில், அமைக்கப்படும் திரைக்கதைகள் மாறுபட்ட படங்களை உருவாக்குகின்றன.

ஷாங் யுமு சம்பிரதாயமான கதைகளைத் தனது களனாகத் தேர்வுசெய்து கொள்ளும் போதுகூட, தனது திரைக்கதை அமைப்பின் காரணமாக, முற்றிலும் புதியதொரு திரைப்பட அனுபவத்தை உருவாக்கிவிடுகிறார். இதற்கு சரியான உதாரணங்கள் அவரது சாகசபடங்களான Hero மற்றும் House of Flying Daggers இந்த இரண்டு படங்களும் வாள்வித்தையில் சாசகம் செய்கின்ற கதாநாயகனைப் பற்றியது என்றாலும், காட்சிகள் அமைக்கப்பட்ட விதமும் அதன் ஒளிப்பதிவும் கிராபிக்ஸ் காட்சிகளும் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தன. குறிப்பாக, கிறிஸ்டோபர் டாயன் செய்த ஒளிப்பதிவு இந்த இரண்டு திரைப்படங்களையும் மிக உயர்ந்த தரத்திற்கு உயர்த்தியுள்ளது.

பலகோடி ரூபாய் பொருட்செலவில் ஹாலிவுட்டோடு போட்டியிட தயாரிக்கப்படும் தனது படங்களை விடவும், எளிய கிராமத்து மனிதர்களை நடிக்க வைத்து, "தான் இயக்கிய படங்களே தனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது" என்று கூறும் ஷாங் யுமு, தற்போது பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு வயலின் இசைக்கலைஞர் பற்றிய படத்தை உருவாக்கி வருகிறார்.

கடந்த பத்தாண்டுகளில் சீனாவில் தயாரிக்கப்பட்ட படங்களில், சிறந்த பத்து படங்களை சமீபத்தில் தேர்வு செய்தது சீன அரசு. அந்தப் பத்தில் முதல் இடம் பிடித்திருக்கிறார் ஷாங் யுமு. சீனாவில் மட்டுமில்லாது பல்வேறு உலக திரைப்பட விழாக்களிலும் இவரது படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையிடப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகின்றன. வாழ்வினை மிக நெருக்கமாக அவதானிப்பதும், அதிலிருந்து தான் கற்றுக்கொண்டதை உலகிற்குத் தெரியப்படுத்துவதுமே, இவரது திரைப்படங்களின் தனித் தன்மையாக இருக்கிறது.

கலை பிரச்சாரம் செய்வதில்லை, மாறாக நல்லதை தானாகவே கற்றுக் கொடுத்து விடுகிறது

என்பதையே ஷாங் யுமுவின் படங்களும் உறுதி செய்கிறது.

நன்றி: தீராநதி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

pga.jpg

"ஒவ்வொரு திரையரங்கமும் எண்ணிக்கையற்ற நினைவுகளைக் கொண்டிருக்கின்றது. சினிமா பார்ப்பது என்பது ஆயிரம் பேர் ஒரே கனவைக் காண்பது" என்றார், ரோமன் பொலான்ஸ்கி. அதை நிஜமாக்கியது திரையரங்கங்கள்தான். எல்லா நகரங்களிலும் காலைக்காட்சி திரைப்படம் பார்ப்பதற்கென்று தனித்துவமான மனிதர்களிருக்கிறார்கள். அது போலவே, செகண்ட் ஷோ எனப்படும் இரவு காட்சிக்கு வருகின்றவர்களும் ஒரு சாரார் மட்டுமே. திரையில் காட்டப்படும் விசித்திரமான கதைகளை விடவும் வியப்பூட்டக்கூடியது, திரையரங்கில் பார்வையாளர்கள் காட்டும் ஈடுபாடும் கனவு நிலையும். ஒரே திரைப்படத்தை ஓர் ஆள் நாற்பது முறை, ஐம்பது முறை பார்க்கும்போது, அவன் திரையில் என்ன பார்க்கிறான் என்பதே வியப்பானது. அநேகமாக, அந்தத் திரைப்படத்தின் ஒவ்வொரு சிறு அசைவும் அவனுக்குப் பரிச்சயமாகியிருக்கும். அவன் ரசிப்பது திரைப்படத்தை மட்டுமல்ல, அதன் வழியாக அவன் தன் மனதில் ஒளிந்திருந்த ஓர் ஆசையைக் கண்டுபிடித்துவிடுகிறான். இங்ஙனம் திரையரங்கம் மனிதர்களின் அடக்கப்பட்ட கனவுகளை மீட்டெடுக்கிறது. தன்னைச் சுற்றியுள்ள இருளில், திரையில் தெரியும் கதாபாத்திரங்கள், மனதிற்குள் வருவதற்காக மனதின் ரகசிய கதவுகளைத் திறந்துவிட்டுக் காத்திருக்கிறான். திரைநாயகர்கள் மனதில் பிரவேசிக்கிறார்கள். பின் நெடு நாட்கள் வெளியேறுவதேயில்லை. கற்பனா கதாபாத்திரங்களோடு ஏற்பட்ட காதல் முடிவற்று நீள்கிறது.

