Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்வித்துறை குளறுபடிகளே பயங்கரவாதத்திற்கு வழிவகுத்தன: ரணில்

Featured Replies

[size=4]கல்வித்துறையில் ஏற்பட்ட குளறுபடிகளே இலங்கையில் பயங்கரவாதத்திற்கு வழிவகுத்த பிரதான காரணி என ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று கூறினார்.

பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் தெரிவாக முடியாத நிலையிலேயே வடக்கில் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது என்பதை அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும் என கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறினார்.

"1973, 1974, 1975 ஆம் ஆண்டுகளில் இது நடந்தது. அரசாங்கம் இதை மனதில் கொள்ள வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

வடபகுதி மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாத நிலையால் பெரும் குழப்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருந்ததாகவும் வசதியுடைய பெற்றோர் தமது பிள்ளைகளை பிரிட்டனுக்கு கல்வி கற்க அனுப்பியதாகவும் கூறினார்.

'"ஈழ மாணவர் பொது ஒன்றியம் மற்றும் ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்) முதலாவது மாணவர் அமைப்புகளாகின. அவர்கள் இரு பிரிவினராக பிரிந்தனர். அதுவரை தமிழர் போராட்டம் அரசியல் தலைமைத்துவத்தினால் கையாளப்பட்டது. இளைஞர்கள் அதில் ஈடபடவில்லை' என அவர் கூறினார். தனது சகாவும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரனும் பிரிட்டனில் கல்வி கற்ற ஒருவர் எனவும் பலஸ்தீனத்தில் ஆயுதபயிற்சி பெறுவதற்காக கல்வியை கைவிட்டவர் எனவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டுமென தமது கட்சி ஆலோசனை முன்வைத்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டபிள்யூ.எம்.பி.பீ. வராவெ வ கூறுகையில், கல்வித்துறை குளறுபடிகளானவை அரசியல்வாதிகளால் சுட்டிக்காட்டப்படுவதாக மாத்திரம் அல்லாமல் மக்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினையாக உள்ளது எனக் கூறினர்.

"இது ஒரு சிலர் மாத்திரம் எதிர்கொள்ளும் பிரச்சினை அல்ல. முழு நாட்டையும் இது பாதித்துள்ளது. இது தொடர்ந்தால் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் மற்றும் முழுக் கல்வித்துறையும் மூடப்பட வேண்டியேற்படலாம்" என அவர் கூறினார்.[/size]

[size=4]http://www.tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/46988-2012-08-20-09-44-44.html[/size]

  • தொடங்கியவர்

'"ஈழ மாணவர் பொது ஒன்றியம் மற்றும் ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்) முதலாவது மாணவர் அமைப்புகளாகின. அவர்கள் இரு பிரிவினராக பிரிந்தனர். அதுவரை தமிழர் போராட்டம் அரசியல் தலைமைத்துவத்தினால் கையாளப்பட்டது. இளைஞர்கள் அதில் ஈடபடவில்லை' என அவர் கூறினார். தனது சகாவும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரனும் பிரிட்டனில் கல்வி கற்ற ஒருவர் எனவும் பலஸ்தீனத்தில் ஆயுதபயிற்சி பெறுவதற்காக கல்வியை கைவிட்டவர் எனவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

[size=6]யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்[/size]

[size=6][size=4]பல்கலைக்கழக விரிவுரைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியவாறு மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர்.

கடந்த மூன்று மாதங்களாக பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தங்களுக்கான விரிவுரைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் மாணாவர்கள் கோரினர்.

சம்பவ இடத்தில் கலகம் அடக்கும் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்ததுடன், பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலை விட்டு வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டால் அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் இதன்போது பொலிஸார் எச்சரித்தனர்.

இங்கு உரையாற்றிய யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ்.பிரசன்ன,

'ஆசியாவின் ஆச்சரியம் என்பது எமது இலவசக் கல்வியை இல்லாமல்ச் செய்வதா? மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் சுதந்திரமான செயற்பாடு அவசியம். பல்கலைக்கழக கல்வியில் அரசியல் தலையீடு எதற்கு? எங்களின் வளமான கல்வியே நாளைய சிறந்த சமுதாயத்தை உருவாக்கும். இஸட் புள்ளிக் குளறுபடிக்கு தீர்வு வழங்கி பல்கலைக்கழக அனுமதியை உடன் வழங்க வேண்டும்.

