Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசீர் சேகுதாவூத் ராஜினாமா

Featured Replies

[size=4] [/size]

[size=4]உள்நாட்டு வர்த்தக மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சராகக் கடமையாற்றி வந்த பசீர் சேகுதாவூத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.[/size]

[size=4]ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் சற்று முன்னர் தனது பிரதியமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்வதற்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவரைத் தொடர்புகொண்டு கேட்ட போது, 'அண்மையில் தான் ஏறாவூரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றியதைத் தொடர்ந்து, அரசில் அமைச்சர் பதவியொன்றைப் பெறுவதற்காக, தான் முயற்சிசெய்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சட்டுகளை அடுத்து, தான் இந்த முடிவுக்கு வந்ததாகவும், அமைச்சுப் பதவிகளுக்காக தான் முயற்சிப்பதில்லை என்றும், காட்சிக்காகவே தான் உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் அரசின் பிரதியமைச்சராக இருந்துகொண்டு அரச வாகனங்களையும், வளங்களையும் பாவித்து, முஸ்லிம் காங்கிரஸ_க்காக பிரசாரம் செய்வதைத் தான் விரும்பவில்லை என்றும், தனது சொந்தச் செலவில் கட்சிக்காக இந்தத் தேர்தலில் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு அறிவித்துவிட்டே இந்த ராஜினாமாவைத் தான் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.[/size]

[size=4]பசீர் சேகுதாவூத், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]http://www.virakesari.lk/article/local.php?vid=282[/size]

பொதுசன ஐக்கிய முன்னனியுக்கு தான் "I am available" என்கிறார். இதுதான் மு.கா மரச்சின்னத்தில் கேட்டும் கடைசித்தேர்தல்.

முஸ்லிம் காங்கிரஸை பிரிக்கும் சதியில் அலிசாகீர் மெலானா

வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 24, 2012

ali%20sahir.png

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் பசீர் சேகு தாவூத் அவர்கள் தனது வர்த்தக, கூட்டுறவுத்துறை பிரதியமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தமை அறிந்ததே. ஆனால் இந்த நடவடிக்கையின் பின்னணியில் சிறிலங்கா அரசாங்கத்தின் பின்னணி இருப்பது அம்பலமாகியுள்ளது. கிழக்கில் தமிழர்களுக்கு எட்டப்பன் கருணாபோன்று முஸ்லிம் மக்களிற்குள் அலி சாஹிர் மெலானா என்ற எட்டப்பன் மஹிந்த அரசுடன் கூட்டுச்சேர்ந்து செயற்பட்டுவருகின்றார்.

.

இந்த அலி சாஹிர் மௌலானாவே கருணா இயக்கத்தை விட்டு ஓடும்போது சிங்கள அரசு சார்பாக நின்று முண்டு கொடுத்தவராவர். இவரே இப்போது பசீர் சேகு தாவுத் என்பவரின் பிரச்சினைகும் அதனைத்தொடர்ந்து அவர் ராஜினாமா செய்வதற்கும் காரணமாக இருந்துள்லார்..

.

கிழக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட அங்கத்தவரும் அந்தக் கட்சியின் தவிசாளருமான பிரதியமைச்சர் பஷீர் சேகு தாவூதை தனது சதி வலைக்குள் சிக்க வைத்து கட்சி மட்டத்திலும் அரசியல் மட்டத்திலும் பிரிச்சினைகளை உருவாக்கும் நோக்கத்துடன் மௌலானாவால் விரிக்கப்பட்ட சதி வலைக்குள் பஷீர் சிக்கியுள்ளமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பலவீனப்படுத்தி அந்தக் கட்சியில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நோக்குடன் பஷீர் ஷேகு தாவூதுடன் நட்புறவை பேணி தனது கபடத்தனத்தை மெளலானா மீண்டும் வெளிக் காட்டியுள்ளார்.

.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் தனக்கு விருப்பு வாக்குகளை அளிக்குமாறு வாக்காளர்களுக்கு தாங்களே பகிரங்க மேடையில் வேண்டுகோள் விடுக்க வேண்டுமென்று நட்பு முறை பாராட்டி நயவஞ்சகத் தனத்துடன் அலி ஸாஹிர் மௌலானா விடுத்த வேண்டுகோளின் பின்னணியை அறியாத பஷீர், அவரின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் மேடையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான மௌலானாவுக்கும் வாக்களிக்குமாறு பகிரங்கமாகக் கேட்டிருந்தார்.