திரைப்படம், காட்சிகளை நமக்குள் விதைக்கிறது. அதன் வேர்கள் நம்மில் பிடிப்பு கொண்டுவிடுகிறது. எத்தனையோ வயதைக் கடந்தபோதும் நாம் அந்தக் காட்சிகளின் விருட்சத்தை நமக்குள் தக்க வைத்துக் கொண்டேயிருக்கிறோம். இன்றும்கூட கிராமங்களில் புதிதாகத் திருமணமானவர்களை சினிமா பார்த்துவிட்டு வரும்படியாக அனுப்பி வைப்பார்கள். ஒன்றாக சினிமா பார்த்து, சிரித்து, சந்தோஷமாக வீடு திரும்பிவிடுவது, தவிர்க்கமுடியாத புது வாழ்வின் சடங்கு. திரையில் தெரியும் நிகழ்வுகளை விடவும் வியப்பானது பார்வையாளர்களின் மனக்கனவு. ஒரு திரையரங்கில் படம் பார்க்கும் ஆயிரம் பேரும் ஒரே படத்தைத்தான் காண்கிறார்கள். ஆனால், அவர்கள் அந்தத் திரைப்படத்தைக் காண்பதற்கு ஆயிரக்கணக்கான காரணங்களிருக்கின்றன. சினிமா ஓர் ஆற்றுப்படுத்தும் வழி. அது நம்முடைய வேதனைகளை, துக்கங்களை, சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்கிறது. திரைப்பட வசனங்களும் பாடல்களும் நகைச்சுவையும் வாழ்வின் நெருக்கடியில் இருந்து தப்பிக்க உதவி செய்கின்றன. இன்னொரு விதத்தில், நல்ல சினிமா வாழ்வை நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவி செய்கிறது.

சலனப்படங்களின் வருகை காலத்திருந்தே சினிமா ஒரு மாயக் கலையாகவே இருந்து வருகிறது. தன் கண்முன்னே சிறுத்தை பாய்வதையும், புகை கக்கியபடியே ரயில் மரப்பாலத்தில் கடந்து போவதையும் காணும்போது, பார்வையாளர்கள் அடைந்த பரவசம் அளப்பரியது. இப்படிப் பல வியப்புகளைக் கொண்ட திரையரங்கின் கதை இன்றும் எழுதப்படவேயில்லை. சினிமா, கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் ஏற்படுத்திய மாற்றங்களும், கனவுகளும் முழுமையாக அறிந்துகொள்ளப்படவேயில்லை.

எல்லா முக்கியத் திரைப்பட இயக்குநர்களும் தங்களது இளமைக் காலத்தில் டூரிங் திரையரங்குகளில் பார்த்த படங்களைப் பற்றி நினைவு கூர்ந்திருக்கிறார்கள். ஆனால், அதை மையமாகக் கொண்டு எவரும் திரைப்படம் எதையும் உருவாக்கவில்லை. விதிவிலக்காக வந்த ஒன்றிரண்டு படங்களும்கூட மேலோட்டமாகத் திரையரங்கில் வேலை பார்க்கும் ஊழியர்களைத் சித்திரித்ததே அன்றி, அந்த உலகின் விந்தையைக் காட்சிபடுத்தவேயில்லை. இந்நிலையில் சினிமா பார்வையாளனின் மனதை மிக நெருக்கமாகப் பதிவு செய்த திரைப்படம், சினிமா பாரடைஷோ. இந்த இத்தாலியப் படத்தின் இயக்குநர்தான் டொர்னாடோ குசாபே. இப்படம், நம் பால்யத்தை உருவாக்குவதில் சினிமா எவ்வளவு பெரிய பங்கு வகிக்கிறது என்பதை மிக உண்மையாக விவரிக்கிறது.