மஹிந்த சிந்தனை என்பது இலவசக் கல்வியை இல்லாது ஒழிப்பதா?

வரவு - செலவுத்திட்டத்தில் 6 வீதத்தை கல்விக்கு ஒதுக்கு. மாணவர்களின் உரிமையை மதித்து செயற்பட வேண்டியது இந்த நாட்டினுடைய கடமை. ஜனநாயக ரீதியில் எமது கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். அதற்கு அரசாங்கம் சரியான பதிலை வழங்கவேண்டும்' என்றார். [/size][/size]

[size=6][size=4]b1(997).jpg

a2(1332).jpg

a3(705).jpg

c1(549).jpg[/size][/size]

[size=6][size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/77--image/46969-2012-08-20-07-21-57.html[/size][/size]

  • தொடங்கியவர்

[size=5]மறுஅறிவித்தல்வரை பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருக்கும்[/size]

[size=4]நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களினதும் மருத்துவ பீடங்கள் தவிர்ந்த ஏனைய பீடங்கள் யாவும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பணிப்பாளர்கள், கல்வியியலாளர்கள் உட்பட அனைத்து நிர்வாக மட்டத்திலான அதிகாரிகளும் நேற்று திங்கட்கிழமை சந்தித்து, பல்கலைக்கழக பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதாகவும் இதன்போது, பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.[/size]

[size=4]உயர்கல்வி அமைச்சர் என்ற வகையில், 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் கீழ், மறு அறிவித்தல்வரை பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நான் தீர்மானித்தேன் என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கூறினார்.[/size]

[size=4][size=4]http://www.tamilmirr...1-09-53-13.html[/size][/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=6]பல்கலைக்கழக ஆசிரியர்களின் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி[/size]

[size=4]பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நேற்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியது. நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள், 40 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இராணுவத் தளபதியின் மனைவி அனோமா பொன்சேகா, சிவில் சமூக அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் இதில் பங்குபற்றினர்.

கொழும்பு ஹைட்பார்க்கில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 'அரச பல்கலைக்கழக முறைமையை பாதுகாப்போம்', உலக தரம்வாய்ந்த பல்கலைக்கழகங்களா அல்லது துதிபாடும் பயிற்சிநிலையங்களா?', பல்கலைக்கழக சுயாதீனத்திற்கும் கல்வியியல் சுதந்திரத்திற்கும் மதிப்பளி', பல்கலைக்கழகங்களை இராணுவமயப்படுத்துவதை நிறுத்து, எமது நாட்டிற்கான எதிர்காலத்தை நாம் கோருகிறோம்' ஆகிய சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதியான கலாநிதி பிரபாத் ஜயசிங்க உரையாற்றகையில், "அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும் மருத்துவ பீடங்கள் மூடப்பட மாட்டாது என உயர்கல்விஅமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க உறுதியளித்திருந்தார். ஆனாலும் அரசாங்கத்தின் இந்த வாக்குறுதியில் மருத்துவபீடங்களும் நம்பிக்கையிழந்துள்ளன. தமது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியமைக்கு அதிருப்தி தெரிவித்து கொழும்பு மருத்துவபீடம் எதிர்வரும் திங்கட்கிழமை அடையாள பகிஷ்கரிப்பொன்றை நடத்தவுள்ளது" என்றார்.

மாதுலுவாவே சோபித தேரர் உரையாற்றுகையில், இஸட் புள்ளி விவகாரம், பரீட்சை வினாத்தாள்களில் உள்ள தவறுகள், பல்கலைக்கழகங்களை அரசியல்மயமாக்கல் ஆகியன பல்கலைக்கழகங்களை மாத்திரம் பாதிக்கும் பிரச்சினைகள் அல்ல எனவும் அவை நாடு முழுவதையும் பாதிக்கும் பிரச்சினைகள் எனவும் கூறினார்.