.

இதனையடுத்து கட்சி மட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சைகள் வாதப் பிரதிவதாங்கள் காணரமாகவே பஷீர் பிரதியமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டியேற்பட்டது. ஆளுந்தரப்பான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே அலி சாஹிர் மௌலானா ஊடாக இந்தக் காய் நகர்த்தலை முன்னெடுத்து தற்போது வெற்றி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.eelanatha...லிசாகீர்-மெலானா

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

[size=4]இவ்வாறான பிரிவினைகளை சிறுபான்மை இனங்கள் மத்தியில் தொடர்ந்தும் சிங்களம் செய்துகொண்டே இருக்கும்.[/size]

[size=1]

[size=4]இவற்றை முறியடிக்க இருதரப்பிலும் ஒழுங்கான தலைமைகள் இருக்கவேண்டும், அவரக்ளுக்குள் பரிந்துணர்வு இருக்க வேண்டும். [/size][/size]

[size=1]

[size=4]இல்லாவிட்டால் ... அழித்தே விடுவார்கள். [/size][/size]

மு.கா. அதிருப்திக் குழு உறுப்பினர்கள்இருவரின் கடைகள் தீ வைத்து ௭ரிப்பு face.jpg By General

2012-08-23 00:27:17

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏறாவூர் பிரதேச அதிருப்திக் குழு உறுப்பினர்கள் இருவரின் கடைகள் நேற்று அதிகாலை தீ வைத்து ௭ரிக்கப்பட்டுள்ளன.

நேற்று அதிகாலை 2 மணியளவில் இக் கடைகள் தீ வைத்து ௭ரிக்கப்பட்டிருக்க வேண்டும் ௭ன பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். ஏறாவூர் ஏ.கே.௭ம். வீதியில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றும் ரி.வி.பழுதுபார்க்கும் கடையொன்றுமே இவ்வாறு பெற்றோல் ஊற்றி ௭ரிக்கப்படடுள்ளன.

இதனால் இக் கடைகளில் இருந்த பொருட்கள் ௭ரிந்துள்ளதால் இக்கடை உரிமையாளர்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத் கட்சியின் தவிசாளராக இருந்து கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அலிஸாகிர் மௌலானாவுக்கும் வெற்றிலைச் சின்னத்திற்கும் வாக்களிக்குமாறு கல்குடா தொகுதி மற்றும் காத்தான்குடி ஏறாவூர் போன்ற பிரதேச மக்களைக் கேட்டிருந்தார்.

தவிசாளர் பஷீர் சேகுதாவூதின் இந்த உரையைக் கண்டித்த கட்சியின் அதிருப்திக் குழுவினர் பஷீர் சேகுதாவூதின் கொடும்பாவி ஒன்றினையும் ௭ரித்தனர். இக்கொடும்பாவி ௭ரிக்கப்பட்ட இடத்தில் இருந்த அதிருப்தியாளர்களின் கடைகளே இவ்வாறு ௭ரிக்கப்பட்டுள்ள போதிலும் இது தேர்தல் வன்முறைச் சம்பவம் இல்லை ௭ன பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை தவிசாளர் பஷீர் சேகுதாவூதின் அந்த உரையைத் தொடர்ந்து கட்சி ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கிடையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியும் கவலையும் ஏற்பட்டிருந்தது.

http://www.virakesari.lk/article/local.php?vid=277

பி.கு

அரசு மு.கா.விற்கு வடிவாய்த்தான் அள்ளி வைச்சிருக்கு.