இத்தாலிய சினிமா நியோ ரியலிசம் என்ற திரை இயக்கத்தை உருவாக்கியது. அதுவரை கற்பனையான கதைகள் மற்றும் படப்பிடிப்பு அரங்கிற்குள் முடங்கிக் கிடந்த சினிமாவை எளிய மக்களின் வாழ்வை நோக்கித் திருப்பியது, நியோ ரியலிச சினிமாக்கள். இந்த வகை திரைப்படங்களை உருவாக்கியதில் விட்டோரியோ டிசிகாவும் ராபர்டோ ரோசோலினியும் முக்கியமானவர்கள். யுத்தத்திற்குப் பிறகான சூழல் மற்றும் மக்களின் நெருக்கடியும் வாழ்க்கைப் போராட்டமுமே இந்தத் திரை இயக்கத்திற்குக் காரணிகளாக இருந்தன. ரோசோலினியின்

ஓபன் ரோம் என்ற படம் யுத்தம் சாமான்ய மனிதர்களின் வாழ்வை எவ்வளவு நெருக்கடிக்கு உள்ளாக்கியது; சாவும் ஓலமுமாக மக்கள் அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை விவரிக்கிறது. இந்தப் படத்தைத்தான் நியோ ரியலிசத்தின் முதல் படம் என்று அழைக்கிறார்கள். விட்டோரியோ டிசிகாவின் பைசைக்கிள் தீவ்ஸ், உம்பர்டோ டி போன்ற படங்களும் இந்த நியோ ரியலிச வகையைச் சேர்ந்தவையே. டிசிகா, யுத்தத்திற்குப் பிறகான நெருக்கடியால் மனித உறவுகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன என்பதையே தனது திரைப்படங்களின் அடிநாதமாகக் கொண்டிருந்தார். குறிப்பாக கூலி வேலை செய்து பிழைக்கும் தொழிலாளர் குடும்பங்களில் உள்ள குழந்தைகள், யுத்த நெருக்கடியை எவ்விதமாகச் சந்தித்தார்கள் என்பது அவரது திரைப்படங்களில் சிறப்பாக வெளிப்படுகிறது.

விட்டோரியோ டிசிகாவின் பை சைக்கிள் தீவ்ஸ் படம், ஒரு சைக்கிள் திருடு போனதை அப்பாவும் மகனும் சேர்ந்து தேடுவதைப் பற்றியது. மிகச் சிறிய கதை என்றபோதும் அது படமாக்கப்பட்ட விதமும் அதில் வெளிப்பட்ட இயல்பான உணர்ச்சிகளும் அதுவரையில்லாத நெருக்கத்தைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியது. லண்டனில் இந்தத் திரைப்படத்தைக் கண்ட சத்யஜித் ரே, அதன் உந்துதலால்தான் பதேர் பாஞ்சாலியை இயக்க முடிவு செய்தார். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே நியோ ரியலிசப் படங்களின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்தது.

¬¬¬

டொர்னாடோ குசாபே, இத்தாலிய சினிமாவில் 1985களில் பிரவேசித்தவர். ஆரம்ப நாட்களில் சிறிய ஆவணப் படங்களில் பணிபுரிந்து வந்த இவர், சிசி பகுதியில் உள்ள அடிநிலை மக்களைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தை உருவாக்கி, அதன்மூலம் உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினார். அதன்பிறகு, இணை இயக்குநராக சில திரைப்படங்களில் பணியாற்றிவிட்டு The Professor என்ற படத்தை இயக்கினார். நிழல் உலகைச் சேர்ந்த ஒருவரின் வாழ்வை விவரிக்கும் அந்தப் படத்தின் மூலம், இத்தாலிய சினிமாவில் கவனிக்கப்படும் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவாகினார். அதிலிருந்து இந்த இருபது ஆண்டுகளுக்குள் இவர் The Professor, Cinema paradiso, Every body's fine, A pure formality, Especially on Sunday, The starmaker, The legend of 1900, Malenaபோன்ற முக்கியப் படங்களை இயக்கியுள்ளார்.