"இந்த பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு இரு மாதங்களாக கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையை இப்போது நாம் தீர்க்காவிட்டால் எதிர்வரும் வருடங்களில் இளைஞர்கள் எதிர்கொள்ளவுள்ள பிரச்சினையை இந்த தொழிற்சங்க நடவடிக்கை பிரதிபலிக்கிறது.

இவை நியாயபூர்வமான கோரிக்கைகளாகும். பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக 1.83 சதவீதம் மாத்திரமே ஒதுக்கப்படுகிறது. ஐந்து வருடகாலம் சேவையாற்றிய பின்னர் விரிவுரையாளர்கள் வெளிநாடு செல்வதால் இங்கு தொடர்ந்திருக்காத நிலை காணப்படுகிறது. எப்போது நாம் இந்த பிரச்சினையை தீர்க்கப்போகிறோம்?' என மாதுலுவாவே சோபித தேரர் கேள்வி எழுப்பினார்.

இலங்கை வர்த்தக கைத்தொழில் மற்றும் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் பாலா தம்பு உரையாற்றுகையில், "பெரும்பாலான தொழிலாளர்கள் தமது வருமானத்தில் பெரும்பகுதியை தமது பிள்ளைகளின் கல்விக்காக செலவிடுகின்றனர். தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு அதுவே சிறந்த வழி என அவர்கள் கருதுவதே இதற்கான காரணமாகும். அரசாங்கம் கல்விக்கு குறைந்தளவே செலவிடுவது, இந்நாட்டின் இளைஞர்களுக்கு குறைந்த வாய்ப்புகளே இருப்பதை வெளிப்படுத்துகிறது" என்றார். தனது அயல் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையானது கல்விக்கு குறைந்தளவே செலவிடுகிறது என அவர் கூறினார்.

இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உரையாற்றுகையில், கல்வித்துறையும் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. ஆனால், கல்வித்துறை பிரச்சினைகளை கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றார்.

'உயர்தர பரீட்சைகளில் தவறுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. 1000 பாடசாலைகளை அபிவிருத்தி செய்யப்போவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையிலும், இரு தவணைக்காலங்கள் முடிந்துவிட்டபோதிலும் பெற்றோர்கள் பலர் தமது பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்க முடியாமல் உள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக நாம் சதி செய்வதாக அமைச்சர் கூறுகிறார். ஆனால், இவை உண்மையான பிரச்சினைகளாகும்' எனவும் அவர் கூறினார்.

இலங்கை ஆசிரிய சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க உரையாற்றுகையில், 'கல்வித்துறைக்கான அரசாங்கத்தின் நிதியொதுக்கீடு இந்தியாவில் 3 சதவீதத்துக்கு அதிகமாகவும் நேபாளத்தில் 3.9 சதவீதமாகவும் பங்களாதேஷில் 2 சதவீதத்திற்கு அதிகமாகவும் உள்ளது என்றார். இது முக்கியமான பிரச்சினையாகும். எமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை நிறுத்துவதற்கு செல்வாக்கு செலுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்க மாட்டோம்' என்றார்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/47256-2012-08-23-17-58-33.html

futa3(2).jpg

  • தொடங்கியவர்

[size=1]

[size=4]என்று தமிழர்களை தரப்படுத்தல் மூலம் ஒடுக்கிய சிங்களம் இன்று அதன் பொருளாதாரம் ஒரு யதார்த்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையை எதிர்நோக்குகின்றது. [/size][/size]

[size=1]

[size=4]பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு பணம் கொடுக்க விரும்பவில்லை இல்லை பணம் இல்லை. அத்துடன் வேறு பல துறைகளிலும் வேலை நிறுத்தத்தை, சம்பள உயர்வை கேட்கிறார்கள். ஒருகாரணம் - இராணுவம் அதன் செலவு. இராணுவ செலவை குறைக்க சிங்களம் விரும்பாது. [/size][/size]

[size=1]

[size=4]எனவே மகிந்த கூட்டம் மேல் மக்கள் வெறுப்பு அதிகரித்தே செல்லும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் மத்தியில் ஆரம்பிக்கும் போராட்டங்கள், அரசை ஆட்டங்காண வைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.