பசீரின் பதவி விலகல் என்ற நாடகம் பாதை விலகலா என்ற கேள்வியை எழுப்புகிறது. பதவி விலகலுக்கு தன்னை மந்திரிப்பதவிக்காக ஆசைப்படுவதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர் என்று காரணம் காட்டியிருக்கிறார். அது எவ்வளவு வலுவான காரணம் என்பதை இருந்துதான் பார்க்கவேண்டும். கக்கீம் கட்சிக்குள் இருந்து சிலர் மந்திரிப் பதவிகளுக்காக அரசுடன் நிபந்தனை அற்ற அரசியலில் ஈடுபட கட்சியை வலிப்பதாக அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் பசிரின் நண்பர் அலி சகிர் மௌலான பெறத்தக்க வாக்குக்களை பெற, அரச சின்னத்தில் முஸ்லீம் காங்கிரசு அங்கத்துவத்தை வைத்துக்கொண்டு போட்டியிருகிறார். பசிரின் நட்பு, கக்கீமைவிட அலியிடம் கூடவாக இருக்கிறது.

தேர்தல் முடிய அலி பொதுசன சுதந்திர முன்னணியில் சேர்ந்தாக வேண்டும். மாகாண உறுப்பினர்பதவி கட்சியினுடயது. எனவே அவர் இனிமேல் மு.கா உறுப்பினர் அல்ல. ஆனால் பசீரின் நிலை என்ன என்பது வெளிவர இருக்கும் புதிர். பசீரின் இந்த நடத்தைக்கு கட்சி உடந்தையா அல்லது வேண்டா வெறுப்பாக ஏற்றுகொள்ளுமா, அல்லது அவரை கட்சியில் இருந்து விலக்குமா எனபதை மு.கா வெளியிடவில்லை. கட்சியில் இருக்கும் வரை கட்சி பெறுக்கொடுக்கும் பதவிகளைத்தான் பசீர் வைத்திருக்கலாம். அதே நேரம் பதவி விலகலும் அரசுக்கு பாதகம் ஏற்படாமல் கட்சி பதவி மாற்றம் செய்யுமே அல்லாமல் தனி நபர் திடீர் பதவி விலகல்கள் கட்சியால் தாங்கிக் கொள்ள முடியாதவை.

சேகுதாவூத் திடீர் பதவி விலகல் அதிர்ச்சியில் உறைந்தது மு.கா; அவரது முடிவு குறித்து கட்சி உயர்பீடத்துக்கு எதுவுமே தெரியாது என்கிறார் ஹஸனலி c72d24e972247d80a8ae7934e5687a3e.jpg

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் பிரதிய மைச்சர் பதவியிலிருந்து எந்தவித முன்னறி வித்தலுமின்றி திடீரென விலகியுள்ளார். அவரது முடிவு கட்சிக்குள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

தனது பதவி விலகல் குறித்து கட்சியின் தலைவருக்கும் செயலாளருக்கும் அறியப்படுத்தியிருப்பதாகத் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார். எனினும் எதுவித அறிவித்தல்களும் தமக்கு கிடைக்க வில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலி நேற்று உதயனிடம் தெரிவித்தார்.

"பிரதியமைச்சர் பதவியிலிருந்து பசீர் விலகியமை தொடர்பான விடயத்தை நான் இப்போதே அறிகிறேன். இப்படி எந்த முடிவும் கட்சி மட்டத்தில் எடுக்கப்படவில்லை. நான் அறிந்தவரை இப்படியான ஒரு தீர்மானம் குறித்து எமது கட்சித் தலைவரும் அறிந்திருக்கவில்லை'' என்றும் ஹசனலி குறிப்பிட்டார்.

இதற்கிடையில் பிரதியமைச்சர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் விலகிய பின்னணியில் கட்சிக்கெதிரான சில சக்திகள் செயற்பட்டிருக்கக் கூடுமென்றும், தேர்தல் காலத்தில் இப்படியான ஒரு வேலையைச் செய்து கட்சிக்குள் குழப்பம் இருப்பதுபோல் தோற்றுவிப்பது அவர்களின் சதிவேலையாக இருக்கலாமென்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பஷீர் சேகுதாவூத் பிரதியமைச்சர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து நேற்றுமாலை ஏறாவூர் பிரதேசத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சென்றிருந்தார்.முன்னதாக, கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகப் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத், தனது பிரதியமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வுக்கு நேற்றுக்காலை அனுப்பினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஆகியோருக்கும் கடிதங்கள் மூலம் அறிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஆழ்ந்த சிந்தனையின் பின் பிரதியமைச்சர் பதவியில் இருந்து விலக மனச் சாட்சியின்படி முடிவு எடுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ள பஷீர் சேகுதாவூத் பதவி விலகியன் ஊடாக அரச வளங்கள் பாவிக்கப்படாத தூய்மையான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக, எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு, சமுதாயத்தையும் கட்சியையும் விட்டு விலகி, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியைப் பெறுகின்ற நோக்கமற்றவர் எனத் தன்னை நிரூபிக்கும் எனத் தான் நம்புகிறார் எனவும், தனது ஸ்தாபன ரீதியான அரசியல் நம்பகத் தன்மையையும், கட்சிக்கான தனது பங்களிப்பின் பெறுமானத்தையும் நிலை நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளமையாலும், பிரதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதவி விலகல் தொடர்பாக பஷீர் சேகுதாவுத் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு ள்ளவை வருமாறு

கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் வியூகம் அமைப்பது தொடர்பிலான கட்சிக் கலந்துரையாடல் நடைபெற்றபோது ஒன்றில் அரச கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் அல்லாவிடின் எதிரணிக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட வேண்டும். அப்போதுதான் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் அந்தஸ்தை நிரூபிக்கும் வகையில் கிழக்கில் ஒரு முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று நான் வாதிட்டிருந்தேன்.

அதுமட்டுமன்றி தனித்துக் களத்தில் இறங்குவதாக இருந்தாலும் நாம் வகிக்கும் அமைச்சுப் பதவிகளை தூக்கி எறிந்து விட்டு, தூய முஸ்லிம் காங்கிரஸாக கிழக்கில் போட்டியிட்டு முஸ்லிம்களுக்கு எந்தத்தடையும் அப்பழுக்கும் அற்ற உரத்தொலிக்கும் குரலாக மத்திய அரசிலும், மாகாணத்திலும் நாம் விளங்க வேண்டும் என்ற கருத்தையும் முன்மொழிந்திருந்தேன்.

இந்த வாதங்களுக்கும் முன்மொழிவுக்கும் அமைய தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நாள் தொடக்கம் இன்றுவரை, என் மனச்சாட்சி நடத்திய போராட்டத்தின் முடிவாகவே எனது பிரதியமைச்சர் பதவியை தூக்கி எறிந்தேன்.

அகமாகவும் புறமாகவும் நான் பதவியாசை கொண்டவன் என்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக முயற்சிக்கிறேன் என்றும் எனக்கெதிரான பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டிருப்பதால், நான் அப்படியானவன் அல்லன் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பதவிகளை மட்டும் பற்றிய பிரக்ஞையுள்ளவன் என்ற பிரசார சிறைக்குள்ளிருந்து என்னை விடுவிக்கும் கடப்பாடும் எனக்கிருக்கிறது.

நான் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை பெறுவதாக இருந்தால் அப்பதவியை 2010 நவம்பரில் அரசுடன் இணைகின்ற வேளையில் பெற்றிருக்க முடியும். தலைவரை விட்டுவிட்டு கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்களுடன் சேர்ந்து அப்பதவியைப் பெறுமாறு கோரப்பட்ட போதும் நான் அவ்வாறு செய்யவில்லை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பிரதி அமைச்சர் பதவி ஒன்றை 1994 இல் ஐக்கிய தேசியக் கட்சி எனக்கு வழங்குவதாக இருந்த நிலையில்கூட அதை நான் நிராகரித்திருந்தேன். ஏனெனில் தமிழ் மக்களுடைய அனுசரணையுடனேயே அன்று நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றிருந்தேன். போராட்டத்திற்கு ஆதரவான மன நிலையில் இருந்த மக்களின் விருப்பத்துக்கு மாறாக தேசியக் கட்சியில் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்வது எந்த வகையிலும் நியாயமற்றது என்ற எனது மனசாட்சியின் அடிப்படையிலேயே அதை நான் நிராகரித்திருந்தேன்.

1990களில் ஏற்பட்ட வன்முறையின் வெளிப்பாடுகளும், அரசியல் புரிந்துணர்வின்மையும் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய அரசியல் செய்ய முடியாத நிலைக்கு என்னைத் தள்ளின. ஐக்கிய தேசியக் கட்சியில் சேர மறுத்த நான் தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து வெளியேறி முஸ்லிம் தேசிய அரசியலில் ஈடுபடும் அவாவோடு, மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் தலைமைத்துவத்தை ஏற்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டேன். அன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொண்டதை அமைச்சர் பதவிகளை விட இன்றும் பெருமையாகக் கருதுகிறேன்.