குசாபேயின் படங்கள் இத்தாலியின் சிசி பகுதியை மையமாகக் கொண்டவை. சிசி, சரித்திரக் காலத்திலிருந்தே கலவரங்களுக்கும் வன்முறைக்கும் பிரசித்தி பெற்றது. சிசி பகுதி மக்கள் ஆவேசமானவர்கள். ஆனால், அடிமனதில் உண்மையானவர்கள் என்கிறார் பிரபல எழுத்தாளர் மரியா புசோ. சிசி பிரதேசத்தினர் இடையில் 1940களில் இருந்த அமைதியும், இரண்டாம் உலக யுத்தத்தில் ஏற்பட்ட நெருக்கடியுமே குசாபேயின் படங்களில் பிரதிபலிக்கப்படுகின்றன. அந்த வகையில் 1950களில் சிசியின் ஒரு சிறிய நகர்ப்புறமொன்றில் இருந்த திரையரங்கின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதே சினிமா பாரடைஷோ. படம் ரோமில் பிரபலமாக உள்ள சினிமா இயக்குநரான சல்வதோரிடமிருந்து துவங்குகிறது. ஒருநாள் ஊரிலிருந்து சல்வதோரின் அம்மா அவருக்கு போன் செய்து ஆல்பர்டோ என்ற மனிதர் இறந்து போய்விட்ட தகவலைத் தெரியப்படுத்துகிறாள். சல்வதோர் தனது சொந்த ஊருக்குப் போய் முப்பது ஆண்டுகளாகிவிட்டன. அதனால் அந்தத் தகவலைக் கேட்டதும் அவர் வருத்தமடைகிறார். ஆல்பர்டோவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகத் தனது சொந்த சிசி பகுதிக்குச் செல்கிறார்.

இவரது பயணத்தின்போது, கடந்த கால நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. சல்வதோருக்கு சிறு வயதில் இருந்த ஒரே பொழுதுபோக்கு சினிமா பார்ப்பது. அதுவும் அங்குள்ள ஒரே திரையரங்கமான சினிமா பாரடைஷோவிற்கு தினமும் சென்று அங்கு நடைபெறும் சினிமாக்களைக் காண்பது. அந்தத் திரையரங்கில் அவனை மிகவும் வியப்பூட்டியது, சினிமா ஆபரேட்டரின் அறை. அதிலிருந்து வெளிவரும் வெளிச்சம் திரையில் உருவாக்கும் மாயங்களைக் கண்டதிலிருந்து அந்த அறைக்குள் பிரவேசிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவனாகிறான். ஆல்பர்டோ தான் அந்தத் திரையரங்கின் ஆபரேட்டர். அவரோடு நட்பாகப் பழகத் துவங்குகிறான் சல்வதோர். இந்த நட்பின் காரணமாக, ஆபரேட்டர் அறைக்குள் சென்று, அங்கு நடைபெறும் செயல்களை உன்னிப்பாகக் கவனிக்கிறான். கத்தரித்துப் போடும் துண்டு பிம்பங்களைச் சேகரித்து வைத்துக் கொள்கிறான். உலகிலே சினிமா ஆபரேட்டராக இருப்பதுதான் மிகச் சிறந்த வேலை என்று எண்ணுகிறான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் ஆல்பர்டோவிடமிருந்து புரொஜெக்டரை இயக்கக் கற்றுக்கொள்கிறான்.

அந்த நாட்களில் கத்தோலிக்க திருச்சபையின் விதிமுறைப்படியே சினிமா தணிக்கை செய்யப்படும். ஆகவே, திரையரங்கிற்கே ஒரு மதகுரு வந்து அமர்ந்து கொண்டு நேரடியாகத் தணிக்கை செய்வார். குறிப்பாக, முத்தக் காட்சிகளோ, ஒருவரையருவர் கட்டியணைப்பதோ தடை செய்யப்பட்டுவிடும். அதைக் காணும்போதெல்லாம் சல்வதோருக்கு அந்தக் காட்சிகள் ஒருமுறையாவது திரையில் ஓடாதா என்று ஆசையாக இருக்கும். அதுபோலவே, சினிமாவிற்கு வருகின்றவர்களின் விநோத நடவடிக்கைகளும் அவனுக்கு ஆச்சரியம் தருவதாக இருந்தன. குறிப்பாக, ஒரு பார்வையாளர் படத்தில் இடம்பெறும் வசனங்கள் அத்தனையையும் தானும் கூடவே பேசிக்கொண்டேயிருப்பார். படத்தில் கடைசியாக சுபம் என்று போடும்போது, அவரும் சுபம் என்று சொல்லியபடி எழுந்து போகிறார். இன்னொருவர் சினிமா பார்க்க வருவதே, அங்கு மலிவான வேசைகள் கிடைப்பார்கள் என்பதற்காகத்தான். இப்படி சினிமா பார்வையாளர்களின் மனதையும் சல்வதோர் அறிந்துகொள்கிறான்.

ஒருநாள் எதிர்பாராமல் ஆபரேட்டர் அறையில் தீப்பற்றிக் கொள்கிறது. அந்தத் தீ கொழுந்துவிட்டு எரியத் துவங்கி அதில் கொட்டகையே பற்றி எரிகிறது. விபத்தில் மாட்டிக் கொள்கிறார் ஆல்பர்டோ. சிறுவனான சல்வதோர் தீக்குள் புகுந்து அவரைக் காப்பாற்றுகிறான். அந்த விபத்து ஆல்பர்டோவின் பார்வையைப் பறிக்கிறது. அதன் காரணமாக, சிறுவனான சல்வதோர் அந்த சினிமா தியேட்டரின் ஆபரேட்டராக வேலைக்குச் சேர்கிறான். அந்த நாட்களில் துவங்கி அவனது கல்லூரி நாட்களில் ஏற்படும் காதல் வரை கடந்த கால காட்சிகள் விவரிக்கப்படுகின்றன.

முடிவில் சல்வதோர் ஊர் திரும்பி ஆல்பர்டோவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டுவிட்டு வரும்போதுதான், பெரிதும் நேசித்த அந்தத் திரையரங்கம் கைவிடப்பட்டு இடிந்து தூர்ந்து போன நிலையில் உள்ளதைக் கண்டு, அந்தத் திரையரங்கின் குப்பைகளில் இருந்து தனது கடந்த கால சாட்சியாக உள்ள சில பொருட்களைச் சேகரம் செய்கிறான். சினிமா என்ற ஊடகம் மக்களின் மனதில் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை இப்படம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. திரைக்கும் இருக்கைக்கும் இடையில் நடக்கும் ரசவாதம் இந்தப் படத்தில்தான் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பெனியின் திரைப்படங்களின் சாயல் கொண்ட காட்சிகளும் மெல்லிய நகைச்சுவை காட்சிகளும் படத்தில் குறிப்பிடத்தக்கதாக உள்ளன. பிலாஸ்கோ குவரெட்டாவின் ஒளிப்பதிவு மிக அற்புதமானது. அதுவும் பசுமையான புல்வெளியில் ஆல்பர்டோவுடன் சிறுவன் சல்வதோர் சைக்கிளில் பயணிக்கும் காட்சியும், நகர சதுக்கத்தில் திரையிடப்படும் சினிமா பற்றிய காட்சிகளையும் குறிப்பிடலாம்.

இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய அம்சம், அதன் பின்னணி இசை. எனியோ மொரிகோன் என்ற இசைக்கலைஞர். காட்சிகளைத் தனது இசையின் வழியே உயர் தளங்களுக்கு எடுத்துச் செல்கிறார். குறிப்பாக, திரையரங்கக் காட்சிகளின் பின்னணி இசைக் கோர்வையும் சிதிலமான திரையரங்கினைக் காணும்போது சல்வதோரின் மனநிலையைப் பிரதிபலிக்கும் இசைக் கோர்வையையும் சொல்லலாம். இந்தப் படம் சிறந்த திரைப்படம், இயக்கம் மற்றும் நடிப்பிற்கான வெனிஸ் விருது உள்ளிட்ட பல்வேறு உலகத் திரைப்பட விருதுகளை வென்றிருக்கிறது.