2007 ஆம் ஆண்டு கட்சியின் முடிவுக்கமைய நான் வகித்த அமைச்சரவை அந்தஸ்தற்ற மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தேன். 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலைகளின்போது நமது கட்சியின் இருப்பைப் பாதுகாப்பதற்காகவும் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அந்தஸ்தை நிலைநிறுத்துவதற்காகவும் அன்று நான் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தலைவருடனும், செயலாளர் நாயகத்துடனும் சேர்ந்து உதறிவிட்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டேன்.

தலைவரும், செயலாளர் நாயகமும் தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆனபோதிலும் நான் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தைவிட அதிகாரம் குறைந்த மாகாணசபையிலேயே எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தேன். தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் நாடாளுமன்றம் வரவேண்டும் என்று மனசாட்சியின்படி அன்று முயற்சிக்கவில்லை.

என்னுடைய அரசியல் வாழ்வு நாடாளுமன்றத்தில் இருந்து அன்றி காடுகளுக்குள் கல்லும் முள்ளும் நிறைந்த கடூரப் பாதையில் இருந்தே ஆரம்பமானது. அங்கே வெயில் மழை பாராது கண்ணீரும், வியர்வையும், இரத்தமும் சிந்துகின்ற புரட்சிகர அரசியலில் எனது இளமைக் காலங்களைத் தொலைத்திருந்தேன். நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றமை ஒரு தற்செயலான நிகழ்வாகும்.

எனது புரட்சிகரமான அரசியற்பாதையில் நாடாளுமன்றப் பிரவே\ம் நிகழ்ந்த 1989 தொடக்கம் இன்றுவரையான காலகட்டத்தை இடைப் பாதையில் நடைபோடும் ஒரு பயணம் என்றே கருதுகிறேன். பதவிபெறல் மற்றும் பதவி விலகல் ஆகியவற்றைப் பொறுத்தவைரயில் கடந்த 12 வருட காலமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் சேர்ந்தே இயங்கியிருக்கிறேன்.

மேலும் தற்கால அரசியலில் ஆளும்கட்சி, பட்டம், பதவி என்பனவெல்லாம் வெறும் தெரிவுகள் மாத்திரமே என்பது எனது நம்பிக்கையாகும். மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்பு விசேடமாக வடக்கும் கிழக்கும் பிரிந்ததன் பின்பு, மக்களுக்கான அதிகாரம் என்பதைவிட பிராந்தியத்துக்கான அதிகாரம் மேலோங்கி காணப்படுகின்ற நிலைமையை உள்வாங்கியவனாக, புதிய அரசியல் சூழ்நிலைக்கேற்ப என்னைத் தகவமைத்துக் கொள்ள எனது இந்த இராஜினாமா உதவும் என நம்புகிறேன்.

அத்துடன் முஸ்லிம் தேசிய அரசியலில் எந்த அதிகாரச் சார்புமற்று சுதந்திரமாகக் கருத்துக்களை வெளியிட எனக்கு இந்த இராஜினாமா வாய்ப்பளிக்கும் எனவும் நம்புகிறேன்.

தற்போதைய அரசில் எனக்குப் பிரதியமைச்சர் பதவியை வழங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இதுவரை காலமும் எனக்கும் பொதுவாக நாட்டு மக்களுக்கும், விசேடமாக மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும், ஒத்துழைப்பு களையும் பங்களிப்புகளையும் வழங்கிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும், எனது அரசியல் கருத்துக்களை நம்பியிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும், அன்பர்கள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://onlineuthayan...851350624367244

Edited by மல்லையூரான்

அலி அசாத்துடன் சேர்ந்து இயங்கும் பசீர் கக்கீமை மந்திரிபதவியை தக்க வத்துக்கொள்ளும்படி அறிவுரை

ஹக்கீம் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டியதில்லை! - காத்தான்குடியில் பஷீர் சேகுதாவூத் உரை!!