சினிமா பாரடைஷோவின் வெற்றி குசாபேக்கு புதிய தயாரிப்பாளர்கள் கிடைப்பதை எளிதாக்கியது. அவர் மிராமாக்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துகொண்டார். அவரது புதிய படங்களை மிராமாக்ஸ், உலகம் முழுவதும் வெளியிடும் என்றும், அவரது புதிய தயாரிப்புகளுக்கான செலவை அவர்களே ஏற்றுக் கொள்வார்கள் என்றும் முடிவானது. அதன் தொடர்ச்சியாக அவர் உருவாக்கிய படம் மெலினா. இப்படமும் சிசிய கடற்கரை கிராமம் ஒன்றில் நடக்கும் கதையைக் கொண்டதுதான். ரெனாடோ என்ற பதினான்கு வயது சிறுவனின் பார்வையில் விவரிக்கப்படும் இப்படம், மெலினா ஸ்கோர்டா என்ற அழகியைப் பற்றியது. அவள் யுத்தத்தில் கணவனை இழந்து விதவையாகத் தனியே வாழ்கிறாள். அவளது அழகைக் கண்டு ஊரே கிறங்கிக் கிடக்கிறது. குறிப்பாக, இளைஞர்கள் அவள் தெருவில் நடந்து வரும்போது பின்னாடியே சுற்றுகிறார்கள். சிறுவன் ரெனாடோவிற்கு மெலினாவின் மீது காதல் ஏற்படுகிறது. அவனும் மெலினா வீட்டிலிருந்து வெளியே நடந்து செல்வதைக் காண்பதற்காக சைக்கிளில் தெருத்தெருவாக அலைகிறான். அவனது கனவுகளில் மெலினா நீந்துகிறாள். அவனுக்குள் மெலினாவின் நினைவுகள் காமக் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த நகரமே அவளைக் காதலிக்கிறது. அவள் யாரையும் சட்டை செய்யாமல் வாழ்கிறாள். இந்த நிலையில், ஜெர்மனியின் பிடியில் அந்த ஊர் அகப்பட்டுக் கொள்கிறது. இதனால் மெலினாவின் வாழ்வில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஊரே அவளை துவேசம் கொண்டு அடித்து நொறுக்குகிறது. எந்தப் பெண்ணை அழகி என்று ஊர் கொண்டாடியதோ அவளை அடித்து அவமானப்படுத்துவதைச் சிறுவன் காண்கிறான். மெலினா ஊரை விட்டுப் போகிறாள். சிறுவனால் மெலினாவை வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது என்பதோடு படம் முடிவடைகிறது.

பதின்மூன்று வயதின் காமமும் அதன் பிரதிபலிப்பும் இதில் மிகக் கவித்துவமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மெலினாவாக நடித்த மோனிகா பெலுசி, இப்படத்தில் பல காட்சிகளில் நிர்வாணமாக நடித்து உலகமெங்கும் அவளுக்கான ரசிகர்களை உருவாக்கினாள். பெனியின் அமோர்கார்டு திரைப்படத்தை நினைவுப்படுத்தும் இப்படம், டொர்னாடோவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்களை உருவாக்கியது. 1940களில் உள்ள சிசி பிரதேசத்தில் கதை நடக்கிறது என்பதற்காக அதற்கு இணையாக உள்ள நிலப்பரப்பைத் தேடி அலுத்து, முடிவில் இப்படத்தை மொராக்கோவில் படமாக்கினார் குசாபே.

பெண் குறித்து அதுவரை மதம் கற்பித்து வந்த பிம்பங்களுக்கு மாறாக, மனதில் பால் உணர்வுகள் எப்படி ஒரு பெண்ணின் பிம்பத்தை உருவாக்குகின்றது என்பதை இப்படம் விரிவாக ஆராய்கிறது. பதின்மூன்று வயதில் உள்ள சிறுவன் மெலினாவை நினைத்துக்கொண்டு சுயஇன்பம் அடைகிறான். மெலினாவைக் காதலிப்பவர்களை வெறுக்க துவங்குகிறான். ரகசியமாக அவளது வீட்டின் முன் நின்று வேடிக்கை பார்க்கிறான். தன் வயது, காதலுக்குத் தடையாக உள்ளது அவனுக்கு ஆத்திரமூட்டுகிறது. த்ரூபாவின் படங்களில் மிக அழகாக ஆராயப்பட்ட பதின்மூன்று வயது பருவத்துக் கனவுகள் டொர்னாடோவின் படத்திலும் கவித்துவத்துடன் வெளிப்படுகின்றன.