நான் பிரதியமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தேன் என்பதற்காக சிறிலங்காக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டிய அவசியமில்லை என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு காத்தான்குடியில் நேற்று மாலை இடம்பெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய பஷீர் சேகுதாவூத் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'நான் பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தேன் என்பதற்காக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என எவரும் கூறமுடியாது.

ஏனெனில் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அதை அரசாங்கத்துடனும், ஜனாதிபதியுடனும் தான் பேசித் தீர்க்க வேண்டும். அது பள்ளிவாசல் பிரச்சினையாக இருந்தாலும் சரி, அல்லது முஸ்லிம்களுக்கு வேறு எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, அதை ஜனாதிபதியிடம் தான் பேசித் தீர்க்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரனில் விக்ரமசிங்க அன்று பிரதமராக இருந்த போதும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை அவரிடம் பேசினோம். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த போதும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை அவரிடம் பேசினோம். தற்போது மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கின்றார். அவரிடம் முஸ்லிம்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அமைச்சர் பதவியைப் பயன்படுத்த வேண்டும்.

ஒரு அமைச்சராக இருப்பவரால் ஜனாதிபதியிடம் இலகுவாக நேரத்தை பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்யக் கூடாது என்பதே எனது கருத்தாகும்.

இந்தத் தேர்தலில் வேட்பாளர் நியமனப் பத்திரம் தாக்கல் செய்வதற்கு முன்னர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்குள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எவ்வாறு முகம் கொடுப்பது என்ற ஆலோசிக்கப்பட்டது.

இத்தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாயின் தனித்துவமாக அரசியல் வேண்டும். அரசாங்கத்தை எதிர்ப்பதாயின் அரசாங்க வளங்களை பயன்படுத்தக் கூடாது என நான் ஆலோசனை கூறினேன்.

அந்த ஆலோசனையை நான் கூறியவன் என்ற வகையில் எனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்து எனக்குரிய அமைச்சு வாகனங்களையும் கையளித்துவிட்டு, தற்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.

அதற்காக தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என்பதல்ல. நான் அந்த ஆலோசனையை கூறியவன் என்ற வகையில் நான் எனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளேன்.

எனது பிரதியமைச்சர் பதவியின் இராஜினாமாவை பயன்படுத்தி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை மலினப்படுத்தி கட்சியின் தலைவரை இக்கட்டுக்குள் தள்ள சிலர் முயற்சிகளை மேற்கொள்;கின்றனர். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினை சுய விமர்சனமுள்ள கட்சியாக மாற்றியவன் நான். அன்று மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் முன்னிலையில் கட்சியின் விமர்சன மாநாட்டை நடாத்திக் காட்டியவன் நான்.

மறைந்த தலைவர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் தேம்பி தேம்பி அழுது கண்ணைத் துடைத்துக் கொண்ட மாநாட்டை நடாத்திக் காட்டியவன் நான். தேம்பி தேம்பி எல்லோரும் அழுத வரலாற்றை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் மறக்கமாட்டாது.

நான் பேசிய பேச்சுக்களை சரியாக விளங்கிக் கொள்ளாத சிலர் இங்கு வந்து நான் பாவ மன்னிப்புக் கேட்கின்றேன் என்று கூறியுள்ளனர். இந்தக் கட்சியை பயன்படுத்தி பின் கதவால் சென்று கட்சியையும் சமூகத்தையும் காட்டிக் கொடுத்து அமைச்சர் பதவியை பெற்றவன் அல்ல நான் என்பதை தெளிவாக கூறிவைக்க விரும்புகின்றேன்.

இந்தக்கட்சியை பாதுகாக்க நான் செய்த தியாகங்களை இந்தக் கட்சி நன்கு அறியும். தலைவர் மற்றும் செயலாளர் நோர்வேயில் நின்ற போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை கைப்பற்ற அதாவுல்லா போன்றோர் மேற்கொண்ட சதி நடவடிக்கையில் இருந்து துணிச்சலான எனது நடவடிக்கையினால் இந்த கட்சியையும் தலைமையையும் பாதுகாத்தவன் நான்.

இந்தக் கட்சியை மலினப்பத்த எவருக்கும் நாங்கள் இடமளிக்கமாட்டோம். இந்த தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை அமோக வெற்றியீட்டச் செய்ய வேண்டும்' என பஷீர் சேகுதாவூத் மேலும் தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.