லூயி பிராண்டலோ என்ற இத்தாலிய நாடகாசிரியரின் பிரபல நாடகமான எழுத்தாளரைத் தேடும் ஆறு கதாபாத்திரங்கள் நாடகத்தை இயக்கிய அனுபவம் டொர்னாடோ குசாபேவிற்கு பின்நாளில் பெரிய உதவி செய்தது. அவர் பிராண்டலோவின் பாதிப்பில் புனைவிற்கும் யதார்த்தத்திற்கும் உள்ள மெல்லிய கோட்டை அழிக்கும் கதை சொல்லும் முறையை உருவாக்கத் துவங்கினார். அதாவது, படத்தில் முக்கியக் காட்சிகளைத் தவிர்த்து மற்றவை யாவும் நடிகர்கள் இல்லாமல் நிஜமாக சாதாரண மனிதர்களைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தாங்கள் சினிமாவில் நடித்து கொண்டிருக்கிறோம் என்பதுகூட பல நேரங்களில் தெரியாது. அப்படியரு முயற்சி ஈரானிய சினிமாவில் 1980களில் நடந்தது. அதன் தொடர்ச்சி போலவே இவரும் திரைப்படத்தை உருவாக்க முனைந்தார். அப்படி உருவாக்கியப் படம்தான் ஸ்டார் மேக்கர். இப்படம் ஊர் ஊராகச் சென்று புதுமுக நடிகர்களைத் தேடுவதாகச் சொல்லி ஏமாற்றித் திரியும் ஜோ மொரெ என்பவனைப் பற்றியது. அவன் ஹாலிவுட் ஸ்டூடியோக்களுக்காகப் புதிய நடிகர்களைத் தேடுவதாகச் சொல்லியபடி, ஒரு பழைய கால ராணுவ கேமிரா ஒன்றையும் கொஞ்சம் ஃபிலிம் ரோல்களையும் வைத்துக்கொண்டு கிராமத்திற்குள் பிரவேசிக்கிறான். அங்கே நடிக்க விருப்பமுள்ளவர்கள் தன்னிடம் ஒரு டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம் என்றும், அதற்கு ஆளுக்கு ஆயிரத்து ஐநூறு யர் தந்தால் போதும் என்கிறான். அவனது வார்த்தைகளில் மயங்கி பலரும் பணம் தருகிறார்கள். அனைவரது மனதில் உள்ள ரகசியங்களும் கேமிராவின் முன்னால் வெளிப்படுகின்றன. இப்படி ஏமாற்றியதில் அவனுக்கு நிறையப் பணம் கிடைக்கிறது. ஒரு நாள் கன்னியாஸ்திரி மடத்தில் உள்ள பெதா என்ற பெண், தான் சினிமாவில் நடிக்கவேண்டும் என்று ரகசியமாக வருகிறாள். அவள் மிக அழகாக இருக்கிறாள். அவளோடு ஜோவிற்கு நட்பு உருவாகிவிடுகிறது.

ஜோ மொரே, ஊரை விட்டுப் புறப்படும்போது, பெதா தானும் அவனோடு வருவதாக மடத்தை விட்டுத் தப்பி வந்துவிடுகிறாள். இவர்களது பயணத்தின் நடுவே அவன் ஒரு ஏமாற்றுக்காரன் என்பது காவல்துறைக்குத் தெரிந்து போகிறது. அத்தோடு ஏமாந்த மக்களும் அவனை அடித்து உதைத்து நொறுக்குகிறார்கள். அவனோடு வந்த பெதா இந்த அடிதடியில் மனநிலை பாதிப்பிற்கு உள்ளாகி, ஒரு காப்பகத்தில் அனுமதிக்கப்படுகிறாள். ஜோ, தன் தோல்வியை ஏற்றுக்கொண்டபடியே வெறும் ஆளாகப் பயணம் செய்யத் துவங்குகிறான். எல்லோரது மனதிலும் சினிமா கனவுகள் இருக்கின்றது என்பதையே இப்படம் வெளிப்படுத்தியது. அத்தோடு, சாத்தானைப் போல கேமிரா எப்படி மக்களை மயக்குகிறது என்பதும் மிகுந்த நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தப்பட்டிருக்கிற

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.